நேருவோட
கொள்ளுப்பேரன், இந்திரா காந்தியோட பேரன், ராஜீவ் காந்தியோட பையன்னா சும்மாவா?
ராகுல் காந்திக்கு இத்தனை லட்சணம் இருக்கு. ஆனா இதைத் தவிர அவர்கிட்ட மெச்சிக்க
ஏதாவது இருக்கா? உதட்டைத்தான் பிதுக்கணும்.
நேருவுக்கு அரசியல்
எதிரிகள் இருந்தா. இந்திரா காந்திக்கு நிறையப்பேர் எதிரியா இருந்தா. ராஜீவ்
காந்திக்கும் உண்டு. அவா யாராவது அரசியல் எதிரிகளை 'திருட்டுப் பசங்க'ன்னு
பப்ளிக்கா அநாகரிகமா திட்டிருக்காளோ? கிடையாது. ஆனா காங்கிரஸ் தலைவர் ராகுல்
காந்தி மேடைக்கு மேடை பிரதமர் மோடியை 'சோர்'ங்கற இந்தி வாரத்தைல 'திருடன்'னு திட்டிண்டே
இருக்கார். அந்த வார்த்தை ஒரு விமரிசன வார்த்தையான்னா, இல்லை. பொதுவுல
சொன்னா, அதுவும் மோடி மாதிரி கைசுத்தத்துக்கு பேர் போன ஒரு அரசியல் தலைவரைப்
பார்த்து அப்படி சொன்னா, அது வசவு வார்த்தைன்னு ஆகும். இதெல்லாம் புரியறதுக்கும் ஒரு
மனப்பக்குவம் வேணுமே? சரி, அந்தப் பக்குவம்லாம் ராகுல் காந்திட்ட
கிடையாதுதான். நாமதான் அவரை சரியா புரிஞ்சுக்கணும். எப்படின்னு சொல்றேன்.
அப்பாவி மக்களுக்கு
வஞ்சனை பண்ணி, அவா கண்ணைக் கட்டி, ஏதோ கட்டாயத்தை உண்டு பண்ணி, நைசா அவா ஆதரவை
வாங்கி ஒரு குடும்பம் ராஜாங்கம் பண்றதுன்னு வச்சுக்கோங்கோ. அந்த சமயத்துல, ஒரு
நல்ல மனுஷன் மக்கள் மனசோட பேசி, அவா நம்பிக்கையை வாங்கிண்டு அவா கண்ணையும் மெள்ள
மெள்ள அவுத்துவிட்டா ராஜங்க குடும்பத்துல புது ராஜாவா வந்தவருக்கு சுள்ளுன்னு
கோபம் வருமா வராதா? இனிமே அந்தக் குடும்பத்து வண்டவாளம் ஒவ்வொண்ணா வெளில வரும்.
குடும்ப மானம் கப்பல் ஏறும், ராக்கெட்லயும் பறக்கும். குடும்ப வருமானமும் அதள
பாதாளத்துக்கு இறங்கும். அதுவும், குடும்பத்துல மாப்பிள்ளையா வந்தவருக்கு விசேஷ வருமான
வழிகள் எல்லாம் காணாம போகும். அது புது ராஜாவையும் பாதிக்கலாம். ஏன்னா அவா ரெண்டு பேருக்குள்ள என்ன அட்ஜஸ்ட்மெண்ட் உண்டோ யாருக்குத் தெரியும்? திடீர்னு குடும்பத்துல இவ்வளவு பெரிய நஷ்டம்
வரும், செல்வம் குறையும்னா, புது ராஜாவும் "ஐயோ திருடன்! திருடன்!
காப்பாத்துங்கோ!"ன்னு பயத்துல கத்தலாமே? நாமதான் இதை புரிஞ்சுக்கணும். நன்னா புரிஞ்சுதா?
இன்னொண்ணு சொல்றேன்.
யாரையும் பொது வெளில ஒரு அரசியல் தலைவர் இப்படிப் பேசினா, பேசற
மனுஷருக்கு கூச்ச நாச்சம் சுத்தமா கிடையாதுன்னு அர்த்தம். இப்ப ராகுல் காந்தியைப் பார்த்தாலோ கேட்டாலோ நேரு உங்க
ஞாபகத்துக்கு வருவாரா? இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி யாராவது வருவாளா? உஹும்.
பின்ன யாரு? நீங்களே கரெக்ட்டா ஊகிச்சிருப்பேளே! "டேய், தீவட்டி தலையா!"
அப்படின்னு தமிழ் சினிமால கவுண்டமணி ஒரு சக நடிகரை கூப்பிடுவாரே, அது
மாதிரித்தான ராகுல் நடந்துக்கறார்? இதை நான் சொன்னேன்னு கவுண்டமணி மாமா
கிட்ட யாரும் சொல்ல வேண்டாம். ஏன்னா, அவரை இளக்காரம்
பண்ணிட்டேன்னு என்னை கோவிச்சுப்பார்.
எந்த மனுஷனைப்
பத்தியும் ஒரு கீழான அபிப்பிராயத்தை நாம மூணு பேர்கிட்ட சொல்ல வேண்டி வரலாம்.
ஒண்ணு, நம்ம நமக்குள்ளேயே சொல்லிக்கறது. அதாவது, மனசுல அப்பட்டமா, உள்ளது
உள்ளபடியா உணர்றது. ரெண்டு, நெருக்கமா இருக்கறவா கிட்ட மட்டும்
தனியா பகிர்ந்துக்கறது. இதைக் கூட, நமக்கு மனசுல தோணினதை அப்படியே கண்ணாடி
மாதிரி காட்டிக்காம வார்த்தைகளை நாம கவனமா எடுத்து சொல்றதுண்டு. இதைக்
கேட்டுக்கறவாளும், நம்ம சொன்னோம்னு வெளி மனுஷாட்ட கசியவிடப்பிடாது, அதுதான்
நாகரிகம். மூணாவது, பொது வெளில நாம இன்னொரு மனுஷனைப் பத்தி குத்தம் சொல்லணும்னா எந்த
விஷயத்தை சொல்லலாம், என்ன வார்த்தைல சொல்லலாம்னு ஒரு நியதி இருக்கு. தலைவர்களா
இருக்கறவாளுக்கு இந்த நியதி கட்டாயம் தெரியணும். அது அவாளுக்கான அடிப்படைத்
தகுதி. ராகுலுக்கு புரியற மாதிரி உதாரணம் சொல்லட்டுமா?
இப்ப, கருணாநிதி மாமாவை எடுத்துக்குங்கோ. அவர்
அரசியல்ல நேர்மைக்கும் தூய்மைக்கும் பேர் போனவரான்னு கேட்டா, தலையை வலப்பக்கம்
இடப்பக்கம் ஆட்டணும். அது வேற விஷயம். ஆனா ஒரு தலைவரா அவர் நன்னா பேசத்
தெரிஞ்சவர். 'காங்கிரஸ் கட்சியோட கூட்டு வச்சிருக்க வேண்டாம்'னு ஒரு சமயம்
சொல்ல வந்தவர் "அந்த சனியன் பிடிச்ச கட்சியோட நாங்க
சேர்ந்திருக்க வேண்டாம்"னு ராகுல் மாதிரி உளறலை. "கூடா நட்பு
கேடாய் முடியும்"னு இனிமையா, இன்னும் அழுத்தமா சொல்லிட்டு போய்ட்டார்.
சரியோ தப்போ, நாசூக்கா பேசிட்டார். இந்திலயும் ராகுல் காந்திக்கு கத்துக்
குடுக்கறவா இருக்கா. வாஜ்பாயி மாமா பேச்செல்லாம் ராகுல்
படிச்சிருந்தா, படிச்சது புரிஞ்சிருந்தா, அழகான வார்த்தை வராட்டாலும் அசுத்தமான
வார்த்தையாவது பேசாம இருக்கலாம்.
மோடியைப் பார்த்து
"சோர்"னு ராகுல் சொல்றாரே, அதையே அவரோட கூட்டணி கட்சித் தலைவர்கள்
யாராவது சொல்றாளா? இல்லை. இவ்வளவு பெரிய வார்த்தையை ராகுல் ஒரு குற்றச்சாட்டா
சொல்றபோது, அதை ஏன் அந்தத் தலைவர்கள் சொல்லலை? அதுக்கு காரணம், ராகுல் எல்லை மீறி
பெனாத்தரார்னு அவாளுக்கு தெரியறது. அதுனால, அவா இதுல விலகி நிக்கறா. அது மட்டுமில்ல
– ராகுல் பின்னால நிக்கறது அவமானம்னு சிலர்
நினைக்கறாளோ என்னவோ?
போபோர்ஸ் ஊழல், 2ஜி
ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் போட்டிகள் ஊழல் இப்படின்னு வெளிவந்தது,
வெளிவராததுன்னு ஏகப்பட்ட ஊழல் வியாபிச்ச ராஜ்ஜியத்தை நடத்தினது காங்கிரஸ்.
அப்ப நடந்த ஊழல்-திருட்டு மாதிரி மோடி அரசங்கத்துல ஒரு தப்பும் கிடையாது. யார்
யாரைப் பத்தி என்ன சொல்றதுன்னு ஒரு விவஸ்தையாவது வேண்டாமா?
ராகுல் காந்தி
தத்துப் பித்துன்னு பேசறார்னு சில பா.ஜ.க தலைவர்கள் கூட அவரை 'பப்பு'ன்னு கூப்பிட்டிருக்கா.
ஆனா அது வசவு வார்த்தை இல்லை. ஒரு பாலகனை, 'பப்பு'ன்னு இந்தில செல்லமா அழைக்கறது
உண்டு. அந்த வார்த்தையே, ஒண்ணும் தெரியாத வயசுல வெகுளியா இருக்கற ஒரு குழந்தையைக் குறிக்கும்.
'50 வயசு ஆனாலும், ராகுல் பிள்ளையாண்டான் மன முதிர்ச்சில அப்படித்தான்'னு சுட்டிக்
காட்டறதுக்காக அவரையும் 'பப்பு'ன்னு கிண்டலா கூப்பிட்டா எதிர்க்கட்சிக்காரா.
அதைக்கூட பா.ஜ.க-வோட முன்னணி தலைவர்கள் யாரும் இப்ப மேடைல சொல்றதில்லை.
இருந்தாலும், அந்த 'பப்பு' பேச்சும் இந்த 'சோர்' பேச்சும்
ஒண்ணு, அதுக்கு இது சரியா போச்சுன்னு ஆகாது.
ராகுல் காந்தியும்
இந்த 'சோர்' வசவு வார்த்தையை நிறுத்தறதா காணோம். அவர் இதை சொல்லிண்டே இருந்தா நாம
இப்படித்தான் யோசிக்கணும். இந்த ஜென்மத்துல இந்த பப்பு வேகவே வேகாதா?
* * * * *
Copyright © R.
Veera Raghavan 2019
I agree.But many remarks of PM are also unbecoming of his office
ReplyDeleteWhen Sri Krishna wanted both Dhuryodhan & Udhistra to profile their subjects the former had all nasty things to say about them while Udhishtra had all the nice & virtuous to mention. So it's easy to infer the innate nature of Pappu.
ReplyDeleteI doubt very much if Rahul has attained enough maturity of mind to shoulder the burden and responsibility of the P.M of the country.
ReplyDeleteNo better term can be used than chor.
ReplyDeleteHe will prove to be a better P M than any of the PMs of the party with a difference
ReplyDeleteநம் எல்லாருடைய மனக்குமுறல்களையும்
ReplyDeleteஅம்புஜம் பாட்டி அழகாக பிரதிபலிக்கிறார்