Thursday, 17 November 2022

ராஜீவ் காந்தி கொலையாளிகள்: ஏன் சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்திருக்க வேண்டாம்?

          - ஆர்.வி.ஆர்

 

ராஜீவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகள் மீதம் ஆறு பேர் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்தார்கள். சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய முடிவினால் அவர்களின் ஆயுள் தண்டனை பூர்த்தியானதாகக்  கருதப்பட்டு அவர்கள் சிறையிலிருந்து வெளி வந்திருக்கிறார்கள்.  

 

நம் நாட்டின் ஒரு சட்டத்தை சுப்ரீம் கோர்ட் அமலாக்குவதற்காகப் போட்ட உத்திரவினால் இந்த ஆறு கொலையாளிகளும் விடுதலை ஆகி இருக்கிறார்கள். அதுதான் நமது அரசியல் சட்டப் பிரிவு 161.  

 

பிரிவு 161 இப்படிச் சொல்கிறது: “ஒரு மாநில அதிகாரத்தின் கீழ் வரும் சட்டத்தை மீறுவதால் தண்டனை பெற்ற எந்தக் குற்றவாளிக்கும் மன்னிப்பு வழங்கவோ, அவரது தண்டனைக் காலத்தைக் குறைக்கவோ அந்த மாநில கவர்னருக்கு  அதிகாரம் உண்டு.” ராஜீவ் காந்தியின் கொலையாளிகளும் அந்த வகைக் குற்றவாளிகள்.  

 

இந்த விஷயத்தில் கவர்னரின் அதிகாரத்தைப் பற்றி சுப்ரீம் கோர்ட் முன்பே சில தீர்ப்புகளில் விளக்கி இருக்கிறது. அதாவது: அப்படியான குற்றவாளிக்குத் தண்டனைக் குறைப்பு செய்ய மாநில அரசு ஆலோசனை அளித்தால், கவர்னர் அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அந்த ஆலோசனைக்கு மாறாக கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.

 

2018-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அமைச்சரவை, ராஜீவ் காந்தியின் ஏழு கொலையாளிகளின் ஆயுள் தண்டனையைக் குறைத்து அவர்களை முன்கூட்டி விடுவிக்க வேண்டும் என்று கவர்னருக்கு ஆலோசனை தந்தது. அந்த ஆலோசனையை ஏற்றுக் கையெழுத்திட தமிழக கவர்னருக்குக் கூச்சம் இருந்திருக்க வேண்டும். அதனாலோ என்னவோ கவர்னர் தமிழக அமைச்சரவையின் ஆலோசனையைத் தன் பரிசீலனையில் வைத்தபடி இருந்தார்.  அவர் ஒரு முடிவும் எடுக்கவில்லை.

 

இரண்டரை வருடங்கள் சென்றன. பேரறிவாளன் என்ற ஒரு குற்றவாளி கவர்னரின் தாமதத்தை முதலில் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். 161-வது பிரிவுப்படி கவர்னர் செயல்படவில்லை என்பதால் சுப்ரீம் கோர்ட் தனது விசேஷ அதிகாரத்தைப் பயன் படுத்தி பேரறிவாளனின் உடனடி விடுதலைக்கு அப்போது வழி செய்தது. தொடர்ந்து மீதமுள்ள ஆறு கொலையாளிகளும் மனுப்போட, சுப்ரீம் கோர்ட் அதே காரணங்கள் சொல்லி அந்த ஆறு பேரும் விடுதலை பெறுமாறு உத்திரவு பிறப்பித்து விட்டது. சரி, இதற்கு மேல் விஷயம் இருக்கிறதா? இருக்கிறது. அந்த ஏழு கொலையாளிகளை  சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்திருக்க வேண்டாம் என்று நாம் கருதலாம்.

 

பொதுவாகவே ஒரு கவர்னர், மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படி தனது பணிகளில் செயல்படவேண்டும் என்று நமது அரசியல் சட்டம் விதிக்கிறது – பிரிவு 163 அப்படிச் சொல்கிறது. அதன்படி, ஒரு குற்றவாளிக்கு மன்னிப்போ தண்டனைக் குறைப்போ அளிக்கும் அதிகாரம் கவர்னருக்கு  இன்னொரு பிரிவின் கீழ் வழங்கப் பட்டாலும், அந்த அதிகாரமும் மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படியே செயலாக்கப்பட  வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெளிவாக்கி இருக்கிறது. ஆனால் இந்த மாதிரியான விஷயத்தில், இரண்டு சமயங்களில் ஒரு கவர்னர் மாநில அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்காமல் அதற்கு மாறாகத் தனது எண்ணப்படி முடிவெடுக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு (5 நீதிபதிகள் கொண்டது) ஏற்கனவே தீர்ப்பு அளித்திருக்கிறது [ஆர்வம் உள்ளவர்கள் பார்க்க: M.P. Special Police Establishment v. State of M.P – 2 (2004) 8 SCC 788].

 

சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வே சுட்டிக் காட்டிய அந்த இரண்டு  விதிவிலக்குகள் என்ன?

 

முதலாவது: மாநில அமைச்சரவையின் முடிவில் உள் விருப்பு-வெறுப்பின் தோற்றம்’ (apparent bias)  இருந்தால், கவர்னர் அதற்குக் கட்டுப்பட வேண்டாம்.

 

இரண்டாவது: அமைச்சரவையின் முடிவு ‘சிந்தனை அற்றதாக’ இருந்தால் கவர்னர் அதற்குக் கட்டுப் பட மாட்டார் என்றும் சுப்ரீம் கோர்ட் சொல்கிறது.  சுப்ரீம் கோர்ட் பயன் படுத்திய ‘Irrational’ என்ற ஆங்கிலச் சொல்தான் ‘சிந்தனை அற்றதாக’ என்று இங்கு தமிழில் தரப் படுகிறது.  அந்த ஆங்கில வார்த்தைக்கு சட்டத்தில் விசேஷ அர்த்தம் உண்டு. அந்த வார்த்தைக்கு (‘Irrational’)  தனது தீர்ப்பில் அர்த்தமும் விளக்கமும் கொடுத்தவர் ‘லார்ட் டிப்லாக்’ என்ற புகழ்பெற்ற ஆங்கிலேய  நீதிபதி.  அவர் எழுதியதைத் தமிழில் இப்படித் தரலாம்:  

 

புத்திமிக்க மனிதன் கவனத்துடன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கிற போது, அவர் எட்ட இயலாத ஒரு முடிவு ‘சிந்தனையற்றது’ என்றாகும்.  மேலும் அத்தகைய முடிவானது,  லாஜிக் அல்லது பொதுவில் வழங்கும் தார்மீகப் பண்புகளை மூர்க்கமாக மீறி எடுக்கப்படும் ஒரு முடிவாகவும் இருக்கும்.  

