-- ஆர். வி. ஆர்
ஹெச். ராஜா, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஒரு சீனியர் தலைவர். ஹிந்து மதத்தின் மீது
பற்றுள்ள தமிழர்களிடையே அவருக்கு விசேஷ மரியாதை உண்டு.
சென்னையிலுள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம் ஹெச். ராஜாவைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கி இருக்கிறது - அது ஈ. வெ. ரா சிலைகள் சம்பந்தமாக ஹெச். ராஜா ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் போட்ட ஒரு பதிவுக்காக. அவர் அப்பீல் செய்ய முப்பது நாட்கள் அவகாசம் கொடுத்து அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்திருக்கிறது நீதிமன்றம்.
அதே
சிறப்பு நீதிமன்றம், திமுக-வின் கனிமொழியின் பெயர் சம்பந்தப் பட்ட வேறு ஒரு வழக்கிலும் ஹெச். ராஜா குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறது. இந்த இன்னொரு வழக்கு முக்கியத்துவம்
குறைந்தது என்பதால் அதுபற்றி நான் இப்போது பேச வரவில்லை.
ஈ.
வெ. ரா சிலைகள் பற்றி ஹெச். ராஜா ட்விட்டரில் தெரிவித்த கருத்தை நீதிமன்றமே தீர்ப்பில்
எடுத்துச் சொல்லி இருக்கிறது. அது கீழே:
“லெனின்
யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும்
என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப் பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின்
சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ. வெ. ரா.”
இந்தப்
பதிவினால், இ. பி. கோ சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் ஹெச். ராஜா குற்றவாளி என்கிறது
தீர்ப்பு. நீட்டி முழக்காமல், அந்த இரண்டு
பிரிவுகள் என்ன சொல்கின்றன?
பிரிவு 153:
ஒருவர் சட்டத்திற்கு மாறாக ஒன்றைச் செய்தவாறு, வேண்டும் என்றே மற்ற மனிதரைக் கலகம்
செய்யத் தூண்டினால், அதனால் கலகம் ஏற்பட்டால், அவ்வாறு தூண்டுபவருக்கு ஓராண்டு வரை
சிறைத் தண்டனை வழங்கலாம்; கலகம் ஏற்படாமல் போனால், அவருக்கு ஆறு மதம் வரை சிறைத் தண்டனை வழங்கலாம்.
அபராதமும் விதிக்கலாம்.
பிரிவு 504:
ஒருவர் வேண்டும் என்றே மற்ற மனிதரை அவமதித்து ஆத்திரமூட்டுவதால் அந்த மற்றவர் பொது
அமைதியைக் குலைக்கலாம் என்றால், .......... அப்படி அவமதித்து ஆத்திரமூட்டும்
ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கலாம். அபராதமும் விதிக்கலாம்.
இதன்படி, ஹெச். ராஜா குற்றவாளி என்பதற்கு நீதிமன்றம் சில முக்கிய காரணங்களைச் சொல்கிறது.
அவை எனக்குச் சரியாகப் புரியவில்லை. எது எது எனக்குப் புரியவில்லை, ஏன் புரியவில்லை,
என்று சொல்கிறேன்.
முதலாவதாகத் தீர்ப்பில் சொல்லப் படுவது இது:
“தந்தை பெரியாரின்
சித்தாந்தம் இந்த நாட்டிற்கும் இதன் மக்களுக்கும் பலப்பல நல்லவற்றைச் செய்திருக்கிறது
என்பதைச் சொல்லத் தேவை இல்லை. இருந்தாலும் அவரது சித்தாந்தத்தின் ஒரு பகுதி சமூகத்தின்
ஒரு பிரிவினரால் ஏற்றுக் கொள்ளமுடியாதவாறு இருக்கலாம். அது இயற்கை. ஆனால் ஒரு சித்தாந்தம்
எப்பொழுதும் மற்றொரு சித்தாந்தத்தால் மட்டும்தான் எதிர்க்கப் படவேண்டும் – பலத்தினால்,
தூண்டுதலால், உசுப்பிவிடுதலால் அல்ல.”
பெரியாரின்
சித்தாந்தம் “இந்த நாட்டிற்கும் இதன் மக்களுக்கும் பலப்பல நல்லவற்றைச்” செய்திருக்கிறதா?
தீர்ப்பு புரியவில்லையே!
1944-ம் வருஷம் நடந்த சேலம் மாநாட்டில், மகாத்மா காந்தி நாட்டிற்கு சுதந்திரம் கேட்டதைக்
கண்டித்து, சென்னை ராஜதானியை மட்டுமாவது இங்கிலாந்து அரசு லண்டனிலிருந்து ஆளவேண்டும்
என்று கேட்டாரே ஈ. வெ. ரா, அதுவும் அவர் நாட்டுக்குச் செய்த நல்லதா? தீர்ப்பு புரியவில்லையே!
1971-ம்
வருடம், ஈ. வெ. ரா சேலத்தில் ராமர் சீதை படங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றபோது, அந்த சுவாமி படங்களை அவர் சீடர்கள்
செருப்பால் அடித்தார்களே, அதை அவர் கண்டிக்கவும் இல்லையே, அதுகூட அவர் நாட்டுக்கும்
மக்களுக்கும் செய்த நல்லதா? தீர்ப்பு புரியவில்லையே!
ஈ.
வெ. ரா ஒரு நாத்திகராக இருந்தார். அதில் ஒரு தவறும் இல்லை. ஹிந்து மதம் நாத்திகர்களை
தண்டிக்கச் சொல்லவில்லை, அவர்களை வெறுப்பதில்லை, திட்டுவதும் இல்லை. இது மேலான கண்ணோட்டம்,
உயர்ந்த பண்பு. ஆனால் ஈ. வெ. ரா, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் மீது அநாகரிகமாக வசவுகள்
பொழிந்தார்.
“கடவுளைக்
கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி”
என்பது ஈ. வெ. ரா-வின் பிரசித்தி பெற்ற வசவு வார்த்தைகள். அவரது சிலைகளைத்
தமிழ்நாட்டில் பல இடங்களில் நிறுவி – ஹிந்துக் கோவில்கள் முன்பாகவும் நிறுவி - அந்த வசவு வார்த்தைகளைச் சிலைகளின் பீடத்தில் பொறித்து
வைத்து அழகு பார்த்தது தி. மு.க. அப்படி நிறுவப்பட்ட ஒரு சிலையை ஈ.வெ.ரா-வே மெச்சினார்.
நம்
நாட்டில் மிகப் பெருவாரியான மக்கள் கடவுளை நம்புகிறார்கள், கடவுளிடம் பிரார்த்திக்கிறார்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக “முட்டாள், அயோக்கியன்,
காட்டுமிராண்டி” என்று ஈ.வெ.ரா திட்டி வர்ணித்தது, அவர் நாட்டுக்கும் மக்களுக்கும்
செய்த நல்லதா? தீர்ப்பு புரியவில்லையே!
ஈ.
வெ. ரா-வின் சித்தாந்தம் “இன்னொரு சித்தாந்தத்தால் மட்டும்தான் எதிர்க்கப்பட வேண்டும்”
என்றும் தீர்ப்பு சொல்கிறது. என்ன அர்த்தம்?
ஈ.
வெ. ரா-வின் கடவுள்-நம்பிக்கை துவேஷப் போக்கை எதிர்க்க நினைப்பவர்கள், அந்த மனிதருக்குப்
போட்டியாக ராமர் கிருஷ்ணர் சிலைகளை ஊரெங்கும் வைத்து, அவற்றின் பீடத்தில் “கடவுளைக்
கற்பித்தவன் புத்திசாலி. கடவுளைப் பரப்பியவன் ஒழுக்கசீலன், கடவுளை வணங்குகிறவன் நவநாகரிக
மனிதன்” என்ற மாற்று வாசகங்களைப் பொறித்து
வைக்க வேண்டுமா? ஈ.வெ.ரா அவமதித்துக் காயப்படுத்திய ஹிந்துக்களின் மனங்கள் இப்படிச்
செய்தால் சாந்தி அடையுமா?
அல்லது,
அதிகமானோர் அலகு குத்தி, காவடி எடுத்து, பஜனை பாடி, அதுபோன்ற வழியில்தான் ஈ. வெ. ரா-வுக்கு
எதிரான சித்தாந்தத்தை முன்வைத்து அவர் சிலைகளுக்கு எதிர்ப்புக் காட்ட முடியுமா? தீர்ப்பு
புரியவில்லையே!
