-- ஆர்.வி.ஆர்
மருத்துவ
சேர்க்கைக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு, தமிழ் நாட்டிற்கு
வேண்டாம் என்று திமுக தொடர்ந்து போராடுகிறது. அபத்தமாக இருந்தாலும், சுய லாபத்திற்காக எதையும் ஓங்கிச் சொல்வது திமுக-வின் குணாதிசயம். அனேக தமிழக அரசியல் கட்சிகளும் இதில் திமுக-வின் நிலையைப் பகிர்கின்றன - ஆளும்
அதிமுக உள்பட. ஆனால் திமுக-வின் குரல்தான்
சத்தமானது.
ஒவ்வொரு
விஷயமாகப் பார்த்தால், 'தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து
விலக்கு அளிக்கப் படவேண்டும்' என்ற கோரிக்கை அர்த்தம் இல்லாதது
என்பது புலப்படும். மெள்ள மெள்ளக் கேள்விகளை எழுப்பலாம்.
மருத்துவப்
படிப்புக்கான வருடா வருடத் தேர்வுகள் கடினமானவை. அந்தத் தேர்வுகளையே வெல்லப் போகும் மாணவர்களால், மருத்துவக் கல்லூரியில்
சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற முடியும் என்றுதானே ஆகிறது? ஒவ்வொரு
மாநிலத்திலும், இருக்கிற மருத்துவ
சீட்டுக்களை விடப் பல மடங்கு அதிக எண்ணிக்கையில் தான் நீட் தேர்விலும் மாணவர்கள் பாஸ் ஆகிறார்கள். பின்
நீட் தேர்வினால் யாருக்கு என்ன பிரச்சனை?
திமுக-வும்
மற்ற எதிர்ப்பாளர்களும் என்ன காரணத்தினால் நீட் தேர்வைக் கண்டனம் செய்கிறார்களாம்?
தங்கள் கோரிக்கையின் அபத்தம் வெளிப்படாமல் இருக்க, ஏதோ பரோபகாரம் தொனிக்கும் ஒரு காரணத்தைக்
கற்பனை செய்து சுருக்கமாகச் சொல்கிறார்கள். அதாவது, “ஏழை-எளிய, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு
எதிரானது நீட் தேர்வு. பிளஸ்-2 வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக்
கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்” என்பதுதான் அந்தக் காரணமும் அவர்களின் நிலைப்பாடும்.
திமுக தலைவர் ஸ்டாலினின் ஆகஸ்டு 25 அறிக்கையிலும் இது குறிப்பாக
சொல்லப் பட்டிருக்கிறது. மற்ற எதிர்ப்பாளர்களும்
இதைத்தான் சொல்கிறார்கள்.
நீட் தேர்வு
ஏன் ஏழை-எளிய மக்களுக்கு எதிரானதாம்? அதுவும் ‘கிராமப்புற மற்றும் நகர்ப்புற’ என்று
அனைத்து ஏழை மக்களையும் ஏன் சேர்த்துச் சொல்கிறார்கள்? மாணவர்களின் பொருளாதார நிலையைக்
குறித்துக்கொண்டு, வசதியான மாணவர்கள் நீட் தேர்வில் அளிக்கும் ஒரு சரியான பதிலுக்கு
நாலு மார்க் வழங்கினால், வசதி குறைவான ஏழை எளிய மாணவர்களின் அதே பதிலுக்கு இரண்டு மார்க்தான்
கொடுப்பார்களா? இல்லையே? அப்புறம் எப்படி நீட் தேர்வு ‘ஏழை-எளிய மக்களுக்கு எதிரானது’
என்று சொல்லலாம்?
‘வசதி படைத்த
மாணவர்கள் மாதிரி, ஏழை-எளிய மாணவர்கள் கடினமான
நீட் தேர்வில் சரியான விடைகளை அதிகம் அளித்து
அதற்கேற்ற அதிக மதிப்பெண் பெறமுடியாது, அதனால்
நீட் தேர்வு ஏழை-எளிய மக்களுக்கு எதிரானது’ என்பதுதான் நீட் எதிர்ப்பாளர்கள்
சொல்ல வருவது. ஆனால் இது ஒரு பாசாங்கு வாதம்,
ஏமாற்றுப் பேச்சு, சுய லாப சிந்தனை.
இந்த செப்டம்பர்
13-ம் தேதி நாடெங்கும் நடத்தப்பட்ட நீட் தேர்வு, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) எனப்படும் ஒரு விசேஷமான அரசு அமைப்பால்
நடத்தப்பட்டது. தேர்வு வினாக்களையும் அந்த
அமைப்பு தகுந்த வல்லுனர்களைக் கொண்டு உயர் தரத்தில் தயாரிக்கிறது. ப்ளஸ்-2 பள்ளிப் பாடங்களைப் படித்து அதற்கான தேர்வில்
அதிக மதிப்பெண்கள் வாங்கினால் மட்டும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியாது.
நீட் தேர்வில் வெற்றி பெற அதற்கான ஒரு பயிற்சி, அணுகுமுறை வேண்டும்.
நன்றாகப் படிக்கக்
கூடிய மாணவர்களில் பணக்காரர்கள் இருக்கிறார்கள்,
ஏழை-எளியவர்களும் உண்டு. இரு பிரிவினரிலும் சுமாராக மட்டும் படிப்பு ஏறும் மாணவர்களும்
உண்டு. தனி டியூஷனுக்கு அவசியம் இல்லாமல், அரசு பள்ளிக்
கூட கட்டமைப்பு நன்றாக இருந்து, சிறப்பாகப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களும்
நியமிக்கப் பட்டால், நன்றாகப் படிக்கக் கூடிய அந்த மாணவர்கள் இன்னும் அதிக மார்க்குகள்
வாங்குவார்கள். அவர்களில் தேவையானவர்களுக்கு, குறிப்பாக ஏழை-எளியவர்களுக்கு,
அரசாங்கம் முடிந்தவரை நீட் தேர்வுக்கான நல்ல பயிற்சி அளிக்கலாம். இதுதான் நடைமுறை சாத்தியம்.
மற்றபடி, நீட் தேர்வில் ஒரு மாணவர் வெற்றி
பெறுவது, பின் அவருக்கு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைப்பது என்பது சக மாணவர்களுக்கு
இடையே நடக்கும் போட்டியின் முடிவு, அவ்வளவுதான். எப்படி இருந்தாலும்,
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் – அதுவும் பிரதான கட்சிகளான
திமுக-வும் அதிமுக-வும் – இந்த விஷயத்தில் சளைக்காமல் கபட நாடகம் ஆடுகிறார்கள்.
1967-ல் இருந்து
ஐம்பது வருடங்களுக்கு மேலாக திமுக-வும் அதிமுக-வும் மாறி மாறி தமிழ் நாட்டை ஆள்கின்றன.
தற்போதைய நீட் தேர்வு வருடங்களில் நம் மாநிலத்தில்
பிளஸ்-2 முடித்த ‘ஏழை-எளிய’ மாணவர்கள் தாங்களாக விரும்பி ஏழ்மையில் இல்லை. அவர்களின்
பெற்றோர்கள் ஏழையாக இருப்பதால் அந்த மாணவர்களும் ஏழை-எளியவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய பெற்றோர்கள் 1967-ஐ ஒட்டிய வருடங்களில் பிறந்திருப்பார்கள்,
இப்போது ஐம்பது வயதிற்கு முன் பின் இருப்பார்கள்.
தமிழகத்தில்
சுமார் ஐம்பது வயது வரையான ஏழைப் பெற்றோர்களை,
அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடர்ந்து
ஏழைகளாக வைத்திருந்தது யார்? ஆட்சி செய்த திமுக,
அதிமுக கட்சிகளுக்கு அதில் மிகப்பெரும் பங்கு உண்டே? அதனால்தானே அந்த ஏழைகளின் பிள்ளைகளும் இன்று
ஏழைகளாக இருக்கிறார்கள்?
நீட் எதிர்ப்பின்
மூலம் என்ன சொல்கின்றன இரு பெரிய திராவிடக்
கட்சிகள்? அவர்களது ஆட்சியில் ஐம்பது ஆண்டுகள்
ஏழையாகவே வாழ்ந்த குடும்பங்களின் நிலைமை மாறப் போவதில்லை, வரும் ஐம்பது ஆண்டுகளிலும்
இந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் தமிழகத்தில் தொடரும், ஆகையால் அவர்கள் கண்டெடுத்த
ஏழைகளின் அடுத்த சந்ததிகளும் இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது ஏழையாகத்தான் இருப்பார்களாமா?
அதுவரை தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து
விலக்கு தேவைப்படுமா? இல்லை, வரும் பத்து-பதினைந்து ஆண்டுகளில் தமிழகத்தில் ஏழ்மையை
ஒழிப்பார்கள், அதுவரை மட்டும் தமிழகத்திற்கு நீட் விலக்கு கிடைத்தால் போதும் என்பார்களா?
திராவிடக் கட்சிகளின் நீட் எதிர்ப்பு எவ்வளவு
அர்த்தமில்லாதது, வெட்கமில்லாதது, விவேகமில்லாதது? நீட் தேர்வை ஏற்றுக் கொண்ட மற்ற
மாநிலத்து மக்கள், மாணவர்கள், தமிழ் நாட்டைப் பார்த்து சிரிப்பார்களே என்கிற உணர்வும்
இந்தக் கட்சிகளுக்கு இல்லை, இவர்களுக்கு ஆதரவு தருபவர்களுக்கும் இல்லை.
இன்னொன்று.
‘ஏழை-எளிய’ மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புக்கு
இப்படி உருகும் திராவிடக் கட்சிகள், அந்த இளைஞர்களின் பெற்றோர்களுக்கான சுகாதாரமான
தங்குமிடம், உணவு, உடை, நல்ல வேலை வாய்ப்புகளுக்காக
ஏன் உரக்கக் குரல் கொடுத்து அந்தத் தேவைகளை நிறைவேற்றவில்லை? அந்தப் பெற்றோர்களின்
ஏழைப் பிள்ளைகளை டாக்டர்களாக்கி விட்டு, அந்த டாக்டர்களின் சம்பாத்தியம் மூலம் அவர்களின்
பெற்றோர்களின் ஏழ்மையைப் போக்குவார்களாமா? உருக்கம் காட்டுவதெல்லாம் உடான்ஸ்!
‘ஏழை-எளியவர்களுக்காக’
என்று கோரிக்கை வைத்தால், அது அபத்தமாக இருந்தாலும், சுய லாபத்துக்கான திரையாக இருந்தாலும்,
மற்றவர்கள்
அந்தக் கோரிக்கையை எதிர்க்கத் தயங்குவார்கள், அந்த ஏழைகளின் ஏமாந்த ஓட்டும் கிடைக்கும் என்று திராவிடக்
கட்சிகள் நினைக்கின்றன. அவர்கள் நினைப்பது ஓரளவு – ஓட்டு விஷயத்திலாவது – நடக்கும்.
அறிவு கூர்ந்த, மிகத் திறமையான மாணவர்கள்தான் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கப் படவேண்டும். அவர்கள் மருத்துவர்கள் ஆனால்தான், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் அவர்கள் பணிக்கு வரும்போது அவர்களது சிறப்பான சேவை ஏழை நோயாளிகளுக்கும் கிடைக்கும். இதற்கு முதல் கட்டமாக வழி செய்யும் நீட் நுழைவுத் தேர்வு தமிழ் நாட்டிற்கு நல்லது. இது அரசியல் சட்டப்படி செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டும் கூறிவிட்டது.
திராவிடக்
கட்சிகளுக்கு அவர்களது கோரிக்கையின் அபத்தம்
தெரியாததல்ல. தாங்கள் வம்பு தும்பில்லாமல் வளர்வதற்காக அந்தக் கட்சிகளை இந்த விஷயத்தில்
ஆதரிக்கும் சில பிரபல மனிதர்களுக்கும் உண்மை நிலை புரியும். தமிழகத்தில் நீட் இல்லாமல் பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண்
அடிப்படையில் மட்டும் மருத்துவ சேர்க்கை நடந்தால், பல பணக்கார மாணவர்கள் தனியார் மருத்துவக்
கல்லூரிகளில் பல வழிகளில் சேருவார்கள் என்பது அந்தக் கட்சிகளுக்குத் தெரியும். அப்படியான
சேர்க்கைகளில் பணத்திற்குப் பெரும் பங்கு உண்டு என்பதும் நமது அரசியல்வாதிகளுக்குத்
தெரியும். அதில் தங்களது பங்கு என்ன என்பதும் நமது அரசியல்வாதிகளுக்குத் தெரியும்.
அந்த அரசியல்வாதிகள் யார் யாரென்று நீங்களும்
ஊகிக்கலாம். வேறென்ன இருக்கிறது இதில்?
* * * * *
Copyright © R. Veera Raghavan
2020
WRITTEN WITH GOOD ANALYTICAL SKILL.
ReplyDeleteTHERE IS OPPOSITION TO NEET IN TAMILNADU ONLY NOT ANYWHERE ELSE. THIS TELLS SO MANY THINGS. THANKS!
Chittanandam
Neat analysis!
ReplyDeleteWell analysed RVR!!!. Out of 28 states and 9 union territories , only Tamil Nadu is now opposing the NEET exam.you have touched upon the real reason in the end. That is the only reason. Again, the figures won't lie and if we take the number of private medical colleges, TN would be on top and that is the reason for these scheming politicians to oppose in TN. But, why public and students support them is what I am not able to understand.
ReplyDeleteAbsolute Nonsense, But sadly there are more people who are getting fooled by Politicians in Tamil Nadu,They would continue to support some stupid things like this for years to come. Sad state....
ReplyDeleteSir, One thing I don't understand. Assuming there is exemption for NEET exam for TN students and these people who had come from villages with lesser syllabus get selected, how will they be able to pass subsequent exams in the medical college ? They also have to compete with other students from rest of so called richer class, isn't it ? Or, do they expect these students to be promoted with lesser marks ? what kind of Doctors that would generate ? Today's scene is even above average students, fail in First year and subsequent years. It is a question of Life, isn't it? How can one expect compromise in Medical education? Why no educated Doctors raise this question? Are there no Doctors in their parties ? Why are they keeping quiet?
ReplyDeleteMy views... Lot of debates & discussion from various sects of society on eligibility of NEET for states like TN. While I too acknowledge that reason behind the dilapidated state of poor and vulnerable sections of society is because of political parties which ruled for decades with their crooked mindset on how to steal vote for money, what is the rationale or justification we as society have to poor students who deserve the most. Many experts claim the following in TV debates (ignore those who speak for parties or paid contestants)
ReplyDelete1. With CBSE / NTA setting the question pattern at all India level, why respective state should conduct state board level examinations which is NOT PAR with all india syllabus pattern
2. There is literally neither infrastructure at government schools not skilled staffs who can train the school students to crack the exam and hence they have to reach out to NEET TRAINING INSTITUTES - which charges few 10,000 /- and statistics shows that very few % pass it in first attempt.
3. Why not provide provisions or reservations for "POOR STUDENTS FROM GOVERNMENT SCHOOL or RURAL AREAS" with certain exceptions who are deprived of sophisticated training facilities which would pave way for deserving students.
Well said sir
Deleteஇந்தக் கட்டுரையை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். திராவிட மாயை ஒழிய வேண்டும். பா ஜ க பேச்சாளர்களுக்கு இதை எப்படியாவது அனுப்பவேண்டும்
ReplyDeleteநீங்கள் சரியாக குறிப்பிட்டுள்ளபடி "‘ஏழை-எளியவர்களுக்காக’ என்று கோரிக்கை வைத்தால், அது அபத்தமாக இருந்தாலும், சுய லாபத்துக்கான திரையாக இருந்தாலும், மற்றவர்கள் அந்தக் கோரிக்கையை எதிர்க்கத் தயங்குவார்கள்,.... " - இதுதான் நீட் தேர்வை எதிர்க்கிற தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் பலம். இந்தி எதிர்ப்புக்கும் இதேதான் காரணம். தமிழ்நாட்டில் துணிச்சல் மிக்க அரசியல் தலைவர் தோன்றி இவர்களை எதிர்கொண்டால் தவிர இந்த போலித்தனம் மறையாது.
ReplyDeleteMarks in Plus Ii examinations in Tamil Nadu schools are rigged. Teachers and students are spared the trouble of hard work to get good results. Admissions in Medical Clleges on the basis of Plus II marks help mediocre students to enter. Then there are education merchants who sell seats for lakhs of rupees to rich candidates. NET tests put paid to this unjustified practice. Hence vociferous opposition. Most of the donation collecting Medical Colleges are run by DMK and other political leaders. They have a vested interest to perpetuate this anamolous procedure of admissions
ReplyDeleteநல்ல அலசல்....நியாயமான வாதம்
ReplyDeleteVery well analyzed. All oritests on based on what they are likely to lose not what the students are going to gain! An educated 'poor man' may escape the mafia net to caature them! This is the fear. One wonders being a tamilian born in the great lands ruled by the tamil kings surrounded by scholars and Sangam pulavars, the present tamil politicians seem ignorant, uneducated and lack prudence and common sense. Sad.
ReplyDelete