- ஆர்.வி. ஆர்
சென்னை கே.கே.நகரில்
உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) ஒரு பெயர் பெற்ற பள்ளிக்கூடம். அங்கு
ஆசிரியராக வேலை பார்க்கும் ஒரு ஆண், அந்தப் பள்ளியில்
படிக்கும் சில மாணவிகளிடம் பாலியல் ரீதியாகத் தவறாகப் பேசினார், நடந்துகொண்டார்
என்ற புகார்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. பள்ளிக்கு யாரிடமிருந்தும்
நேரடியாக ஒரு புகாரும் வரவில்லை. இருந்தாலும், தனது நற்பெயரையும் மாணவர்களின் நலனையும்
கருத்தில் கொண்டு, பள்ளி நிர்வாகம் தானாகவே அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து துறை
ரீதியாக ஆராய்கிறது.
கிரிமினல்
சட்டப்படி தமிழக அரசும் அந்த ஆசிரியர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது. குற்றச்சாட்டுகள்
நிரூபிக்கப் பட்டால் அந்த ஆசிரியருக்குத் தக்க தண்டனை கிடைக்கவேண்டும். பள்ளி நிர்வாகமும் அரசும் இதில் மும்முரமாக செயல்படுவது
அவசியம். அது நடக்கிறது என்பதும் தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
சரி, இப்போதைக்கு வேறென்ன? வேறு விஷயமும் இருக்கிறது. தமிழ் நாடாயிற்றே!
மற்ற விஷயம்
சற்று சிக்கலானது. தெளிவான விஷயங்களைக் கூடத் திசை திருப்பி அதில் தனிப்பட்ட ஆதாயங்கள் தேடுகிறவர்கள் அரசியல்வாதிகள். ஏற்கனவே
அவர்கள் சிக்கலாக்கி வைத்திருக்கும் ஒரு விஷயத்தை பிஎஸ்பிபி விவகாரத்தில் குயுக்தியாகக் கையாண்டால் ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த ஆசை இருந்தால், அரசியல்வாதிகள்
சும்மா இருப்பார்களா? அவர்கள் மாநில அரசாங்கத்தையும் நடத்துபவர்கள், அவர்கள் கட்டுபாட்டில்
ஒரு டிவி செய்திச் சேனலும் இருக்கிறது என்றால் விடுவார்களா? அவர்கள் திமுக-வினர் என்றால்
கேட்க வேண்டுமா?
இந்த சிக்கலான
விஷயத்தைப் பேசும்போது எச்சரிக்கை தேவை. எப்படி என்றால், பிஎஸ்பிபி விவகாரத்தில் திமுக அரசு சம்பத்தப்பட்ட ஆசிரியர்
மீதான சட்ட நடவடிக்கையை ஆரம்பித்தது நல்லதுதான். ஆனால் அந்த விவகாரத்தைப் பற்றி சில
திமுக தலைவர்கள் பேசும் தொனியும் காண்பிக்கும் சமிக்ஞைகளும் அதை சன் நியூஸ் தொலைக்காட்சி அடிக்கடி ஒளிபரப்பும் விதமும் திமுக-வின் கெட்ட நோக்கத்தைக்
காண்பிக்கின்றான. அது என்ன கெட்ட நோக்கம்?
பிஎஸ்பிபி
கல்வி நிறுவனம் 60 வருடங்களுக்கு மேலாக இயங்குகிறது. சென்னையிலும் அதன் சுற்றத்திலும்
உள்ள அதன் பள்ளிகளில் தற்போது சுமார் 8,000 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். சென்னையின்
முதன்மையான பள்ளிகள் அவை. வெளியூர்களிலும் அந்த நிறுவனத்தின் பள்ளிகள் உண்டு.
