|
கவிஞர்
மதுவந்தி எனது 48 ஆண்டு கால நண்பர். இயற்பெயர், நா. வீரராகவன். மதுரைக்காரர், பின்னர்
டெல்லிவாசி. நற்பண்புகள் மிகுந்தவர். பல நண்பர்களை ஈர்த்தவர். சமீபத்தில், ஆரோக்கியமான
67-வது வயதில் அவர் சட்டென மறைந்தார். அவருக்கு
அஞ்சலியாக, துயரத்தில் எழுதப் பட்ட பாடல் இது. இதிலுள்ள இழப்புணர்வு பலருக்கும்
வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும். |
|
போய்விட்டாய் போய்விட்டாய் சொல்லாமல் போய்விட்டாய் வாழ்வின் பரிதாபத்தை நொடியில் காட்டிப்
போய்விட்டாய் |
|
உன் நாவின் இனிய சொற்களும் - உன் இதயம் தேக்கிய கனிவும் - உன் கண்ணில் ஊறும் நட்பும் - பாவி காலனை ஈர்த்துக் கொண்டதோ |
|
நல்ல எழுத்தைப்
பார்க்கும் நான் பகிர்ந்து மகிழ
நீயில்லை நீ போற்றும் வரிகளை
நான் – இனி பார்க்கப்
போவதுமில்லை |
|
சட்டென நீ சென்றவுடன் சுற்றம் வெறுமை ஆனதே - உன் அழகிய பண்புகள் யாவும் - எனை ஆற்றுப் படுத்துக நண்பனே |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com பூபாளம், ஜூன்-ஜூலை 2026 |
No comments:
Post a Comment