|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "ததும்பும் தமிழ்ப் பெருமிதம்" என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின்
ஒரு புத்தகம் எழுதி இருப்பது, அவருடைய தமிழ்ப் பற்றைக்
காண்பிக்கிறதா? பதில்: ஈ.வெ.ரா-விடமிருந்து
அண்ணாதுரையும் சிலரும் வேறுபட்டு விலகி ஆரம்பித்த கட்சி, திமுக. அது இன்று
ஈ.வெ.ரா-வைக் கொண்டாடுகிறது. ஈ.வெ.ரா இழித்துப் பழித்த தமிழை இன்று போலியாகப்
போற்றுவதும் திமுக. ஒன்று ஈ.வெ.ரா, இன்னொன்று தமிழ், இரண்டுமே திமுக-வின்
பித்தலாட்டங்களை, ஆட்சி முறைகேடுகளை, மறைப்பதற்கு அந்தக் கட்சி பயன்படுத்தும் முகமூடிகள். இந்த இரண்டு
முகமூடிகளில் ஒன்றுக்கு முற்றிலும் மாறாக மற்றது இருந்தால் பாதகமில்லை.
முகமூடிகளுக்குள் என்ன லாஜிக்? இரண்டையும்
திமுக அவ்வப்போது துடைத்து வைக்கும், அவற்றுக்கு ஏதாவது
கோணல் மாணலாக வண்ணம் தீட்டும். தமிழ் முகமூடிக்கு இப்போது ஸ்டாலின் ஏதோ வண்ணம்
தீட்டுகிறார், அவ்வளவுதான். |
|
2.கேள்வி: கடைசியில்
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுக தலைவர் ஸ்டாலினிடம் சரண்டர்
ஆகிவிட்டாரே? பதில்: சொத்துக்குவிப்பு
வழக்கின் முதல் தீர்ப்பால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவிக்கு இக்கட்டு வந்தபோது, அவரால்
தமிழகத்தின் முதல்வராக அமர்த்தப் பட்டவர் ஓ.பி.எஸ். இப்போது அதிமுக-வுக்கு மீண்டும் திரும்ப முடியவில்லை, தனிக்கட்சி
நடத்தும் திராணியும் இல்லை, என்றால் ஓ.பி.எஸ் அரசியலில்
இருந்து கெளரவமாக ஓய்வு பெறலாம். அதைச் செய்யாமல், தனக்கு
அரசியலில் உயர்வு கொடுத்த ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு நடத்திய திமுக-விடம்
ஓ.பி.எஸ் சரண் அடைந்து அந்தக் கட்சியை சிலாகிக்கிறார். திமுக-வில் கருணாநிதி,
அவர் மகன் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி,
ஆட்சியில் இமாலய முறைகேடுகளைச் செய்ததில்லையா, செய்யவில்லையா? செய்தது உண்டு. விவேகம் இல்லாமல், எதுவானாலும் பதவி வெளிச்சத்தில் லயிக்க
ஆசைப்படுகிறார் ஓ.பி.எஸ். ஆள், திமுக-வுக்கு வசதியான அசடு. |
|
3. கேள்வி: முன்னாள்
அதிமுக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தற்போது தனித்து விடப்பட்டு திமுக-வில்
சரணாகி இருக்கிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி காரணம் ஆவாரா? பதில்: ஒரு
விதத்தில் ஆவார். இப்போதைய அதிமுக-வின்
தலைமை, ஒரு சிங்கக் கூட்டத்தின் தலைமை மாதிரி. அதாவது, அந்தக் கூட்டத்தின் தலைமைச் சிங்கம் நலிவுற்றால், காத்திருக்கும்
இன்னொரு சிங்கம் நலிவுற்ற சிங்கத்தை விரட்டியடித்து அந்தக் கூட்டத்தைக்
கைப்பற்றித் தன் கீழ் வைத்திருக்கும். அப்படியாகத் தற்போது அதிமுக-வின் தலைமைப்
பொறுப்பில் இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. முன்னர் தன்னால் விரட்டப்பட்ட
சிங்கங்களை அவர் தனது கூட்டத்திற்குள் இதுவரை அனுமதிக்கவில்லை. அதில் ஒன்று போக்கற்று நரிக்கூட்டத்தில்
சரணடைந்தாலும் ஆகும். |
|
4. கேள்வி: 'அவசர பொருளாதார சட்டத்தைப் பயன்படுத்தி எந்த ஒரு நாட்டிற்கும் வரி
விதிக்கும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு இல்லை' என்று
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இது டிரம்புக்குப்
பின்னடைவா? பதில்: அமெரிக்காவின் சட்ட
நிலை அநேகமாக இப்படித்தான் இருக்கும் என்று முன்பே அறிந்தவர் டிரம்ப். பல உலகத் தலைவர்களைக் கேவலமாகப் பேசும் இவரது தரைமட்ட தெனாவெட்டு, பிற
நாடுகளை இவரது எண்ணத்திற்கு அடிபணியச் செய்ய நினைக்கும் தாதாத்தனம், ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்றமும் பயந்து உடன்படும் என்று
கணக்கிட்டார் டிரம்ப். அது நடக்கவில்லை. இருந்தாலும், ஒரு
அதிபராகத் தன்னால் முடிகிற அடாவடிகளை அவர் தொடர்ந்து செய்வார். வெட்கமில்லாத
அவருக்கு மானம் போவது, அரசியல் உலகில் பின்னடைவு, பற்றிக் கவலை இருக்காது. |
|
5. கேள்வி: காங்கிரஸ்
எம்.பி மாணிக்கம் தாகூர் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என திமுக-வை நோக்கிக் குரல் எழுப்பி வருகையில், மதுரை
திருப்பரங்குன்றம் பகுதியில் 'வெள்ளைக்காரனையே விரட்டிய
காங்கிரஸ், இந்த கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா?' என்று காங்கிரஸ் தரப்பில் போஸ்டர் ஒட்டப் பட்டிருக்கிறதே? பதில்: கொள்ளைக்காரனுடன்
சேர்ந்து வேலை செய்து பயன்பெறத் துடிப்பவர்களுக்கு என்ன பெயர்? |
|
பகுதி 56 // 21.02.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment