|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், பாஜக-வுக்குக்
கைகட்டி நிற்கும் அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி, குஜராத்தில்
பிறக்கட்டும்" என்று திமுக தலைவர் கனிமொழி கூறியுள்ளாரே? பதில்: அடுத்த
ஜென்மம் இருந்தால், ஊழல் மற்றும் தேசவிரோத அரசியல்வாதிகளை
அடக்கி வைக்கும் குஜராத் மனிதர் நரேந்திர மோடி தமிழகத்தில் பிறக்கட்டும். |
|
2. கேள்வி: "மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டால்தான், மாநில வளர்ச்சி
நன்றாக இருக்கும்" என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னையில்
கருத்து தெரிவித்திருக்கிறாரே? பதில்: சுய நலன் மற்றும் மகன் மருமகன் நலன்களில்
குறியாக இருக்கும் ஒருவர், மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டால், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி நன்றாக
இருக்காது என்று அவருக்குத் தெரியும். அது பற்றிக் கவலைப்படாத சந்திரபாபு நாயுடு
எதுவும் பேசலாம். |
|
3. கேள்வி: தமிழகம் வந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த்
கெஜ்ரிவால் சென்னையில் அளித்த பேட்டியில், "பிரசாரத்தின்
போது தமிழக மக்கள் என்னை உற்சாகத்துடன் வரவேற்றனர். தமிழக மக்கள் பாஜக மீது வெறுப்புடன்
உள்ளனர்" என்று கூறி இருக்கிறாரே? பதில்: தமிழக
மக்கள் பாஜக மீது வெறுப்பு கொண்டால் கூடப் பரவாயில்லை. குயுக்தி மன்னன், வெறுப்பரசியல் வேந்தன், அரவிந்த்
கெஜ்ரிவாலைத் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் வரவேற்று ஆதரவு தரும் பாதகத்தைச்
செய்யாமல் இருந்தால் போதும். |
|
4. கேள்வி: தனது கட்சிக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, "இலங்கை, நேபாளத்தில்
நடந்த புரட்சி இந்தியாவில் நடக்காது என்று சொல்ல முடியுமா?" என்று நாம்
தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுள்ளாரே? பதில்: அரசியல் பற்றி சீமான் ஒரு விஷயம்
பேசும்போது - அதுவும் தேர்தல் சமயத்தில் வாக்கு சேகரிக்கும்போது - இன்னொரு விஷயத்துக்குத் தாவுவதில், மரம் விட்டு மரம் மட்டுமல்ல, மலை விட்டு மலையும் தாவுவார். அறிவாந்தவராக
இருந்தாலும் அவரிடம் சிந்தனை ஒழுங்கு இல்லை. |
|
5. கேள்வி: "ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருடன் தவெக தலைவர்
விஜய்க்கு நெருக்கமான உறவு இருக்கிறது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்
தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளாரே? பதில்: திருமாவளவனுக்கு
நகைச்சுவை உணர்வு அறவே இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அந்தக்
குற்றச்சாட்டை,
'போடா டேய்' என்று சொல்லி அரைச் சிரிப்புடன் இடது காலால் உதைத்துத்
தள்ளிவிட்டார் அவர். |
|
பிகு: நாளை நடக்கப் போகும் தேர்தலுக்காக, யாரை
எதிர்த்தும் யாருக்கு ஆதரவாகவும் செய்யப்படும் பிரசாரம் அல்ல இது. வாக்காளர்கள்
அனைவரும் சுதந்திரமாகத் தாங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள். |
|
பகுதி 83//22.04.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
Wednesday, 22 April 2026
கேள்வி-பதில் (22.04.2026)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment