-- ஆர். வி. ஆர்
தமிழே வணக்கம் (பாடல்) |
தமிழே தீந்தமிழே தாய்த் தமிழே வணக்கம் தமிழே தீந்தமிழே தாய்த் தமிழே வணக்கம்
|
உலகை நா செவியில் உணரச் செய்தாய் வணக்கம் |
லழள என்றழகாய் எழுத்துடையாய் வணக்கம்
|
வல் மெல் இடையினத்தில் வீற்றிருப்பாய் வணக்கம்
|
கல் ஓலையில் ஊர்ந்து கணினி வந்தாய் வணக்கம்
|
தமிழே தீந்தமிழே தாய்த் தமிழே வணக்கம் தமிழே தீந்தமிழே தாய்த் தமிழே வணக்கம்
|
முச்சங்கத்தில் மூழ்கி முத்தெடுத்தாய் வணக்கம்
|
வள்ளுவன் கம்பனுக்கும் வரம் அளித்தாய் வணக்கம்
|
நேராய் ஔவை மொழியினிலே நீதி சொன்னாய் வணக்கம்
|
பாரதி சொல்லில் புதிதாய் பொலிவடைந்தாய் வணக்கம்
|
தமிழே தீந்தமிழே தாய்த் தமிழே வணக்கம் தமிழே தீந்தமிழே தாய்த் தமிழே வணக்கம்
|
சேரன் சோழன் பாண்டியனின் சீர் சிறப்பே வணக்கம்
|
இயலிசை நாடகமே இன்னமுதே வணக்கம்
|
பிற மொழிகள் பிறந்த பயிர் நிலமே வணக்கம்
|
இறை சிந்தை உயிராய் இணைந்தவளே வணக்கம்
|
தமிழே தீந்தமிழே தாய்த் தமிழே வணக்கம் தமிழே தீந்தமிழே தாய்த் தமிழே வணக்கம்
|
* *
* * *
Copyright © R. Veera Raghavan 2022
அருமையான பாடல் !!!. அழகான குரலில் பாடி, இசையோடு பதிவு செய்து கேட்டால் இன்னும் நன்றாக இருக்கும் . பாராட்டுகள் !!!.
ReplyDeleteநல்லவேளை! தமிழை உயிர்கொடுத்தாவது காப்பாற்றுவேன் னு எழுதப்போறியோ னு பார்த்தேன்.
ReplyDeleteஉயிரை கொடுத்தபின் எதை எப்படி காப்பாற்றுவது என்பது அந்த திராவிட இயக்கத்தினரே அறிவார்
Deleteமிகவும் அருமையான பாடல், எளிய நடை, தெளிவான கருத்து, தமிழ் என்றால் அழகு , பாடலுக்கு இசை சேர்த்தால் இன்பத்தேன் வந்து காதினில் பாயும் என்பதில் ஐயமில்லை.
ReplyDeleteஎழுதியது : பத்மநாபன்
ReplyDeleteபாடல் அருமை தான். ஆனால் இத்தனை ல, ள, ன, ண, ழ வுடன் இக்காலத்து தமிலர்களால் பாடமுடியுமா?
ReplyDeleteதமிலர்கல்
Delete
ReplyDeleteமிக அருமை நன்றி வணக்கம் ஓம் நமச்சிவாய
தமிழின் மேல் உள்ள தங்கள் பற்று பாடலாக ,கவிதையாக,சொந்தமாக,சொல்நயமாக,வந்துள்ளது. சாதாரணமாக,அந்த நாளில் எனக்கு தமிழ் தேர்வு அன்று வினாத்தாளில் ஏதேனும் செய்யுள் பகுதியில் வரும் ஒரு பாடலை அடிபிறழாமல் எழுதவும், என்று அந்த முதல் கேள்வி க்கு உண்டான பதிலை நான் கடைசியில் தான் எழுதுவேன், மறந்து வரிகள் மாறினாலும் மார்க்கு குறைந்து விடுமே என்று கடைசியில் எழுதி விட்டு வந்து விடுவேன். இலக்கிய, இலக்கணங்கள் ஒரு தடை எனக்கு. இருந்தாலும், கதை கட்டுரைகள், கேள்வி பதில் அலசி, எழுபது மார்க்குக்கு குறையாமல் வாங்கி விடுவேன். அப்படி பட்ட வன் நான் தங்கள் புலமையை அலசுவது வேடிக்கை, விஷப்பரீட்சை. தங்கள் அனுபவம்,தங்களை பாவேந்தராக்கி அழகு பார்க்கிறது. பாரதி,கம்பன்,மலையார்,வள்ளுவனார்,வரிசையில்,தாங்கள் உ.வே.சார் க்கும் உறவா என்று கேட்கும் அளவிற்கு தங்கள் கவிநயம், தமிழ் புலமை, என்னை கேட்க தூண்டியது. தாங்கள் சிறந்த வக்கீல்மட்டுமல்ல,தமிழை சுவாசிக்கும் மனிதரில் புனிதர் என்பேன், தாஸன கோபால தேசிகன் மேடவாக்கம் சென்னை வணக்கம் தாஸன்
ReplyDeleteஅழகான பாடல் சார் தமிழைப் போலவே!
ReplyDeleteமிக அழகு
ReplyDeleteஅருமையான பதிவு. தமிழின் அருமை பெருமைகளை பேச வாழ் நாள் போதாது
ReplyDeleteAtrocious.~ Public losing faith in the judicature!!!
ReplyDeleteமிகவும் சிறப்பாக, எளிமையான எழுத்து நடையில் புனையப்பட்ட அழகான கவிதை
ReplyDeleteஅருமை அருமை அருமையோ அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
தமிழுக்கு மேலும் பெருமை சேர்த்தீர்