- ஆர்.வி. ஆர்
டிவி, லேப்டாப், வாட்ஸ்-அப்னு நீங்களும் பாத்திருப்பேள். பத்து
நாள் முன்னாடி மஹாராஷ்டிரால வாங்கனின்னு ஒரு ஊர்ல நடந்த சம்பவம். மெய் சிலிர்க்கற
காட்சின்னா அதான்.
ரயில்வே ஸ்டேஷன்
பிளாட்பார ஓரத்துல அம்மாவோட நடக்கற 6 வயசுக்
குழந்தை, தண்டவாளத்துல தவறி விழறது. அம்மாக்காரிக்கு
கண் சரியாத் தெரியாது. ஆனா தன் கையைத் தொட்டுண்டு
வந்த குழந்தை தண்டவாளத்துல விழுந்துடுத்துன்னு தெரிஞ்சு பதர்றா. அதே தண்டவாளத்துல, அந்த ஸ்டேஷன்ல நிக்காத ஒரு எக்ஸ்பிரஸ்
ரயில் வேகமா அப்ப வந்துண்டிருக்கு. குழந்தை அழுதுண்டே எழுந்து பிளாட்பார உயரத்தைப்
பிடிச்சு ஏறப் பாக்கறது. அதுக்கான சக்திதான் இல்லை. அம்பு மாதிரி வர்ற ரயில் குழந்தையைத்
தொடறதுக்கு சொற்ப வினாடிகள்தான் இருக்கும். அந்த க்ஷணத்துல, குழந்தைக்கு இந்தப் பக்கம்
தண்டவாளத்துலேர்ந்து கொஞ்சம் விலகித் தரைல நின்ன
தெய்வம், குழந்தையைப் பாத்தது.
அங்க யாரு தெய்வம்கறேளா? மனுஷ ரூபத்துல மயூர் ஷெல்கேன்னு பேரை வைச்சுண்டு அதே ரயில்வே ஸ்டேஷன்ல சாதாரண வேலை பாக்கற இளைஞன்தான் அது. ரயில்வேக்காரா வெளியிட்ட சிசிடிவி காட்சில அந்தப் பையன் நமக்கு அறிமுகம் ஆகறது அவனோட பின்புற உருவத்துலதான். எப்படின்னா, தண்டவாளத்துல தடதடக்கற ரயிலுக்கு எதிரா குழந்தையை நோக்கித் தலை தெறிக்க அவன் ஓடறான். அவன் முடிச்ச கைங்கரியம் நமக்குத் தெரியறது அஞ்சு செகண்டுதான். அதுக்குள்ள தண்டவாளத்துக்கு நடுவுல மின்னலா முன்னேறி குழந்தையைத் தூக்கி பிளாட்பாரத்துல பாதுகாப்பாத் தள்ளிட்டுத் தானும் தாவி ஏறிடறான் மயூர் ஷெல்கே. அடுத்த ரண்டு செகண்டுல அந்த ராட்சஸ ரயில் குழந்தை விழுந்த இடத்தை சீறிக் கடக்கறது. “மயூர் ஷெல்கே தீர்க்காயுசா இருக்கட்டும்”னு எல்லா மனுஷாளும் நெஞ்சாற வாழத்துவா. என்னை மாதிரிப் பாட்டிமார்கள் ‘நன்னா இருடாப்பா’ன்னு இன்னும் உருகி ஆசிர்வதிப்பா.
மயூர் ஷெல்கேயைப்
பத்தி நினைச்சுப் பாருங்கோ. தான் உண்டு, எல்லாரும் செய்யற அளவுக்குத் தன் வேலை உண்டுன்னு நிக்கலை அந்தப் பையன். தன் சௌகரியம், தன் சௌக்கியம்னு பாக்காம, தன் உயிரைப் பத்திக் கூட யோசிக்காம,
அல்லல் படற அம்மா-குழந்தை ஜீவன்களுக்காக ஓடினான் அவன். அதுனாலதான், மத்தவா நலனுக்குத் தன்னை அர்ப்பணிச்ச மயூர் ஷெல்கேயை எல்லாரும் பெரிசா நினைக்கறா, மானசாறப்
பாராட்டறா. இது இயற்கையான மனுஷ சுபாவம்தான். ஆனா பாருங்கோ, இதுக்கு நேர் விரோதமான ஒரு காட்சியும்
இந்தியாவுல நடக்கறது. என்னன்னு சொல்றேன்.
கஷ்டப்படற
இந்திய ஜனங்களுக்காக உழைக்கற பிரதமர்னு நரேந்திர மோடி இருக்கார். மயூர் ஷெல்கே மாதிரி, அவரும் வேற பெரிய தளத்துல தன்னலம் இல்லாம அசாத்திய துணிச்சலோட – பாகிஸ்தான்காரன்,
சைனாக்காரன்,
அப்பறம் நம்ம நாட்டுலயே சில கொடூர ஆசாமிகள்னு பல பேர்ட்ட உயிரையும் பணயம் வைச்சு –
அப்பாவி ஜனங்களுக்காக ராப்பகலா வேலை பண்றார். கரை ஏற முடியாம, ஸ்டேஷன் தண்டவாள சூழ்நிலைல
சிக்கித் தவிக்கற கோடிக்கணக்கான மக்களைக் கைதூக்கிவிட
ஓடி ஓடிக் காரியம் பாக்கறார்.
ஆனா மீடியாவும் சரி, எதிர்க் கட்சித் தலைவர்களும்
சரி, அவர் நாட்டுக்காக என்ன நல்லது பண்ணினாலும் குத்தம் சொல்றது, திட்டறதுன்னு இருக்காளே, அது ஏன்?
மோடியைப்
பத்தி, அவர் செய்யற நல்ல காரியத்தைப் பத்தி, தானாத் தெரியாத மக்களுக்கு நிஜம் எதுன்னு புரியாதபடி அவா கண்ணை சில
பேர் கட்ட முடியும். அது இந்தியால நடக்கறது. மயூர் ஷெல்கே விஷயத்துல அது சாத்தியமில்லை.
அதுனால மயூர் ஷெல்கேயோட அர்ப்பணிப்பு, தியாகச் செயல், சாதனை எல்லாமே எல்லாருக்கும்
சந்தேகம் இல்லாம வெட்ட வெளிச்சம் ஆயிடுத்து.
மயூர்
ஷெல்கேயோட தீரச் செயல் வெளி மனுஷா எல்லாருக்கும்
எப்படிச் சரியா ஒரே மாதிரித் தெரிஞ்சது? வாங்கனி ரயில்வே ஸ்டேஷன்ல இருந்த சிசிடிவி
கேமரா அவன் காரியத்தைத் துல்லியமா காமிச்சுடுத்து. அவ்வளவுதான். ஆனா மோடி விஷயத்துல சிசிடிவி-யா செயல்பட்டு
மக்களுக்கு உண்மையான செய்திகளை சரியான கோணத்துல காமிக்க வேண்டியது யாரு? செய்திப் பத்திரிகைகள்,
டெலிவிஷன் சானல்கள் மாதிரி மீடியாதான? ஆனா அவா நிறையப் பேர் ஒழுங்கா நேர்மையா செயல் படறாளா?
இல்லையே?
முந்தைய அரசாங்கங்கள் மாதிரி, மோடி அரசாங்கம் மீடியாவை தாஜா பண்ணலை, குளிப்பாட்டலைன்னு மீடியாவுல நிறையப் பேர் கடுப்புல இருக்கா. அதுனால, உண்மையான சிசிடிவி-யா இருக்கவேண்டிய மீடியாக்கள் மோடிக்கு வில்லன் வேஷத்தை மாட்டிவிட்டு ஏதோ பொய்க் காட்சிகளைக் காட்டறா. மீடியாக்கு சலாம் வைக்கற பொழுது போக்கிகள், அச்சுப்பிச்சுகள், பண வேட்டைக்காரர்கள் மாதிரியான அரசியல்வாதிகளை மக்களுக்குப் பாடுபடற சொக்கத் தங்க ஹீரோவா காட்டறா. நிறைய இந்திய ஜனங்கள் பாக்கறது, வாங்கனி ரயில்வே ஸ்டேஷன் சிசிடிவி கேமரா மாதிரி இருக்கறதை அப்படியே காட்டற காட்சிகள் இல்லை. மீடியா காட்டற பொய் பித்தலாட்ட சசிடிவி கேமராக் காட்சிகள்தான் ஜனங்கள் முன்னால சுத்தறது. விதிவிலக்குகள் கொஞ்சம்தான். அதை எல்லாம் மீறி, மக்கள் கிட்ட நேரடித் தொடர்பு எங்க எப்படி வைச்சுக்க முடியுமோ, அதை மோடி பண்றார். அதுல வெற்றியும் அடைஞ்சிருக்கார். ஆனா மீடியா காமிக்கற ஃபிராடு சிசிடிவி கேமரா காட்சிகளும் ஜனங்ககிட்ட வேண்டாத பாதிப்பை ஏற்படுத்தறது.
