Tuesday 2 March 2021

பசுமாடே பசுமாடே ...

-- ஆர். வி. ஆர்   



இந்தியாவின் பல ஊர்த் தெருக்களில் பசுமாடுகள் உணவுக்காக பரிதாபமாக அலைகின்றன. அவைகளுடன் நாம் இப்படிப் பேசலாம். 

 

  

 

பாவப்பட்ட பசுமாடே – நீ

பாதகம் முன்னர் செய்தாயோ?

உலகிற்குப் பாலைத் தருகின்றாய் – உன்

உணவைக் குப்பையில் தேடுகிறாய்.

 

 

 

ஊர் ஜனம் நெய்தயிர் சுவைத்திருக்க – சவ

ஊர்வல மலர் உண்ண ஏங்குகிறாய்.

ஆதிநாள் முதல் அன்னதாதா

ஆன தெய்வம் நீதானா?

 

 

 

மானுட சிறுவர் உன் பாலை

மகிழ்ந்து குடித்து வளர்கையிலே

உன் ஆண் கன்றுகள் பல உயிரை

உடன் எம் அரிவாள் கொல்கிறதே 

 

 

  

‘ம்மா’ என ஒலி நீ எழுப்பினால்

எம் தாய்மீதுணர்வு எழுகிறது

அன்னையின் பொறுமை பயன் மிக்க

உன்னைப் பேணுவோர் ஏனில்லை?

 

 

   

கயமை மாந்தரை சகித்திருப்பாய் – உன் 

கண்ணில் சாந்தம் குவித்திருப்பாய்.

நாய்ப் பிழைப்பென்பது கேவலமா – சொல் நாங்கள் மனிதர் கேவலமா?

 


* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2021

11 comments:

  1. Excellent, Sir!

    ஊர் ஜனம் நெய்தயிர் சுவைத்திருக்க – சவ

    ஊர்வல மலர் உண்ண ஏங்குகிறாய்.

    Touching expression.

    Chittanandam

    ReplyDelete
  2. Really a very thought provoking meaningful song and it requires our attention.

    ReplyDelete
  3. wishes ஆசிகள் பேஷ் பேஷ்

    ReplyDelete
  4. Beautiful கண் கலங்கவைத்த கவிதை!

    ReplyDelete
  5. அழகான கவிதை.
    மனதை கனக்க வைக்கும் கவிதை.

    ReplyDelete
  6. Very touching. Yes we are protecting even our crops but cows are left to roam on the roads searching for food. But there are many goshalas taking care of cows. Only unfortunate cows are left un attended.

    ReplyDelete
  7. அருமையான உணர்ச்சி பூர்வமான கவிதை

    ReplyDelete
  8. வணக்கம் மை லாட்,

    முதலில் இதுபோன்ற சிந்தனை செய்து எழுதி எங்களையும் சிந்திக்க வைத்து மனித நேய உணர்வை சற்றே கிளப்ப,வக்கீல் அலுவல் நடுவில் நேரம் ஒதுக்கியமைக்கு நன்றிகள் நெஞ்சம் நல்கி.

    பசு தன் நியாயமான உணவு கிடைக்காத நிலையில்,வளர்ப்பவர் தெருவில் மேயவிட்டு விடுவது மாட்டை வைத்து பிழைப்பு நடத்தும் ஏழை எளிய மக்களின்
    நடவடிக்கையேயன்றி அது மாட்டின் குற்றமன்று, அதனால் குப்பையில் இருக்கும் நச்சு பொருளுக்கு ஈடான பிளாஸ்டிக் பைகளை உணவோடு சாப்பிடுகிறது.நாமும் அதன்பாலை அருந்துககறோம்.
    இப்போது பிருந்தாவனம் மதுரா ,கண்ணன் காலம் நினைத்து பார்க்கிறேன். இப்போது நீங்க சொன்ன அந்த விதியை பற்றி யோஜனை செய்து, அந்த கால மாடு இநதகால மாடு வாழ்க்கை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
    விதியே யார் எனக்கேட்டால், நம்மை சிரித்து விட்டு உன் கர்மாவின் நண்பன்.
    உனக்கு தெரியாமவ் நிழல் போல் வந்து கேட்காமல் உனக்கு பரிசளிப்பேன் என்கிறது என் மனசாட்சி மூலம்.

    தங்கள் தொலை நோக்கு புனிதமானது, அற்புதமானது, வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துக்கள் தாஸன் கோபால தேசிகன் மேடவாக்கம் சென்னை வணக்கம் தாஸன்

    ReplyDelete
  9. Truly touched our heart. Infact, my tears rolling out while I see the cows on tbe road..Trust, a change would happen soon

    ReplyDelete