பாரதம் எங்கள் பாரதம் பாரதம் எங்கள் பெருமிதம் ஆயிரம் பல ஆண்டுகள் பாரில் ஒளிர்கின்ற பாரதம் பாரில் ஒளிர்கின்ற பாரதம் |
வேதங்கள் இதிஹாசங்கள் புராணங்கள் எம் பண்டிகைகள் சனாதன பூமியில் நிலைத்து இது பாரதம் என்றானதே இது பாரதம் என்றானதே |
பிறன்மனை கடத்திய மன்னனையும் தேசம் அபகரித்த மன்னனையும் வீழ்த்திய ஶ்ரீராமன் கிருஷ்ணன் கொண்டாடப்படும் நிலம் பாரதம் கொண்டாடப்படும் நிலம் பாரதம் |
ஆதி சங்கரர் ராமானுஜர் மாத்வரொடு ராமகிருஷ்ணர் விவேகானந்தர் ரமணரென ஞானிகள் உலவிய பாரதம் ஞானிகள் உலவிய பாரதம் |
மலைகளை நதிகளைத் தொழுது அலைகடல் நீரையும் வணங்கி மானுடர் பணிவை யுணர்ந்திட பயிற்சி தரும் பள்ளி பாரதம் பயிற்சி தரும் பள்ளி பாரதம் |
இறையைத் துதித்துப் பாடி பக்தி பெருகத் துணை செய்து ஓங்கிச் செழித்த தமிழை தொன்மொழியாய்ப் பெற்ற பாரதம் தொன்மொழியாய்ப் பெற்ற பாரதம் |
எளியோர் உடல் உயிர் காக்க நல்மனதை நாற்புரம் செலுத்தி கொடுநோய்க்கென தடுப்பூசி அயலார்க் கனுப்பித்த பாரதம் அயலார்க் கனுப்பித்த பாரதம் |
பாரதம் எங்கள் பாரதம் பாரதம் எங்கள் பெருமிதம் பாரதம் ஜெய பாரதம் ஜெய ஜெய ஜெய ஜெய பாரதம் ஜெய ஜெய ஜெய ஜெய பாரதம் |
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate, Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com (‘விஜய பாரதம்’ 2025 தீபாவளி இதழில் வெளியானது) |
அருமையான எளிமையான வரிகளுடன் நல்ல ஒரு பாட்டு நன்றி
ReplyDelete