சென்னையில்
பிஎஸ்பிபி-யை நிறுவியது ஒரு ஹிந்து, ஒரு பிராமணர். இன்றும் அவரது குடும்ப உறுப்பினர்
அதன் நிர்வாகத்தைக் கவனிக்கிறார். சென்னையில் மற்றவர்கள், சிறுபான்மை மதத்தினர், நடத்தி
வரும் சிறந்த பள்ளிகளும் உண்டு.
திமுக-வின்
பல புராணக் கதைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் ஒன்று: “இந்து என்றால் திருடன்
என்ற அர்த்தம் உண்டு” என்று திமுக தலைவர் கருணாநிதி முன்னர் பேசியதாகவும் அவரைப் போலீஸ்
விசாரணை செய்து வழக்குத் தொடர உத்தரவிட வேண்டும் என்று கேட்டும் சென்னை ஹை
கோர்ட்டில் ஒருவர் வழக்குப் போட்டார். அப்போது கருணாநிதி கோர்ட்டுக்கு என்ன பதில்
சொன்னார் தெரியுமா? “உள்ளம் கவர்ந்த கள்வன்” என்ற அர்த்தத்தில்தான் பேசினேன்” என்று
அவர் பதில் அளித்தார். சிரிப்பு வருகிறதா?
அடக்கிக் கொள்ளுங்கள்.
சென்ற வருட
மத்தியில் கந்த சஷ்டி கவசத்தை இழித்தும் பழித்தும் ‘கருப்பர் கூட்டம்’ என்ற அமைப்பினர்
பொது வெளியில் ஆபாசமாகப் பேசினார்கள். அப்போது, திமுக-வின் “உள்ளம் கவர்ந்த கள்வர்களான”
ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்திய கருப்பர் கூட்டத்தின் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை
எடுக்க திமுக கேட்கவில்லை. சில மாதங்களில்
சட்டசபைத் தேர்தல் வரும் என்ற நிலையில் அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
“கந்த சஷ்டி விவகாரத்தில் முருகரைப் பழித்து பேசியது
மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று பேட்டி கொடுத்து சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
அந்த அநாகரிகத்தைக் கண்டிக்கவில்லை என்ற பெயர் திமுக-விற்கு வராமல் இருக்க, ஹிந்துக்களைப்
புண்படுத்திய செயலை லேசாகத் தலையில் தட்டிவிட்டு மறைந்துவிட்டார் அதன் அமைப்புச் செயலாளர்.
கருப்பர் கூட்டத்தின் பெயரைக் குறிப்பிட்டுக்கூட
அவர் கண்டிக்கவில்லை (பார்க்க: nakkheran.in, 18.7.2020).
சர்க்கஸில்
பார்வையாளர்கள் முன்பாக ஒரு கோமாளி இன்னொரு கோமாளியின் கன்னத்தில் அறைவான். திரைக்குப் பின்னால் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து
சினேகமாக இருப்பார்கள். இது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.
ஹிந்துக்கள்
மீதான அலட்சியமும் அவமதிப்பான போக்கும், ஆனால் மற்ற மதத்தினர் மீதான போற்றுதலும் வணக்க
சிந்தனையும், திமுக-விற்கு உண்டு என்பது எல்லோருக்கும்
தெரியும். மற்ற மதத்தினர் அப்படியான போக்கை திமுக-விடம் எதிரபார்க்கிறார்கள் என்பதில்லை. அப்படியான நிலையை, அப்படியான எண்ணத்தை சூசகமாகவும்
அவ்வப்போது வெளிப்படையாகவும் காட்டினால், சிறுபான்மை மதத்தின் சில தலைவர்கள் அதை விரும்பலாம்,
அதன் மூலம் அவர்களைத் திருப்தி செய்து அந்த சமுதாய மக்களின் ஓட்டுக்களைக் கொத்தாக அள்ளலாம்
என்பது திமுக-வின் எதிர்பார்ப்பாக இருக்கும். திமுக-வின் இந்தப் போக்கு ஹிந்துக்களை அவமானம் செய்வதாகும்,
அவர்கள் மனதைப் புண்படுத்துவதாகும். இது போக இன்னொரு விஷயமும் உண்டு.
ஹிந்துக்களின்
ஒரு ஜாதியினராகிய பிராமணர்களிடம் திக மற்றும் திமுக தலைவர்களுக்குத் தனியான “அலட்சியம்”
(பல அர்த்தங்களில்) உண்டு. இது
ஊர் உலகம் அறிந்தது. ஆகையால், இப்போது பிஎஸ்பிபி
விவகாரம் ஒரு தனிப்பட்ட ஆசிரியரின் தவறாக, குற்றமாக இருக்கலாம் என்று அதை சட்டப்படி
விசாரித்து மேல் நடவடிக்கை எடுப்பதோடு நிற்க
வேண்டாம் என்று திமுக தலைவர்கள் சிலர் எண்ணுகிறார்கள். ஹிந்து மதத்தினர் நிறுவி, அதுவும் ஒரு பிராமணர் தோற்றுவித்து
அவர் குடும்பத்தால் நடத்தப்படும், புகழ் பெற்ற
ஒரு கல்வி ஸ்தாபனத்தை அவமானப்படுத்தி அதன் மூலம் ஒழுகும் பலவிதமான ஆதாயங்களை அடையலாம்
என்பது அவர்களின் கணக்கு என்று ஹிந்துக்கள், அதுவும் பிராமணர்கள், நினைக்க இடம் இருக்கிறது.
ஹிந்துக்களின், பிராமணர்களின், நிலை தமிழ்நாட்டில் அப்படி. முக்கிய திமுக தலைவர்களும்
அப்படி. ஹிந்துக்களின் இந்தக் கணிப்பு சமூக வலைத்தளங்களில் விரிவாகப் பகிரப்படுகிறது.
தங்கள் கவலையை,
தங்கள் உணர்வை, இப்போது வெளிப்படுத்தும் ஹிந்துக்களும் பிராமணர்களும் ஒன்றைக் கவனத்தில்
வைக்க வேண்டும். அதாவது, “மற்ற மதத்தினர் நடத்தும் கல்வி நிலையங்களில் இது போன்ற குற்றச்சாட்டுகள் எழும் போது, சில கட்சிக்காரர்கள்
அந்தக் குற்றவாளிகளைக் கண்டும் காணாமல் இருக்கிறார்களே, அதே போல் பிஎஸ்பிபி விவகாரத்திலும்
அந்தக் கட்சிக்காரர்கள் பாராமுகமாக இருக்கலாமே” என்று ஹிந்துக்கள் ஆசைப்படுகிறார்களோ
– என்று பிறருக்குத் தோன்றாமல் கவனமாகப் பேசவேண்டும்.
பொதுவாக ஹிந்துக்கள் அப்படியான கவனத்துடன்தான் இந்த விஷயம் பற்றி விவாதிக்கிறார்கள்.
இது அவர்களுக்கும் நல்லது, சமூகத்திற்கும் நல்லது. தங்களின் உழைப்பால், சிறப்பால்,
தங்கள் கல்வி நிறுவனத்திற்குப் பேர் வாங்கிய
பிஎஸ்பிபி நிர்வாகமும், தங்கள் பள்ளிகளில் எங்காவது தவறு நடந்தால் அதை முறையாகக் களைந்தால்தான்
தங்களது பேரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று
உணர்கிறது.
ஆனாலும் ஒன்று.
‘திமுக தலைவர்களோ வேறு கட்சித் தலைவர்களோ மற்ற மதத்தினரின் கல்வி நிலையங்கள் அல்லது
வழிபாட்டு நிலையங்களில் நடக்கும் எந்த ஒரு பாலியல் குற்றச்சாட்டையும் வன்மையாகக் கண்டிக்காமல்
இருப்பது பற்றி ஹிந்துக்கள் இப்போது பேசக் கூடாது. பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியரை மட்டும்தான் இந்த நேரத்தில் கண்டிக்கவேண்டும்’
என்ற ஒரு குரலும் அங்கங்கே கேட்கிறது. இது சாதாரண மனித இயல்பைப் புரிந்து கொள்ளாத குரல்.
