Thursday, 6 August 2020

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: ராமர் கோவில் வருகிறது


           -- ஆர். வி. ஆர்

ராமர் இப்ப இருந்து நேத்திக்கு அவருக்கு பட்டாபிஷேகம் நடந்ததோ? மனசு அப்படி குதூகலமா இருக்கு. 

ராமர் கோவில் கட்றதுக்கு அயோத்தில நேத்திக்கு (5.8.2020) பூமி பூஜை நடந்ததுக்கே இப்படி ஒரு உற்சாகம் ஜனங்களுக்கு. கோவில் கட்டினப்பறம்  இன்னும் அமோகமா  கொண்டாடுவா. நினைச்சுப் பாத்தா பெருமையா இருக்கு. ஆனா சட்டுனு ஒண்ணு தோண்றது. ஹிந்துக்கள் இனிமே ஜாக்கிரதையா இருக்கணும். ஏன் இனிமே, எதுக்கு ஜாக்கிரதை? சொல்றேன்.

அயோத்திலதான் ராமபிரான் பிறந்தார், அவரோட ஜன்ம ஸ்தானமும் ஒரு குறிப்பிட்ட இடம்னு ஹிந்துக்கள் காலம் காலமா நம்பறா. அந்த ஸ்தானத்துலதான், முகலாய சாம்ராஜ்யம் நடந்தபோதே ஒரு ராமர் கோவில் இருந்தது. அந்தக் கோவிலை  முகலாய மன்னர் பாபர் அரக்கத்தனமா இடிக்கச் சொல்லி 16-ம் நூற்றாண்டுல ஒரு மசூதி கட்ட உத்தரவு போட்டார். அந்த ஸ்தானத்துல அப்படி வந்ததுதான் பாபர் மசூதி. அது நடந்தது 1528-29-ம் வருஷம்.

464 வருஷமாகியும், ராமரோட ஜன்ம ஸ்தானத்துல புதுசா ஒரு ராமர் கோவில் கட்ட முடிலைங்கற ஆதங்கம் ராம பக்தர்களுக்கு உண்டு. அதுனால அவா ஒணணு கூடி 1992-ம் வருஷம் அந்த பாபர் கட்டின மசூதியை இடிச்சா. அப்பறம் அந்த இடம் சம்பந்தமான பழைய கோர்ட் வழக்கு கொஞ்சம் வேகமா நடந்தது. 

கோர்ட் உத்தரவுப்படி அந்த ஸ்தானத்துல, பாபர் மசூதி கட்டுமானம் இருந்த இடத்துல, அகழ்வாராய்ச்சி பண்ணினபோது, அந்த மசூதிக்கு நேரா அடி மட்டத்துல ஒரு ஹிந்துக் கோவில் இருந்ததுக்கான பல பொருட்கள், சில ஹிந்து கடவுள் விக்கிரகங்கள் கிடைச்சது. அந்த இடத்தை ஹிந்துக்கள் கிட்ட முழுமையா குடுத்து ஒரு டிரஸ்ட் மூலமா ராமர் கோவில் கட்டலாம்னு 2019-ம் வருஷம் நம்ம சுப்ரீம் கோர்ட்டே உத்தரவு போட்டது. அதுனாலதான் நேத்திக்கு அயோத்தில, அந்த ராம ஜன்ம பூமில, அதே இடத்துல புதுசா பெரிசா ஒரு ராமர் கோவில் எழுப்பறதுக்கு பூமி பூஜை நடந்தது.

நேத்திக்கு அயோத்தில பூமி பூஜை முடிஞ்சு அங்கயே பிரதமர் மோடி பேசினாரே, கேட்டேளா? கை மட்டும் தட்டக் கூடாது. முடிஞ்சா கண்ல ஒத்திக்கணும். அப்படி ஒரு அறிவார்ந்த கண்ணியமான கம்பீரமான பேச்சு. அந்த மனுஷன் மட்டும் இல்லைன்னா இன்னிக்கு அந்த ஊர்ல அந்த இடத்துல ராமர் கோவில் சாத்தியப் படுமான்னு தெரியாது. கோவில் கட்ற ஏற்பாட்டுக்குன்னு  ஹனுமாரா வந்திருக்கார்.  சரி, இப்ப என் விஷயத்துக்கு வரேன்.      

2011 ஜனத்தொகை கணக்குப் படி, இந்தியாவுல நூறு பேர்ல எண்பது பேர் ஹிந்துக்கள். அந்த  ஜனங்களும் ராமபிரானை திருமாலோட  அவதாரமா பாக்கறா. ராமாயணத்தை வெறுமனே படிக்கறதே ஒரு புண்ணியம்னு நினைக்கறா.      

இப்படிப்பட்ட ராமபிரானை ஹிந்துக்கள் எந்த அளவுக்கு நேசிப்பா, பூஜிப்பான்னு தெரிஞ்சுக்க ஒரு உதாரணம் சொல்றேன்.  மறைஞ்ச நடிகர் எம்.ஜி.ஆர், தான் நடிச்ச எல்லா  சினிமாலயும் எப்பவும் எவ்வளவு நல்லவரா வந்தார்? சிகரெட் பிடிக்க மாட்டார், மதுவும் குடிக்க மாட்டார். தப்பு எங்க நடந்தாலும் அங்க போய் தப்பு பண்றவா திருந்தறதுக்கு வாய்ப்பு குடுத்து அது முடியலைன்னா அப்பதான் அவாளை புரட்டி எடுப்பார். ரௌடியோட சண்டை போடணும்னாலும், முதல் அடியை தான் வாங்கிண்டு அப்பறம்தான் அவனைப் போடு போடுன்னு போடுவார். அம்மா பாசத்தையும் சினிமால எம்.ஜி.ஆர் மாதிரி யாரும்  காட்டினதில்லை.

இப்படி உச்சந்தலைல ஆரம்பிச்சு உள்ளங்கால் வரைக்கும், நிஜ வாழ்க்கைல நாம பாக்க முடியாத ரொம்ப நல்லவரா சினிமால வந்தார் எம்.ஜி.ஆர். அதுனாலதான அவர் சாதாரண மக்களுக்கு பெரிய ஹீரோவா, ஒரு தெய்வமாக் கூட  தெரிஞ்சார்?    

எம்.ஜி.ஆர்-ஐ  விட அதிக உயர் குணங்களோட  ஒரு மனுஷ அவதாரமா பிறந்தார் ராமர். ராஜ வாழ்க்கையை விட்டுட்டு, அரச பட்டத்தையும் தள்ளி வைச்சு, அப்பா குடுத்த வாக்கைக் காப்பாத்தணும்னு மனைவியோட 14 வருஷம் வனவாசம் போனவர் அவர். ஏக பத்தினி விரதனா இருந்தவர். தன் மனைவியைக் கடத்தின ராவணனை தேடிப்போய் சம்ஹாரம் பண்ணினவர். நீதி, நேர்மை, ஒழுக்கம், கருணை, வீரம், பெத்தவாகிட்ட   மரியாதை, சகோதராள்ட்ட பாசம்,   மனைவிட்ட பிரியம்னு ஒரு மனுஷனுக்கு என்ன என்ன அற்புத குணங்கள் இருக்கணுமோ அத்தனையும் வச்சிண்டிருந்தார் ராமர்.  

சினிமாக்  கதைக்காக நல்லவரா நடிச்சதுக்கே எம்.ஜி.ஆர்-ஐ ஜனங்கள் இவ்வளவு உசத்தியா பாக்கறான்னா, திருமால் அவதாரமா வந்து ஜனங்களை யுகம் யுகமா வசீகரிக்கற ராமச்சந்திர மூர்த்தியை ஹிந்துக்கள் எப்படி நெகிழ்ந்து நேசிப்பான்னு சொல்ல வேண்டாம்.  

அப்படிப்பட்ட தெய்வம் அவதரிச்ச ஸ்தானத்துல அவருக்குன்னு இருந்த கோவிலை அந்நிய மதத்துக்காரா இடிச்சு சுமார் ஐநூறு வருஷம் ஆச்சு. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சு எழுபது வருஷமும் ஆயிடுத்து. இருந்தாலும், 2019-ம் வருஷம் வரை அதே இடத்துல ராமர் கோவிலை திரும்பவும் கட்றதுக்கு தடைகள் இருந்ததுன்னா, ஹிந்துக்களுக்கு எவ்வளவு மன வேதனை இருக்கும்?  புரியாதவாளுக்கு இப்படி புரிய வைக்கலாம்.

ராமர் மாதிரி ஒரு அவதார தெய்வம் வேற நாட்டுல வேற மதத்துல பிறந்து, அவர் பிறந்த ஸ்தலத்துல அவர்க்கு ஒரு வழிபாட்டு ஸ்தலம் இருந்ததுன்னு நினைச்சுக்கலாம். அதையும் 16-ம் நூற்றாண்டுல யாரோ அந்நிய மதத்துக்காரா  இடிச்சுடட்டா,  ஆனா இப்பவும் அந்த தெய்வத்தைத் தொழுது  உருகற அந்த நாட்டு மக்கள் அவா நாட்டுல 80 சதவிகிதம் இருக்கான்னும் வைச்சுக்கலாம். அப்படின்னா, அந்த இடத்துல அந்த தெய்வத்துக்கு புதுசா ஒரு வழிபாட்டு ஸ்தலம் கட்றதுக்கு 2019 வரை, ஐநூறு வருஷமா அந்த மக்கள் காத்துண்டிருப்பாளா, அந்த நாட்டு அரசாங்கம்தான் சும்மா இருக்குமா? அந்த மக்களோ அந்த அரசாங்கமோ இந்தியா மாதிரி அசிரத்தையா இருக்க மாட்டான்னு எந்த மக்கும் சொல்லும்.  இதுக்கு என்ன காரணம்னு விரிவா ஆராய வேண்டாம். நமக்கு ஆக வேண்டியதை பாக்கலாம்.

மகோன்னதமான  பண்புகளை வாழ்ந்து காட்டினவர் ராமபிரான். ஆனா நல்ல பண்புகளையோ, நல்ல பண்புகள் கொண்ட எந்த மகானையோ,  நம்ம நாடு அரசியல் கட்சிகள் பிரஸ்தாபிச்சு பேசறதில்லை - பா.ஜ.க மட்டும்தான் அதுக்கு விதி  விலக்கு. காரணம் என்னன்னா, அப்படிப் பேசறது அவாளுக்கே போலியா தெரியும், வெக்கமா இருக்கும்.  “அரசியல்வாதிகள்  யாரும் லஞ்சம் வாங்காதீங்கோ” அப்படின்னு எந்த அரசியல்வாதியாவது பேசுவாரா? “மக்களே,  நீங்களும் யாருக்கும் லஞ்சம் தராதீங்கோ” அப்படின்னுதான் பேசுவாரா?  மாட்டார்.  அது மாதிரி, “ராமபிரான் வெளிப்படுத்தின நீதி, நியாயம், நேர்மை, பிறத்தியாருக்கு  உதவும் கருணை மாதிரியான குணங்களை நாம பின்பற்றணும்” அப்படின்னும் அநேக அரசியல் கட்சிகள் சொல்லாது.  அப்படிப் பேசறதுன்னா, பேசறவாளும் ஒழுங்கா இருக்கணுமே? அது அவாளுக்கு  முடியாத காரியம். அப்பறம் எதுக்கு ராம பிரானை உதாரணம் காட்டி, சிலாகிச்சுப் பேசணும்? நமக்குப் படி அளக்கற கில்லாடி ஆசாமி யாரோ, அவர் படத்தைக் காமிச்சு கும்பிடு போட்டு பொழைக்கறது தான் அரசியல். ‘ஹிந்து தர்மம் தழைக்கணும், அதைக்  காப்பாத்தணும்’னு பா.ஜ.க மாதிரி நினைக்கற வேற பெரிய கட்சி இல்லை. அதுனால, ஹிந்து மக்களுக்கும் இப்ப ஒரு பெரிய பொறுப்பு இருக்கு.

ராமர் கோவில் கட்ற வரைக்கும் வந்துட்டோம்னா, சும்மா ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் போட்டா மட்டும் போறாது.   ராமர் கோவில் குடுக்கற உத்வேகத்தை பயன்படுத்தி,  ராமர் காட்டின தர்மத்தை, அற நெறியை, அவர் பண்புகளை இனிமே காலம் காலமா உயர்த்திப் பிடிக்க வேண்டியது ஹிந்து ஜனங்களோட கடமை. அதை எல்லாம் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு சொல்லிக் குடுக்கணும்.  அதுவே அந்த சந்ததிகளுக்கும் ஒரு சக்தியைக் குடுக்கும், நல் வழில நிறுத்தும். அதுதான இந்தியாவுக்கு அடையாளம்? அதுதான நமக்கு பெருமை? ஆனா விஷயம் இதோட நிக்கலை. கோவிலை மட்டும் ஐநூறு வருஷம் கழிச்சு பெரிசா கட்டிட்டு, ராம பிரானையும் போற்றிண்டு, அதே நேரம் அந்நிய மதத்து மனுஷா எண்ணிக்கைல பெருகி ஹிந்துக்களை கொஞ்சம் கொஞ்சமா  கபளீகரம் பண்றா மாதிரியும் ஆகக் கூடாது, இல்லையா?

1951 ஜனத்தொகை கணக்குப்படி, இந்தியாவுல ஹிந்துக்கள் 84 சதவிகிதம். அந்நிய மதத்துக்காரா (முஸ்லிம், கிறிஸ்தவா) 12 சதவிகிதம். 2011 ஜனத்தொகை கணக்கைப் பாத்தா, ஹிந்துக்கள் 80 சதவிகிதம்னு குறைஞ்சு, அதே அந்நிய மதத்துக்காரா 16.5 சதவிகிதம்னு கூடிருக்கு.

சரித்திரத்தைப் படிச்சா, உலக நடப்புகளையும் கவனிச்சா, ஒரு விஷயம் பளிச்சுனு புரியும். இப்படியே ஹிந்து ஜனங்கள் இந்தியாவுல மெள்ள மெள்ள  குறைஞ்சு போய் அந்நிய மதத்துக்காரா எண்ணிக்கைலயும் சதவிகிதத்துலயும்  அதிகரிச்சா, ஹிந்து தர்மம் நம்ம நாட்டுல  பாதுகாப்பா  நீடிக்காது.  அப்பறம் ஐநூறு வருஷம் கழிச்சு ராமர் கோவிலை திருப்பவும் கட்டினதுக்கு என்ன அர்த்தம்?

அதுனால சொல்றேன். இந்தியாவுல ஹிந்துக்கள் எண்ணிக்கை எண்பது சதவிகிதத்திக்கு குறையாம நம்ம ஜனத்தொகையை வைச்சுண்டாத்தான், ராமபிரானை ஹிந்துக்கள் காலா காலத்துக்கும் கொண்டாட முடியும். ஹிந்து தர்மத்தையும் தக்க வைச்சுக்க முடியும். உலகம் நமக்கு சொல்லிக் குடுக்கற பாடம் இது. ஜனத்தொகைப் பெருக்கத்துனால அந்நிய மதத்து மனுஷா தங்களோட சதவிகிதத்தை அதிகரிச்சா, அதே வழில தங்களோட சதவிகிதத்தை எண்பது சதவிகிததுக்கு  தக்க வைச்சுக்கறது சட்டப்படியும் தப்பில்லை. மத்தபடி அந்நிய மதத்து மனுஷாளை ஹிந்துக்கள் அடாவடியா ஹிம்சிக்க வேண்டாம். அவாளை நேசிக்கட்டும், பாதுகாப்பும் தரட்டும்  - அது அவசியம். ஆனா தன் தர்மம் தன் நாட்டுலயே அழிய  விடக் கூடாது. அந்த ஜாக்கிரதை உணர்ச்சி வேணும். 

       முகலாயர் ஆட்சில ஹிந்துக்கள் வக்கில்லாம இருந்தா. வெள்ளைக்காரன் ஆட்சில ராணிக்கு கட்டுப் பட்டோம், அப்ப விடுதலைதான் குறிக்கோளா இருந்தது. ஆனா சுதந்திர இந்தியாவுல, ஹிந்துக்கள் பெருமையா தன் மதத்தை காப்பாத்திக்கலாமே?       

ஹிந்துக்கள் மெஜாரிடியான இந்தியாவுல அந்நிய மதத்து மனுஷாளுக்கு, அவா வழி பாட்டு ஸ்தலங்களுக்கு, சட்டப்படி அதிகமான சலுகையும் உண்டு பாதுகாப்பும் உண்டு. போறாத்துக்கு பல அரசியல் கட்சிகளோட ஹிந்து தலைவர்கள் அந்த மனுஷாளுக்கு பவ்ய நமஸ்காரம் பண்ணி  சுயநல சேவகமும் பண்றா. ஆனா ஹிந்துக்கள் தப்பித்தவறி இந்தியாவுல சிறுபான்மை ஆயிட்டா, அந்நிய மதத்து மெஜாரிடி மனுஷா கிட்டேர்ந்து, அதே மாதிரியான சலுகையோ பாதுகாப்போ கிடைக்கும்னு  ஒருத்தர் நினைச்சா,  அவர் சாதாரண பேக்கு இல்லை. பேக்கரில வாட்டி எடுத்த பேக்கு.

மத்தவா மேல வைச்ச நம்பிக்கைலயே பாதிக்கு பாதி ஏமாந்த ஜனங்கள் ஹிந்துக்கள். மீதிக்கு எண்ணிக்கைலயும்  ஏமாற வேண்டாம்னு ராம பிரானை வேண்டிக்கறேன். சொல்லுங்கோ, இதுல ஏதாவது தப்பு இருக்கா, கெட்ட எண்ணம்தான் இருக்கா?  

* * * * *

 Copyright © R. Veera Raghavan 2020  

4 comments:

  1. Very well said. The temple is only symbolic of the aspiration of the Hindus. The Sanatana Dharma has to be upheld by the followers of this Dharma if this country has to remain truly secular, because the other faiths are certainly not secular.

    ReplyDelete
  2. Jai Sri Ram.. one of the serious concern is demographic change. Very nicely elucidated.

    ReplyDelete
  3. Your observations are absolutely true. The reason why in Tamil Nadu Hindus are not that much aggressive in this regard is because, there was no moghul influence / atrocities here as they were well protscted by Vijaya nagara kingdim. But for recent day gulf and wahabi influence, Tamil muslims were more or less polite. There mother tongue is Tamil and converts from Hinduism during their business trips to gulf etc. Where as in north most of them are Moghul descendants and Urdu speakers.

    ReplyDelete