-- ஆர். வி. ஆர்
”ஓட்டு ஓட்டு” பாடல்!
|
“நாட்டு நாட்டு” என்று தொடங்கும் இந்தியப் பாடல், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை இந்த 2023-ம் வருடம் பெற்றது. இது RRR என்ற தெலுங்குத் திரைப்படத்தில் காட்சியாக வருகிறது.
தமிழ்த்
திரைப்படப் பாடல் எதற்கும் ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இருந்தாலும் "ஈரோடு
கிழக்கு இடைத் தேர்தல்" என்று ஒரு
திரைப்படம் எடுக்கப்பட்டு, அதில் “ஓட்டு ஓட்டு” என்று தொடங்கும் ஒரு பாடல் காட்சி இடம் பெற்றால்
அதற்கும் ஆஸ்கர் விருது கிடைக்காதா என்ன?
இதோ அந்தப்
பாடல் வரிகள்!
"நாட்டு நாட்டு" பாடலின் மெட்டு, “ஓட்டு ஓட்டு” பாடலுக்கும் பொருந்தும். தெலுங்குப் பாட்டுக்குத்
திரையில் இரண்டு நடிகர்கள் நடனம் ஆடிய மாதிரி, இரண்டு கட்சித் தலைவர்கள் இந்தத் தமிழ்ப் பாடல் வரிகளை
அனுபவித்து டான்ஸ் ஆடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கற்பனையே உங்களுக்கு நிஜம் மாதிரி இருந்தால்,
நமது அருமை ஜனநாயாகம் அப்படி என்றுதானே அர்த்தம்? |
ஓட்டு, ஓட்டு ஓட்டு ஓட்டு ஓட்டு அள்ளு ஓட்டு! காட்டு, காட்டு காட்டு பணம் பெரிய சக்தி காட்டு!
|
விடியக்
காலை பட்டிக்குள்ள ஜனத்தை அடைச்சு சோறு
தண்ணி குடுத்து ரண்டு சினிமா காட்டி விளக்கு வைக்கற நேரம் வரை பிடிச்சு வைச்சு தலைக்கு
ஆயிரம்னு
தினம் சிரிச்சுக்
குடுப்போம்!
|
ஓட்டு, ஓட்டு ஓட்டு ஓட்டு ஓட்டு அள்ளு ஓட்டு! காட்டு, காட்டு காட்டு பணம் பெரிய சக்தி காட்டு!
|
வீடு
வீடாப் போயி ஆளு கணக்கு எடுத்து வேட்டி
சேலை குடத்தோட தோடு குடுத்து வெள்ளிக் கொலுசு விளக்கு ஸ்மார்ட் வாட்சு குடுத்து நாங்க வளத்த ஏழ்மையைத்தான் விலைக்கு வாங்குவோம்! |
ஓட்டு, ஓட்டு ஓட்டு ஓட்டு ஓட்டு அள்ளு ஓட்டு! காட்டு, காட்டு காட்டு பணம் பெரிய சக்தி காட்டு!
|
மக்கள் கண்ணை மறைச்சு அவுங்க நிலத்தை எடுத்து அவுங்க பணத்துல நாங்க பயிர் செஞ்சு விளைச்சலை வித்து எங்க பங்கை ஒதுக்கி அந்த மக்களுக்கு அன்னதானம் செய்யுவோம்! |
ஓட்டு, ஓட்டு ஓட்டு ஓட்டு ஓட்டு அள்ளு ஓட்டு! காட்டு, காட்டு காட்டு பணம் பெரிய சக்தி காட்டு!
|
Raghavan, very well done! i know the original song only superficially, but i am sure this fits the meter nicely!! Keep writing & composing!
ReplyDelete