 

(Irrational decision: “So outrageous in its defiance of logic or of accepted moral standards that no sensible person who had applied his mind to the question to be decided could have arrived at it” Council of Civil Service Unions v Minister for the Civil Service [1985] AC 374)

 

Irrational’ என்ற சொல்லிற்கு  (தமிழில்: ‘சிந்தனையற்ற’) சட்ட உலகில் இது மிகவும் பிரசித்தியான விளக்கம்.

 

அந்த ஆங்கிலேய நீதிபதியின் கூற்றுப் படி, ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்ட ஏழு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையைக் குறைத்து  அவர்களை விடுதலை செய்யுமாறு எடப்படி அரசு தமிழக கவர்னருக்கு அளித்த ஆலோசனை ‘சிந்தனையற்றது’ – Irrational – என்று ஆகும். அப்படியான ஒரு முடிவுக்கு கவர்னர் வர முடியும். வர வேண்டும் என்பதுதான் சரி.  ஏன், கோர்ட்டே அந்த ஆலோசனை சிந்தனையற்றது என்ற முடிவுக்கு எளிதில் வர முடியும்.  இது எப்படி என்று பார்க்கலாம்.

 

  1991-ம் வருடம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி ஒரு மனித வெடிகுண்டால் – தாணு என்ற அந்நிய நாட்டுப் பெண்ணால், ஒரு கூட்டு சதியின் விளைவால் – படுகொலை  செய்யப்பட்டார். கொலையுண்டது இந்தியாவின் முன்னாள் பிரதமர். ஒரு பிரதமராக அவரும் அவரது அரசும் எடுத்த சில முடிவுகளுக்காக, இலங்கைப் பிரச்சினையில் அவர் கொண்டிருந்த நிலைக்காக, ஒரு கூட்டம் அவரைத் தீர்த்துக் கட்ட நினைத்தது.


     “எங்கள்  விருப்பத்திற்கு  எதிராக  உங்கள்  நாடு முடிவெடுத்தால், அல்லது முயற்சித்தால், உங்கள் பிரதமரே காலி”  என்று அந்தக் கூட்டம் இந்தியாவிற்கு விட்ட எச்சரிக்கைதான் ராஜீவ் காந்தியின் படுகொலை. அது நமது நாட்டின் இறையாண்மைக்கே விடப்பட்ட அச்சுறுத்தல். அப்படியானவர்களை இந்தியா ஒடுக்க வேண்டுமா இல்லையா? குறைந்த பட்சம், அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் முதலில் அளித்த தண்டனையாவது நிறைவேற்றப் பட்டிருக்க வேண்டும்.  ஆனால் நடந்தது என்ன?

         

நாலு பேருக்கு மரண தண்டனை, மூணு பேருக்கு ஆயுள் தண்டனை என்று முதலில் சுப்ரீம் கோர்ட் விதித்தது. பிறகு ஏதோ காரணங்கள் சொல்லப்பட்டு ஏழு கொலைக் குற்றவாளிகளுக்கும் தண்டனைகள் குறைக்கப் பட்டு அவர்கள் ஒவ்வொருவராக வெளி வருவது, என்பதெல்லாம் ‘புத்திமிக்க’ ஒருவர் நினைத்துப் பார்க்கும் செயலா? அப்படி நினைக்கிறவர் மாநிலத்தின்  முதல்வராகவோ மந்திரியாகவோ இருந்தால், அதற்கான முடிவை அவர்கள் எடுப்பது – அந்த ஆங்கிலேய நீதிபதி தெளிவுபடுத்திய படி – “லாஜிக்  அல்லது பொதுவில் வழங்கும் தார்மீகப் பண்புகளை மூர்க்கமாக மீறுவதாகும்”. அத்தகைய ஆலோசனைகளை நளினி விஷயத்தில் (தூக்கு தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைக்க) கவர்னருக்கு முதலில் அளித்த கருணாநிதி அரசும், பின்னர் எல்லாக் குற்றவாளிகள் விஷயத்திலும் (ஆயுள் தண்டனையைக் குறைத்து உடனடி விடுதலை அளிக்க) கவர்னருக்கு ஆலோசனை  தந்த எடப்பாடி அரசும் எடுத்த முடிவுகள் ‘சிந்தனையற்றது’ (Irrational) என்பது தெளிவாகிறது.  

 

இப்போது, சுப்ரீம் கோர்ட்டின் 5-நீதிபதி பெஞ்ச் அளித்த தீரப்பை நினைத்துப் பாருங்கள். ஒரு மாநில அமைச்சரவை கவர்னருக்கு அளிக்கும் ஆலோசனை சிந்தனையற்றதாக இருந்தால், அது கவர்னரைக் கட்டுப் படுத்தாது என்று அந்த அரசியல் சாசன பெஞ்ச் விளக்கம் கொடுத்து விட்டது.  ஆகையால் எடப்பாடி அமைச்சரவை அளித்த ஆலோசனையைத் தமிழக கவர்னர் ஏற்காமல் தொடர்ந்து பரிசீலனையில் வைத்திருந்தாலும், அல்லது ஜனாதிபதிக்கு அதை அனுப்பி இருந்தாலும், அந்த ஆலோசனை ‘சிந்தனையற்றது’ என்பதால் அது கவர்னரைக் கட்டுப் படுத்தாது. ஆகையால் ஏழு குற்றவாளிகளையும் சுப்ரீம் கோர்ட் விடுவிக்காமல் இருந்திருக்கலாம். சுப்ரீம் கோர்ட் அப்படியான சட்ட நிலையை எடுத்திருந்தால், நமது நீதி பரிபாலனத்திற்கு இன்னும் பெருமை சேர்ந்திருக்கும்.

