“நளினியோடு
முருகனுக்கும் சாந்தனுக்கும் விடுதலை!" என்று பாடியபடி முன்னணி தமிழக
அரசியல் தலைவர்கள் கூத்தாடிக் கோரிக்கை வைக்காமல் இருப்பதுதான் குறை. மற்றபடி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான அந்த மூவர் உட்பட ஏழு பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும், அதற்காக தமிழக
கவர்னர் அரசியல் சட்டத்தின் கீழ் தண்டனைக் குறைப்பு செய்து அவர்கள் விடுதலை ஆக உத்தரவிட
வேண்டும் என்று இந்தத் தலைவர்கள் வலுவாகக் கேட்டிருக்கிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க கட்சித் தலைவர்களும்
இதில் அடக்கம். இதில் ஒருவரை
ஒருவர் மிஞ்சிப் பெருமை தேடவும் பார்க்கிறார்கள்.
தமிழக பா.ஜ.க-வும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் இந்த அபஸ்வர
கோஷ்டி கானத்தில் சேரவில்லை என்பது ஆறுதல். ஆனால் தாராளமான மெஜாரிடி ஓட்டு
சதவிகிதத்தை தங்கள் வசம் கூட்டாக வைத்திருக்கும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு
கட்சிகளும் ஒரு முன்னாள் பிரதமரின் கொலையில்
ஈடுபட்ட குற்றவாளிகளை விடுவிக்க குரல் கொடுப்பது தமிழகத்தின் அரசியல் நல்லொழுக்க
சீரழிவிற்கு சாட்சி.
ராஜிவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தபோது அவர்
எடுத்த நடவடிக்கைக்காக அவரை பின்னாளில் படுகொலை செய்வது நமது நாட்டின் மீதே
தாக்குதல் நடத்துவதற்கு சமம். அந்த பாதகச் செயல் வெளிநாட்டு தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்டு அவர்களின் தமிழக கூட்டாளிகள் துணையோடு இந்திய மண்ணிலேயே குரூரமாக நிறைவேற்றப் பட்டது. அந்தக் குற்றத்திற்காக தண்டனை அடைந்து ஜெயிலில் உள்ள அந்தக்
கயவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஒரு இந்தியக் குடிமகன் கேட்பது அவனுக்கு இழுக்கு. அதை ஒரு இந்திய அரசியல் தலைவர் நினைத்துப் பார்ப்பதே அவருக்கு மானக்கேடு. அதற்கு ஒரு அரசாங்கம் செவி
சாய்த்தால் அது தனக்கே செய்துகொள்ளும் துரோகம். இதில் இரண்டாவது, தமிழகத்தில் தடபுடலுடன் பரவலாக வெளிவந்துவிட்டது. மூன்றாவது, தமிழக கவர்னரின் முடிவைப் பொறுத்தது. தற்போதைய இந்தியாவின் பொது வாழ்க்கையில், அதுவும் அரசியல்
நிகழ்வுகளில், நல்லதோ சரியானதோ நடக்கும்வரை அப்படி நடக்கும் என்று ஆணித்தரமாக
சொல்ல முடியாது.
தமிழக தலைவர்கள் விடுக்கும் கோரிக்கையின் மஹா அபத்தத்தை அழுத்தமாக
புரிந்துகொள்ள ஒரு கற்பனையான உதாரணத்தை நினைத்துப் பார்க்கலாம். தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க,
மற்றும் பல தமிழக பொடிக் கட்சிகளின் பிரதான தலைவர்கள் யாராவது இந்திய பிரதமர்
ஆனார் என்று வைத்துக் கொள்ளுங்கள். தேவ கௌடாவே பிரதமர் ஆன பிறகு யார்தான்
பிரதமர் ஆக சாத்தியமில்லை? சரி, அந்தக் கற்பனை பிரதமரின் பதவிக் காலம் முடிந்த
பின், துரதிர்ஷ்டமாக ஒரு அண்டை நாடு மற்றும் வேறு ஒரு இந்திய மாநிலத்தின் பல கிரிமினல்களின் கூட்டு
சதியால் அவர் படுகொலை செய்யப் பட்டார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அந்தக்
குற்றத்தில் பிடிபட்ட பத்து பேர்கள் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட்
தீர்ப்பு சொல்லி அவர்கள் இப்போது டெல்லி திகார் ஜெயிலில் ஆயுட்கால தண்டனை
அனுபவிக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி என்றால் தி.மு.க, அ.தி.மு.க,
பா.ம.க போன்ற கட்சிகளின் தலைவர்கள் அந்த பத்து குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை
செய்யுமாறு கேட்பார்களா ? மாட்டார்கள்.
மேலே சொன்ன உதாரண நிகழ்ச்சியில், அந்த பத்து குற்றவாளிகள் சிலரின்
சொந்த மாநிலத் தலைவர்கள் அப்படி விடுதலை-கோரிக்கை எழுப்பினால், நமது தமிழக
தலைவர்கள் வெகுண்டெழுவார்கள் இல்லையா? ’அப்படியான கோரிக்கை ஏற்கப்பட்டால், இந்தியாவின்
சுய பெருமிதம், நமது மக்களின் தேசப்பற்று ஆகிய பண்புகளை காலில் மிதித்து, நம்மை
நாமே உலக நாடுகள் பார்வையில் கேலிக்கு உள்ளாக்குகிறோம்’ என்று தமிழக தலைவர்கள் அப்போது
சரியாக ஆட்சேபிப்பார்கள். இப்போது அசல் ஏழு குற்றவாளிகளுக்கு விடுதலை
கேட்கும் தமிழக தலைவர்கள், அந்த உதாரணத்தின் பத்து குற்றவாளிகளுக்கு விடுதலை
கூடாதென்று ஏன் சொல்வார்கள்? ஏனென்றால், இப்போதும் அப்போதும் இது போன்ற தமிழக தலைவர்களுக்கு
நாட்டின் மீது அக்கறை இல்லை, பெருமையும் கிடையாது. ஓட்டின் மீதுதான்
ஆசையும் கவனமும். அதிலும், இப்போதைய கோரிக்கையானது அவர்களின் முறுக்கிய
கண்ணோட்டத்தின், தவறான கணிப்பின் விளைவுதான்.
தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க மற்றும் சில குட்டிக் கட்சிகள் தமிழகத்தின் மிகப் பெரிய ஓட்டு சதவிகிதத்தை கூட்டாக வைத்திருக்கலாம். ஆனால் அவர்களின் ஒவ்வொரு ஒருமித்த
நடவடிக்கைக்கும் அதே சதவிகிதத்தில் தமிழக மக்களின் ஆதரவு அவர்களுக்கு உள்ளது என்று அர்த்தமல்ல.
“இது மக்கள் கோரிக்கை, மக்கள் விருப்பம்” என்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த
ஒரு மாநில அமைச்சர். ஏழு குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டால் “அனைத்து
தமிழர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்” என்கிறார் தி.மு.க-வின் புதிய தலைவர். இது
பித்தர்களின் பிதற்றல். தமிழக மக்களின் கவலைகளும் பிரச்சனைகளும்
வேறு.
ஏற்கனவே ’தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாகி வருகிறது, நியாயம்
கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் போலிஸ் நிலையங்களுக்கு கூட போகமுடியவில்லை’ என்று
சாதாரண மக்கள் தமிழகத்தில் காலம் தள்ளுகிறார்கள். தமிழகத்தில் செல்வாக்கான
அமைச்சரில் இருந்து, டி.ஜி.பி-யான காவல் துறையின் தலைவரே குட்கா ஊழல் விவகாரத்தில்
சி.பி.ஐ-யால் இப்போது ரெய்டு செய்து விசாரிக்கப் படுகிறார்கள். மாநிலத்தின் ஒரு முதல்வர்
முறைகேடாக சொத்து குவிப்பு செய்தார் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டே ஊர்ஜிதம் செய்தது.
கெட்டிக்கார எதிர்க்கட்சியினர் ஊழல் தடுப்பு சட்டத்தின் பிடியிலிருந்து லாவகமாகத்
தப்பித்து கொழிக்கிறார்கள். மாநிலத்தின் இந்த பரிதாப நிலைமையில், அதன் காரண
கர்த்தாக்களின் பிடியில், அவதிப்படும் தமிழக மக்கள் அனைவரும் என்ன சிந்தனையில் இருப்பார்கள்?
‘இப்போது ராஜிவ் கொலைக் குற்றவாளிகளும் வெளி வருவதுதான் நியாயம். அப்போதுதான்
மக்கள் மேலும் பாதுகாப்பாக குதூகலமாக உணரமுடியும்’ என்று நினைப்பார்களா? அதுவும் கொலை என்ற வெறும் சொல்லே சாதாரண
மக்களுக்கு மன அசௌகரியத்தையும் சற்று அச்சத்தையும் ஏற்படுத்தும் போது?
டேவிட் ஹெட்லி என்கிற பாகிஸ்தானிய-அமெரிக்கன் ஒரு லஷ்கர் பயங்கரவாதி.
2008-ம் வருடம் நடந்த மும்பை குண்டுவெடிப்புக்கான திட்டமிடுதலில் அவனுக்கும்
பங்கு இருந்தது. அந்த பயங்கரவாத தாக்குதலில் 164 பேர் உயிர் இழந்தார்கள். அந்த
படுகொலைகளுக்காக, அமெரிக்கா அவன் மீது சிகாகோ நகர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்து, 2013-ம் வருடம் அவனுக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கிக் கொடுத்தது.
அவன் வழக்கு விசாரணையில் முழுவதுமாக ஒத்துழைத்து எல்லா உண்மைகளையும் கக்கியதால்,
அந்த நாட்டு சட்டமுறைப்படி அவனோடு செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில்,
மரண தண்டனையை தவிர்த்து குறைவாக அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை 35 ஆண்டுகள்.
இந்தியாவில் நடந்த ஒரு குண்டுவெடிப்புக்காக அமெரிக்கா டேவிட் ஹெட்லி மீது ஏன்
வழக்கு தொடுக்க வேண்டும், அதுவும் தன் நாட்டில்? ஏனென்றால், மும்பை தாக்குதலில்
கொல்லப்பட்ட 164 நபர்களில் ஆறு பேர் அமெக்க குடிமகன்கள். தனது
சாதாரண குடிமகன் ஒருவன் பயங்கரவாத தாக்குதலில் வெளி நாட்டில் உயிர்
இழந்தாலும், குற்றவாளியைப் பிடித்து தண்டிக்கிறது அமெரிக்கா. தனது 52-வது வயதில்
35 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற டெவிட் ஹெட்லி, 87 வயது வரை உயிருடன் இருந்தால்
வெளி வரமுடியாது. அந்த நாட்டு அரசியல் தலைவர்கள் டேவிட் ஹேட்லி முன்
கூட்டியே விடுதலை செய்யப் படவேண்டும் என்று கேட்க மாட்டார்கள். அவர்கள் சூடு சொரணை சுய கௌரவம் உள்ளவர்கள். ஆனால் நமது முன்னாள் பிரதமர்
ஒருவர் நமது நாட்டிலேயே பயங்கரவாதிகளால் தீர்த்து கட்டப்பட்டாலும், அதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கோர்ட் விதித்த தண்டனையை இன்னும் குறைத்து அவர்களை விடுதலை செய்யுமாறு
கேட்கும் தமிழக தலைவர்களே – நீங்கள் ஏன் வெட்கத்தையும் விட்டு விவஸ்தையும்
கெட்டீர்கள்?
* *
* * *
Copyright © R. Veera Raghavan 2018
I demand Bharat rathna for the seven and posthumous award bharath rathna
ReplyDeleteFor Sivarajan and lady guy
The death sentence was changed to life sentence for the cruel murder of Ex-prime minister and there is no justification at all to release such criminals .if there is case that there is doubt about the framing of charges and then, benefit of doubt may be claimed in court.otherwise , why a court confirmed criminal should be released? the vote bank politics has sunk to a new low in Tamil nadu.
ReplyDeleteThe aberration starts from the point that SC decides that this issue can be decided outside court by president's representative in the state, when president(s) have rejected the request earlier. Everyone wants high position but behave without matching authority.
ReplyDeleteThese murderers should have been sent to the gallows loooooong back. Tamilnadu petty politics kept them alive. You are right when you day these third rate politicians would not have behaved in the same had the victim been a Tamilnadu politician like them.
ReplyDeleteChittanandam
Will the SC twist this policy for all murder convicts?
ReplyDeleteWhat should not be overlooked is the fact that along with Rajiv Gandhi, one Superintendent of Police, eight police personnel and five members of the public died. Totally, 16 persons were killed. It is all right to call the case "the Rajiv Gandhi assassination case" but not proper to portray as if only Rajiv Gandhi died in Sriperumpudur in May 1991.
ReplyDeleteRidiculous chorus to release these hardcore convicts. Preplanned, premeditated murder. They should have been hanged to death. Why they were awarded life imprisonment ? now diluting that is nonsense.
ReplyDeleteStrange are the ways of supreme court.The present confusion is because of the wishy washy supreme court judgment.Looks like they want to wash their hands off the whole issue.Human right is only for criminals? What about the victims? It is all very well for rahul and priyanka to pardon them but what about the humpteen others who lost their lives?
ReplyDeleteIn fact their death sentence was commuted only because praying April sat on the papers for years together