என்ன நடக்கிறது ஜல்லிக்கட்டு விளையாட்டில்? இதைத் தெரிந்து கொள்ள நீங்கள் அந்த விளையாட்டுத்
திடலுக்குச் செல்ல அவசியம் இல்லை. அதன் விடியோ காட்சிகளை இணையத்தில் பார்க்கலாம். பார்த்து பரிதாபப் படலாம் – மாட்டுக்கும் மனிதனுக்கும்
சேர்த்து.
சிலர் ஜல்லிக்கட்டை ஒரு விளையாட்டு என்கிறார்கள். சிலர்
வீர விளையாட்டு என்று பெருமையோடு சொல்கிறார்கள். இன்னும் சிலர் தமிழ் நாட்டின் வீர
விளையாட்டு என்று பிரகடனம் செய்கிறார்கள்.
எது விளையாட்டு?
ஒருவர் மற்றவரோடு அல்லது இன்னொரு பிராணியோடு விளையாட வேண்டும்
என்றால் இரண்டு பேருக்கும் அந்த விளையாட்டில் ஆர்வம் இருக்க வேண்டும். அப்போதுதான்
அது விளையாட்டு என்று ஆகும். இரண்டு பேர் கூடி
பாண்டி ஆடலாம், சீட்டாடலாம், டென்னிஸ் ஆடலாம் – ஏன் சட்டசபைக்குள்ளேயே தலைவர் சொல்படி
தர்ணா செய்யலாம். இதெல்லாம் விளையாட்டு. வளர்ப்பு நாயோடு ஓடிப் பார்ப்பதும், எறிந்த பந்தை அது விரட்டிக் கவ்வித் திரும்புவதும்
விளையாட்டுதான். புலி தனது முன்னங்கால்களைத் தூக்கி, பழக்கியவரின் தோள்கள் மீது வைப்பதும் அவர் புலியைத் தழுவி நிற்பதும் இருவருக்கும் விளையாட்டு. மனிதர்களோடு நீரில் நீந்தி பல வித்தைகள் செய்கிறது டால்ஃபின். அது இர தரப்பினருக்கும் விளையாட்டு. ஆனால் காளை மாட்டை மிரள வைத்து, அதைத் தப்பிக்கவிடாமல் நூற்றுக்
கணக்கான இளைஞர்கள் சூழ்ந்து சீண்டி இழுப்பதும் அதன் திமிலைப் பிடித்து அமுக்குவதும் மாட்டுக்கு விளையாட்டல்ல, வினை. சிறுத்தைப் புலி கூட நூற்றுக் கணக்கான மனிதர்களைக்
கூட்டமாகப் பார்த்தால் அவர்கள் கண்ணில் படாமல் ஓடி ஒளியப் பார்க்கும். ஜல்லிக்கட்டில் காளை மாட்டுக்கும் அதே கதிதான்.
ஆனால் என்ன, மனிதர்கள் இல்லாத காடு சிறுத்தைக்கு உண்டு. மனிதர்களிடையே வாழும் காளை மாட்டுக்கு ஓட்டு இல்லை.
பிறகு அரசியல்வாதிகள் ஓட்டைப் பார்ப்பார்களா,
காளையை கவனிப்பார்களா?
நூற்றுக் கணக்கான மனிதர்கள் ஒரு காளை மாட்டைச் சூழ்ந்து ஆரவாரமாக
அதை அடக்க முனைந்தால் அது அச்சுறுத்தப் படுகிறது. அந்த நிலையே அதற்குத் துன்பமானது. ஆதன் கண்களிலும்
உடல் மொழியிலுமே மிரட்சி தெரியும். முன்பாக, மைதானத்துக்கு அருகில் கொட்டிலில் உள்ளபோதே,
தனக்கு நேரப்போகும் சித்திரவதையை அது உணர்கிறது. அவிழ்த்து விட்டாலும் கொட்டிலில் இருந்து வெளிவரவே
மறுத்து நிற்கிறது. அது வெளிவருவதற்கான வாசலும்
குறுகலான அகலம் கொண்டதுதான். பின்புறத்திலிருந்து
சிலர் மாட்டை உந்தி வெளியில் தள்ள, அது பயத்தில் வெளிப்புறம் பாய்கிறது. அப்போது அதைச்
சுற்றி விரட்டுபவர்களிடம் இருந்து மாடு தப்பிக்கவே வழி பார்க்கிறது – அவர்களோடு விளையாட
அல்ல. அதைத் தப்பிக்க விடாமல் தடுப்பவர்களைத்
தான் முட்டித் தள்ளியும் தூக்கி எறிந்தும் அது வழி செய்து கொள்கிறது - அவர்களைத் துன்புறுத்த அல்ல.
ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் சிலர், அது ஆயிரக் கணக்கான வருடங்கள்
நடந்து வந்த பாரம்பரியம் என்கிறார்கள். இருக்கலாம். மிகப் பழமையானது என்ற ஒரு காரணத்திற்காக
மட்டும் எந்தப் பழக்கத்தையும் இந்த நாளில் நாம் பின்பற்றுவதில்லை. ஆயிரக் கணக்கான வருடங்கள் பால்ய விவாகம் நம்மிடையே
இருந்தது, பலதார மணம் இந்துக்களிடையே நடந்தது, ஆண்கள் குடுமி வைத்திருந்தோம், மன்னர்கள்
ஆட்சி செய்தார்கள், போர்கள் புரிந்துக்கொண்டே இருந்தோம். பழமை தழைக்கட்டும்
என்று இவைகளை நாம் இப்போது போற்றவில்லை, விட்டுவிட்டோம்.
ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் சிலவகைக் காளைகளே அழிந்துபோகும்
என்கிறது இன்னொரு வாதம். இது பிராணிகள் இனம்
பாதுகாக்கும் அக்கறையினால் வரும் பேச்சல்ல. அந்தவகைக் காளைகள் அழியாமல் காப்பதற்கு அவைகளுக்குத் துன்புறுத்தல் தரவேண்டியதில்லை. புல்லும் கழனியும் கொடுத்தால் போதும்.
’ஜல்லிக்கட்டினால் காளைகளுக்குத் தீங்கு ஒன்றும் நேர்வதில்லை,
ஆகையால் அது தொடரட்டும்’ என்று பேசுகிற ஒரு பிரபலஸ்தர் சொல்கிறார்:
”ஜல்லிக்கட்டில் காளைகள் செத்ததில்லை, மனிதர்கள்தான் செத்திருக்கிறார்கள்”. சரி, அப்படியானால் ஜல்லிக்கட்டு மனிதர்களின்
நலனுக்காகவும் நடக்கக் கூடாதே? தாறுமாறாக வாகனம் ஓட்டுவது மனிதர்களுக்கு ஆபத்து என்பதால்
அதைத் தடை செய்கிற மாதிரி, ஜல்லிக்கட்டும் அதே காரணத்துக்காக நடக்காமல் இருப்பது நல்லது.
இன்னொரு பிரபலஸ்தர் ”ஜல்லிக்கட்டு நடக்கட்டும். அதை ’ஏறு
தழுவுதல்’ என்று அழைக்க வேண்டும்” என்று யோசனை தருகிறார். ஜல்லிக்கட்டில் காளைகள் படும் பாடு மாறாத போது,
அந்த ஆட்டத்திற்கு என்ன பெயர் வைத்தால் என்ன?
கொலை செய்வதை ‘இறைவனடி சேர்த்தல்’ என்று உயர்த்திச் சொன்னால், உயிர் எடுப்பது
மாறாதே?
