-- ஆர். வி. ஆர்
தமிழக
அமைச்சர் க.பொன்முடி சமீபத்தில் மேடையிலிருந்து பேசும்போது இரண்டு விஷயங்களில் முத்தாக
உளறினார். அவரது கட்சியின் தலைவர், திமுக அரசின் முதல் அமைச்சர், மு. க. ஸ்டாலினை ‘நிரந்தர
முதல்வர்‘ என்று ஓங்கிய குரலில் அப்போது பிரகடனம் செய்தார். பிறகு உடனே தமிழக முதல்வரை
மேலும் மகிழ்விக்க எண்ணினாரோ என்னவோ, அவரைக் குறித்துத் தன் முன்னால் அமர்ந்திருந்த
வாக்காளப் பெண்களைப் பார்த்து இப்படிப் பேசினார்:
”உங்க குடும்பக் கார்டுக்கு நாலாயிரம் ரூபா கொடுத்தாரா
இல்லையா? வாங்குனீங்களா? வாயைத் திறங்க...! நாலாயிரம் ரூபா வாங்குனீங்களா.....? ம்ம்ம்.
இப்ப பஸ்ஸுல எப்படிப் போறீங்க? இங்க இருந்து
கோயம்பேடு போணும்னாலும், வேற எங்க போணும்னாலும் ...... எல்லாம்
ஓசி! ஓசி பஸ்ஸுல போறீங்க!” என்று சொல்லித் தலையாட்டி இளக்காரமாகப் புன்னகைத்தார்.
பொன்முடி பேசிய வீடியோவைப் பார்க்கிறவார்கள் அவரது
இளக்கார தோரணையை உணரலாம். அதன் பின்னால் ஒன்றிரண்டு சோகமான உண்மைகள் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் கடந்த சுமார் ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாக
மாறி மாறித் திமுக-வும் அதிமுக-வும் ஆட்சி செய்கின்றன. ஒரு உள்ளூர் பஸ் டிக்கட்டைக்
கூட சொந்தக் காசில் வாங்குவது சிரமம்தான்,
அதையும் அரசாங்கம் இலவசமாகக் கொடுத்தால் நல்லது என்று எண்ணும் நிலையில் ஒரு பிரிவு
சாதாரண மக்களை – அதாவது சாதாரணப் பெண்களை – வைத்திருப்பது ஒரு அரசுக்கு எவ்வளவு இழுக்கு?
இது கேவலம் அல்லவா?
இந்தக் கேவலத்தை எத்தகைய மக்கள் சகிப்பார்கள்? மிகச்
சுமாரான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வருமானம் உள்ள மக்கள்தான் தலைவிதியே என்று ஏற்பார்கள். பல
பத்தாண்டுகளாக அவர்களைக் கையாலாகாதவர்களாக வைத்திருந்து, “இந்தா வாங்கிக்கோ நாலாயிரம்
ரூபாய். அது மட்டுமில்லை. இந்தா ஓசி பஸ் டிக்கட்டையும் வாங்கிக்கோ” என்று சொன்னால்
பாவப்பட்ட மக்கள் என்ன செய்ய முடியும்? வாங்கத்தான் செய்வார்கள். அதற்கெல்லாம் அரசாங்கம் கணக்கு சொல்லலாம். ஆனால் கோடி கோடியாக அரசாங்க கஜானாவுக்குப் போகவேண்டிய
பணத்தை சிலர் ஓசியாக எடுத்துக் கொண்டால் அது கணக்கில் வராது, அதற்குக் கேள்வியும் கிடையாது.
தமிழகத்தில் பெருவாரியான மக்களை அவர்களின் அடிப்படைத்
தேவைகளுக்காக சொந்தக் காலில் நிற்க வைக்காமல் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் திராவிடக் கட்சிகள் ஆட்சி நடத்துகின்றன. அது அந்த மக்களின் காலில் ஊனம் செய்து வைப்பதற்குச் சமம்.
பிறகு “நீங்கள் ஆடாமல் நடப்பதற்கு எங்கள் ஆட்சி இலவசக் கைத்தடிகள் கொடுத்ததே? எங்கள் ஆட்சியில் கைத்தடிகள்
வாங்கினீர்களா இல்லையா? வாயைத் திறந்து சொல்லுங்கள்”
என்று ஒரு அமைச்சர் பெருமையுடன் அந்த மக்களைப் பார்த்துக் கேட்டால் என்ன அர்த்தம்?
தங்களது கால்களில் ஊனம் செய்வித்தது யார் என்பதைக்
கூடச் சரியாக அறியாதவர்கள் அந்த மக்கள். கால் ஊனத்தோடு தங்கள் சொற்ப சுய மரியாதையிலும்
அவர்கள் பொன்முடியிடம் இப்படி ஒரு உதை வாங்க வேண்டி இருக்கிறது. அதற்கும் தயாரானவர்கள்
தானே வேலை இல்லாமல் அமைச்சர் பேசுவதைக் கேட்க வருகிறார்கள்? பாவம், அதிலும் அவர்களுக்கு
ஏதாவது கிடைக்கலாம்.