 

இந்தியாவில் மனித வெடிகுண்டு மூலம் ஒருவர்  கொடூரமாகக் கொல்லப் படுவது ராஜீவ் காந்தி படுகொலையில்தான் முதலில் நிகழ்ந்தது. அந்த பயங்கரவாதத்தில் அவரோடு பதினான்கு அப்பாவி மனிதர்களும் பலியானார்கள்.  அவர்களில் ஒன்பது பேர் போலீஸ்காரர்கள். உயிர் இழந்தவர்களில் தமிழ் நாட்டுக்காரர்கள் அதிகம். நமது மண்ணில் நமது முன்னாள் பிரதமரை பயங்கரவாதத்தினால் கொன்றவர்களுக்குத் தண்டனைக் குறைப்பு செய்து அவர்களை முன் கூட்டியே விடுதலை செய்ய கவர்னருக்கு ஒரு அமைச்சரவை ஆலோசனை சொல்வது, ‘சிந்தனையற்றது’, ஆகையால் கவர்னர் அந்த ஆலோசனைகக்குக் கட்டுப்பட்டு அதன்படி செயல்பட வேண்டாம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் துரதிர்ஷ்டமாக சுப்ரீம் கோர்ட்டின் பார்வை இப்படி அமையவில்லை.  

 

சதி செய்து நமது பிரதமரை – முன்னாளோ இன்னாளோ – கொடூரமாகத் தீர்த்துக் கட்டிய பாதகர்களுக்கு சுப்ரீம் கோர்ட் விடுதலை அளிக்காமல் இருந்தால் நிஜத்தில் என்ன ஆகும்? ஸ்ரீபெரும்புதூரில் படுகொலையான அப்பாவி இந்தியர்களின் உயிர்களை நாம் மதிப்பதாக இருக்கும். இன்னும் முக்கியமாக, உலகளவில் நம் நாட்டின் மரியாதையையும், நாட்டு மக்களின் மனதில் ஆறுதலான பெருமிதத்தையும் கோர்ட் உறுதி செய்திருக்கும். இந்த விளைவுக்காக மட்டும் சுப்ரீம் கோர்ட் தனது விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்திருக்கக் கூடாது. தன் நெஞ்சைத் தொட்டுக் கேட்டால் இந்த விடைகள்தான் ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்கும்.

 

சரி, இப்படியும் நினைத்துப் பார்ப்போம். ராஜீவ் கொலையாளிகளின் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை கவர்னருக்கு அளித்த ஆலோசனையில் நியாயம் இருக்கும், அது சிந்தனை மிக்கதாக இருக்கலாம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஒரு முன்னாள் பிரதமரின் கொலைகாரர்களுக்கே இந்தச் சலுகை உண்டென்றால், வரைமுறை இல்லாமல் எந்தக் கொலைகாரனையும்  ஒரு அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யக் கேட்க முடியுமே? அதற்கு எந்த கவர்னரும் மறுப்பு சொல்லாமல் கையெழுத்துப் போடவேண்டுமே? அதுதான் நமது சட்டமா? உதாரணத்திற்கு,  2008-ல் மும்பைக்கு வந்து 166 பேரை சுட்டுக் கொன்ற அஜ்மல் கசாப்-புக்கும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டு, பின்னர் அதுவும் இல்லாமல் அவன் வெளியே வர மஹாராஷ்டிர அமைச்சரவை கவர்னருக்கு ஆலோசனை சொல்லலாமா? சொன்னால் அதையும் கவர்னர் ஏற்றுக் கையெழுத்துப் போட வேண்டுமா? அந்த ஆலோசனையைக் கூட ‘சிந்தனையற்ற’ ஆலோசனை, ஆகையால் அதைக் கவர்னர்  ஏற்க வேண்டியதில்லை என்று சட்டம் பார்க்காதா?

 

இல்லை, இதுதான் நாட்டின் உண்மை நிலவரமா? மும்பையில் படுகொலைகள் செய்த கசாப்-பிற்கு தண்டனைக் குறைப்பு அளித்து விடுதலையும் கொடுத்தால், அதற்குத் துணை போகும் கட்சி மஹாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. ஆனால் நாட்டின் முன்னாள் பிரதமரே தமிழக மண்ணில் கொடூரமாகக் கொல்லப்பட்டாலும், அவரோடு பதினான்கு அப்பாவிகள் பலியானாலும், குற்றவாளிகள் அனைவருக்கும் முதலில் தண்டனைக் குறைப்பு, பின்னர் விடுதலை என்று வெட்கம் இல்லாமல் ஏற்பாடு செய்த திராவிடக் கட்சிகள்  மீண்டும் மீண்டும் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வரலாம்.

 

எல்லாவற்றையும் விடுங்கள். கடைசியாக, ஒரு கற்பனை செய்து பார்க்கலாம். ஒரு பயங்கரவாதி ஏதாவது ஹை கோர்ட் கட்டிடத்தின் மீது குண்டு போட்டுப் பத்து நீதிபதிகளை அநியாயமாகக் கொலை செய்துவிடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது நடக்க வேண்டாம், வெறும் கற்பனையாகவே இருக்கட்டும். ஆனால் அப்படி நடந்தால், அந்தக் குற்றத்திற்காகப் பிடிபட்டு தண்டிக்கப் படும் கொலையாளி எவனும் ஒரு மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் கவர்னரின் கட்டாய ஒப்புதலுடன் வெளிவரமாட்டான் என்று நாம் நம்புவோம். இந்தக் கற்பனை நிகழ்விலாவது மாநில அமைச்சரவையின் பாசமிகு ஆதரவைப் பெறும் ஒரு பயங்கரவாதி தண்டனைக் குறைப்பு பெற்று தப்பிக்காமல் இருக்கட்டும். ஒரு வகையில் இது தேசாபிமான நல்ல நினைப்புதானே?  

* * * * *

Copyright © R. Veera Raghavan 2022

Saturday, 29 October 2022

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: கேஜ்ரிவாலின் கோஷம் - "நோட்டுல சாமியைப் பாத்து, போடுங்கம்மா ஓட்டு!"

 

- ஆர். வி. ஆர்

 

 

ஜாம் ஜாம்னு இன்னிக்கு டெல்லி முதல் மந்திரியா இருக்கார் கேஜ்ரிவால். அவர் தொடங்கின கட்சிதான் ஆம் ஆத்மி கட்சி. அந்தக் கட்சியோட தேர்தல் சின்னம் தெரியுமில்லையா? அதான், விளக்குமாறு.

 

கேஜ்ரிவாலுக்கு பளிச்னு வெளில சொல்ல முடியாத ஒரு பெரிய ஆசை இருக்கு. என்னன்னா, அவர் சீக்கிரமா நம்ம நாட்டு பிரதம மந்திரி ஆயிடணும். அந்த மாதிரி ஆசை மம்தா பானர்ஜிக்கும் இருக்கு, ராகுல் காந்திக்கும் இருக்கு. நித்திஷ் குமாரும் ஓரக் கண்ணுல அப்பிடி ஆசைப் படறார். ஆனா கேஜ்ரிவால் தான் இதுல ராட்சஸ ஆசை வச்சிண்டிருக்கார். அது அவருக்கே தெரியாம மறைமுகமா வெளிப் பட்டுடுத்து. எப்பிடின்னு தெரிஞ்சா சிரிப்பேள். ஏற்கனவே சிரிச்சிருப்பேளே!

 

        இன்னும் ரெண்டு மாசத்துல குஜராத் சட்டசபைத் தேர்தல் நடக்கப் போறது. கேஜ்ரிவால் அங்க போய் அவர் கட்சிக்காக பிரதமர் மோடியை எதிர்த்தும் பிரசாரம் பண்ணிண்டிருக்கார்.  இந்த சமயத்துல, திடீர்னு அவர் மோடிக்கு ஒரு ஐடியாவைச் சொல்லிருக்கார். இனிமே இந்திய ரூபாய் நோட்டுகள்ள ஒரு மாறுதல் பண்ணணும்னார். "ரூபா நோட்டுல ஒரு பக்கம் வழக்கம் போல காந்தி படம் இருக்கட்டும். மறு பக்கத்துல லட்சுமி, விநாயகர்னு சாமி படமா போடுங்கோ. லட்சுமி வளமைக்கு அதிபதி. விநாயகர் தடங்கல்களை நீக்குவார். அவா உருவம் நம்ம ரூபா நோட்டுல இருந்தா நம்ம பொருளாதாரம் முன்னேறும்"னு பத்திரிகையாளர்கள் முன்னாடி பேசிருக்கார், மூணு நாள் முன்னாடி. சிரிக்க முடியறவா சிரிக்கலாம். முடியாதவா அழலாம்.

 

கேஜ்ரிவால் அப்பிடிப் பேசினதுக்கு அவரோட இந்த நினைப்புதான் அடிப்படையா இருக்கணும்:  

 

‘ஹிந்துக்களோட ஓட்டு மோடியோட பா.ஜ.க-வுக்கு நிறையப் போறது. அதுக்கு ஒரு காரணம், மோடிக்கு ஹிந்து மதத்துல இயற்கையாவே பற்று இருக்கு, ஹிந்துக் கோவில்களுக்குப் போறார், சாமி கும்பிடறார், அது நாடு பூரா டிவி-ல தெரியறது. அந்தக் காட்சி ஹிந்துக்களுக்குப் பிடிக்கறது. அப்பழுக்கில்லாத நேர்மை, அசாதாரண  தலைமைப் பண்பு, அபாரமான மேடைப் பேச்சு, அவரோட மத்த சாதனைகள், எல்லாத்தோடயும் அவரோட ஹிந்து மதப் பற்றும்  சேர்ந்துண்டு ஹிந்துக்களை அதிகமா இறுக்கமா அவர்கிட்ட இழுக்கறது. இப்படிப் போயிண்டே இருந்தா நான் என்னிக்குப் பிரதம மந்திரி ஆறது?’

 

‘மோடியோட வெளிப்படையான அரசியல் நேர்மை, தலைமைப் பண்பு, சாதனை சரித்திரம், இதெல்லாம் எனக்குக் கிடையாது, வரவும் வராது. அப்ப ஒண்ணு பண்றேன். எண்பது பெர்சன்ட் ஹிந்துக்களை ஒரே ஐடியாவுல தெய்வத்தை நினைச்சு உருக வைச்சு என் பக்கம் இழுக்கறேன். இனிமே அச்சடிக்கிற ரூபா நோட்டுக்கள்ள ஒரு பக்கம் லட்சுமி, விநாயகர் அப்பிடின்னு ரெண்டு ஹிந்து தெய்வங்கள் உருவத்தைப் போடுங்கோன்னு மோடிக்கு பப்ளிக்கா ஒரு யோஜனை சொல்றேன். அது நடந்தா,  தினம் தன் கைக்கு வர ரூபா நோட்டுல லட்சுமி, விநாயகர் உருவங்களைப் பாத்து ஹிந்து ஜனங்கள் கண்ணுல ஒத்திப்பா. அப்பறம் நாடு பூரா லட்சோப லட்ச ஹிந்துக்கள் லோக் சபா தேர்தல்ல மோடியை ஒதுக்கி வைச்சு என்னோட விளக்குமாத்து சின்னத்துக்கு ஓட்டுப் போடுவா. சிறுபான்மை மக்களை வேற விதமா தாஜா பண்ணி அவா ஓட்டையும் வாங்கப் பாக்கறேன்.'


'இந்தப் பிளான்ல போனா என் கட்சிக்குத்தான் மெஜாரிட்டி கிடைக்கும். நான் பிரதமர் ஆயிடலாமே?’

 

    'ஆனா என்னோட யோஜனைக்கு உண்மையான காரணம் என்னன்னு நான் அசட்டுத் தனமா வெளில சொல்ல முடியுமா? பொருளாதாரத்தோட காசு பணம் சம்பத்தப் பட்டது. அதுனால, லட்சுமி விநாயகர் உருவங்களை ரூபா நோட்டுல சேர்த்தா நாட்டுப் பொருளாதாரம் உயரும், முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது, எல்லா மனுஷாளும் சீக்கிறமே சுபிட்சமா இருப்பா, நம்ம பிரயத்தனத்துக்கு மேல தெய்வ அனுக்கிரகமும் நமக்கு வேணும் அப்படிங்கற மாதிரி சொல்லிட்டுப் போறேன். இதை நம்புவோம், இல்லாட்டி தெய்வக் குத்தமா ஆகும்னு நிறைய ஹிந்துக்கள் நினைப்பாளே?’

 

‘ஒருவேளை என யோஜனையை மோடி செயல் படுத்தலைன்னா? ரூபா நோட்டுல லட்சுமி விநாயகர் தெய்வங்களை நாம பாக்க முடியாம பண்ணினவர் மோடிதான்னு நினைச்சு ஹிந்துக்கள் அவர் மேல கோபப் படட்டும். இந்தியப் பொருளாதாரம் பெரிசா முன்னேறாததுக்குக் காரணம், ரூபா நோட்டு டிசைனை நான் சொன்னபடி மாத்தலை, அதான் காரணம்னு அப்ப சொல்றேன். மோடி ஓட்டுக்கள் என் பக்கம் நிறையத் திரும்புமே?’

