Wednesday, 28 January 2026

கேள்வி-பதில் (27.01.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

நண்பர்களே, வணக்கம்.

 

பலருக்கும் நான் வாட்ஸ் அப்பில் ஐந்து ஐந்தாக அனுப்பிவரும் கேள்வி-பதில்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டுகிறது. இதற்குக் கிடைத்திருக்கும் பரவலான வரவேற்பு எனது முனைப்பையும் உற்சாகத்தையும் கூட்டுகிறது. அனைவருக்கும் நன்றி.

 

சென்ற கேள்வி-பதில் பகுதியை (25.01.2026 தேதியிட்டது) நான் அனுப்பிய சில மணிகள் கழித்து, என் மொபைல் போன் வாட்ஸ் அப் செயலியில் கோளாறு ஏற்பட்டு அது முடங்கியது. பின்னர் ஒரு நாள் சென்ற பின், இன்று மாலை ஆறரை மணிக்கு என் போனில் அந்தச் செயலி மீண்டும் வேலை செய்யத் தொடங்கியபோது, முந்தைய வாட்ஸ் அப் சம்பாஷணைகள் அனைத்தும் என் போனில் காணவில்லை. காரணம், பின்வைத்தல் (back up) தொடர்பான ஏதோ சிக்கல் - இப்போது அது சரி செய்யப்பட்டு விட்டது.

 

என் வாட்ஸ் அப் செயலி முடங்கியிருந்த போது, சென்ற கேள்வி-பதில் பதிவிற்கு உங்களில் யாரேனும் எனக்கு நல்வார்த்தைகளில் மறுமொழி அனுப்பி இருந்தால் எனக்கு அது தெரியாமல் போயிருக்கும், நாகரிகம் கருதி நான் அவர்களுக்கு வழக்கமாக அனுப்பும் பதிலும் என்னிடமிருந்து அவர்களுக்கு வராமல் போயிருக்கும். அப்படியானால் அவர்கள் தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும்.

 

இப்போது ஒரே ஒரு கேள்வி-பதிலுடன் முடித்துக் கொண்டு வழக்கம் போல் பின்னர் வருகிறேன்.

 

 

கேள்வி: வாட்ஸ் அப்பில் தொடர்வது பயன் அளிக்கிறதா, உபத்திரவம் தருகிறதா?

 

பதில்: வாட்ஸ் அப்பில் ஒரிஜினலாக அனுப்புகிற, முன் நகர்த்துகிற, அனைவருக்கும் ஏக குஷி நிச்சயம் - மறைவுச் செய்திகள் நீங்கலாக. வாட்ஸ் அப் பார்க்கிறவர்களுக்குப் பயன் 10-லிருந்து 110 சதவிகிதம் வரை அவரவர் லயிப்பைப் பொறுத்து, அல்லது விரல் தடவும் வேகத்தைப் பொறுத்து, இருக்கும்.

 

பகுதி 44 // 27.01.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

 

No comments:

Post a Comment