நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சி இன்னும் பலமான தோற்றத்துடன் போட்டியிட வேண்டும் என்றால் அதன் தலைவர் நரேந்திர மோடியின் பெயரும் பெருமையும் தமிழ் மக்களுக்கு மேலும் தெரிய வேண்டும். அதற்கான வழி அந்தக் கட்சிக்கு சரியாகத் தெரியவில்லையே!
கலைஞர் கருணாநிதி பிரபலமாவதற்காக அவரைப் புகழ்ந்து பாடிய பாடல்களை தி.மு.க எப்படி பட்டி தொட்டி எல்லாம் ஒலிபரப்பியதோ, அதே பாணியை பா.ஜ.க-வும் ஓரளவு பின்பற்றவேண்டும். இதற்காக, பா.ஜ.க தனது தொலைநோக்கு, தனது தலைவர் மோடியின் தீரம், தனது தேர்தல் வீரம், எதிர்க்கட்சியினர் மீதான விமரிசனம் அனைத்தையும் உள்ளடக்கி ஒரு பிரசாரப் பாடலை தமிழகம் எங்கும் ஒலிக்கச் செய்யவேண்டும். தமிழ் நாட்டில் இந்த வழியை மறக்கவே கூடாது!
இதற்காக பா.ஜ.க புதிதாகப் பாடல் எதையும் புனைய வேண்டாம். இருக்கவே இருக்கிறது ஒரு பிரலபமான எம்.ஜி.ஆர் பாடல் - எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் அவர் பாடுவதாக வரும் ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’ என்னும் பாடல். அதன் முதல் வரியிலேயே எம்.ஜி.ஆர் கற்பனை செய்து பாடுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்பறம் என்ன? அந்தப் பாடலின் சில
வரிகளை
சிறிது
மாற்றி,
பா,ஜ,க-வும்
கருத்து
பாதி,
கற்பனை
பாதி
கலந்து
ஒருவழியாக
ஒப்பேத்த வேண்டியதுதான்! எப்படி என்கிறீர்களா? இதோ, இப்படித்தான்!
ஒரிஜினல் பாடல்
(வாலி எழுதியது)
|
ஒப்பேத்திய பாடல்!
(பெயர் முக்கியமில்லை!)
|
நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார். உயிர் உள்ள வரை, ஒரு துன்பம் இல்லை. அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார். |
நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் ஏமாற்றப் படமாட்டார்!
உயிர் உள்ள வரை, ஒரு துன்பம் இல்லை!
அவர் இலவசக் கடலிலே விழ மாட்டார்!
|
ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்! உடல் உழைக்கச் சொல்வேன்! அதில் பிழைக்கச் சொல்வேன்!
அவர் உரிமைப் பொருள்களை
தொட மாட்டேன்!
|
ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால்
அவன் சி.எம் என்றாலும் விடமாட்டேன்!
நாடு தழைக்கச் சொல்வேன்!
அதற்குழைக்கச் சொல்வேன்!
நம் அரசின் பணத்தைத் தொட விடமாட்டேன்! |
சிலர்
ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும்,
வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானம் இல்லை!
அதில் ஈனம் இல்லை!
அவர் எப்போதும் வால் பிடிப்பார்! |
சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும்
ஊரைக் கொள்ளை அடிப்பார்!
ஒரு மானம் இல்லை!
அதில் ஈனம் இல்லை!
அவர் எப்போதும் பிள்ளை பிடிப்பார்!
|
எதிர்காலம் வரும்!
என் கடமை வரும் ! இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்! பொது நீதியிலே, புது பாதையிலே வரும் நல்லோர் முகத்திலே நான் விழிப்பேன் |
எதிர்காலம் வரும்!
என் கடமை வரும்!
இந்தக் கூட்டத்தின் டெபாசிட்டை ஒழிப்பேன்!
பொது நீதியிலே, புது பாதையிலே
வரும் தாமரை மலர்ச்சியில் விழிப்பேன்!
|
இங்கு ஊமைகள் ஏங்கவும்,
உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன் ?
ஒரு கடவுள் உண்டு!
அவன் கொள்கை உண்டு! அதை எப்போதும் காத்திருப்பேன். |
இங்கு ஸ்டாலின்கள் பிதற்றவும்,
ராகுல்கள் உளறவும்
நானா பார்த்திருப்பேன்?
ஒரு தேசம் உண்டு!
அதன் மகிமை உண்டு!
அதை எப்போதும் காத்திருப்பேன்.
|
முன்பு ஏசு வந்தார்!
பின்பு காந்தி வந்தார்! இந்த மானிடர் திருந்திடப் பிறந்தார். இவர் திருந்தவில்லை! மனம் வருந்தவில்லை! அந்த மேலோர் சொன்னதை மறந்தார் |
முன்பு காந்தி வந்தார்!
இன்று மோடி உள்ளார்!
இந்த நாட்டினர் மேலெழ பிறந்தார்.
இவர் முயன்றதில்லை!
மனம் வருந்தவில்லை!
அந்த நல்லோர் சொன்னதை மறந்தார்
|
* * * * *
Copyright © R.
Veera Raghavan 2019
Very good one.
ReplyDeleteDMK fooled the public - Poor Tamils! BJP more!
ReplyDelete