 

கேஜ்ரிவால் தலைக்குள்ள இந்த மாதிரி எண்ணங்கள் ஏன் தறி கெட்டு ஓடும்னா,  அவர் கிட்ட குயுக்தி நிறைய இருக்கு.  அவர் கெட்டிக்காரர் தான். ஆனா தகாத எண்ணம், கெட்ட எண்ணம், இதுகளோட சேர்ந்த கெட்டிக்காரத்தனம் இருக்கே, அதுக்குப் பேர்தான் குயுக்தி.

 

மதத்தை நம்பறது, தெய்வத்தை நம்பறது, இதெல்லாம் அடிப்படைல என்னங்கறேள்? சங்கடங்கள் நிறைஞ்ச நம்ம வாழ்க்கைல ஒரு சமாதானம், அமைதி தேடறதுக்கு அவா அவா ஏத்துண்ட, நம்பிக்கை வச்சிருக்கற, ஒரு மார்க்கம். அதுக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் விஞ்ஞானத் தத்துவங்களுக்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியமில்லை.  ஐ.ஐ.டில எஞ்சினீரிங் படிச்ச கேஜ்ரிவாலுக்கு இது நன்னாத் தெரியும். ஆனா அவரோட பிரதம மந்திரி ஆசையும் அவர் குயுக்தியும் ஒண்ணா கலந்து அவரை அசட்டுத்  தனமா பேச வச்சிருக்கு.

 

கேட்டா, இந்தோனீஷியா நாட்டுல ரெண்டு பெர்சன்ட்டுக்கு குறைவாதான் ஹிந்துக்கள், எண்பத்தி ஐந்து பெர்சன்ட்டுக்கு மேல முஸ்லிம்கள், அந்த நாட்டு நாணய நோட்டுல விநாயகர் படம் இருக்கேன்னு விதண்டாவாதம் பண்றார் கேஜ்ரிவால். நம்ம நாட்டுல இப்ப இருக்கற அரசியல் சமூக நிலைமை என்னன்னு பாக்காம ‘இன்னொரு நாட்டுல அப்படி இருக்கேன்னு’ குழந்தைத் தனமாவா ஒரு முதல் மந்திரி பேசுவார்? அது மட்டும் இல்லை. வினாயகர் படம் போட்ட இந்தோனீஷிய 2,000 ரூபாய் நோட்டுக்கள்  பதினாலு வருஷத்துக்கு முன்னாலயே புழக்கத்துலேர்ந்து  அந்த நாடு எடுத்தாச்சு, இப்ப விநாயகர் படம் போட்ட நோட்டு அங்க இல்லைன்னு இன்டர்நெட் சொல்றது.    

 

சரி, இப்பிடியும் நினைச்சுப் பாக்கலாம். ‘ஹிந்து ஓட்டுக்களை ஈஸியா வாங்கணும்னு கேஜ்ரிவால் நினைக்கலை. தான் சொன்னது நிஜமாவே நாட்டுக்கு நல்லது, அதுனால நம்ம பொருளாதாரத்துக்கும் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்னுதான் கேஜ்ரிவால் அப்படிப் பேசினார்னு  ஒரு பேச்சுக்கு வைச்சுக்கலாம்.  இவர் பேசினதை, இவருக்குப் பதிலா மோடி பேசினார்னு நினைச்சுப் பாருங்கோ. அப்ப முதல்ல மோடி மேல பாயற ஆசாமிகள்ள கேஜ்ரிவாலும் இருப்பார். உண்டா இல்லையா? அப்பறம் எப்பிடி கேஜ்ரிவால் நல்லெண்ணத்தோட மோடிக்கு யோஜனை சொன்னார்னு நினைக்க முடியும்?  


மோடி ஐடியா சொல்லி லட்சுமி விநாயகர் படங்களை  நம்ம ரூபா நோட்டுல போட்டா அந்த தெய்வங்கள் நாட்டுக்கு அனுக்கிரகம் பண்ணாது, அது நாட்டைப் பிளக்கற ஹிந்துத்வா, ஆனா தான் சொல்லி அது நடந்தா அந்த தெய்வங்கள் நமக்கு அனுக்கிரகம் பண்ணும்னு கேஜ்ரிவால் நினைக்கிறவர். ஏன்னா, பிரதமர் ஆகறதுக்கு வேற உருப்படியான வழி அவருக்குத் தெரியலை.

 

இப்பிடிப் பித்துக்குளி யோஜனை சொல்ற கேஜ்ரிவாலைத் திருத்தவே முடியாதான்னு கேட்டா, அதுக்கு ஒரே பதில்தான்: அதெல்லாம் நம்மளால ஆகற காரியமில்லை. லட்சுமி விநாயகர் தெய்வங்கள் நினைச்சா நடக்குமோ என்னவோ?

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

Wednesday, 26 October 2022

பாருக்குள்ளே நல்ல ஆசை!

 -- ஆர். வி. ஆர்

 

 

 

 

இரவில் தூங்கிய ஸ்டாலினும் – இனி

தேசியம் ஓங்கிய தமிழ்நாடும்

 

 

மனதில் முதிர்ந்த ராகுலும் – சில

மர்மங்கள் உதிர்ந்த சோனியாவும்

 

 

புத்தி தொலைக்காத சிதம்பரமும் - பதவி

மாண்பு குலைக்காத மன்மோகனும்

 

 

தலித்தால் தழைக்காத மாயாவும் - இங்கு

அதுபோல் பிழைக்காத திருமாவும்

 

 

உறவுகள் செழிக்கும் ஆட்சிமுறை - அதை

அறவே கழிக்கும் அகிலேஷும்

 

 

காலை வாறாத நித்திஷும் - லேசில்

நிறம் மாறாத உத்தவ்வும்

 

 

அரசிலும் மாட்டின் உணவிலும் - தூய

வெளிப்படை காட்டும் லாலுவும்

 

 

மமதை மறைந்த மம்தாவும் - புது

வளமை குறைந்த கே.சி.ஆரும்

 

 

கயமை குன்றிய பவாரும் - இந்த

தேசம் ஒன்றிய பரூக்கும்

 

 

தனி ஆசைகள் விட்ட கேஜ்ரியும் - நம்

காலம் தொட்ட கம்யூனிஸ்டும்

 

 

லஞ்சம் களைந்த அரசினரும் - நல்

நெறிகள் விளைந்த ஊடகமும்

 

 

நாடு சிறக்கக் காண்போமா? - பெரும்

கனவு பறக்கக் கலைவோமா?