நான் செலுத்த வேண்டிய வீட்டு வரி நிலுவையில் இருக்கிறது என்பதால் அரசாங்கம் நோட்டீஸ்
கொடுத்து என்னிடம் வசூலிப்பது சரிதான், நியாயம் தான். ஆனால் என் பக்கத்து வீட்டிற்கும்
எதிர்த்த வீட்டிற்கும் அரசு வேண்டும் என்றே வீட்டு வரி வசூல் செய்யாமல் இருந்தால், அந்த வீட்டுக்காரர்களிடம்
ஏன் வீட்டு வரி வசூல் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று நான் அரசைக் கேட்பது தவறா? இல்லையே?
பிஎஸ்பிபி விவகாரத்தில், ஒரு மதத்தினர் - அதில் ஒரு பிரிவினர் - வெற்றிகரமாக நடத்தும் கல்வி நிலையம் என்பதால் இதில் நுழைந்த அரசியல் நெடி தூக்கலாக இருக்கிறது. இருந்தாலும் அந்தப் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு எதுவும் வந்தால் அது முறையாக விசாரிக்கப்படவேண்டும்.
அது நடக்கட்டும். மற்றபடி தங்கள் மதம், தங்கள் மதத்தவர்கள் பற்றி ஹிந்துக்கள் தைரியம்
கொள்ளலாம். முகலாய ராஜ்ஜியத்தைத் தாண்டி
இந்தியாவில் ஹிந்து சமூகம் தழைத்திருக்கிறது. நமது அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் ஒரு மாநில
அரசியல் கட்சியான திமுக-வையும் கடந்து ஹிந்து சமூகம் தமிழகத்தில் தொடரும், வளரும். இந்த
விஷயத்தில் கருணாநிதியிடம் இருந்த வீரியம் ஸ்டாலினிடம் இல்லை. ஏதோ அப்பா மாதிரி காண்பித்துக் கொள்ளவேண்டும் என்று ஸ்டாலின் முனைகிறார். ஆனால் பாதிக்குப் பாதி வெத்து வேட்டாகத்தான் வெளிப்படுகிறார். உதயநிதி இன்னும் மென்மையாக இருப்பார். ஹிந்துக்கள் கல்வித் துறையிலும் பிற துறைகளிலும் தொடர்ந்து நேர்மையாக, அர்ப்பணிப்புடன் செய்யலாற்றிப்
பேர் வாங்கலாம். போறுமே?
* * * * *
Copyright © R. Veera Raghavan
2021
Excellent Sir
ReplyDeleteWell written. Well analysed.
