|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: தனது
ஆட்சிக் காலத்தில் தமிழகம் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று
சொல்ல வந்த முதல்வர் ஸ்டாலின், "இந்தியாவில் தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா" என்று பேசி
இருக்கிறாரே?
|
|
|
2. கேள்வி: பங்களாதேஷின்
முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், 2024-ல் மாணவர்கள் எழுச்சியால் அந்த
நாட்டுக்கு "இரண்டாவது முறை விடுதலை கிடைத்துள்ளது" என்று
கூறியிருக்கிறாரே? |
|
|
3. கேள்வி: "நான் பிராமணர்களை எதிர்க்கவேண்டுமெனில், அதற்குக்
காரணம் அவர்கள் பிராமணர்களாக இருப்பதற்கு அல்ல; பிராமணத்தை
அவர்கள் இழந்ததற்காகவே எதிர்ப்பேன்" என்று ஜெயகாந்தன் திருச்சியில் ஒருமுறை
பேசியிருக்கிறார். பிராமணர்களைப் பற்றிய இந்த வகைக் கருத்து சரியா?
ஆற்காடு இளவரசர்
இன்று எப்படிப் பெயரில் மட்டும் இளவரசரோ, அதைப்
போல் இன்றைய பிராமணர்கள் பெயரில் மட்டும் பிராமணர்கள். ஆதி நாளில் அவர்கள்
பிரதானமாகத் தெய்வ காரியங்களில் ஈடுபட்டு வந்ததால் - அனைத்து வர்ணத்தவரும்
தெய்வத்தை வணங்குவதால் - அவர்களின் வழிவந்தவர்களுக்கு ஒரு பெயர் அடையாளம்
மட்டும் இன்று நீடிக்கிறது. காலச் சக்கரம்
அரசர்களையும் பிராமணர்களையும் - ஏன், நான்கு
வர்ணத்தினரையும் - அரைத்து ஒதுக்கிச் சுழல்கிறது. இதில் பிராமணர்கள் மட்டும்
பிராமணத்தைத் தானாக இழந்தார்கள் என்று குறை காண இடமில்லை. |
|
|
4. கேள்வி: "சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான், பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும்
இருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கையில் கூறி இருக்கிறாரே?
|
|
|
5. கேள்வி: ஒருவர்
எச்சில் கையால் காக்கா ஓட்டாதவர் என்றால், அவர் கஞ்சன் என்று அர்த்தமா? பதில்:
கருணை மிக்கவர் என்றும் அர்த்தமாகலாம். எச்சில் கையுடன் அவர் கை
வீசினால் ஒரு பருக்கை பறந்து காக்கையின் கண்ணில் பட்டால் அதற்குக் கண்
வலிக்குமே! |
|
|
பகுதி 31 // 27.12.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment