|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "திமுக-வின் வஜ்ராயுதம், உதயநிதி" என்று
அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே அக்கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன்
பேசியிருக்கிறாரே? பதில்: இந்திரனின்
ஆயுதமான வஜ்ராயுதம் சக்திமிக்க எதிரிகளையும் அழிக்க வல்லது. உதயநிதி டைப்
வஜ்ராயுதம் வேறு. மாற்றுக் கட்சி எதிரிகளைப் பெரிதாக எதுவும் செய்யாது. சொந்தக்
கட்சி திமுக-வின் சீனியர் தலைவர்களையும் உதயநிதியின் காலடியில் கிடத்தி அவரை
வணங்கிப் புகழச் செய்யும். |
|
2. கேள்வி: ஜல்லிக்கட்டு
வீர விளையாட்டா? பதில்: ஒரு ஆட்டத்தில்
பங்கு பெறும் இரு தரப்பினரும், பங்கேற்கும் அனைவரும், ஆர்வத்தோடு
பங்கு கொண்டால் அது விளையாட்டு. நீங்கள் ஒரு நாயுடன் ஓடியாடினால் அதில்
இருவருக்கும் ஆர்வம் இருக்கும், அது இருவருக்கும்
விளையாட்டு. ஜல்லிக்கட்டு அப்படியல்ல. ஜல்லிக்கட்டு காளைமாட்டை மற்ற நேரத்தில் பாருங்கள். அதன் உடல்
உயர்ந்து வலுவாகத் தெரியும். அதன் கண்களில் சாந்தம் இருக்கும், திமிர்
இருக்காது. தனது உடல் வலிமையை அது மனிதர்களிடம் காட்ட விரும்பாது. ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைமாடுகள், மிரட்சியுடன்
மனிதர்களிடமிருந்து தப்பி ஓடுகின்றன. அதற்குத் தடையாக மாடுபிடி வீரர்கள்
குறுக்கே வந்தால் அவர்களை முட்டி விலக்கித் தப்பி ஓட முயல்கின்றன.
ஜல்லிக்கட்டில் வீரம் இல்லை. விளையாட்டு இல்லை. மற்றது உண்டு. |
|
3. கேள்வி: அயலகத்
தமிழர் தின விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
"வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்
என்று திராவிட இயக்கம் தமிழ் மண்ணில் விதைத்தது" என்று பேசி இருக்கிறாரே?
பதில்: திராவிட
மேடைகளிலிருந்து மக்களிடம் சொல்லப்படும் வெற்று அலங்கார வார்த்தைகள் அவை. தமிழகத்தில் திமுக
ஆட்சிகளின் லட்சணம் நாம் அறிந்தது. அதன் பரவலான தாக்கத்தில் மக்களிடம் சாதாரணத்
தமிழ் தடுமாறுவதும் நம் செவிகள் அறிந்தது. ஆக, திமுக ஆட்சியாளர்கள் தங்களைப் பற்றி, தமிழ்
வளர்ச்சிக்குத் தாங்கள் செய்தது பற்றி, ரகசியமாக இப்படிச்
சொல்லிக் கொள்ளலாம்: 'தாழ்வது நாமாக இருந்து தவழ்வது
தமிழாக இருக்கட்டும்.' |
|
4. கேள்வி: "தற்போது இன்ஜினியர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் என வெளிநாடுகளில் தமிழர்கள் குடும்பத்தோடு
வசிக்கின்றனர். இதுதான் திமுக அரசின் சாதனை" என்று துணை முதல்வர் உதயநிதி
பேசி இருக்கிறாரே? பதில்: ஒருவேளை, 'தமிழ்நாட்டு
இன்ஜினியர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள்
போன்ற நன்கு படித்த சமூகம் பெரும்பாலும் திமுக-வுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்,
அவர்கள் தமிழ்நாட்டில் ஓட்டுப்போட முடியாமல் குடும்பத்துடன்
வெளிநாடுகளில் இருக்கட்டும்' என்ற நினைப்பை உதயநிதி
இப்படிச் சொல்கிறாரோ? என்ன இருந்தாலும் அசட்டுப் பேச்சு. |
|
5. கேள்வி: சிரிப்பதற்கு
ஒன்று சொல்ல முடியுமா? பதில்: ஒன்று |
|
பகுதி 38 // 13.01.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment