-- ஆர். வி. ஆர்
என் பேராண்மையில் திமிர் மேனியில் கொழு கழுத்தில் ராஜ திமிலில் கூர் கொம்புகளில் வலு கால்களில் நான் காளை ஜல்லிக்கட்டுக் காளை |
அந்நியன் ஒருவன் வலுவாய் எனது திமிலை அணைத்து என்னை ஆள்வது எனக்கவமானம் |
என்னை மறித்து என்னைப் பிடிக்க என்மேல் தாவும் பிள்ளைகள் எவரையும் குறியாய் விரட்டி குத்திக் கிழித்து விண்ணில் சேர்க்க நொடிகள் போதும் |
எனினும் எவர்க்கும் காயம் செய்யாது மானம் காக்க வீரம் ஒளித்து விலகி ஓடும் என் நற்செயலை யாரறிவாரோ? |
முதல் பிரசுரம்: ‘பூபாளம்’, அக்டோபர் 2024
* *
* * *
Copyright © R. Veera Raghavan 2024
No comments:
Post a Comment