 

  


* * * * *


Copyright © R. Veera Raghavan 2022

Saturday, 22 October 2022

Why Does Ashok Gehlot Worship the Gandhi Family?

           

         -- RVR


You know Ashok Gehlot. He is Rajasthan’s chief minister, in his third term now. But his high honour lies elsewhere. He takes pride as a steadfast loyalist of the Congress Party – or precisely, of Sonia Gandhi, Rahul Gandhi and Priyanka Gandhi. On that, he left no one in doubt when he told reporters five days ago:  

 

“Vinoba Bhave had once said that his relationship with Bhagwat Gita was beyond reason. Similarly I would like to say that my relations with Gandhi family are exactly like relations between Vinoba ji and Holy Gita. In other words my relations with Gandhi family have been and are beyond all logic and reasoning. And it will continue to be so throughout my life”

 

       Gehlot is 71, in his 14th year as chief minister of Rajasthan. He knows that a younger and vibrant Congressman in his state, 45-year-old Sachin Pilot, has been aspiring for that office and working on it for a few years. Feeling threatened in that office, and suspecting some signs of support for Sachin Pilot from the party leadership, Gehlot said this also at the same time:

 

“There is no alternative to experience at any level. …… The young leaders in Congress should work hard and the central leadership will definitely give them a chance.”

 

Does Ashok Gehlot sound funny and self-centred in these utterances? Surely yes, and a few things are a clear pointer.

 

The Congress is a political party in a democracy. It should aim to win the trust of people, get enough votes and form governments at the Centre and in the states, provide an efficient corrupt-free administration and improve the country’s economy and people’s welfare to maximum levels.  The best way for any party to do this is to let a clean, strong, and forward-looking leadership based on merit come up within the party – and then ensure that real talent keeps freely growing across the party to reach positions of power and responsibility as they arise. But that culture took leave of the Congress some decades ago, to the delight of established heavy weights like Ashok Gehlot.

 

Who doesn’t know that Sonia Gandhi and Rahul Gandhi tightly hold the reins of power in the Congress Party?  Sonia Gandhi is enigmatic and Rahul Gandhi is quixotic. Priyanka Gandhi is treated like a goddess in the party. Her husband Robert Vadra tags along for his joy and more.  Together they are called “Gandhi family” in political parlance. It is to them Ashok Gehlot looks up in reverence.

 

Six years after Rajiv Gandhi’s death Sonia Gandhi became a primary member of the Congress Party in 1997. Two months later she became the President of the party. She continued as President at a stretch for nineteen years and, after a break, again for three years.  That is nearly twenty-two years in all. Should be an unmatched record in any political party in a democracy. 

 

Now, to Gehlot’s unabashed comparison of his devotion to the Gandhi family with Vinoba Bhave’s relations with Bhagwat Gita.  

 

Lord Krishna’s teachings delivered to Arjuna on the battlefront are comprised in Bhagwat Gita. Vinoba Bhave had studied Bhagwat Gita and was deeply inspired by the lessons he gained from the Gita.  He had translated the Gita into Marathi. He had given talks on the Gita, including many to his compatriots when they were all in jail as freedom fighters. To him, Bhagwat Gita was an abundant source of valuable knowledge.  “The place of the Gita in my life is unique. She is always there to help me in need”, wrote Vinoba.  

 

The same Bhagwat Gita can be a beacon of knowledge to anyone else too – not just Arjuna or Vinoba - who benefits by reading that book or listening to its recitations. That is, the Gita doesn’t selectively reward those who adore the treatise. The Gita, doesn’t look for support from its followers.  It talks about detachment and explains it, and it doesn’t look for quid quo pro of any sort from anyone. This is where Bhagwat Gita differs on all fours from the Gandhi family. The clever Ashok Gehlot knows it too. Then why did he utter the words ‘Bhagwat Gita’ when talking of his relations with the Gandhi family?  Well, that was a good way of pleasing the high ego of the entire Gandhi family who will relish it too.  

 

Are we being overcritical of Ashok Gehlot? Is it possible he was absolutely truthful or sensible about his relations with Gandhi family? Not at all. 

 

One may extol the virtues of another and look up to that other on being benefited by the other. This is possible in life, especially personal life.  But rules of engagement or behaviour in an organisation are different. The Congress Party is a political organisation meant to serve people by forming governments and running them well with the best of its talents, young or old.  The chief of the party must not be a special benefactor of any partyman who has no great attributes.  Nor should the chief make his partymen, especially the second level leaders, feel free to eulogise the chief sky high.  

 

Ashok Gehlot has not told us about any great special qualities he found in Sonia Gandhi that inspired him to function as an able chief minister or in otherwise serving his people.  Yet he adores her so high. He would also know that Sonia Gandhi loves to see her son Rahul Gandhi become prime minister, and her daughter Priyanka Gandhi wield influence in the party and possibly in a government.  So he clubbed them all together and said that his relations with the “Gandhi family” – not just with Sonia Gandhi – was like Vinoba Bhave’s relations with Bhagwat Gita. Clever Gehlot!

 

 

Ashok Gehlot will value his relations with the Gandhi family in tune with his being kept in high positions in the party and in the government in Rajasthan, whatever he says in public. Having delivered a most humble message for the ears of Gandhi family, he has also cautioned the aspiring young Sachin Pilot that “there is no alternative to experience at any level. …… The young leaders in Congress should work hard and the central leadership will definitely give them a chance.”

 

Rajiv Gandhi was 40 when he became India’s prime minister. His mother Indira Gandhi was 48 years and 2 months when she entered that office.  Does Gehlot say that a Congressman of 45 in Rajasthan – merely because he is not older – is unfit to become even a state chief minister?

 

Ashok Gehlot is not any exception on the Indian political scene. You’ll find replicas of him in many other states, in the Congress Party and in several regional parties.  He doesn’t have a good accident of birth in, or matrimonial alliance with, a powerful political family in India. That hurts him, especially when the current members of that political family don’t have gifts of reason, high integrity or great leadership and yet rule the party high and mighty.  So he looks up to that family and is overly nice to them. And even declares that his relations with the Gandhi family are "beyond all logic and reasoning".  

 

What can we do when the decay in our politics is still largely in place, looking for good chances to grow further?  I guess we can read Bhagwat Gita and try to find solace.

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022

Friday, 14 October 2022

கட்சியினரிடம் ஸ்டாலின்: நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே!

      -- ஆர். வி. ஆர்

 

சமீபத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தன் கட்சியினர் முன்பு அழாத குறையாகப் பேசிய வார்த்தைகளைக் கேட்டீர்களா? இது நடந்தது அக்டோபர் 9-ம் தேதி. 

அன்று நடந்த திமுக-வின் பொதுக்குழுவில் அவர்  மீண்டும் தலைவராகத் தேர்வானார். அங்கு பெரிதாகக் கூடி இருந்த மாநில அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், உள் கட்சித் தேர்தல்களில் சமீபத்தில் வென்றவர்கள் ஆகியோரிடம் அவர்  உரை ஆற்றினார். அவரது பேச்சின் முக்கிய பகுதிகள்: 

”ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவன் நான்.  இன்னொரு பக்கம் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போல இருக்கிறது என் நிலைமை. என்னை மேலும் துன்பப் படுத்துவது போல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?”

“நாள் தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்சனையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். சில சில நேரங்களில் தூங்க விடாமல் கூட ஆக்கி விடுகிறது.”

“பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக கழகம் பழிகளுக்கும் ஏளனத்திற்கும் ஆளானது. இன்றைக்கு நம் வீட்டு பாத்ரூம் படுக்கை அறை தவிர அனைத்தும் பொது இடமாகிவிட்டது. எல்லோருக்கும் செல் போன் மூன்றாவது கண்ணாக முளைத்து விட்டது. இப்போது உங்களுடைய ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப் படுகிறது. எனவே உங்களது ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாக நீங்கள் பயன் படுத்த வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.” 

ஸ்டாலினின் இந்தப் பேச்சு டிவி, பத்திரிகைகளில் வெளிவந்தது. அதன் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் ஜிவ்வென்று பரவி விட்டது. மேலாகப் பார்த்தால், ஸ்டாலின் பேசியது ஒரு நல்ல தலைவர் செய்யக் கூடியது என்று தோன்றலாம். ஆனால் உண்மை வேறு. 

      ஒரு அரசியல் கட்சியின் எல்லாத் தொண்டர்களும் லோக்கல் பெரும் புள்ளிகளும், கட்சி நிர்வாகிகளும் எப்போதும் கண்ணியமாக கட்டுப்பாடுடன் பேசுவார்கள், செயல்படுவார்கள் என்றில்லை. சில தவறுகள், முறைகேடுகள் அங்கங்கே நடக்கலாம். ஆனால் இதில் இரண்டு மூன்று விஷயங்கள் கவனிக்கப் பட வேண்டும். 

ஒன்று, கட்சியினரிடம் அதுபோன்ற தவறுகள் அங்கங்கே மட்டும் நிகழ்ந்தாலும், கட்சித் தலைமை சம்பத்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தன் பெயரைக் காப்பாற்ற முனைகிறதா? 

அது இல்லாமல், கட்சியில் முறைகேடாக  செயல்படுபவர்கள், கண்ணியம் இல்லாமல் பேசுபவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை பெரிதாக இருக்கிறதா, அவர்களின் பேச்சும் செயலும் மக்களுக்குத் தொடர்ந்து தீங்கு  விளைவிக்கிறதா, அந்தத் தகாத பேச்சும் செயலும் அடுத்தடுத்த மேல் மட்டங்களில் ஊருக்கு ஊர் பரவலாக இருக்கிறதா – இது போக, தொடர்புடைய யார் யாரோ (மாமன் மகன், மாப்பிள்ளை உட்பட)  எப்படி எப்படியோ பணம்  சம்பாதிக்கிறார்களா? ஆம் என்றால் அந்த அவலத்திற்கான பொறுப்பைக் கட்சியின் தலைமை தான் ஏற்கவேண்டும். அந்த நிலையில் ஒரு தலைவர்  கட்சியினருக்கு கண்ணியத்தில், நன்நடத்தையில் அறிவுரை கூறினால் அது ஹாஸ்யம். பயன் தராது. 

எல்லாவற்றையும் விட இந்தக் கேள்விகள் முக்கியம்.  கட்சித் தலைமை அப்பழுக்கில்லாமல் நடந்து கொள்கிறதா? கட்சித் தலைமையின் பண்பும் நடத்தையும் வெளி உலகில் மற்றும் நான்கு சுவர்களுக்குள் எவ்வாறு இருக்கின்றன?  சட்ட ஆதாரம் வைக்காமல் எந்த ஒரு கட்சி மர்மப் பொருளாதாரம் நடத்தினாலும், கட்சியினர் அதை நுகர்வார்கள். பின்பு அவர்களும் அதற்கு ஆசைப்படுவார்கள். 

குடும்பத் தலைமை உள்ள கட்சிகளில் ஒழுங்கீனமும் சீரழிவும் அதிகமாகத் தோன்றும். காரணம், ஜனநாயகத்தில் அதன் முக்கிய அங்கமான ஒரு அரசியல் கட்சியே ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி இருப்பது, கட்சிக்குள் மற்றவர்கள் பெரிதாக வளர்வதற்குத் தடையாக அமையும். உள் கட்சி ஜனநாயகத்தைக் காற்றில் பறக்க விடும் ஒரு குடும்பத் தலைமை, தன் குடும்பம் செழிக்க ஒரு நியதி வைத்து அதற்கு நேர் மாறான நல்ல நல்ல அறிவுரைகளைக் கட்சியினருக்கு வழங்கும். கட்சித் தலைமை குடும்பத்தை ஒட்டி அல்லது குடும்ப வழியில் பல பத்தாண்டுகள் நீடிக்கலாம், அது வேறு விஷயம்.   

சரி, இதன் பக்க விளைவு இன்னும் என்னவாக இருக்கும்?   

தன் வியாபாரம் அல்லது தொழில், தன் மகன்  மகள்களின் வியாபாரம் ஆகியவை பெருக, தன் குடும்பத்தின் செல்வம் செழிக்க, கட்சியில் பல புத்திசாலிகள் கட்சித் தலைமைக்கு ராஜ விசுவாசம் காட்டி - சில கட்சிகளில் மேலே கொடுப்பதைக் கொடுத்து கீழே கிடைப்பதைப் பெற்று – வசதி   காண முயல்வார்கள். அல்லது கட்சித் தலைமை நிலைத்து நிற்க  சட்ட ரீதியாகவோ வேறு வகையிலோ பக்க பலமாக இருந்து தன் ஆதாயத்தைப்  பார்த்துக் கொளவார்கள். இதற்கு ஒரு வகையில் உதாரணம் இப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கட்சி. இன்னொரு வகையில் திமுக பிரதானம்.   