ReplyDeleteNice analysis
ReplyDeleteஹிந்து மதம் குறிப்பிட்ட சாதி வர்ணாசிரம கோட்பாடுகள் பாதிக்க படுகிறது என்றால் அதற்கென்று ஒரு கூட்டம்/மாநிலத்தில்/மத்தியில் ஆளும் கட்சி அல்லது அமைப்பு இருப்பது போல் எல்லா வகையான சமூக நிகழ்வுகளுக்கும் ஒரு கூட்டம் சேர்த்தான் செய்யும். அது அரசியல் சார்புடையதாய் அல்லது பொது நலன் சார்த்த முன்னேற்பாடாகவோ இருக்கலாம். அவரவர்க்கு ஒரு ஞியாயம் இருக்கத்தான் செய்யும். எந்த புத்தில் என்ன பாம்பு இருக்குமோ. ஆசிரியர் என்ற பெயரில் ஒரு பொறம்போக்குக்கு பற்றி வெளியிலிருந்து புகார் வந்தால்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் பள்ளியில் மேலாண்மை பதவியில் எதுக்கு ஒரு குழு. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அங்கு நடக்கும் தொல்லைகளை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு எவ்வளவோ அழுத்தங்கள் தரப்படும். முக்கியமாக செல்வாக்கு தொடர்பு பணம் ஏன் கொலை மிரட்டல் வரை கூட நடக்க வாய்ப்புள்ளது. அதனால் பள்ளியை நடத்தும் குழு யாராக இருந்தாலும் ஹிந்து கிறித்தவர் இஸ்லாம் இன்ன பிற சாதி அமைப்பு என்ற பாரபட்சம் இல்லாமல் படிப்பு ஒழுக்கம் சொல்லித்தர தருவதை தவிர வேறு வேலை செய்தால் நடவடிக்கை பாயவேண்டும். சரியான நேரத்தில் எடுக்காத ஒழுங்கு நடவடிக்கைக்கு வக்காளத்து வாங்குவது என்ன விதமான செயல். அரசியல் பற்றி தாங்கள் சொன்னது உங்கள் விருப்பமாக இருக்கலாம் ஆனால் பள்ளியில் நடந்த செயலுக்கும் தாமதமான நடவடிக்கைக்கும் இந்து வருசமாக நடந்தது தங்கள் ஆதரவு வருத்தம் அளிக்கிறது.
ReplyDeleteசம நிலையான பதிவு.
ReplyDeleteNice one sir
ReplyDeleteNice one sir
ReplyDeleteதங்கள் பார்வையில் தவறிழைத்த நபர் மேல் நடவடிக்கையில் பாரபட்சம் கூடாது,இது அருமை. இதை நிர்வாகம் செய்து விட்டது. இதில் அனைவருக்கும் ஆனந்தம், தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பாடமும் கூட.
ReplyDeleteஅரசியல் புக நினைக்கும் பாதைகளை தாங்கள் சொல்லாண்ட லாவகமும் அருமை.
இந்துமத குறிப்பாக பிராமணர்கள் பெருமை புகழை ஒடுக்க நினைக்கும் அற்ப ஆசைகள், sadism என்றும் சொல்லலாம், மற்ற மதத்தில் நடக்கும் தவறுகளை கேட்க திணறும் ஓட்டு பந்தம்,பாசம்.
இதற்கு ஒத்துஊதும் விலைபோன ஊடகங்கள்,இதெல்லாம் அழகாக கோத்து சொன்ன எழுத்து லாவகமாக அருமை. கலைஞர் ஸ்ட்ராங், ஸ்டாலின் வெத்துவேட்டு,உதயநிதி மென்மை அழகாவரிசைப்படுத்தி கடைசி வரி அலங்கார அபார முடிப்பு.மொகலாய பேரரசை பார்த்த இந்துக்கள், இந்த திமுக, திக வை எளிதாக கடக்கலாம் என தைரியம் சொல்லியது, தங்களின், முதிர்சயையும் தாக்கிய எழுத்து ஆளுமையும் காட்டியது. வக்கீல் சார்.
Gopaladesikan medavakkam Chennai
ReplyDeleteஅருமை.
ReplyDeleteகாலம் பதில் சொல்லும்
ReplyDeleteWell analyzed....time will prove
ReplyDeleteஇந்த பதிவின் கருத்து மிக இயல்பான பண்பாடு மிக்க ஆக்கம். ஆனால் அதற்கு முன் மத வெறி ...வெளி நாட்டு பணம் சர்ச் காலில் மிகப் பெரிய குற்றம் செய்தாலும் வெளி வராமல் தடுக்க சர்ச் கேனான் லா சட்டம் எல்லாம் அவர்கள் உடல் எடை விட கொழுப்பின் அளவு எகிறி விட்டது.. இவர்கள் எப்போதும் பாரத நாட்டில் வாழும் கருங்காலிகள்
ReplyDelete