Friday, 25 July 2025

நான் யார்?


-- ஆர். வி. ஆர்

 

 

நான் யார்?

(பாடல்)

 

 

நான் நான் நான் நான் நான்
யார் யார் யார் நான் யார்
மொழி மதம் தேசம் தான் – நான்

யாரென்று உணர்த்திடுமா – நான்
யாரென்று உணர்த்திடுமா

 

 

மரம் செடி கொடிகளைப் போல்
பிற உயிரினங்களைப் போல்
பூமியும் விண்மீன் போல் – நானும்
இயற்கையின் புதிரல்லவா? – நானும்
இயற்கையின் புதிரல்லவா?

 

 

அண்டம் தோன்றிய நாள் – அதில்
உள்ளவை எத்தனை கோள்
வானத்தின் வெளி எல்லை – நா
ம்
இவை பல
அறிந்ததில்லை – நாம்
இவை பல
அறிந்ததில்லை

 

 

இயற்கையின் புதிராய் நான் – வெறும்
சிற்றறிவுடையோன் நான் – எந்தன்
புதிரை அறிவு
வணங்க – நீ
அமைதி காக்க மனமே – நீ
அமைதி காக்க மனமே

 

25/07/2025

         Author: R. Veera Raghavan, Advocate, Chennai