Sunday, 9 June 2019

அரசியலுக்கும் அழுக்கென்று பேர்!


"தமிழுக்கும் அமுதென்று பேர்". இது பாரதிதாசனின் கவிதை வரி. 

நமது   ஜனநாயகத்தின் பல அம்சங்களுக்கு 'வேறு என்ன பேர்?' என் கேள்வியை, ஏதோ கவிதை பாணியில் கேட்டு வைக்கிறேன் (கவிதை ரசனை உள்ளவர்கள் மன்னிக்கவும்!). இதில் கவிதை தெரியாவிட்டாலும் உங்கள் கோபத்தையாவது பார்க்கலாம்.
                                                                                                                                                                                  


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தம்மைத் தொழும் மக்களை 
        சிதைக்கின்ற அரசியலார்
        சிறுமைக்கு வேறென்ன பேர்?


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தம்தேச கஜானாவை
        கொள்ளையிடும் மந்திரிமார்
        கொடுமைக்கு வேறென்ன பேர்?


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தாய்மொழிக் காதலென்று
        கபடத்தில் ஊரேய்க்கும்
        கீழ்மைக்கு வேறென்ன பேர்?


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தம் சக்தி உணராத
        மக்களெனும் எஜமானர்
        மடமைக்கு வேறென்ன பேர்?


        தமிழுக்கும் அமுதென்று பேர்!
        தன்னாட்சி கண்ட நம்
        பொல்லாத ஜனநாயக
        பொய்மைக்கு வேறென்ன பேர்?


2 comments:

  1. அநேகமாக உங்கள் சிந்தனைகள், கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன். கருத்தாழம் மிக்க நல்ல கவிதை.

    ReplyDelete