நாட்டுக்கு
சுதந்திரம் வருவதை எதிர்த்த ஒருவர், மதநம்பிக்கை உள்ள ஹிந்துக்கள் போற்றி வணங்கும்
ராமரை இழிவு செய்த ஒருவர், “இந்த நாட்டுக்கும்
இதன் மக்களுக்கும் கெடுதல் நினைத்தவர்” என்று ஆகாதா? மாறாக, “பலப்பல நல்லவற்றைச்” செய்யும்
சித்தாந்தம் கொண்டவர் என்றா ஆகும்? தீர்ப்பில் ஈ. வெ. ரா-வைப் பெரிதாகப் பேசும் வாசகங்கள்
புரியவில்லையே!
தீர்ப்பு மேலும் சொல்வது: "இந்த வழக்கு தேசிய முக்கியத்துவம், சமூக முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களுக்கு மானநஷ்டம் ஏற்படுத்துவதைப் பற்றியது. அவர்களைக் காட்டமாகத் தாக்கிப் பேசுவது எண்ணிப்பார்க்க முடியாத விளைவுகளை உண்டாக்கும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப் படுவார்கள்.”
பல்லாயிர வருடங்களாக பாரதத்தில் கோடானுகோடி மக்களின் இதயங்களில் தழைக்கும்
இறை நம்பிக்கையை மிக மோசமான வார்த்தைகளால் இழிவு செய்த ஈ. வெ. ரா, இந்த நாட்டில் தேசிய
முக்கியத்துவம் பெற்ற தலைவரா?
பாரத
சமூகத்தின் ஆணிவேரான கடவுள் நம்பிக்கையையும் வழிபாட்டையும் எள்ளி நகையாடிய ஈ.வெ.ரா இந்த நாட்டில் சமூக முக்கியத்துவம்
பெற்ற தலைவரா? தீர்ப்பு புரியவில்லையே!
இன்னொன்று.
மேலே சொன்ன சட்டப் பிரிவுகளை எடுத்துக் கொண்டால், ஹெச். ராஜாவின் வலைத்தளப் பதிவின்
விளைவாக யாரிடையே பதட்டம் அல்லது கலகம் உருவாகலாம்? அதைப் பார்த்து யார் பொது அமைதியைக்
குலைக்கலாம்?
இறை நம்பிக்கையை இழிவு செய்த ஈ. வெ. ரா- வினால்,
அவரது வசவு வார்த்தைகளைத் தாங்கிய அவரது சிலைகளால், நாட்டு மக்கள் மனதால் காயப்பட்டு
பதட்டம் கொள்ள மாட்டார்களா, கலகம் செய்ய மாட்டார்களா? பொது அமைதியைக் குலைக்க மாட்டார்களா?
பல்லாயிரம்
வருடங்கள் ஆழ்ந்த இறை நம்பிக்கை தொடரும் நம் நாட்டில் அப்பாவிப் பொதுமக்கள் அவ்வாறு பதட்டம் கொள்ள மாட்டார்கள், கலகம் செய்ய மாட்டார்கள், பொது அமைதியைக் குலைக்க மாட்டார்கள், அப்படி நடக்கவும் இலை, என்னும் போது 145 வருடங்கள் முன்பு பிறந்த
ஈ.வெ.ரா-வின் சிலைகளை அப்புறப் படுத்த வேண்டும் என்று ஒருவர் சொன்னால் பதட்டம், கலகம்,
பொது அமைதிக்கு பங்கம் எல்லாம் வந்துவிடுமா? திருமால், சிவன், லக்ஷ்மி, பார்வதி, பிள்ளையார்,
முருகன் போன்ற கடவுள்களை விட, பாரத மக்களைத் தனது நாத்திகத்தால், இறை துவேஷத்தால்,
ஆகர்ஷித்த பெருமானா ஈ.வெ.ரா? தீர்ப்பு புரியவில்லையே!
புரிந்தவர்கள்
தீர்ப்பை விளக்கினால் பணிந்து புரிந்து கொள்கிறேன்.
எல்லார்க்கும் புரிந்தால்
சரி!
* * * * *
Very logical arguments. Irrefutable.
ReplyDeleteChittanandam