|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜய்யிடம் உள்ள
மூன்று பாசிடிவ் பாயிண்டுகளைச் சொல்லவும். பதில்: ட்ரிம், ஃபிட்டாக இருக்கிறார்; பொதுவில்
தோன்றும்போது இனிமையான முகம் காண்பிக்கிறார்; பதவி
ஏற்றவுடன் பேசும்போது, "நான் தப்பு செய்ய மாட்டேன், தப்பு செய்யவும் விடமாட்டேன். எந்த பவர் சென்டரையும்
என்னைச் சுற்றி உருவாக விடமாட்டேன். 'ஜெயிச்சிட்டோம், ஒரு ஆட்டம் ஆடலாம்'னு
யாரும் நினைக்க வேண்டாம்" என்று பகிரங்கமாகச் சொல்லி, ஆட்சிக்கு நேராகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த பாசக்கார
வேஷக்காரக் கட்சிகளுக்கு வயிற்றில் கொஞ்சம் புளியைக் கரைத்திருக்கிறார். |
|
2. கேள்வி: முதல்வராகப் பதவி ஏற்ற தவெக தலைவர் விஜய், அந்த சமயத்தில்
தமிழர் உடையான வேட்டி சட்டை அணியாமல் கோட் சூட் அணிந்திருந்தது சரியா? பதில்: மாநிலத்தில் திமுக அரசு முடிவுக்கு வந்து
ஆட்சி மாற்றம் வரவேண்டும், அதிமுக-வையும் ஆட்சியிலிருந்து தள்ளி வைத்தால் அதுவும் நல்லது என்ற நிலை
இருந்தது. பேராச்சரியமாக, அந்த இரண்டு காரியத்தையும் விஜய் ஒருசேரச் செய்திருக்கிறார். இனி தவெக
எப்படி ஆட்சி செய்கிறது என்று
பார்க்கவேண்டும். இதெல்லாம் முக்கியம் எனும்போது, அவருடைய பதவி ஏற்பு ஆடையின் முக்கியத்துவம்
குறைகிறது. |
|
3. கேள்வி: இந்தச் சட்டசபையின் எம்.எல்.ஏ-வாக, உறுதிமொழி ஏற்க
மைக் அருகில் வந்த திமுக தலைவர் உதயநிதி, பார்வை படும் தூரத்தில்
கிட்ட அமர்ந்திருந்த முதல்வர் விஜய்யை வேண்டுமென்றே பார்க்காமலிருந்து, பண்புக்காக
அவருக்கு வணக்கம் சொல்லாமலும் இருந்தார். இதற்கு என்ன அர்த்தம்? பதில்: எதிலும்
உதயநிதியின் பார்வை, அவர் செய்கை, இரண்டுமே கோளாறானவை. இதை அவர் எப்போதும்
நிரூபிக்கிறார். |
|
4. கேள்வி: மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, இந்த
இருவரிடமிருந்தும் விஜய் எவ்வாறு வேறானவர்? பதில்: ஸ்டாலினுக்கும் பழனிசாமிக்கும் மக்கள்
மனதுடன் நேரடிப் பிணைப்பு சொற்பம், விஜய்க்கு அதிகம். ஸ்டாலினுக்குப் பரம்பரை
ரத்தமும் பலவாறான சேமிப்புகளும் இருப்பதால் கட்சியின் மீது அவருடைய பிடி
கெட்டியானது. பழனிசாமிக்கு அதுவும் இல்லை. |
|
5. கேள்வி: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அரசு
வீழ்ந்ததற்கும், தமிழகத்தில்
ஸ்டாலின் அரசு வீழ்ந்ததற்கும் என்ன வேறுபாடு? பதில்: மக்களை
வஞ்சிக்கிற, மக்களைச் சுரண்டுகிற, ஆட்சியாளர்கள் வீழ்ந்தார்கள் எனும்போது, அது ராட்சசியானால் என்ன, ராட்சசனானால் என்ன? |
|
பகுதி 89
// 11.05.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment