Thursday 8 June 2023

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: மனோ தங்ராசு! பிரதமர் மோடிய இப்பிடி கீள்தரமா பேசுவியா?

 

-- ஆர். வி. ஆர்

 

ஸ்டாலின் கிட்ட ஒரு மந்திரி இருக்காரு. பேரு மனோ தங்ராசு. அந்த ஆளு பால் வளத்துறைக்கு மந்திரி. ஆனா பால் குடிச்சிக்கினு சிரிக்கிற கொளந்தைட்ட இருக்கற  கண்ணியம், நல்லறிவு கூட அவரு கிட்ட கெடியாது.  

 

விசயம் இதான். புது பாராளுமன்ற பில்டிங்கு டில்லில கட்டிக்கிறாங்க.  அதோட தெறப்பு விளா அன்னிக்கு, பிரதமர் மோடி பக்தியா பணிவா ஒண்ணு செஞ்சாரு. என்னன்னா, சாமியைக் கும்புடற மாதிரி கீள வுளுந்து செங்கோலக் கும்புட்டாரு. சைட்ல நின்னுக்கின ஆதீன சாமியாருங்க, மோடிக்கு அட்சதை போட்டு அப்ப அசீர்வாதம் குட்தாங்க.  

 

செங்கோல் முன்னால மோடி வுளுந்து கும்புடற போட்டோ பேமஸ் ஆயிப் போச்சு. நம்ம தங்ராசும் அந்தப் போட்டோவைப் பாத்தாரு. உடனே அவரோட புத்தி கீள்தரமா வேலை செஞ்சிச்சு. புத்தி போன போக்குல, ஒரு ட்வீட் தட்டி விட்டாரு.  மோடி கீள வுளுந்து கும்புடற போட்டோவைப் போட்டு, “மூச்சு இருக்கா, மானம், ரோசம்?” அப்பிடின்னு டுட்டர்ல கமென்ட் போட்டாரு தங்ராசு. அதாவ்து, தங்ராசு மோடியப் பாத்து, “கீள விளுந்து கெடக்கிறியே?  உனக்கு உசிரு இருக்குதா? இல்ல பூட்டியா?” அப்பிடின்னு நக்கலா கேட்டுக்கினாராம். “என்னய்யா பிரதமரைப் பத்தி இப்பிடி கன்றாவியா எளுதிக்கின?’ன்னு கேட்டா, “ஆங்! இது ஜனநாயகம்! கருத்து சொதந்திரம்! உரிமை!”ன்னு ஏதோ பெனாத்துனாரு தங்ராசு.

 

தங்ராசோட ட்வீட்டுக்கு பாஜக ஆளுங்க கிட்டேர்ந்து  பலம்மா எதிர்ப்பு வந்திச்சு. உடனே தங்ராசு கருத்து சொதந்திரம், களிமண்ணு அல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு, கம்முனு அவர் போட்ட ட்வீட்டை எடுத்துட்டு வாயே தெறக்காம இருந்துக்கினாரு. ஒரு வாரம் ஆயிப் போச்சு. இன்னி வரைக்கும் அவரு போட்ட கேவலமான ட்வீட்டுக்கு மன்னிப்பு கேட்டுக்கலை, வருத்தமும் சொல்லலை. போட்ட ட்வீட்டை அவரே எடுத்திட்டார்ல? அதுனால அவரை யாரும் ஒண்ணும் கேக்கக் கூடாதுன்னு நெனச்சிக்கினாரு. ஒரு ஆளு மேல நீ கத்திய சொருவிட்டு, சொருவின கத்திய உருவிட்டா நீ குத்தவே இல்லைன்னு ஆவுமா தங்ராசு?

 

ஒண்ணு புரிஞ்சிக்கபா. நம்ம தங்ராசு கடவுள் நம்பிக்கை இல்லாம, ஏதோ பகுத்தறிவு பொடலங்கான்னு நெனச்சி மோடியப் பத்தி ட்வீட் போடல. மோடிய இப்பிடில்லாம் அல்பமா  கேலி பண்ணா அது ஸ்டாலினுக்கு பிடிக்கும்னு நெனச்சி, அது மாதிரி ட்வீட் போட்டு சூசகமா ஸ்டாலின் கால்ல வுளுந்துக்கினாரு தங்ராசு.  “யோவ், என் கால்ல வுளுற ஐடியால நீ ட்வீட் போடறது சர்தான்.  ஆனா நீ இப்பிடி மோடிய கேவலம் பண்ணி ட்வீட் விட்டா எனக்கே டேஞ்சரா போயிரும். செந்தில் பாலாஜிய சுத்தி இப்ப ஐடி ரெய்டு வேற நடந்துக்கிது.  காலை விட்டு எளுந்து அப்பால போ. ட்வீட்டை எடுத்துரு”ன்னு ஸ்டாலின் சொல்ல, போட்ட ட்வீட்டை டக்குனு தூக்கிட்டாரு நம்ம தங்ராசு. அவ்ளதான் மேட்டரு.

 

முஸ்லிம்ங்க  அவுங்க மதத்துல சாமி கும்புடறது எப்பிடி தெரிமா? ரண்டு காலையும் உள் பக்கமா மடக்கி உக்காந்து, முதுகை முன்புறம் வளைச்சு முன் தலையால தரையத் தொடணும்.  கிறிஸ்டீன்லயும் மண்டி போட்டு பிரார்தனை பண்ற வளக்கம் இருக்குது. கடவுளைக் கும்ப்டுகினு பிரார்தனை பண்றதுனா, ஒவ்வொரு மதத்துலயும் ஒவ்வொரு தினுசுல பணிவை காட்டிக்கிறாங்க. இது ஒவ்வொண்ணயும் மட்டமா கேலி பண்ணணும்னு நீ நெனச்சா பண்ணலாம். இதுல, இந்துங்க கீள வுளுந்து கும்புடறதை இப்ப தங்ராசு சீப்பா பேசிக்கிறாரு.  ஆனா இதுக்கு அவரு மட்டும் காரணம் இல்ல.

 

இந்து மதத்தை கேலியா பேசுறது, திமுக தலைவருங்க ரத்தத்துல ஊறிப் போச்சு. திமுக ஆட்சில முதல்வரா வந்தப்புறமும், கருணாநிதி இந்து மத பளக்க வளக்கம்னா எளக்காரமா பேசிக்கிறாரு. “இந்துன்னா திருடன்னு அர்த்தம்”னு கூட சொன்னாரு.  அதுக்கு வெளக்கெண்ணையா வெளக்கம் வேற குட்தாரு.

 

ஸ்டாலினுக்கு சொந்தமா யோசிக்க வராது. 'அப்பா மாதிரி நம்மளும் இந்து மத நம்பிக்கைய உதாசீனம் பண்ணி கிண்டல்  செஞ்சிக்குவோம் - அப்பத்தான் நமக்கும் தலைவர்ன்ற மவுசு கூடும்'னு நெனச்சி அப்பப்ப அத பண்ணுவாரு. எதிர்ப்பு வந்தா, இல்ல தேர்தல் வந்தா, “திமுக-லயும் நெறய பேரு இந்துதான். எங்க வூட்டம்மா கூட கோயிலுக்கு போவாங்க”ன்னு நளுவிக்குவாரு.

 

ரொம்ப வருசமா திமுக கட்சித் தலைவரே இந்துக்களை கண்டுக்காம இருந்து, இந்துக்களுக்கு எதிரா பேசிக்கினும் இருக்காருல்ல? ‘நம்மளும் அப்பிடி இருந்துக்கினு அதே மாதிரி பேசி தலைவருக்கு ஐஸ் வெக்கணும்’னு கட்சில அடுத்த கட்ட தலைவருங்க நெனக்கிறாங்க. இப்ப கலைஞர் நூற்றாண்டு தொடக்க விளா கூட்டத்துல பேசினாரு பாரு ஸ்டாலின், அதுல “கருணாநிதி என்னை கண்காணிச்சு பாத்துக்கினே இருக்காருன்ற நெனப்பு  இருக்குது!" அப்பிடின்னு பீலிங்கா பேசிக்கிறாரு. கலைஞரு  மெரினா பீச்-லேர்ந்து ஸ்டாலினை கண்காணிக்க, வீட்லேர்ந்து ஸ்டாலின் திமுக-ல அல்லாரையும் கண்காணிக்க, கட்சி ஆளுங்க இந்து மதத்தை எப்பிடில்லாம் கேலி பண்ணிக்கினு இருப்பாங்களோ?

 

தனக்குனு  சுய கவுரவம் வச்சிக்கினு,  தன் வேலைலயும் கெட்டிக்காரனா இருக்கறவன், அத ஒளுங்கா பண்றவன்,  திமுக-ல இருக்க முடியாது. அதுவும் இப்ப இருக்கற ஸ்டாலின் கிட்ட அந்த மாதிரி ஆளு வந்து சேர இன்னும் வெக்கப் படுவான். திமுக-ல ரண்டாம் மட்டத்துல யாரு ரொம்ப வருசம் தங்குவான்னா,  நம்ம தங்ராசு மாதிரி ஆளுங்கதான்.  அவுங்க அவுங்களுக்கு முடியிற வளில திமுக தலைவரை கூல் பண்ணிட்டே இருக்கணும். அதுக்கு தக்குன பலனுக்கும் செமயா வளி பண்ணிக்கலாம். இன்னா, புரிஞ்சு சிரிக்கிறியா?    

 

இந்த லட்சணத்துல அண்ணாத்துரை பெர்சா சொன்ன “கடமை, கண்ணியம், கட்டுப்பாடெ”ல்லாம் திமுக-ல யார் கிட்ட இருக்கும்? இல்ல, தங்ராசு கிட்டதான் என்ன இருக்கும்? மடமை, மண்டைக் கனம், மண்ணாங்கட்டின்னு சொல்லிக்கலாமா?


* * * * *


Author: R. Veera Raghavan, Advocate

         

 

No comments:

Post a Comment