-- ஆர். வி. ஆர்
‘மிக்ஜாம்’ புயலால் மழையும் வெள்ளமும்
சென்னையைத் தாக்கி சேதம் செய்தன. அப்போது சாலையில் கழிவுநீர் கலந்து தேங்கிய தண்ணீரை
அருந்தி பசியில் அலைந்தது ஒரு தெருநாய். சில மணிகள் முன் வாகனம் ஏறி இறந்த ஒரு சிறிய ஆமை அந்த நாய்க்கு உணவான நேரத்தில் எடுக்கப்பட்ட
படமும், அந்தக் காட்சி உருவாக்கிய வரிகளும் இவை.
|
|
பாழ்பட்ட
வீதியும் பாரா மனிதரும் கழிவுநீரும்
மரித்த ஆமையும் இவை நான்கும்
சேர்த்து சென்னையிலுனக்கு நான் தருவேன் |
|
நன்றிவிழி முகத்துத் தெருநாய்ப் பிறவியே என்றும் நீ
மாந்தர்க்கு விசுவாசம் தா! |
07.12.2023
Author:
R. Veera Raghavan, Advocate, Chennai

No comments:
Post a Comment