|
கேள்வி-பதில் |
|
|
1. கேள்வி: "பார்லிமென்ட் என்பது, நாடகத்தை அரங்கேற்றும் இடம்
அல்ல" என்று பிரதமர் மோடி எதிர்க் கட்சிகளைப் பார்த்துச் சொல்லி
இருக்கிறாரே?
எதிர்க் கட்சி
முக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்து ஆக்ரோஷமாக நடிக்க விரும்பும் சீன், பார்லிமென்ட் சீன். அந்தக் காட்சியை எதிர்க் கட்சியினர் அரங்கேற்றித்
தங்களின் மேலான நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வேண்டாம் என்று மோடி சொல்கிறாரே,
அவர் அரக்க மனம் படைத்தவரா? |
|
|
2. கேள்வி: மாநில கவர்னர் இல்லத்தை 'ராஜ் பவன்' என்ற
பெயரிலிருந்து 'லோக் பவன்' என்று
மாற்றுவதை விட "சிந்தனை மாற்றமே தேவை" என முதல்வர் ஸ்டாலின்
தெரிவித்துள்ளார். சரியா?
|
|
|
3. கேள்வி: கள்ளக்குறிச்சியில்
விஷச் சாராயம் குடித்து மரணம் அடைந்த 67 பேர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு தலா பத்து லட்சம் ரூபாய்
நிவாரணம் தந்தது. அதே அரசு, சிவகங்கை மாவட்டம்
திருப்புத்தூர் அருகே இரண்டு அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் மோதியதால் இறந்த 11
பேர்களின் குடும்பங்களுக்கு, மூன்று லட்ச
ரூபாய் தருகிறது. ஏன் இந்த வேறுபாடு? அரசு போக்குவரத்துக்
கழகங்கள் பஸ் விடுவது குற்றமல்ல. அந்த பஸ்கள் ஏற்படுத்திய விபத்தில் டிரைவர்
மற்றும் 10 பயணிகள் இறந்ததை யாரும் பெரிது படுத்தி,
அந்த விவகாரத்தில் ஒரு அரசுத்துறையின் கைகள் கறைபடிந்ததாக
அம்பலப்படுத்த வழியில்லை. அரசு பத்து லட்சம்
கொடுத்தது, பெரிதும் தன்னைப் பாதுகாக்க. மூன்று லட்சம்
கொடுப்பது, பெரிதும் ஒரு நிவாரணமாக. |
|
|
4. கேள்வி: பூமிக்கடியில்
ஒரு புராதன ஹிந்துக் கோவில் இருக்க, அதன் மீது ஒரு மசூதி எழுப்பப் பட்டது என்பது நிரூபணம் ஆகி, அந்த மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் வரலாம் என்று சுப்ரீம்
கோர்ட்டில் தீர்ப்பாகி விட்டது. ஒரு
முருகன் மலையே ஆதி காலத்திலிருந்து ஹிந்துக்களுக்குப் புனிதம் என்கிற போது, அதன் உச்சியில் ஒரு தர்கா தொடர்ந்து
இருக்கிறது, அங்கு வழிபாடு நடக்கிறது, என்றால் என்ன அர்த்தம்? ஏற்கனவே தர்கா இருந்த
இடத்தின் அடியில், பின்னர் யாராவது முருகன் மலையைப்
பெரிதாக எழுப்பினார்களா? அல்லது ஏற்கனவே இருந்த முருகன்
மலையின் உச்சியில், பின்னர் என்ன காரணத்தாலோ யாராவது தர்கா
அமைத்தார்களா? புரியாமல் கேட்கிறேன், இதில் நல்லவர்களின் தீர்வு என்னவாக இருக்க வேண்டும்?
|
|
|
5. கேள்வி: பிரதமர்கள்
ஜவஹர்லால் நேரு, நரேந்திர மோடி, இருவரையும் பற்றி?
|
|
|
பகுதி 21 // 03.12.2025 |
|
|
- ஆர். வி.
ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
|
No comments:
Post a Comment