ஒரு அரசியல் கட்சியில் பெரும் தவறுகள் செய்கிற தலைமை, தனக்குக் கீழே பல மட்டத்திலும் நிர்வாகிகளாக இருப்பவர்கள் நேர் வழியில் செயல்படுவார்கள், பண்பாகப் பேசுவார்கள், முறைகேடுகள் செய்ய மாட்டார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. அது நடக்காது என்றும் அந்தத் தலைமைக்குத் தெரியும். ஆனால் என்ன, பொது வெளியில் கூடிய வரை நாசூக்காகப் பேசி, முடிந்தால் இலக்கியமும் பேசி,  விங்ஞான ரீதியில் காதும் காதும் வைத்த மாதிரிப் பல காரியங்களை நடத்திக் கொள்ளும் கலை அபூர்வமாக ஒன்றிரண்டு அரசியல் தலைவர்களுக்குத் தான் புலப்படும். பொது வெளியில் தன்னை உத்தமனாகக் காண்பிக்க அத்தகைய தலைவர்கள் கட்சிக் காரர்களுக்கு கண்ணியத்தைப் பற்றி போதிக்கலாம். அதெல்லாம் நாடகப் பேச்சு என்பது பேசுபவருக்குத் தெரியும் கேட்பவர்களுக்கும் புரியும். 

திமுக குடும்பக் கட்சிதான் என்ற உண்மையைத் தன் வாயாலேயே ஸ்டாலின் பொதுக் குழுவில் சூசகமாக உணர்த்தினார். கூடி இருந்த அனைவரும் அதைக் கைதட்டி  ஏற்றுக் கொண்டார்கள். அதாவது, ஸ்டாலின் பேசும்போது ஒரு நபரை மட்டும் குறிப்பிட்டு இப்படிப் பாராட்டினார்: “இளைஞரணியின் செயலாளர் தம்பி உதயநிதியின் முன்னெடுப்பு, பெருமையோடு சொன்னாங்களே, நாடு முழுவதும் திராவிட மாடல் பாசறைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்று ..... அது பற்றி எனக்கு மிக மிக மிக மன நிறைவாக இருக்கிறது”. இதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அரங்கம் கைதட்டிக் கட்சியின் எதிர்காலத் தலைவரை வரவேற்றது.    

மத்தளம் போல் இரண்டு பக்கத்திலும் தான் அடி வாங்குவதாக அலுத்துக்  கொண்டாரே ஸ்டாலின் – கட்சியில் மற்ற ஒருவர் தலைவராக இருந்து ஒரு பக்க மத்தள அடியை வாங்கிக் கொள்ளட்டும், தான் முதல்வராக இருந்து இன்னொரு பக்க அடியை மட்டும் வாங்கலாம் என்று நினைப்பாரா?  உம்ஹூம். எல்லா அடியும் தன் மேல் விழட்டும் என்ற தியாக சிந்தனையா அவருக்கு? அல்லது குடும்பப் பாசத்தினால் எந்த வாய்ப்பையும் விட முடியவில்லையா?   

ஸ்டாலின் தன் கட்சியினருக்குச் சொன்ன அறிவுரைகளின் எதார்த்தமான அர்த்தம் இதுதான்: “உங்கள் பேச்சிலும் செயல்பாட்டிலும் எச்சரிக்கையாக இருங்கள். இல்லாவிட்டால் உங்களை வீடியோ எடுத்து செல் போனில் உலவ விடுவார்கள். அதை நீங்களோ நானோ மறுக்க முடியாமல் போய்விடும். நீங்கள் எச்சரிக்கை தவறுவதால் நான் கடைசியில் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆகவே எனக்குப் பிரச்சனை உண்டாக்காதீர்கள்.” 

அதிகார மமதை, குடும்பப் பெருமை பீற்றல்,  மேல் ஜாதி உணர்வு, மக்களைப் பற்றிய இளக்காரம், அப்பட்டமான ஹிந்து எதிர்ப்பு போன்ற எண்ணங்களைத் தம் பேச்சுக்களில் வெளிப்படுத்திய ஆர்.எஸ்.பாரதி, பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன், க. பொன்முடி, ஆ. ராசா ஆகியவர்களை ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசியபோது மனதில் வைத்திருப்பார். ஆனால் “நீட் விலக்குப் பெறுவதின் ரகசியம் எங்களுக்குத் தெரியும்” என்று அச்சுப் பிச்சாகப் பேசிய உதயநிதியை நினைவில் வைத்தாரா? இல்லை, சென்ற தமிழகத் தேர்தலுக்கு முன் தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர் அணியில் இருந்த போது அவருக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை ஸ்டாலினே மக்கள் முன் வைத்தாரே, பிறகு செந்தில் பாலாஜியைத் திமுக-வில் சேர்த்து எம். எல். ஏ-வாக்கி வளமான மின் துறையில் அவருக்கு ஸ்டாலினே அமைச்சர் பதவியும் கொடுத்தாரே, அந்த கண்ணியத்தையாவது ஸ்டாலின் எண்ணிப் பார்த்தாரா? இது தொடர்பான எல்லாக் காட்சிகளையும் பொது மக்கள் செல் போனில் பார்த்தார்களே?  

 பொதுக் குழுவில் மைக் முன்னால் நின்றபோது, “உங்கள் பேச்சில், செயலில் கண்ணியத்தோடு நேர்மையும் நாணயமும் தலைதூக்கி இருக்க வேண்டும். எந்தப் பொதுப் பணத்தையும்  நீங்கள் மிகுந்த பொறுப்போடு கையாள வேண்டும். அரசாங்கத்தின் நியமனங்களில், அரசு நடவடிக்கைகளில் அல்லது ஒப்பந்தங்களில் கழகத்தவர்கள் தலையீட்டால் முறைகேடுகள் நடக்கின்றன  என்ற குற்றச் சாட்டிற்கு நாம் எள்ளளாவும் இடம் கொடுக்காமல் மக்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்”  என்றெல்லாம் ஸ்டாலின் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவரும் தினமும் நன்றாகத் தூங்கி நிம்மதியாகக் காலையில் கண் விழிக்கலாமே?

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2022