ஒரு ஜனநாயக
நாட்டுல மக்களுக்குத் தெரிய வேண்டிய எல்லாச் செய்திகள், எல்லா தரப்பு கருத்துக்களை வெளியிடற
பாரபட்சம் இல்லாத மீடியாங்கறது வேற. நடுநிலை
வேஷதாரியா திரிசமன் பண்ற மீடியா வேறன்னு சொல்றேன். என்ன பண்றது? ‘ராம் ராம்’னு நம்மளையே நொந்துக்க வேண்டியதுதான்!
இன்னொண்ணும்
இருக்கு. மோடி நாட்டுக்காக அசாத்திய வேலை பண்றார்னு புரிஞ்சுக்கற படிச்சவாளே, “இந்தக் கட்சித் தலைவர் தமிழ் நன்னா பேசினார், எங்க
மாமா, ஒண்ணு விட்ட சித்தப்பாலாம் இந்தக் கட்சியைத்தான் ஆதரிக்கறா, என் குடும்பத்துல சில பேருக்கு இந்தக் கட்சி சிபாரிசுலதான்
அரசாங்க வேலையோ கான்டிராக்டோ கிடைச்சிருக்கு,
நான் அப்பிடி இப்பிடி பிஸினஸ் பண்ணுவேன், ஆனா எனக்கு மோடி அரசாங்கம் குடைச்சல் தர்றது”ன்னு
நாட்டு நலனுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை வைச்சு
மோடியை எதிர்க்கறா, எதிர்க்கட்சிகளை ஆதரிக்கறா. இன்னும் சிலபேர் இருக்கா. அவா கொஞ்சம் கர்வம் பிடிச்ச புத்திசாலிகள். மோடியை எதிர்த்தாத்தான், அவாளுக்குத் தன்னோட புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தின சின்ன திருப்தி கிடைக்கும்.
அப்பறம் ஏதேதோ சுயநல குரூப் எதிர்ப்புகளும் மோடிக்கு உண்டு. நல்ல மனுஷன், தைரியாசாலி, நாட்டை நேசிக்கறவர். இருந்தாலும்
மோடி ஒருவகைல பாவம்தான்.
மயூர் ஷெல்கேட்ட திரும்ப வரேன். அதாவது, பையன் கிட்ட ஒண்ணு சொல்லிக்கறேன். தன்னலமே இல்லாம படுவேகமா துணிச்சலா நீ பிறத்தியாருக்குப் பண்ணின உபகாரம் இருக்கே, அது அரசியலுக்கு வெளில இருந்ததால உனக்கு எல்லார் கிட்டயும் பாராட்டு கிடைச்சது, கண்டனங்கள் வரலை. நேர்மையான சிசிடிவி-யும் உன்னை அப்படியே படம் பிடிச்சுக் காமிச்சது. அந்த வகைல நீ குடுத்து வைச்சவன்! நன்னா இருடாப்பா!
* * * * *
Copyright © R. Veera Raghavan 2021
Very good narration, Sir. The story is known well to all. Your narration has added poignancy to it.
ReplyDeleteShelk receieved cash reward from the Railwys for his exemplary act. He gave half of it to the destitute mother of the child he saved.
Thanks.
Chittanandam
Comparing Mayoor and his action with Prime Minister may not be a right example - That my personal opinion. Even if the opposition party have created ruckus in parliament or some groups making unfavorable comments against PM, he as PM should think from wholistic perspective and not only to cater to his party, voters and religious people. For eg: whether any of us take side (favorable / unfavorable) with Farmer protest or not in last 150 days, he as a PM should have atleast visited the site and convinced the protesting people that he will not make any move against farmers. that would have got him lot of TRUST and MAYOOR like positive comments.. Instead he feel as he and his party is always rights and no one should question their decision where TRUST never comes only FRUSTATION comes.. Hence he is not seen in place of Mayoor. Personally he may be clean (no doubt about it) but as PM he have lot of responsibilities and gaining TRUST of its citizen is topmost among them..
ReplyDeleteComparing the incident(saving the life of a child) to that of PM Modi is not in good taste.There is a group which hails Modi in some form or other. The same Modi visited WB 15 or 16 times during the elections and conducted rallies flouting all covid norms. As a PM he should not have conducted such rallies. Further he should not have gone to WB that many times as a PM to a state election. That shows the party's illwill towards Mamta. There are dark sides too. The supporters should understand that also.
ReplyDeleteஒரு நாள் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஸத்யமேவ ஜயதே.
ReplyDeleteWell written postings and admire your clarity and factuality
ReplyDelete