Friday, 27 March 2015

Photo of a Bihar School Building


You won’t imagine a duller place than an examination centre for high school students, and it is not a newsworthy spot either.  But if it is in Bihar, India, it may break these rules.  The world discovered what an action-packed location a school building was on 19th March 2015, in the state’s Vaishali District, being a venue for the ongoing class 10 matriculation examinations.  The building’s photo of that date splashed across newspapers spoke vividly, more than the accompanying report.

Did you see that picture all over print media, national and international, and in the internet – a rustic unplastered brick wall of a four-storey building, with scores of men perched on its external sun-shades and slab-projections at different levels, many of them looking in through windows?  They were handing in helpful cheat-sheets to students assembled inside the school building to write exams – their friends or relatives.  Some of the men were in the act of climbing their way up the wall to deliver.  Ropes tied to many windows on that wall hung down to the ground to help climbers. The sight was amusing, and saddening too.

Boys and girls have a huge stake in the marks they score in school final examination, because for some who will not study further that will be their educational identity for ever and for those who desire admission to colleges for higher studies these marks give them a push – and are valued more by those who won’t be questioned to check if their mark sheets match their wit. Now, if some of them writing those exams copy answers from cheat sheets and could get away with that, why would other students not do it too? After all no student likes to score less marks than any other – surely not less than those who sit next, cheat and smile.

So don’t just blame all the students who copied.  Blame the examination supervisors who turned a blind eye.  But maybe they were forced to look the other way by a long entrenched copy culture in those areas, and they prefer to stay healthy and painless than intervene. It is also like chaotic traffic on a busy road intersection.  The fault of the scene should lie on the traffic police, not on many helpless road users.  If some drivers flout traffic regulations but are not booked, many others would do the same thing wanting to get out and keep going.

I think the Bihar photo shows in a way a malady afflicting many parts of India, more in that state.  That is, though the country has plenty of peaceful, industrious and intelligent citizens its rulers and policy makers are self-centered, greedy and visionless – to the point of even derailing the people for private good.  If India is shining in patches it is in spite of its governments and not because of them.   

Mass copying in exams is the least of dare devil acts or criminal deeds anyone may do, especially at high school age.  It needs no fine technology or colossal effort from an administration to stop it.  It just requires a serious intent not to let the malpractice go on.   Then why are remedial measures not seen and why is Bihar making big news of this kind?  If you think of a plausible explanation like this many might agree with you:  If an administration adopts unclean and unworthy practices that largely go unchecked, then the prospering group at the helm might allow some privileges to the poor bystanders and onlookers.  These privileges are like gifts given by the left hand.  They could cool the common people who may otherwise be angry with the administration for what it does, and could also blunt people’s intent, if any, to protest against many things in the public sphere.  And the end result could be unspoken mutual forgiving.  But then, with more media glare falling on the free and merry copying, the background rules of live and let live could see changes in the future.

Tens of thousands of Indians – the peaceful, industrious and intelligent ones – who had a chance to grow wings have gone out to other countries where they are allowed to fly high and display their talent and prowess.  Their less fortunate brothers and sisters in some parts of India don’t even have a chance to grow wings, leave alone flap and look to fly.  That is something you cannot capture on camera.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

Sunday, 15 March 2015

அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : மஹானுபாவர் மன்மோஹன்


  நீங்க நல்ல மனசுக்காராள்னா இப்படி நினைக்கலாம்: 'மன்மோஹன் மாமாவோட கதி துரோஹிக்குக் கூட வரவேண்டாம்.’ 

நிலக்கரி ஊழல் கேஸ்ல மன்மோஹன் சிங்குக்கு சி.பி.ஐ கோர்ட்டு சம்மன் அனுப்பிருக்கு.  இது கோர்ட் நடவடிக்கையோட ஆரம்பக் கட்டம்தான். கேஸ் நடந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும் போயி கடைசி ஜட்ஜ்மெண்ட் எப்படி வரும்னு இன்னிக்கு யாருக்குத் தெரியும்? நடுவுலயே கூட கோர்ட் அவரை விடுவிக்கலாம். இப்ப வெறும் சம்மன் வந்ததுக்காக நாம ஆ-ஊ-ங்கப்டாது. கேள்விப் பட்டிருப்பேளே - கோர்டுன்னா குற்றத்துக்கு ப்ரூஃப் கிடைக்கற வரை அக்க்யூஸ்டும் நிரபராதிதான்.  

இந்த சம்மன் வேற ஒரு சமாசாரத்துலயும் லைட் அடிக்கறதுன்னு தோண்றது. அதான் நான் சொல்ல வந்தது. 

மன்மோஹன் சிங் - அவரைப் பொறுத்தவரை நல்லவர்தான். எகனாமிக்ஸ் பத்தி ஆக்ஸ்ஃபோர்டுல படிச்சு டாக்டர் பட்டம் வாங்கினவர்தான். ரிசர்வ் பாங்க் கவர்னர், மத்திய நிதி அமைச்சர்னு இருந்தும் பேர் எடுத்தவர்தான். மந்திரி, பிரதம மந்திரின்னு இருந்தப்போ அரசாங்க விஷயமா பாக்க வரவாகிட்ட கன்னா பின்னான்னு பேசினவர் இல்லை. அதாவது, “எனக்குக் கமிஷனக் குடு. கட்சிக்கு டொனேஷனக் கொடு. இல்லாட்டி உனக்கு காண்ட்ராக்ட் கிடையாது. குடுத்தியானா உன் கம்பெனி எவ்வளவு பாடாவதின்னாலும் சரி, உன் பொருளோட தரம் தகர டப்பான்னாலும் சரி, உனக்கு அரசாங்க சப்ளை காண்ராக்ட் நான் தரேன்”ங்கறா மாதிரில்லாம் கண்டிப்பா பேசிருக்க மாட்டார். அவரைப் பொறுத்த வரை நேர்மையானவர்தான்.  இதுல பி.ஜே.பி காராளுக்குக் கூட சந்தேகம் இருக்காதுங்கறேன்.

சரி. மன்மோஹன் சிங்குக்கு இன்னும் ஷொட்டு கொடுக்கறவா கிட்ட ஒண்ணு சொல்றேன். ”அவர் மாதிரி நல்ல மனுஷருக்கு, ’உன் பேர்ல பெத்த பெரிசா ஊழல் கேஸ் வந்திருக்கு.  கோர்ட்டுக்கு வா’ன்னு கிரிமினல் கோர்ட் சம்மன் அனுப்பினா, இதென்னடா சோதனை? இந்த மாதிரி சோதிச்சா, படிச்சவா நல்லவா நேர்மையானவா யார் அப்பறம் அரசியலுக்கு வருவா?”ன்னு உங்களுக்குத் தோண்றதா?  அப்படீன்னா வாங்கோ, இதைக் கொஞ்சம் பொறுமையா இன்னொரு ஆங்கிள்ளயும் பாக்கலாம்.

அரசியல்ல உழண்டு உருள்றாளே, அவா ஒரு பாலபாடத்தைக் கத்துண்டிருப்பா.  அதாவது, ’மத்தவா தன்னை உபயோகிச்சுக்கறத விட நாம மத்தவாள நன்னா உபயோகிச்சுக்கணும்’. அரசியல்வாதிகள்ள தப்புத் தண்டா பண்றவா இப்படிக்கூட நினைப்பா: ‘நாம தப்புப் தண்டா பண்ணும்போது யாராவது நல்லவா கிடைச்சா அவாளத் தொட்டுண்டு  – முடிஞ்சா அவாளயே தலைவரா ஆக்கிவச்சுண்டு - அவா முதுகுக்குப் பின்னாடி நம்ம ஆதாயத்தைப் பாத்திண்டிருந்தோம்னா, பாதிப்பேர் நம்மள சந்தேகிக்க மாட்டா.  அவரைத் தொட்டுண்டு நாம நிக்கறதுக்கு அந்த அப்பாவி மனுஷர் சம்மதிக்கணும். அந்த அளவுக்கு ரொம்ப நல்லவர் ஒர்த்தர் மாட்டினா நமக்கு லக்கி ப்ரைஸ்தான்’. ஆனா, மாட்டிக்கப்போறவர் இதை சரியா தெரிஞ்சுக்காம அரசியல் கேம்ல சிக்கினார்னா, அவர் வெறுமனே இன்னொருத்தர் முதுகத் தட்டிக் கொடுத்து பாராட்டலாமே தவிர, மத்தவா அவர் தலைலதான் தட்டிண்டிருப்பா – அது அவருக்கு அப்பத் தெரியாது. பின்னால தெரியலாமோ என்னவோ. 

அரசியல்ல மன்மோஹன் சிங்கைச் சுத்தி நின்னவா எத்தனையோ பேர்னு உங்களூக்குத் தெரியும். ஆனா மன்மோஹன் சிங்குக்கு நீங்க பேஷாக் குடுக்கற நல்லவர்-நேர்மையாளர் மெடல் இருக்கே, அதை அவரைச் சுத்தி நெருக்கமா நின்னவாள்ள எத்தனை பேருக்குக் குடுப்பேள்? அந்த மத்தவா யாராவது அதுக்குத் தேறுவாளா?  அனேகமா யாரும் பெருசா கிடைக்க மாட்டா.  அப்ப அந்த மாதிரி மனூஷாள்ட இவர் போய் ஏன் ஒட்டிக்கணும்?  நல்லவர், நேர்மையாளர்ங்கற விஷயம் வேற. சூழ்நிலை கெட்டிக்காரத்தனம் வேற.  பனை மரத்தடில பால் குடிக்கப்டாதுன்னு ஏன் பழமொழி வச்சிருக்கா? மன்மோஹன் சிங் மாதிரி கெட்டிக்கார அசடுகளும் இருக்கான்னுதான?

மன்மோஹன் சிங் கிட்ட நான் இதைச் சொல்லுவேன்; ”பாருங்கோ, உங்கள முன்னால வச்சுண்டு உங்க பின்னால தப்புக் காரியம் பண்ணினவாளுக்கு இருந்த சூழ்நிலை கெட்டிக்காரத்தனம் உங்களுக்கு இல்லாமப் போயிடுத்து.  நீங்க உங்களுக்குன்னு தனியா லாபம் சம்பாதிக்கலன்னு ஆனாலும், பிரதம மந்திரியா இருக்கறபோது பொதுவுல எங்க, எவ்வளவு, யாரால நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம்னு நீங்க கண்கொத்திப் பாம்பா பாத்தேளா?. கட் அண்ட் ரைட்டா டாக்குமெண்டு, ப்ரூஃபு-ன்னு இருக்கற சட்டத்தையும் தாண்டி வர்ர கேள்வி இது.  ”நான் முழிச்சுப் பாத்துண்டுதான் இருந்தேன், அதையும் மீறி சில கில்லாடிப் பேர்வழிகள் என் கண்ல மண்ணைத் தூவி அதையும் இதையும் பண்ணிட்டா”ன்னு நீங்க சொன்னா அது வேற விஷயம் - அது எப்படி ஆச்சுன்னும் யோசிக்கணும். ஆனா நீங்க ஒண்ணுத்தையும் பாக்காம கண்ணை மூடிண்டிருந்தேள்னா அது வேற விஷயம். 

ரிசர்வ் பாங்க் கவர்னர், மத்திய நிதியமைச்சர்னு மட்டும் நீங்க நின்னிருந்தேள்னா, அதுவரைக்கும் உங்களூக்குக் கெடச்ச பேரே பெரிசு.  வெறும் அமைச்சரா மட்டும் இருக்கும்போது உங்களை யூஸ் பண்ணியோ முன்னால வச்சோ மத்தவா யாரும் தப்புப் பண்றதுக்கும் பெரிசா எடம் இல்லை. அப்டி யாராவது பண்ணினாலும் உங்களால தாக்குப் பிடிக்க முடிலயா - “எனக்கு முதுகு வலி, நெஞ்சு வலி.  இனிமே ரெஸ்ட்லதான் இருந்தாகணும்னு டாக்டர் கண்டிப்பா சொல்லிட்டார்” ங்கறா மாதிரி நாசூக்கான ஸ்டேட்மெண்டோட அமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு நீங்க பாட்டுக்குப் போயிண்டிருக்கலாம். அது வரைக்கும் எடுத்த பேரும் மிஞ்சும். ஆனா பிரதம மந்திரியா ஆனதுக்கப்பறம் இந்த மாதிரி டஸ்கு புஸ்கு காரணம் சொல்லி நீங்க ரிசைன் பண்ணிருக்க முடியாது. அப்படிப் பண்ணினா உங்க கட்சி ஆயிரம் பேருக்குப் பதில் சொல்லணும், நீங்களும் ‘கட்சியை இந்த இக்கட்டுக்குக் கொண்டு வந்துட்டமே’ன்னு தாங்கமுடியாத விசனத்துக்குப் போவேள் – நீங்கதான் ரொம்ப நல்லவர் ஆச்சே! அதுனால, பிரதம மந்திரி பதவிங்கறது உங்க மென்னியைப் பிடிச்சா பிடிச்சதுதான். ஒரு வேளை மகுடத்துக்கு ஆசைப்பட்டு மென்னியைக் குடுத்துட்டேளோ?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

Thursday, 12 March 2015

Lawyer, Heal Thyself !

A lawyers association in Chennai called for a court boycott on 11th March 2015.  Reason: The Bar Council of Tamil Nadu recognized another recently-formed lawyers association.  Court work in the city widely suffered on that day. Lawyers in other cities too boycott courts for some such reasons.  A layman may ask, "If I feel someone wronged me, lawyers advise me to go to court and try a legal remedy. When I do that I have also to pay their fees.  When lawyers or their associations feel wronged why don't they go to court, especially when they will also serve themselves free?"

In the the early years of the Madras High Court, law practice in the High Court for local legal practitioners called 'vakils' was permitted only on its 'appellate side' - that is, only in those cases which were appeals from civil cases decided by lower courts which functioned outside Madras. The High Court did not allow vakils to appear on its prestigious 'original side' - that is, in civil cases that could be filed afresh in the High Court itself by people (called plaintiffs) wanting remedies against their opponents (called defendants). At that time only barristers, who studied law in England and were mostly Englishmen, could appear on the original side of the High Court and, as vakils did, they could also appear on its appellate side. Vakils were then asking to be allowed to practice on the original side also, and finally succeeded in their demand in 1876.  Did they boycott courts to make the High Court right a wrong?  No.  The website of the lawyers association which gave a boycott call for 11th March 2015 proudly describes, in these words, how poor vakils of those days got that right: "With legal scholarship honed through university law education, the Vakils won their first victory when they wrested through a Full Bench decision in 1876 the right to practice under both jurisdictions of the Madras Courts" 

Leave alone the traditions of the bar in any city.  Think of persons who filed court cases, either original ones or appeals.  Spending time in court campuses or worrying about cases in their minute details can be normal for lawyers and judges - surely not for litigants who want an early judgement either way and get on with their lives.  Litigants who pay court charges and lawyers’ fees want their cases to be decided fast, just as hospitalized patients wish to be treated fast and discharged soon rather than be lying on the hospital bed even for an hour more because doctors have struck work.

Think of lawyers too whose cases are scheduled on a day for which a boycott call is given but who wish to be on their work.  Among them, lawyers who filed original cases or appeals for their clients would and should be keener to do their job in court that day and their voices should be heard on any proposal for a boycott call for that day.  So give an option to lawyers for plaintiffs and appellants, i.e., lawyers for parties who filed cases or appeals, whose cases are scheduled for a proposed boycott day, to email their yes vote or no vote to the lawyers association on a strike proposal – these emails should be automatically copied to a neutral agency or website, which all stakeholders may verify.  Also, since a call for court boycott seriously affects litigants - who are not consulted on the boycott – the voting lawyers’ approval may be taken as given only with a yes vote by a two-thirds majority.  A major benefit in this method is that lawyers not having court work on a day do not stall progress on court work of other lawyers, and clients do not suffer needless adjournments or adverse orders by their lawyers’ forced absence in courts.

And finally, our Constitution rules that the law laid down by the Supreme Court is binding and that all authorities shall help implement it.  The Supreme Court has also prescribed tight parameters on the validity of lawyers’ boycott of courts - for very exceptional circumstances and for a very limited time.  Lawyers should feel this law in their bones – who else needs to?


* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

Saturday, 7 March 2015

ராகுல்ஜி! கொஞ்சம் யோசிங்க பாஸ்!


உங்கள் தொழில் சம்பந்தமாக ஒரு பெரிய சிக்கலில் நீங்கள் மாட்டிக்கொண்டுவிட்டீர்கள். உங்களைத் தள்ளிவிட்டு உங்கள் போட்டியாளர்கள் முன்னுக்கு வந்துவிட்டார்கள்.  உங்கள் தோல்விக்கான காரணங்களைப் புரிந்துகொண்டு தொழில் எதிரிகளை நீங்கள் வெல்ல வேண்டும். அந்தப் போட்டிக்கான வியூகங்களையும் வழிமுறைகளையும் பற்றிச் சிந்திக்கும் நேரத்தில் உங்கள் வழக்கமான வியாபாரத்தையும் நடத்திக் கொண்டிருக்க வேண்டும்.  உங்கள் வியாபார நிறுவனத்திற்குத் தற்போது உங்கள் அம்மா தலைவராக இருந்து நடத்தினாலும் விரைவில் அவர் விலகி நீங்கள்தான் தலைவராகப் போகிறீர்களோ என்ற நிலைமையும் இருக்கிறது.

உங்களுக்கு இன்னொரு பின்னணி உண்டு. அதாவது, கடையிலிருந்து ரிடையர் ஆகப்போகிற விசுவாச மேனேஜர் மூலமாக உங்கள் அம்மாவின் சம்மதத்துடன் ஒரு முறை முக்கிய முடிவு ஒன்று படாடோபமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு உங்கள் சம்மதமும் உண்டு என்று சந்தை வியாபாரிகள் அனைவருக்கும் தெரிந்ததுதான். அது அமலாக இருப்பதற்கு முன்பு நீங்கள் வெளிப்பட்டு அந்த முடிவு தொடர்பான காகிதங்களைப் பலர் முன்னிலையில் கிழித்துச் சூரை விட்டு ’நான்சென்ஸ்! இது நிறைவேறக் கூடாது!’ என்று பிரகடனம் செய்தீர்கள், அந்தச் செய்கையை உங்கள் நிறுவனத்தில் அனைவரும் சிரித்தபடி எற்றுக்கொள்ளும் அளவிற்கு உங்கள்மீது அவர்களுக்கு மரியாதையும் பயமும் உண்டு.

இவ்வளவு செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட உங்களுக்கு, நிறுவனத்தின் சமீபகாலத் தோல்விகள் பற்றியும் அது மீண்டு எழுவதற்கான காரண காரியங்கள் பற்றியுமான யோசனைகள் தானாக சுவாசத்துடன் சேர்ந்து வரவேண்டும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள்.  நீங்கள் மட்டும் அப்படி நினைக்க வேண்டாம்.  “நான் மூன்று வாரம் லீவு போட்டுத்தான் யோசிப்பேனாக்கும்!” என்று நீங்கள் அழிச்சாட்டியம் செய்தால் அப்போது கூட உங்கள் நிறுவனத்தில் அனைவரும் உங்களுக்கு ஏன் லீவு வேண்டும் என்று விளக்கி சப்பைக்கட்டு நியாயங்கள் சொல்வார்கள்.  ஏனென்றால் நீங்கள்தான் ராகுல் காந்தி!

கட்சி வேலைகளிலிருந்து இப்போது மூன்று வார லீவில் சென்றிருக்கும் ராகுல் காந்தி சொல்லவருவதைப் புரிந்துகொள்ள நாம் முயற்சிப்போம்.  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இது பற்றி அறிவிக்கையில் “சமீப காலங்களிலும் முன்பாகவும் காங்கிரஸுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி ராகுல் காந்தி ஆழ்ந்து சிந்திக்க விரும்புகிறார்” என்று சொன்னார். இதுதான் காரணமென்றால் கட்சியில் இந்நாள் வரை அதுபற்றி யாருமே சிந்தித்துச் சரியான பதில்களைப் பெறவில்லை என்று ராகுல் காந்தி தெரிவிக்கிறாரா?   அப்படியானால் நீண்ட காலமாக அடிப்படை நிகழ்வுகளைப் பற்றியே கட்சியில் இதுவரை எவரும் யோசித்துச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றாகி, கட்சித் தலைமைப் பொறுப்பிற்கே அவர்களில் யாரும் லாயக்கில்லை என்றும் ஆகிறதே?  ‘இல்லை, இல்லை! கட்சியில் மற்றவர்களுக்கு இதெல்லாம் சரியாகப் புரிந்தாலும் எனக்கென்னவோ ஆற அமரத் தனியாக வாரக்கணக்கில் யோசித்துப் பார்த்தால்தான் புரிபடும்’ என்கிறரா ராகுல் காந்தி? அப்படியானால் தனது பரிதாபமான புரிந்துகொள்ளும் சக்தி பற்றி அவரே ஒப்புக்கொண்டதாக ஆகுமே?

ஜனநாயகத்தில் மக்கள் ஒரு கட்சியை ஒதுக்கினாலோ ஒரு தலைவரை எற்க மறுத்தாலோ அதற்கு நிவாரணமும் மக்களிடம்தான் கிடைக்கும்.  மக்களோடு கலந்து, அவர்கள் கூறுவதைக் கேட்டு, அவர்களை சரியாகப் படித்து, சிலதைக் கற்று, தன்னை அளித்து மேலே வருவதுதான் வழி.  ஒருவரை தலைமைக் குணமுள்ளவராக மக்கள் கணிக்கவில்லை என்றால் அவர் என்ன பேசினாலும் என்ன அறிக்கை விட்டாலும் அவற்றை மக்கள் சட்டை செய்யமாட்டார்கள்.  தாய்ப் பாசத்தின் கட்டாயங்களும் மக்களுக்கு இருக்காது. அரசியலில் ரொம்ப யோசிக்காமலே புரியவேண்டிய விஷயங்கள் இவை.

இனிமேல் ‘ரூம் போட்டு’ யோசிக்கிற ஜோக்குக்கு அடுத்ததாக ‘லீவு போட்டு’ யோசிக்கிற ஜோக்கை உருவாக்கிவிட்டார் ராகுல் காந்தி. ரூமும் போடாமல் லீவும் போடாமல் யோசித்தால் ஒன்று நமக்குப் புரியலாம்.  அதாவது இவை இரண்டும் வேறு வேறு ஜோக்குகள் இல்லை.  அதாங்க இது!


* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

ஜெயந்தி நடராஜனும் அவர் தாத்தாவும் !

முந்நாள் மத்திய சுற்றுத்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் சோனியா காந்திக்கு 2014 நவம்பரில் எழுதிய கடிதம் இப்போது வெளிவந்திருக்கிறது. 

‘நீங்களும் ராகுல் காந்தியும் செய்த தவறுகளும் முறைகேடுகளும் இவை இவை. எவ்வாறு செய்யலாம் நீங்கள்?’ என்ற நியாயத்தின் கேள்விகள் அதில் இல்லை. ‘கட்சிக்கு நான் விசுவாசமாக இருந்தேன்.  நீங்கள் இருவரும் என்ன சொன்னாலும் – நீங்கள் சொன்னதாக யார் சொன்னாலும் – அவற்றை உத்திரவுகளாக நினைத்து எனது அமைச்சர் பணிகளைச் செய்தேன். அப்போது சக மந்திரிகள் மாற்றுக் கருத்துடன் எனக்கு நெருக்கடி கொடுத்தாலும் தாங்கிக் கொண்டேன்.  பிறகு ‘பதவி விலகு’ என்று நீங்கள் கூறியதாக பிரதமர் கேட்டுக்கொண்ட உடன் அப்படியே செய்தேன்.  என்னை நீக்கியதற்கு என்ன காரணம் என்று கேட்டால் தெரிவிக்காமல் இருக்கிறீர்களே. ‘கூப்பிட்டுச் சொல்கிறேன்’ என்று சொன்ன ராகுல் காந்தியும் இன்னும் கூப்பிடாமல் இருக்கிறாறே.  எத்தனை நாள் காத்திருப்பேன் இதை அறிந்துகொள்ள? இதனால் என் குடும்பப் பரம்பரையின் நற்பெயரும் களங்கம் அடைகிறதே. ஐயகோ!’ என்கிற கௌரதையற்ற அழுகுரலே அதில் ஒலிக்கிறது.

ராகுல் காந்தியின் வார்த்தைகளை உத்திரவுகளாக ஏற்று ஜெயந்தி நடராஜன் தன் அமைச்சர் பணியில் அவ்வாறே நடவடிக்கை எடுத்திருந்தால் – அல்லது அவ்வாறே எடுக்காமல் இருந்திருந்தால் – தவறு அமைச்சர் பெயரிலும் உண்டு. தேசிய பாதுகாப்பு கௌன்ஸிலின் தலைவர் பதவி, பிரதமர் பதவியை விட உயர்ந்ததோ அதற்கு நிகரானதோ அல்ல. அப்பதவியில் அமர்ந்து சோனியா காந்தி அமைச்சருக்கு பரிந்துரைத்ததையும் ஜெயந்தி நடராஜன் அவற்றை நிறைவேற்றியதையும் கடிதத்தில் சுட்டிக் காட்டியிருப்பது ஒப்புதல் வாக்குமூலம்தான். இந்தச் செயல்கள் முந்நாள் அமைச்சருக்கு பழியைக் கொண்டுவருமே தவிர பாராட்டை அல்ல. மூவரும் அரசியல் சட்டத்தை அலட்சியம் செய்து எழுதப்படாத – பகிரங்கமாக சொல்லவும் கூடாத – ஒரு சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடந்திருக்கிறார்கள் என்பது அம்பலம் ஆகியிருக்கிறது.

அன்றைய குஜராத் முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடியைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதை இவர் மனம் ஏற்காவிட்டாலும், கட்சியின் வெகு உயர்மட்டத்தின் உத்திரவு என்று கீழ் மட்டத்தில் ஒருவர் சொல்ல ஜெயந்தி நடராஜன் அந்தச் செயலையும் சொன்னபடி செய்தாராம்.  தற்போது இதை வெளிப்படுத்தும் போதும் ‘சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய நீங்கள் இருவரும் (கட்சியின் வெகு உயர் மட்டத்தில் வேறு யார் இருக்க முடியும்?) அநியாயமாக இப்படி என்னை நிர்பந்தித்தீர்களே’ என்று அந்த இருவர் மீதும் குறை சொல்ல வரவில்லை. ‘பாருங்கள். தவறு என்று எனக்குத் தெரிந்தாலும் உங்களின் உத்திரவு என்று இன்னொருவர் சொன்ன மாத்திரத்திலேயே செய்து விட்டேன்.  இருந்தும் என்னைப் பதவி நீக்கம் செய்துவிட்டீர்களே.  சரி போகட்டும். நீக்கியதற்கான காரணம் சொல்லி என்னை சாந்தப்படுத்தவில்லையே.  எனது பரம்பரை குடும்ப கௌரவத்தை எண்ணிப் பாருங்கள். ஊஊஊ …..’ என்றுதானே இவர் கடிதம் அர்த்தம் ஆகிறது?

ஜெயந்தி நடராஜனின் தாத்தா பக்தவத்சலம் தமிழ் நாட்டின் நேர்மையான முதல் மந்திரியாக இருந்தார். பேத்தியின் நிலையில் அவர் இருந்திருந்தால் அமைச்சராக செயல்படும்போது அமைச்சரவைக்கு வெளியில் உள்ளவர்களின் கட்டளைகளை அப்படியே ஏற்று அரசாங்க வேலை பார்த்திருக்க மாட்டார்.  அப்போது அவருக்குச் சேர்ந்த நற்பெயருக்கு இப்போது காங்கிரஸ் கட்சி அவர் பேத்தியை நடத்திய விதத்தால் எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடாது. ஆனால் கட்சித் தலைமையின் எல்லா உத்திரவுகளையும் ஏற்று அவற்றை அரசு அலுவல்களில் நிறைவேற்றியதால் பொது ஊழியர் என்ற முறையில் பேத்தி தனக்குத் தானே களங்கம் எற்படுத்திக் கொள்ளலாம். ‘அவரின் பேத்தியா இவர்?’ என்று ஜெயந்தி நடராஜனைப் பற்றித்தான் விவரம் அறிந்தவர்கள் சந்தேகமாகக் கேட்பார்களே தவிர ‘இவரின் தாத்தாவா அவர்?’ என்று கேட்டு பக்தவத்சலத்தை யாரும் குறைத்து மதிக்க மாட்டார்கள்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

Friday, 6 March 2015

வருவதெல்லாம் வாங்கிக்கோ! (கேஜ்ரிவால் சுவாமிகள் அருளிய போதனை)

[5.2.2015 தேதியன்று - அதாவது சமீபத்திய டெல்லி சட்டசபைத் தேர்தல்கள் நடப்பதற்கு 2 நாட்கள் முன்பாக - எழுதப்பட்டது]


டெல்லி சட்டசபைத் தேர்தலில் ம் த்மி கட்சி மெஜாரிடி பலத்தில் ஜெயிக்க ரவிந்த் கேஜ்ரிவால் சைப்பட்டது வர் ஜனநாயக உரிமை. முடிவு எப்படி அமைந்தாலும் தேர்தல் பிரசாரத்தின் போது ‘எதிர்க் கட்சிகள் லஞ்சப்பணம் கொடுத்தால் தாராளமாகப் பெற்றுக்கொண்டு உங்கள் பொன்னான  வாக்குகளை  எங்கள்  கட்சி  வேட்பாளர்களுக்கே ளியுங்கள்’ என்று மக்களிடம் வர் பேசியது க்கிரமம்.  நமது பெருவாரியான ஜனங்கள் சாதாரணப்பட்டவர்கள். பணத்தேவை திகம் உள்ளவர்கள்.   வர்களில் நிறையப்பேர் நல்லவர்களாக இருக்க விரும்புபவர்கள்.  காசு வாங்கிக்கொண்டு ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பதில் குற்ற உணர்ச்சி கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

     அரசியல் தலைவர் ஒருவர் – ‘ஊழல் ஒழிக’ என்று குரல் எழுப்பி தர்ணா செய்கிறவர் – ‘ஓட்டுக்குப் பணம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று வாக்காளர்களிடம் சிபாரிசு செய்தால் தவறு செய்ய வரும் மக்களின் குற்ற உணர்ச்சியையும் துடைத்து எடுக்கிறார் என்றல்லவா கிறது? குறைந்த வருமானம் உள்ள மக்கள் ஓட்டுக்கு என்று கொடுக்கப்பட்ட பணத்தை வாங்கினால் தைச் செலவழிப்பார்கள் – எரித்துப் பொசுக்க மாட்டார்கள். பிறகு எந்தத் தேர்தலிலும் வேட்பாளர்களிடமிருந்து பணம் தானாக வராவிட்டாலும் தாங்களாகவே எதிர்பார்ப்பார்கள். இது வழக்கம் கிப்போய் கெட்ட பணத்தை மற்ற திசைகளிலும் தேடுவார்கள். கேஜ்ரிவாலின் உருக்கமான வேண்டுகோள் ஏற்கப்பட்டு சிறிதளவு பலன் கொடுத்திருந்தாலும் டெல்லியைப் பொறுத்தவரை வர்தான் வாக்காளர்களைக் கெடுத்ததில் முதல்வராக இருப்பார். 

      'தவறு செய்யும் கட்சிகளிடம் பணம் வாங்குங்கள் - அதுவும் அவர்களாகக் கொடுத்தால். பின் வர்களுக்கு நாமத்தைப் போட்டுவிட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டைப் போடுங்கள் என்றுதானே சொன்னேன்?‘ என்று கேஜ்ரிவால் கேட்டால் து பொய் நியாயம். முதலாவது ‘வர்களாகக் கொடுத்தால்’ என்று கண்டிஷன் போட்டுச் சொல்வது உண்மையில் பொடி போட்டுப் பேசுவதுதான். தில் சாரமில்லை.  வர் பேச்சின் மீது சட்ட நடவடிக்கைகள் பின்னர் வந்தால் வரைக் காத்துக் கொள்ள ந்தக் கண்டிஷன் ஓர் உபாயமாக இருக்கலாம். வ்வளவுதான். 

கேஜ்ரிவாலின் கட்சி பிறப்பதற்கு முன்பாகவே பல பகுதிகளில் மக்கள் ஓட்டுக்கு என்று விநியோகித்த பணத்தை வாங்கி இருக்கிறார்கள். னாலும் ஓர் ரசியல் தலைவர் ’யார்  ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும் வாங்காதீர்கள்’ என்றுதான் பொதுமக்களிடம் பேசவேண்டுமே  தவிர  ‘வர்களிடம் வாங்குங்கள்.  எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று ல்ல.  வாக்காளர்கள் கெடுவது இருக்கட்டும்.  பாகிஸ்தான் தனது மண்ணில் தீவிரவாதிகளை உருவாக்கிவிட்டு வர்கள் இந்தியாவில் மட்டும்தான் தங்களின் ஏவலின்படி நாசவேலைகளைக் காட்டுவார்கள் என்று நினைத்தது போல் இருக்கிறது இவர் பேச்சு.   வ்வாறு வளர்க்கப்பட்டவர்களும் வர்களின் தைரியத்தில் எழுந்தவர்களும் பாகிஸ்தானுக்கு எதிராகவே திரும்பி ந்நாட்டிலேயே டக்கமுடியாமல் திவிரவாதம் புரிகிறார்கள்.  தே ரீதியில் – தாவது பஸ்மாசுரன் கதை போல - டெல்லி மக்களும் ம் த்மி கட்சி வேட்பாளர்களிடமே வரும் காலத்தில் பணம் எதிர்பார்க்கலாம் என்றும் கேஜ்ரிவால் எண்ணிப் பார்க்கவேண்டும். 

தேர்தல் ணையத்தின் உத்திரவும் தன் சட்டத்தன்மையும் ஒரு புறம் இருக்கட்டும். ஊழலுக்கு எதிராகப் போராட வரும் வர் மக்களைப் பாவம் செய்யத் தூண்டக் கூடாது.  தானும் செய்யக் கூடாது.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

Wednesday, 4 March 2015

அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : முப்தி! உங்க நிதானம் ஜப்தி!

      
இந்த முப்தி முகமது சயீதை நெனைச்சா அழறதா சிரிக்கறதா சொல்லுங்கோ.  ஜம்மு-காஷ்மீருக்குத் திரும்பவும் முதல் மந்திரியா வந்திருக்கமே, நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு வேலைய ஆரம்பிப்போம்னு தோணினதோ? ஊஹூம். நாட்டுல நெறையப் பேர் கதி கலங்கறா மாதிரி ஒரு வேட்டப் போடறார்.

என்ன சொன்னார் தெரியுமொல்யோ? ஜம்மு-காஷ்மீர்ல தேர்தல் அமைதியா நடந்து முடிஞ்சதுக்குக் காரணம் அங்க இருக்கற ஹுரியத்-காராளும் கத்தி-துப்பாக்கி-குண்டடோட அலையற தீவிரவாதிகளும்தானாம்.  அதாவது அவாள்ளாம் பெரிய மனசு பண்ணி கையக் கட்டிண்டு தேமேன்னு இருந்தாளாம், அதான் காரணமாம். போதாக்குறைக்கு பாகிஸ்தானுக்கும் நமஸ்காரத்தப் பண்ணி ”ஹி ஹி, ஒங்க ஆசீர்வாதத்துல எங்க ஸ்டேட்டுக்குள்ள கலவரம் இல்லாம தேர்தல் முடிஞ்சது. ரொம்ப தேங்ஸ் பாஸ்!”ங்கறா மாதிரிப் பேசி வழிஞ்சிருக்கார்.  பகவானே பகவானே!

அவா அவா விஷயத்துல அவா அவா சமத்தா சூட்டிக்கா இருக்க வேண்டியதுதான்.  அரசியல்னா ஜாஸ்தியாவே கெட்டிக்காரத்தனம் வேணும்தான். ஒரு வேளை இப்பிடி நெனைச்சுத்தான் பாவம் முப்தி பேசிட்டாரோ? தோண்றதச் சொல்றேன். 

ஏற்கனவே முப்தி டெல்லில மத்திய உள்துறை அமைச்சரா இருந்தப்போ இவர் பொண் ஒருத்திய தீவிரவாதிகள் கடத்தி வச்சுண்டு “எங்க கூட்டாளிகள் அஞ்சு பேர அரசாங்கம் பிடிச்சு ஜெயில்ல வச்சிண்டிருக்கே, அவாள வெளில விட்டாத்தான் நாங்க இவர் பொண்ணை விடுவிப்போம்”னு அடம் பண்ணினா.  உடனே முப்தியோட அரசாங்கம் சரின்னு சொல்லி ரண்டு தரப்புக்கும் விடுதலை கிடைக்கறா மாதிரி ஏற்பாடு பண்ணிடுத்து.   இது நடந்தது 1989-ல.  அது பழைய சமசாரம்கறதுனால அதைப் பத்தி இப்ப வேண்டாம்.

2014 எலக்‌ஷன்ல ஜெயிச்சு பி.ஜே.பி கட்சி இன்னிக்கு மத்திய அரசங்கத்த மெயினா நடத்தறது. அந்தக் கட்சி அரசாங்கமோ தீவிரவாதிகளக் கண்டும் காணாததுமா இருக்காது. அவா கைவரிசையக் காட்டினா ஸ்ட்ராங்கா எதிர் நடவடிக்கை எடுக்கத் துணியும். இது எந்தத் தீவிரவாதிக்குத்தான் பிடிக்கும் சொல்லுங்கோ? இந்த சூழ்நிலைல ’பிரிவினை, தனி நாடு, பாகிஸ்தானோட இணப்பு’ன்னு சொல்லி காஷ்மீர்ல கத்தி கபடாவோட போராட்டம் பண்றவாளுக்கும், அவாளத் தாங்கி, தூண்டி விடற பாகிஸ்தானுக்கும் என்ன தோணும்? ‘ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கம்கறதே இன்னிக்கு இருக்கற கெடுபிடி இந்திய தேசத்தோட அமைப்புதான். அதுனால நம்ம நோக்கத்துக்காக இந்தியாவுக்கு எதிரா பண்ணவேண்டிய கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பிணையக் கைதி வேலைகள்ளாம் காஷ்மீர்லயும் இனிமே ஜரூரா பண்ண வேண்டியதுதான்.  இதுக்கு முப்தியே முதல் அமைச்சரா இருக்கறது சௌரியந்தான். அவர் நம்ம பழைய க்ஸ்டமர் வேற. நம்மள ரொம்பத் தடுக்க மாட்டார்.  வெளையாடுவோம்’னு நெனைப்பா இல்லயா?  அப்படீன்னா முப்தி மாதிரி தந்தை ஸ்னானத்துல முதல் அமைச்சராவும் இருக்கறவரோட இக்கட்டு அவருக்குத்தான் தெரியும்.  காஷ்மீர் தீவிரவாதிகள்ள பழைய மாதிரி முப்தி குடும்பத்துக்குத் தீங்கு பண்ண நெனைக்கறவா இருந்தா அவாளப் ப்ரீதி பண்ணினா தேவலைன்னு அவர் நெனைக்கலாம். அதுக்காக அந்த டேஞ்சர் பார்ட்டிகள்ட இப்பிடி சொல்லிக்கறது நல்லதுன்னு அவருக்குத் தோணலாம்: ‘ஒங்க சகாயத்துலதான் எலக்‌ஷனே நடந்தது. அதுலதான் நான் இப்ப முதல் அமைச்சரா ஆயிருக்கேன். எல்லாம் நீங்க போட்ட பிச்சைதான்.  ஒங்க காலப் பிடிச்சுக்கறேன்.  நீங்கதான் என் குடும்பத்த ரக்‌ஷிக்கணும்’ன்னு அந்த ஆசாமிகளுக்குப் புரியரா மாதிரி நைஸா ஏதாவது சொல்லிடறதுன்னு தீர்மானம் பண்ணிப் பேசிட்டாரோ என்னவோ?  

எதுவானாலும் இருக்கட்டும்.  ஒரு ஊர்ல ஜனங்கள்ளாம் பெரிசா கூடறா மாதிரி எதோ ஊர்வலமோ பொதுக்கூட்டமோ கேளிக்கையோ அமைதியா நடந்ததுன்னு வச்சுக்கலாம்.  அப்ப அந்த ஊர் போலீஸ் கமிஷனர் மறு நாள் இப்பிடிப் பேசலாமா?: “ஊரில் உள்ள பிக் பாக்கெட்டுகளே, ரௌடிகளே, கேடிகளே மற்றும் அடுத்த ஊர் அடாவடி அண்ணன்களே, நீங்கள் காட்டிய கருணையும் ஒத்துழைப்பும் தான் நேற்று ஊருக்குள் பொது அமைதி காக்க உதவியது. உங்களுக்கு நன்றி” இந்தப் பேச்சைக் கேட்டா ஊர் உலகத்துல அந்த போலீஸ் கமிஷனரப் பத்தி என்ன நெனைப்பா? லோகல் ரௌடிக்குஞ்சுகள் கூட நமட்டுச்சிரிப்பு சிரிப்பாளே?

இல்ல, அமெரிக்காவ எடுத்துக்குங்கோ. ஆஃப்கானிஸ்தான்ல ப்ளான் போட்டு தீவிரவாதிகள் 2001-ல ரெட்டை கோபுரங்கள சாய்ச்சதுக்கப்புறம் யூ.எஸ்-ல தீவிரவாதம்  பெரிசா தலை எடுக்கல. இதுக்குக் காரணம் அமெரிக்கா தீவிரவாதத்த நன்னா கண்காணிக்கறது, தடுப்பு நடவடிக்கைகள எடுக்கறது, நாட்டுக்குள்ள தீவிரவாதம் கொஞ்சம் எட்டிப் பாத்தாலும் அதுமேல கடுமையாப் பாய்ஞ்சு நசுக்கறதுன்னு அங்க நிம்மதியா வாழ்க்கை நடத்தறவாளுக்குத் தெரியும். இந்த நிலமைல ஒபாமா இப்படிப் பேசிடறார்னு வச்சுக்குங்கோ: “ஐயா அகில உலகத் தீவிரவாதிகளே!  2001-க்கு அப்பறம் உங்க தயவுலதான் எங்க நாட்டுல குண்டு வெடிப்பு, நாசவேலை, உயிர்ச்சேதம்னு பெரிசா நடக்காம இருக்கு.  எங்க உள்நாட்டு அமைதி உங்க கடாட்சம்தான். உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!”. இப்பிடி ஒபாமா பேசினார்னா அதுக்கப்பறம் அந்த நாட்டு ஜனநாயகத்துல அவரை யாராவது சீந்துவாளா?

ஆனா முப்தியோட ஜாதகம் வேற மாதிரி. அவர் இப்பிடியும் பேசலாம்.  ஹாயா முதல் அமைச்சராவும் இருந்திண்டிருக்கலாம்.  அதான் நம்ம நாட்டு ஜனநாயகம்கறது.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : இதோ வந்துட்டேன்!

அலசறதும் பிழியறதும் அப்பறம் இருக்கட்டும். முதல்ல நான் யாரு, உங்களோடல்லாம் என்ன பேசணும்னு நெனைக்கறேன்னு ரண்டு வார்த்தை சொல்றேன். ரண்டுன்னா ரண்டு இல்ல.

இன்னிக்கி உயிரோட இருந்தேன்னா வயசுல சென்சுரி அடிச்சிருப்பேன். நான் போய்ச் சேர்ந்தே ரொம்ப வருஷம் ஆயிடுத்து.  ஆனா என்னைப் பேயோ பிசாசோன்னு நெனைச்சுடாதீங்கோ! எப்டீன்னு சொல்றேன்.

என் காலத்துல ’சுதேசமித்திரன்’னு தமிழ் நியூஸ்பேப்பர் வந்தது. தெனமும் மூக்குக் கண்ணாடிய மாட்டிண்டு அதை ஒரு பக்கம் விடாம படிப்பேன். ’ஹிண்டு’வும் பாப்பேன். படிச்சுட்டு அரசியல் விஷயம்னாகூட ரைட் ராங்க்னு ஆத்துல இருக்கறவாள்ட அபிப்பிராயம் சொல்வேன். தோண்றத டக்கு டக்குனு சொல்றது என் சுபாவம். எனக்கு எப்பவும் எதாவது தோணிண்டே வேற இருக்கும்.  அதுவும் சுபாவம்தான்!.

என் பொண் வயத்துப் பேரன் - இப்ப உங்களோட என்னைப் பேசவெச்சுண்டிருக்கானே அவன்தான் -  ஸ்கூல் படிப்புல கடசீ ரண்டு வருஷத்தும்போது ஊரையும் ஸ்கூலயும் மாத்திண்டு எங்கிட்ட வந்து  வளந்தப்போ எப்பவும் ஏதாவது மல்லுக் கட்டிண்டே இருப்பான்.  ’போறான் சின்னப்பையன்’னு நான் அதப் பெரிசு பண்ணல. “சாரி பாட்டி, அந்தக் காலத்துல உங்கள ரொம்பப் படுத்திட்டேன்,  அதுக்குப் ப்ராயச்சித்தமா உங்கள இந்த லோகத்துக்குத் திரும்ப அழச்சு உங்க இஷ்டப்படி எதையும் எல்லாத்தையும் பேசறதுக்கு நான் எற்பாடு பண்றேன்.  வாங்கோ பாட்டி!”ன்னு அவன் மானசீகமாக் கேட்டுண்டது என்னைக் கொஞ்சம் உருக்கிடுத்து. ’சரி, பேரன் ஆசப்படறானே’ன்னு நானும் இறங்கி வந்துட்டேன். அதான் உங்களோடல்லாம் பேசிண்டிருக்கேன். இப்ப புரியறதா?

எங்க ஆத்துக்காரர் ஊர் ஊரா வேலை பாத்தப்ப திருவனந்திரபுரத்துல கொஞ்ச வருஷம், அனந்தபூர்ல கொஞ்ச வருஷம், தமிழ்நாட்டு ஊர்கள்ள சில காலம்னு அவரோட குடித்தனம் பண்ணிருக்கேன். அந்த வெளியூர்க்காரா பாஷைகளைக் கத்துண்டும் பேசினேன், அவா விவகாரங்களைத் தெரிஞ்சுண்டும் டிஸ்கஸ் பண்ணினேன்.  மத்தபடி குடும்பத்துல நிறைய பேர்க்கு ஒத்தாசை பண்ணவேண்டிருந்தது, பண்ணினேன்.  நான் எப்பவும் வெறுமனே இருந்ததில்ல. வெட்டிப்பேச்சும் பேசினதில்ல. அப்பறம் என்ன? செய்யற காரியமும் பிரயோஜனமாத்தான் இருக்கும், பேசற பேச்சும் நல்லதாத்தான் இருக்கும்.

இந்தக் காலத்துக்கு வரேன்.  நீங்கதான் பாக்கறேளே - அரசியல்லயும் மத்த பொது வாழ்க்கைலயும் என்னல்லாமோ கூத்து நடந்திண்டிருக்கு.  கூத்தடிக்கறவா ஒவ்வொரு கூத்துக்கும் சீரியஸா ஒரு நியாயம் வேற சொல்றா. சிரிப்புதான் வரது.  அவா சம்பத்தப்பட்ட விஷயங்களப் புட்டு வச்சு அவாள நறுக்குனு நாலு கேள்வி கேட்டு வார்த்தைலயே குட்டு வைக்கணும் போல இருக்கு.  அந்த மனுஷா நல்லது நெறையப் பண்ணினா அவா தலைல அட்சதை போடறா மாதிரியும் பேசலாம் - அவாதான் அதுக்கு எடம் குடுக்கணும். 

ஒண்ணு கவனிச்சேளா? பொது வாழ்க்கைல நல்லது பண்றவாள நீங்க பாராட்டாம போயிட்டாலும் அவா பாட்டுக்கு வேலை பண்ணிண்டிருப்பா.  ’பாராட்டு கெடைக்கலயே’ன்னு கெட்ட வழிக்குப் போகமாட்டா.  ஆனா கெட்டது பண்றவா விஷயம் வேற.  அவாள நீங்க கண்டனம் பண்ணினாத்தான் ‘நாம இதுக்கெல்லாம் கெக்கே பிக்கேன்னு விளக்கம் சொல்லவேண்டிருக்கே’ன்னு இனிமே அடக்கி வாசிக்க நெனைப்பா. அடக்கி வாசிக்காட்டி நெறையப் பேர் விமர்சனம் பண்ணிப் பண்ணி அவா மானத்த வாங்கினா பலன் கிடைக்கும். இதுனால தப்பு வழில புதுசா புறப்படறவாளோட தைரியமும் குறையும். கிரிமினல் விவகாரமா இருந்து பலபேர் சத்தமா கேள்வி எழுப்பினேள்னா ‘கோர்ட்ல கேஸ் வந்து வக்கீல்டயும் மாட்டிண்டு ஜட்ஜ்மெண்ட் எப்படி வருமோன்னு உள்ள திகிலும் உதட்டுல சிரிப்புமா அலையணுமே’ங்கற நெனைப்புல பொது வாழ்க்கைத் தப்புகளக் குறைச்சுப்பா. சிலர் கமுக்கமா ரிடையர் ஆகிப்பா.  ஆகக்கூடி தப்புப் பண்றவாளக் கவனிச்சு ‘டேய் பாவி, தப்புப் பண்ணாதே’ன்னு குரல் கொடுக்கறதுதான் முக்கியம்னு எனக்குப் படறது.  சட்டம் தாமசிச்சு அரசாங்கமும் தள்ளி நின்னா வேற வழியும் கிடையாதே!

இன்னும் சில பொது விஷயங்களும் என்னப் ‘பேசு பேசு’ன்னு கூப்பிடறதுகள். இந்த எல்லா சமாசாரங்களத்தான் அப்பப்ப உங்ககிட்ட பேசணும்னு வந்திருக்கேன்.  பேரனே, தேங்ஸ்டா!

இப்ப நிறுத்திக்கறேன்.  அப்பறமா பேசறேன்!

* * * * *

Copyright © R. Veera Raghavan 2015