Thursday, 5 July 2018

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: கமல் ஹாசனின் பூணூல் தத்துவம்



கமல் ஹாசன் நல்ல நடிகர்தான்.  தசாவதாரம்னு ஒரு படத்துல பத்து கேரக்டர்ல நடிச்சிருந்தார். அதுல பல கேரக்டர்கள் என்னன்னு தெளிவா ஞாபகம் வச்சுக்க முடியலை. ஒரு  பித்துக்குளி கேரக்டர் இருந்தா, பளிச்னு  கமல் ஞாபகத்துக்கு வருவாரோ? காரணத்தோடதான் நினைச்சுக்கறேன்.

ஒருத்தர்  தன்னோட மனைவிட்ட "சாப்பாடு போடறயா"ன்னு சாதாரணமா கேக்கும்போது, "என்னால முடியாது. எனக்கு கூப்பாடு போடறதுல இஷ்டம் இல்லை"ன்னு மனைவி பதில் சொன்னா, என்ன நினைப்பேள்? 'இது  என்ன பித்துக்குளித்தனமா இருக்கு? அவர் சாப்பாட்டைப் பத்திக் கேட்டா இந்தம்மா கூப்பாட்டைப் பத்தி பேசறாளே'ன்னு நினைப்பேளா இல்லையா? கமல் ஹாசனும் அப்படித்தான் பேசிருக்கார். அவர் கிட்ட ஒருத்தர், "நீங்கள் படித்த நூலில் உங்களுக்கு மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது?"ன்னு டவிட்டர்ல கேட்டுட்டார். உடனே கமல் ஹாசன் "நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், பூணூல்“. அதனாலேயே அதை தவிர்த்தேன்"னு ஒரு கெக்கே பிக்கே பதிலை எடுத்து விட்டிருக்கார். "தமிழ் நாட்டு முதல் அமைச்சரா வரத் தயார்"னு முன்னாலயே வேற பேசிருக்கார். பகவானே!

பாருங்கோ, நீங்க பூணல் போட்டுக்கற ஜாதில பிறந்தாலும், அதைப் போட்டுக்காம இருக்கறது உங்க இஷ்டம்.  போட்டுக்கறவாளை நீங்க எப்படி சட்டை பண்ணலையோ, அதே மாதிரி உங்களையும் அவா சட்டை பண்ண மாட்டா. அவ்வளவுதான? இதுக்கு மேல ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கறதுக்கு இதுல என்ன இருக்கு? 

சரி, கஷ்டப்பட்டு கமல் ஹாசன் வழிக்கே வந்து அவரைப் புரிஞ்சுக்க பாக்கறேன். எதையோ கேட்டதுக்கு பூணலைப் பத்தி பேசினவர், அது அவரை "ரொம்ப பாதிச்சது"ன்னு சொல்லிருக்கார். தலையும் புரியலை, காலும் புரியலை. அதான் கமல் ஹாசன். என்ன சொல்ல வரார் இவர்? மத்தவா பூணல் போட்டுக்கறது இவரை பாதிக்கறதாமா? இவர் அப்பா சீனிவாச அய்யங்கார் அந்த நாள் காங்கிரஸ்காரர், சுதந்திர போராட்ட வீரர். ராஜாஜி, காமராஜுக்கு கூட நெருக்கமா இருந்தவர். இவர் அப்பாவும் பூணல் போட்டுண்டவர்தான். அது இவரை பாதிச்சதுன்னு சொல்றாரா? இல்லை, தான் பூணல் போட்டுக்கறது தன்னை பாதிக்கும்னு சொல்றாரா? சரி, தான் போட்டுக்கறது பாதிச்சா போட்டுக்க வேண்டாம். இவரும் இப்ப போட்டுக்கலை. யாராவது கத்தியைக் காட்டி 'போட்டுக்கோ'ன்னு மிரட்டினாளா? கேக்காத கேள்விக்கு வேண்டாத பதிலை புரியாத அர்த்தத்துல சொல்றாரே!

ஒரு மதத்துல, ஜாதில இருக்கறவா மனமுவந்து அனுஷ்டிக்கற சடங்குகள், சம்பிரதாயங்கள் சட்டத்தையோ மனித உரிமைகளையோ மீறினா மத்தவா அதை விமரிசிக்கலாம். இல்லைன்னா பேசாம இருக்கறதுதான் நாகரிகம். கமல் ஹாசனுக்கும் இது தெரிஞ்சு இருக்கும். இருந்தாலும், பிராமண பழக்க வழக்கங்களை கேலி பேசினா மத்த ஜாதிக்காராளோட ஆதரவு தன்னோட கட்சிக்கு அதிகமா கிடைக்கும்னு தப்புக் கணக்கு போட்டிருக்கார். அதாவது கருணாநிதி நினைச்ச மாதிரி. ஆனா கருணாநிதிக்கு பேச்சுல, எழுத்துல,  சாமர்த்தியத்துல இருந்த அசாத்திய வல்லமைதான் அவருக்கு மக்கள் ஆதரவைக் கொண்டு வந்தது - அவரோட பிராமண எதிர்ப்பு இல்லை. கருணாநிதி அளவுக்கு திறமைகள் இல்லாத ஸ்டாலினுக்கு இது புரிஞ்சிருக்கு, இந்தக் கால மக்கள் மனோபாவமும் தெரிஞ்சிருக்கு.  பாவம், கமலுக்கு புரியலை.

எல்லா மனுஷாளும் பேச்சுல கவனிக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. கமல் ஹாசன் மாதிரி அரசியல் தலைவர்னா அது கண்டிப்பா தெரியணும்.  அதாவது,  என்ன பேசணும்கறது மட்டுமில்லை, ஏன்ன பேசக் கூடாதுங்கறதும் முக்கியம். கமலுக்கு  ஒண்ணாவது தெரியுமாங்கறது சந்தேகம்தான். சினிமா, நடிப்பு வேற, மக்கள்ட்ட அரசியல் தலைவரா பேசறது வேறன்னு கமல் மாதிரி மேலயும் கீழையும் யார் நிரூபிச்சிருக்கா?

      எந்த  ஜாதி அரசியல்வாதின்னாலும்,  அவர் ஜாதிக்காரா அவரை முதல்ல இயற்கையான அனுசரணையோட பாக்க ஆரமிப்பா.  ஒரு அரசியல்வாதியும் அதைப் பயன்படுத்திண்டு அவா ஜாதிக்காராட்ட நல்லதனமா பேசணும், நடந்துக்கணும். மத்த மனுஷாளையும் சமமா அரவணைச்சு அவாளோட ஆதரவையும் சேர்த்துக்கணும். எதுவானாலும், எந்தத் தலைவரும் தன்னோட ஜாதிக்காராளை குட்டி, மட்டம் தட்டிப் பேசறதை நீங்க பாக்கவே முடியாது. கமல் ஹாசன் மட்டும்தான் இதுக்கு விதிவிலக்கு. கருணாநிதிகூட, தன்னோட மதத்தை  மட்டும்தான் இழிவு பண்ணினார்.  ஆனா கமல் ஹாசன் தன்னோட ஜாதியையும் கேலி பண்ணிக் குத்தலா பேசறார். எந்த அரசியல் தலைவருக்கு அவர் ஜாதிக்குள்ளயே அதிருப்தி பெர்சென்டேஜ் அதிகம்னு  பாத்தா, கமல் ஹாசன்தான் உச்சத்துல இருப்பார். மத்த தலைவர்கள்ளாம் கிட்ட நெருங்க முடியாது.

பிரதமர் நரேந்திர மோடிட்ட கமல் ஒண்ணு தெரிஞ்சுக்கலாம். கமலோட நன்மைக்குத்தான் இதையும் சொல்றேன். இந்தியாவுல பல மாநிலங்கள்ள பல மனுஷாளோட ஆதரவு மோடிக்கு உண்டு. அவர் பிராமணர் இல்லை. ஆனா நிறைய பிராமணர்களோட ஆதரவும் அவருக்கு கிடைச்சிருக்கு. அது மாதிரி, பிறப்புல பிராமணரான கமல் ஹாசனுக்கு எல்லா தரப்பினரோட ஆதரவும் கிடைக்கணும்னா, எந்த ஜாதியையும் அவர் வேணும்னே பழிக்கக் கூடாது.  அரசியல்ல இது பால பாடம். இது  பிறத்தியார் சொல்லித் தெரியற விஷயமும் இல்லை.

      சரி,  மோடி   கமலுக்கு  அரசியல்   எதிரி.  அதுனால  மோடி உதாரணத்தை விட்டுடலாம்.  கமலுக்கு எதிரி ஆக முடியாத ஒரு அரசியல் தலைவரை எடுத்துக்கலாம். அதாவது, மாஜி அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா. அவர் கறுப்பு இனத்தவர்லதான் சேர்த்தி. அவாள்ளாம் அமெரிக்க மக்கள் தொகைல நூத்துக்கு பன்னெண்டு பேர் இருக்கா.  அவா போக, மெஜாரிடியான வெள்ளைக்கார அமெரிக்கர்களோட (நூத்துக்கு எழுபத்திரண்டு பேர்) ஆதரவு இருந்தாத்தான் ஒபாமா ரண்டு தடவையும் ஜனாதிபதி தேர்தல்ல ஜெயிச்சிருக்க முடியும்.  அந்த ஊர் வெள்ளைக்காராளை, இல்லை கமல் ஸ்டைல்ல கறுப்பு இனத்தவரை, அவா மத சடங்குகளை, ஒபாமா மட்டம் தட்டிப் பேசியிருந்தா பலதரப்பட்ட மக்களோட ஆதரவு அவருக்கு கிடைச்சிருக்குமா?

       கடைசியா  ஒண்ணு சொல்லலாம்.  கமலுக்கு இன்னொரு விஷயம் பிடிபடணும்.  தத்துவம் சொல்றா மாதிரி பேசினா, நிறைய ஜனங்களுக்கு புரியாது. அதுவும் பேசறவருக்கே புரியாதுன்னா அது நிச்சயமா தத்துவமும் இல்லை.  தத்துப் பித்துவம்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018

11 comments:

  1. அம்புஜம் பாட்டிக்கு முன்னாலே கூட நின்னு இவராலே ஜெயிக்க முடியாது! அப்பவே முதல்வர் ஆசையும் வந்தாச்சு! பூணூலைப்பத்தி எழுத் யோக்கியதை இல்லாதப்போ அதைப் பத்தி எழுதறதை சட்டை பண்ணவேண்டாம் பாட்டி! வேஸ்ட் ஆஃப் டைம்!
    நரசய்யா

    ReplyDelete
  2. செமுத்தியா சாத்திப்புட்டேள்
    இவரு பதிலை வச்சுண்டு
    கேள்வி தயார் பண்ணி இருக்காரு
    மரை கழன்றவர்
    அதனால் தான்
    மறை இவரை கழட்டி விட்டது போலும்
    ..
    ஒரு வகையில் மல ஹாஸன்
    பூணூல் அணியாதது
    பூணூல் உறுத்தியதால் மட்டமன்றி
    அடடா. ஈனத்தனமான
    செய்கைகள் செய்யும் நான்
    எப்படி புனித பூணூலை அணிவது என்ற தயக்கம் இருந்து இருக்குமோ

    ReplyDelete
  3. Super and fitting reply to that idiotic actor

    ReplyDelete
  4. நல்ல நடிப்பை வாழ்க்கையில் கொண்டு வரக்கூடாது. முறையான திருமணத்தை அவமதித்து முறையற்ற வழிகளை கடைபிடிக்கும் ஒருவர் மறையான இந்து மத பழக்க வழக்கங்களை நக்கலடிப்பது பொழுதுபோக்கு. பிழைக்கும் வழிக்காக உளறல்களை நாம் ஒரு பொருட்டாகவே கருதக்கூடாது. தாய் போன்ற மதத்தை உதாசீனம் செய்தவன் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை

    ReplyDelete
  5. நீங்க என்னதான் பேசினாலும்,கமல், அவா ஒங்களை ஒத்துக்கப் போறதில்லே. நீங்க வந்தேறிதான்.ஆரியப்பதர்தான்.கைபர் கணவாய்தான். ஏன் வீணா அலட்டிக்கறேள்? வேற வழியப்(sorrry, வழியைப்)பாருங்கோ.

    ReplyDelete
  6. Sariya sonnel pongo!!!
    Ketta Kalam porakkudu, ketta Kalam porakkudu.
    Veenaga vambil matran!?

    ReplyDelete
  7. always learn to respect oneself (includes parents, class,creed etc)and never disrespect others'sentiments. Will have to pay a heavy price. he is already aligned himself with the unworthy (
    cause and persons)

    ReplyDelete
  8. Very candidlt expressed, thanks for sharing

    ReplyDelete
  9. ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு ஒவ்வொரு பிராமனருக்கும் 10 ஓட்டுகள் போட அதிகாரம் கொடுக்கப்பட்டால், அடுத்த நிமிஷமே எல்லா அரசியல்வாதிகளும் பூநூல் அணிந்த புகைபடத்தை தன் profile photoவாக ஆக்கிவிடுவார்கள்.

    ReplyDelete
  10. Well said Sri Veera Raghavan.(Ambujam patti)

    ReplyDelete
  11. I think Kamal Hassan's remarks are in bad taste.The comment on sacred thread was in bad taste. To wear it or not is a matter of personal choice. To give publicity to his private action shows that he is anxious to curry favour with groups whose avowed policy is to cut the sacred threads of one community to demonstrate their hatred.By his comment he proves his unsuitability to the office he wants to capture
    .

    ReplyDelete