தங்களை ஊனம் செய்தவர்களுக்கு ஏன் சாதாரண மக்கள் திரும்பத் திரும்ப, அல்லது மாறி மாறி, ஓட்டுப் போடுகிறார்கள் என்ற கேள்வியில் மனிதாபிமானம் குறைவானது. நல்ல எண்ணமும் சகிப்புத் தன்மையும் கொண்ட நமது சாதாரண மக்களை வைத்து ஜனநாயக நாடகம் நடத்தி செழிப்பது நமது அரசியல்வாதிகளுக்கு மிக எளிது. கிடைத்த அரசியல்வாதிகளை வைத்து நல்ல ஆட்சிக்கு வழி வகுத்துக் கொள்வது நமது மக்களுக்கு நூறு மடங்கு கடினம். தங்கள் தலையின் மீது நடக்க விரும்பாத உன்னதத் தலைவன் கிடைக்க அவர்கள் காத்திருக்க வேண்டும். பிறகு காலப்போக்கில் நமது ஜனநாயகம் முதிர்ச்சி அடைந்த பின்தான் மக்கள் தலையை மிதித்து நடப்பது எளிதல்ல என்று மற்ற கட்சித் தலைவர்கள் உணர்வார்கள்.
இப்போதைக்கு இன்னொரு விஷயம். நல்ல ஆரம்பக் கல்வி என்பது சிறந்த பண்புகளையும்
சேர்ந்து போதிப்பது. பெற்றோர்கள் தவிர, கல்விக்
கூடத்திலும் நல்ல ஆசிரியர்கள் மூலமாக நாம் நற்பண்புகளைக் கற்கிறோம். அப்படியும் பயன் அடையாதவர்கள்
இருப்பார்கள் என்பது வேறு விஷயம். அமைச்சர் பொன்முடியைப் பொறுத்தவரை, தன் முன் கூடி இருந்த பாவப்பட்ட பெண்களைப் பார்த்து
அவர் அப்படிப் பேசியது சரியல்ல, நல்ல பண்பல்ல. இதை அழுத்திச் சொல்லவேண்டும். ஏனென்றால்
தற்போதய திராவிட மாடல் மாநில அரசில் பொன்முடிதான்
உயர் கல்வித் துறை அமைச்சர்.
* * * * *
Copyright © R. Veera Raghavan 2022
True
ReplyDeleteமக்களை மாக்களாக மாற்றிய பெருமை இந்த அரசியல்வாதி
ReplyDeleteஎருமைகளுக்கே
கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்ற அறிவுமிலார்..
ReplyDeleteWe should not waste time on trivia. That is the trademark tactic of Dravidian parties to divert attention from major and real issues. For decades, the falsehood of making the Tamilians believe that they are the only Dravidians has been drilled into the gullible masses (educated too are part of this brainwashed crowd). 1. DK, DMK and to a large extent AIADMK have been totally owned & operated by non Tamils. 2. Ramasamy Naicker did everything to perpetuate caste and he derided Dalits in vulgar words. 3. Many do not know that Annadurai too is of Telugu origin very much like Karunanidhi. 4. More than 80% of elected members of Dravidian parties are of Telugu stock. 5. Under the guise of promoting Tamil, they have done next to nothing in real terms. Except cinema script and some modern poetry (not of great standard - alliteration alone does not point out to scholarliness), Tamil is in doldrums. Most of the media persons, speakers, leaders and public can not pronounce the special letters of our glorious language - ழ, ள, ண - and use mostly corrupted colloquial words. No engineering, science, medicine or even arts courses have been developed in Tamil. 6. Working for promoting Abrahamic religions and destroying Hindu culture, ethos and temple assets have been the main focus. Today 25% or more of Tamil population have been soul harvested with caste names intact - Dalit Muslims, Dalit Christians etc. when the fundamental promise for conversion happens to be equality of all without caste in front of their Gods.7. Under the guise of anti brahmanism, they are denigrating Hindu deities in the most vulgar manner! Now Hindus do not matter that much when in a multi cornered contests of elections a mere 30% vote share would get power. The arithmetic now is - 20% plus minorities and less than 10% of caste Hindu votes! 8. They have destroyed government school education to deny the poor quality education! For the haves, the Dravidian leaders run privately owned (by them) schools with high fees. 8. The lies have stuck with TN public (TASMAC, freebies, poison of caste, Aryan race etc.). 9. Tamil is the oldest language in the world - older than Sanskrit! Then how aryans could have driven them from north India to South? Makes any sense? Raja Raja Chola created the first naval force in the world to conquer foreign lands through sea and propagate Hinduism of our place! 10. Exposing Dravidian parties totally is very urgent need. Trivia should be ignored.
ReplyDeletePerfect. அருமை
ReplyDeleteBlabbermouth தலைகனம் கிறுக்குத்தனத்தின் உச்சம்
ReplyDeleteஓசி.....
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் பதிவு காண்கிறேன். அற்புதமான வரிகள்.
முதல் para விலே ஓசியின் விவகாரம் பற்றி அமைச் சர்,தடம் மாறிய தமிழ்ப் பேச்சு,பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
உயர் கல்வி அமைச்சர் என்று தங்கள் தகவல் கூறுகிறது. மிகவும் தரமான முறையிலும் தங்கள் கருத்து அமைந்தது. எதிராளிகள் எதிரி அல்ல அவர்களுக்கென இதய முள்ளது, அந்த இதயத்திலேயே நாம் வணங்கும் நாராயணன் உள்ளார். ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட அண்ணா மன்னிப்பாரா பொன்முடி போன்ற திராவிட மாடல்களை.
கோபால தேசிகன் வணக்கம்
ReplyDeleteதரமான அங்கதம்....பிச்சை என்பது நீதிபதி நியமனம் வரை சாதாரண பேச்சு! இது சுய மரியாதை!!! ஆஹா ஆஹா
ReplyDelete