|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "2026 சட்டசபைத் தேர்தலுக்குப் பின், திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் வெளியேற திமுக-வே காரணம். நல்லிணக்க நட்பைத் தக்கவைக்கும் ஆற்றல் திமுக-விடம் இல்லாததால், அந்தக் கூட்டணியில் இருந்த கட்சிகள் வெளியேறின" என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறாரே? பதில்: 'திமுக
கூட்டணியை விட்டுத் தவெக கூட்டணிக்கு நாங்கள் மாறவேண்டிய அளவுக்கு, நல்லாட்சி அளிக்கத் தெரிந்த சிறந்த கட்சி அல்ல தவெக.
நட்புடன் திமுக எங்களைத் தக்கவைத்திருந்தால், நாங்கள்
திமுக கூட்டணியில் நீடித்து விஜய் தலைமையிலான அரசை எதிர்த்திருப்போம்' என்பதும் திருமாவளவன் பேச்சின் அர்த்தம். அவருடைய
பேச்சு, திமுக-வை விடத் தவெக-வுக்கு அதிகம் கவலை
தரவேண்டும். |
|
2. கேள்வி: முன்பு மு.க. ஸ்டாலின் நடத்திய ஆட்சி, தற்போது விஜய்
தலைமையிலான ஆட்சி - இரண்டுக்குமான முக்கிய ஒற்றுமை, வேற்றுமை என்ன? பதில்: வேற்றுமை: 'லஞ்ச ஊழலை அனுமதிக்க மாட்டேன்' என்று விஜய் பொதுவெளியில் அறிவித்து, அவர் மட்டத்தில் லஞ்ச ஊழல் தொடர்பான
சந்தேகம் வராதவாறு விஜய் இதுவரை தென்படுகிறார் - விஜய் அரசு செய்யும் வீண்
செலவுகள் வேறு விஷயம். ஒற்றுமை: அவரவர் பாணியில், வெட்டி பந்தா. |
|
3. கேள்வி: "இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் அமைதியும்
நிலைத்தன்மையும் நீடிப்பது தான், இருதரப்பு நட்புணர்வு வளர்வதற்கு உதவும் " என்று
சீனஅதிபர் ஷீ ஜின்பிங்கிடம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி
வலியுறுத்தி இருக்கிறாரே? பதில்: உயர்மட்டத்தில் இதைச் சீனாவிடம் இந்தியா தெரிவிப்பது அவசியம். மோடி போன்ற
ஒரு வலுவான இந்தியப் பிரதமர் இதைத் தெரிவித்தால்தான் அதற்கு அர்த்தமும் அழுத்தமும்
கிடைக்கும். அசட்டுச் சிரிப்பு ராகுல் காந்தி இதைச் செய்யமுடியாது. 'நண்பா, நண்பீஸ்' என சினிமாப் பேச்சு பேசும் விஜய்யும் இதுபோன்ற
உரையாடலுக்கு லாயக்கல்ல. |
|
4. கேள்வி: என்ன இருந்தாலும் முதலமைச்சர் விஜய்யிடம் ஊழலை
எதிர்க்கும் குணம் தெளிவாகத் தெரிகிறது அல்லவா? பதில்: ஊழல் எதிர்ப்பு என்பது தேசியத்தின் -
தேசத்தை உயர்த்திப் பிடிக்கும் முனைப்பின் - மறுபக்கம். அந்த முதன்மைக் குணம்
விஜய்யிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த முதன்மைக் குணம், ஒரு தலைவராக அவரிடம் இருக்கிறது என்று
தெளிவாக வெளிப்பட்டால்தான் திறமையான, ஊழலுக்கு எதிரான மனிதர்கள் அவரை நெருங்கி
அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவார்கள் - அது நடந்தால் தமிழகம் முன்னேறி
இம்மாநில மக்களும் வளம் அடைவார்கள். பிரதமர் மோடி தலைமையின் கீழ், அகில இந்திய அளவில் இந்தப் பயன் நம்
நாட்டிற்குக் கிடைத்து வருகிறது. அப்பழுக்கற்ற தேசிய சிந்தனை இல்லாத ஒருவர்
ஊழல் போக்கு அற்றவராக, ஊழல் செய்ய விரும்பாத மனிதர்களைத் தன் சுற்றத்தில் ஈர்ப்பவராக இருப்பாரா, இருந்தால் எத்தனை காலம் அவ்வாறு இருப்பார், என்பது நாம் காலப் போக்கில் தெரிந்துகொள்ள
வேண்டிய விஷயம். இன்னொன்று. முந்தைய பிரதமராக, மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில், அவரளவில், ஊழல் செய்யாதவராக இருந்திருக்கலாம். அவரைச்
சுற்றி இருந்தவர்கள் பலர் அப்படியல்ல என்பதை அவரே உணர்ந்திருப்பார். அவர் நன்கு
படித்தவராக இருந்தாலும் அவரிடம் தேசிய சிந்தனை குறைவு, நாற்காலி மயக்கம் அதிகம். ஊழல் எதிர்ப்பின் தீவிரத்தில், விஜய் கண்காணிக்கப்பட வேண்டியவர், பின்னர் நன்கு அறியப்பட வேண்டியவர். |
|
5. கேள்வி: இந்தியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு வெற்றிகரமாக
நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், "பிரிக்ஸ்
மாநாடுகளால் இந்தியாவுக்குப் பயன் விளையவில்லை" என்று சொல்லி இருக்கிறாரே? பதில்: சிதம்பரத்தின் கருத்து ராகுல் காந்தியை மகிழ்விக்கும். அதனால்
சிதம்பரத்திற்குப் பயன் விளையும். |
|
பகுதி 134 // 13.09.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment