Thursday 16 May 2019

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: நான் மானசீக பாட்டி, கமல் ஹாசனுக்கு. படவா ராஸ்கல்!


தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பல பேர் தினுசு தினுசா உளறுவா. அதுல கமல் ஹாசனை கண்டிப்பா சேக்கணும்.

தெரியுமில்லையா?  "நான் மஹாத்மா காந்தியோட மானசீக கொள்ளுப் பேரன்"னு  கமல் ஹாசன் பேசிருக்கார். இன்னொரு பைத்தியக்கார உளறலை நியாயப் படுத்தணும்னு இப்படி ஒரு அசட்டுத்தனமான 'கொள்ளுப்பேரன்' வழிசல். சரி, அவர் வழில நானும் கொஞ்சம் அசட்டுத்தனமா போய், "நான் கமல் ஹாசனுக்கு மானசீக பாட்டி"ன்னு ஆரமிச்சு அவர்கிட்டயே பேசறேன்.

ண்டாப்பா கமல், மஹாத்மா காந்திக்கும் உனக்கும் கடுகளவு கூட ஒத்துமை கிடையாது. பேதம்தான் கடல் அளவு இருக்கு.  இது உனக்கே தெரியும். நீ மஹாத்மா காந்தி பேரை சொல்லித்தான் ஆகணும்னா என்ன பேசணும்? "காந்தி ஒரு மகான். அவர் மாதிரி தலைவரை பாக்க முடியாது. அவர் பாதம் பணிகிறேன்" அப்டின்னு மரியாதையா சொல்லிட்டு நாசூக்கா கழண்டுக்கணும். எதுக்குடா கண்ணா வேண்டாத பேச்சு?

ஒருத்தர் கிட்ட நேரடியா எதையும் கேட்டு தெரிஞ்சுக்காம, அவர் சொன்னதை அறிஞ்சுண்டு வாழ்க்கைக்கு முக்கியமான விஷயத்தை ஒருத்தர் கிரகிச்சுண்டா, அவர் அந்த இன்னொருத்தரை 'மானசீக குரு'ன்னு சொல்லலாம். ஆனா யாரோ யாருக்கோ தாத்தா கொள்ளுத்தாத்தான்னு இருந்தா நீ அந்த மனுஷனைக் கைகாட்டி, “நான் அவருக்கு மானசீக பேரன், மானசீக கொள்ளுப் பேரன்” அப்படின்னு பேக்கு மாதிரி பேசுவையா?

உன் குடும்பத்தையே எடுத்துக்கோ. உங்க அப்பா சீனிவாச ஐயங்கார் இருந்தாரே, அவர் காங்கிரஸ்காரர். சுதந்திர போராட்டத்துல ஜெயிலுக்கு போனவர். உங்கப்பாவே "நான் காந்தியோட மானசீக பேரன்”ன்னு சொன்னதில்லை. நீ என்ன ’காந்தியோட மானசீக கொள்ளுப் பேரன்’னு பீத்திக்கறது? உன் பொண்கள் கிட்டயாவது சொல்லி வைடாப்பா - இல்லாட்டி அவாளும் "நாங்கதான் காந்தியோட மானசீக எள்ளுப்பேத்திகள்"னு கிளம்பிடப் போறா.

உன்னோட இன்னொரு மெயின் உளறலையும் சொல்லணும். அதுக்காகத்தான நீ கொள்ளுப்பேரன் பேச்சை எடுத்து விட்ட? அது என்னன்னா, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே”அப்படின்னு பேசிருக்க. இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்றேன்.

"காந்தியைக் கொன்னவன் ஒரு ஹிந்து.  அவரைக் கொன்னதுனால அவன் தீவிரவாதி"ன்னு ஒண்ணு பிரதானமா சொல்லிருக்க. இன்னொண்ணு, "ஹிந்து மதம்னு இருக்கே, அந்த மதத்து மனுஷன்தான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி. அந்த உண்மையை மத்தவா சொன்னா தப்பாகலாம். ஆனா நான் வேற ஆளு. காந்தியோட மானசீக கொள்ளுப் பேரனாச்சே! அதுனால, காந்தி தாத்தாவை உரிமையோட கட்டிண்டு, ’கோட்சேதான் முதல் ஹிந்து தீவிரவாதி’ அப்படிங்கற கண்டுபிடிப்பை நான் சொன்னா சரி"ங்கறது உன் கட்சி. 

கோட்சே ஒரு ஹிந்துன்னு சொன்னயே, அது கரெக்ட். ஆனா அவன் காந்தியை கொலை பண்ணினதுக்காக அவனை தீவிரவாதின்னு சொன்னா அது குழப்பம் இல்லாட்டி பேத்தல் - உனக்கோ ரெண்டும் உண்டு. காந்தியோட கொள்கை ஏதோ பிடிக்காம கோட்சே அவரை சுட்டான். அது மன்னிக்க முடியாத கொலைன்னு எல்லாரும் நினைப்பா. ஆனா அதையும் தாண்டி அது தீவிரவாதம், கோட்சே தீவிரவாதின்னு நீதான் சொல்ற. ஒரு அரசியல் தலைவரையோ ஒரு அரசாங்க அதிகாரியையோ பலி வாங்கினா அது கொலையா தீவிரவாத செயலான்னு பாகுபடுத்தி பாக்க வேண்டாமா? எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு குத்தத்தை, ஒரு பயங்கர குத்தமா பெரிசு படுத்தி பேசிட்டா சமூகத்துல ரொம்ப அக்கறை இருக்குன்னு காட்டிக்கற ஏமாத்து அரசியல்தான் நீ பண்றது.

இன்னொரு விஷயம்.  இது முக்கியம். அரவக்குறிச்சில, முஸ்லிம்கள் அதிகமா கூடின இடத்துல நின்னுண்டு ஓட்டுக் கேக்கும்போது நீ இப்படி உளறிக் கொட்டின. அதாவது, அந்த மக்கள் கிட்ட ’காந்தி, கோட்சே, ஹிந்து’ன்னு நீ பேசினதுக்கு உண்மையான அர்த்தம் இதுதான். "இத பாருங்கோ. தேசத் தந்தையை கொன்னதே ஒரு ஹிந்து. அந்தக் கொலை தீவிரவாதம், அந்தக் கொலைகாரன் தீவிரவாதி. அப்ப, தேசத்துலயே முதல் பெரிய தீவிரவாதி அந்த கோட்சேதான், அந்த ஹிந்துதான். அதுனால, இந்தியாவுல முஸ்லிம் மனுஷா யாராவது தீவிரவாதியா இருந்தா அதெல்லாம் ரெண்டாம் பட்சம். அதுக்காக நீங்க ஒண்ணும் சஞ்சலப்பட வேண்டாம். உங்க மதத்துக்காரா மேல யாரும் நேராவோ மறைமுகமாவோ தீவிரவாத பழி சுமத்த முடியாது. அப்படி யாராவது பழி சுமத்தினா, 'காந்தி கொலைக்கு ஹிந்துக்கள்ளாம் முதல்ல பழி ஏத்துக்கட்டும். அதுவும் தீவிரவாதம்தான். அதுக்கான ஜவாப் ஹிந்துக்கள் முதல்ல சொல்லட்டும். அதுக்கப்பறம் மத்தவாளைப் பத்தி பேசட்டும்'னு நீங்க எதிர்ப் பேச்சு பேசுங்கோ. நான் கமல்ஹாசன், உங்களுக்கு பக்க பலமா இருக்கேன். நம்மள்ளாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. சந்தோஷம்தான? உங்க ஓட்டெல்லாம் என் கட்சி வேட்பாளருக்கே போடுங்கோ!" இதான கமல், உன் விஷமப் பேச்சுக்கு உள்ளர்த்தம்? உண்மையா இல்லையா, படவா ராஸ்கல்?

உன் பேச்சை நான் சரியான அர்த்தத்துல புட்டு புட்டு வச்சது வாஸ்தவம்னு உனக்கே தெரியும். இது எப்படி இருக்குன்னா, மூணு மாசத்துக்கு முன்னால  தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு முஸ்லிம் கல்யாண வரவேற்புல தம்பதிகளை வாழ்த்த வந்தவர், "ஹிந்துக்கள் திருமண சடங்குல, புரோகிதர் சமஸ்கிருத மொழில சொல்ற மந்திரங்கள் யாருக்குமே புரியாது. அவருக்கே கூட புரியாது"ன்னு ஹிந்துக்களை இளப்பமா பேசினார். இவர் சில தடவை தமிழ்ள பேசறது கூட தமிழர்களுக்கே புரியாதுங்கறது இருக்கட்டும். முஸ்லிம்கள் கிட்ட போய் ஸ்டாலின் ஹிந்துக்களை பரிகாசம் பண்ணினா, "நான் முஸ்லிம்கள் பக்கம், அதாவது உங்க பக்கம்தான். நான் உங்களுக்கு சப்போர்ட்டா இருந்து ஹிந்துக்கள் கிட்டேர்ந்து உங்களை பாதுகாப்பேன்! என்னை நம்பி ஹிந்துக்களும் என்கிட்ட ஏமாந்துண்டே இருப்பா! தேர்தல்ல உங்க ஓட்டெல்லாம் தி.மு.க கட்சிக்கே போடுங்கோ!" அப்படின்னு முஸ்லிம்கள் கிட்ட யாசகம் கேக்கறார்னு அர்த்தம்.  அப்பாவி முஸ்லிம் ஜனங்ககிட்ட, சுபாவத்துல சாதுவான ஹிந்துக்கள் மேல ஒரு சந்தேகத்தையும் பயத்தையும் உண்டு பண்ணி, தான் பொழைக்கணும்னு கீழ்த்தரமா பேசினார் ஸ்டாலின். அதையேதான் நீயும் அரவக்குறிச்சில பண்ணிருக்க.

சாதாரண முஸ்லிம் ஜனங்க யாரும் நீ பேசினதை எதிர்பார்த்து ஏங்கிண்டு நிக்கலை. நீயா அவாகிட்ட குழைஞ்சு, கோட்சே பேரை சொல்லி ஹிந்து சமுதாயத்தையே பழிச்சு உன் கட்சிக்கு ஓட்டு சம்பாதிக்க பாத்திருக்க, அவ்வளவுதான். உன் பொய்ப் பேச்சை பேசிட்டு, முட்டாள்தனமா ஒரு நினைப்பையும் வச்சிண்டிருக்க. அது என்னன்னா: 'என் பேச்சோட உள்ளர்த்தம் முஸ்லிம்களுக்கு சுரீர்னு புரியும். அது எனக்கு லாபம். ஆனா ஹிந்துக்கள் ஒண்ணும் புரியாம பேசாம இருப்பா. அதுவும் எனக்கு லாபம்.’  உண்மையா இல்லையா, படவா ராஸ்கல்?

சிலபேர் கேப்பா, ’கமல் ஹாசன் பேசினதை ஏன் பாட்டி சீரியசா எடுத்துக்கறேள்?’னு. உங்கிட்டயே சொல்றேன். ஆரம்பத்துல ஈ.வெ.ரா பேச்சையும் அட்டகாசத்தையும் சட்டை பண்ணாம ஹிந்துக்கள் கௌரதையா ஒதுங்கி இருந்தா. அதுனால அவர் துளுத்துப் போனார். அவருக்கப்பறம் கமல் ஹாசன் வரைக்கும் பலபேர் அவர் புகழை பாடிண்டு ஹிந்துக்கள்னா கிள்ளுக் கீரைன்னு மட்டம் தட்டறா. இனிமே ஹிந்துக்களை இழிவு படுத்தறவாளை போடு போடுன்னு போடணும். சூட்டுக்கு சூடு குடுக்கணும். அதான் உறைக்கும். அது உன் வாயைக் கூட அடைக்கலாம்னு நினைக்கறேன்.

சரி, இப்போதைக்கு கிட்ட வா கமல். ஆர்வத்துல ரகசியமா  ஒண்ணு கேக்கறேன்.  கோட்சே மேல கோபம் வச்சுக்கோ. இந்துக்கள் மேலயும் கோபத்தை காட்டிக்கோ. போய்ட்டுப் போ. தேர்தல்ல மக்கள் பாத்துக்கட்டும். ஆனா, மஹாத்மா காந்தி கிட்ட உறவு கொண்டாடற அளவுக்கு அவர் மேல என்னடா கோபம் உனக்கு?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019

4 comments:

  1. Final line is super
    Gandhi is great grandfather to kamaal Hazan
    Murugan is muppaattan for Simon simaan
    What humbug!

    ReplyDelete
  2. Ambujam katti need not have been so sensitive to Kamalhasan's accusation of Godse the first Hindu terrorist.How else a murderer, assassin be labelled?

    ReplyDelete
  3. தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு முஸ்லிம் கல்யாண வரவேற்புல தம்பதிகளை வாழ்த்த வந்தவர், "ஹிந்துக்கள் திருமண சடங்குல, புரோகிதர் சமஸ்கிருத மொழில சொல்ற மந்திரங்கள் யாருக்குமே புரியாது. அவருக்கே கூட புரியாது"ன்னு ஹிந்துக்களை இளப்பமா பேசினார். ஸ்டாலின் முஸ்லிம் திருமண விழாவில் இப்படிப் பேசியது அவரது அறிவு இவ்வளவுதான் என்று தெளிவாகக் காட்டுகிறது. முஸ்லிம் திருமணத்தில் என்ன புரியும்படி தமிழிலா மந்தரம் சொல்லுகிறார்கள்; அரபி மொழியில் அல்லவா திருமணம் நடத்தப்படுகிறது.ஸ்டாலின் அரபு மொழியில் பெரும் புலமை பெற்றவரோ, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவர்க்கும் அந்த அரபு மொழி ஓதப்பட்டது தெள்ளத் தெளிவாக விளங்கியது என்று ஸ்டாலினால் திட்ட வட்டமாகச் சொல்லமுடியுமா? இவருடைய தந்தை திரு. கருணாநிதி அவர்கள் திருமதி. பத்மா சுப்ரமணியத்தின் பரதமுனி நாட்டிய ஆராய்ச்சி மையத்திற்கு ஒப்புதல் வழங்காமல், இளங்கோவடிகள் பரதமுனி நாட்டிய ஆராய்ச்சி மையம் என்று பெயர் மாற்றம் செய்த பிறகுதான் உரிமம் வழங்கினார். அப்போது அவர் சொன்னது தான் நகைப்பிற்குரியது:"எனக்குத்தான் சமஸ்கிருத சொற்களே பிடிக்காதே" என்று ஏகடியம் பேசினார். ஆனால் திராவிடம், கருணாநிதி, கலாநிதி, தயாநிதி, உதயநிதி இவ்வளவு நிதிகளும் தமிழ்ப் பெயர்களா என்று சற்றும் யோசிக்கவில்லை. "இதுதான் "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பதோ?

    ReplyDelete