Friday 10 February 2023

எண்

-- ஆர். வி. ஆர்

 

 

 

எண்

(பாப்பா பாட்டு. மெட்டு அமைத்தது)

 

 

 

பாட்டுல எண்கள் படிப்போமே – தமிழ்

நாட்டுல நாம் இதை அறிவோமே

 

 

ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு

ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து

 

 

பதினோண்ணு பன்னண்டு பதிமூணு

பதினாலு பதினைஞ்சு பதினாறு

 

 

பதினேழு பதினெட்டு

பத்தொன்பது இருபது

 

 

தமிழில் எண் சொல்லிப் பாடுவோமே – நம்

தமிழை எண்ணி எண்ணிப் பாடுவோமே