ஜல்லிக்கட்டு நடப்பதும் நடக்காமல் இருப்பதும் சட்டம் சம்பத்தப்
பட்டது மட்டும் அல்ல. மனிதர்கள் வைப்பதுதான்
சட்டம். அது எப்படியும் இருக்கட்டும். சட்டத்திற்கு அப்பாற்பட்டு நம்மைப் பண்படுத்தும்
வேறு விஷயங்களும் இதில் அடக்கம். காட்சி ஒன்று
அதை நினைவுபடுத்துகிறது என்பதால் அதை மட்டும் இப்போது சொல்கிறேன். அதை இணைய விடியோக்களில் நீங்களும் பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டின் போது தன்னைச் சுற்றி நிற்கும் மனிதர்களிடமிருந்து
தப்பிக்க எண்ணி ஒரு காளை மாடு, மூன்று புறம் பத்தடி உயர சுவர்கள் கொண்ட ஒரு இடுக்கில்
மாட்டி நிற்கிறது. அங்கு பின்பக்கச் சுவற்றை
ஒட்டி பத்துப் பதினைந்து மாடுபிடி வீரர்கள், அவர்கள் தப்பிக்க வழி இல்லாமல், பம்மிப்
பதுங்கி இருக்கிறார்கள். அவர்களை நோக்கி வெறியோடு ஒரு
பாய்ச்சல், ஆக்ரோஷமான ஒரு முட்டு – இதை அந்தக் காளை செய்திருந்தால் தன்னைத் தொல்லை
செய்தவர்களில் இரண்டு பேரையாவது ஆஸ்பத்திருக்கோ மயானத்துக்கோ அனுப்பியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல், தான் விலகித் தப்பிக்கவே
இடம் தேடி பரிதாமாக நிற்கிறது அந்தப் பிராணி. காளை மாடு
நம்மிடம் காட்டும் கருணையை நாமும் அதனிடம் காட்டலாம்.
* *
* * *
Copyright © R. Veera Raghavan 2017
ஜல்லிக்கட்டு வேண்டாம் என்பதற்கு நல்ல, நம்பக்கக்கூடிய, ஒத்துக்கொள்ளத்தக்க கருத்துக்களைக் கூறியிருக்கீறீர். நன்றி.
ReplyDelete(I am Mr KRAN's friend.)
I want jallikattu banned .It is not a sport.It harmas animals and man .There is no valour in it
ReplyDeleteJallikattu is barbaric.It shows primitive culture.Man becomes an animal and bull becomes human.What a perversion!
ReplyDeleteI think the cruelty to the bulls is all highly exaggerated.l have watched the sport. Perhaps many including the Court think it is like matador bull fight where the men fight the bull with swords for the purpose of killing.ourPeople do it with bare hands. The owners get the bulls ready 5 days before the event.And the same people maintain and feed the bull for 360 days.I am sure they have not watched in person.
ReplyDeleteThe best thing is to permit it. The sport does not have much inherent attraction for the educated youth. In a decade it will become a video game where young children will catch a virtual bull by using a computer device.
ReplyDeleteThe ban on jallikattu has given an unnecessary cause for political rallying.
You have presented an objective analysis. Our media is responsible to this undue glorification of Jallikattu, encouraging disobedience of rule of law set by SC. An insignificant practice in some nooks and corners of Tamil Nadu is projected disproportionately as a milieu of TN. What is sad is no leader /celebrity comes forward to raise voice against the vice.
ReplyDeleteVery well written!
ReplyDeleteEducated youth should replace Jallikattu with a modern sport.
Thats really a nice review!!
ReplyDeleteLove your arguments and style! i am 100% with you on this. i did not watch (nor do i plan to) any of the internet videos. i saw one post on FaceBook, of a female MLA arguing against Jalli Kattu. The number and nature of vulgar responses from those supporting Jalli Kattu made me wince! Since they have a FB account and enough smarts to operate a computer or a smart phone, i assume many among these are "educated youth". If so, the prospects of educated youth helping in banning this activity are rather bleak. :-(
ReplyDeleteThose VIPs who are supporting Jallikattu should take part in the same. Any sport that causes harm to others should be eschewed. I am sad that this has become a political issue.
ReplyDeleteyou mentioned about dog.while training the dog it is beaten win Stick. Is that not cruelty. If you start seeing cruelty then don't eat egg, amlett, Briyaniac. Also don't eat vegetables which has life when it is in plant. You don't have the right to plug it. As per Vedha one living being food is other living beings death. Then only ecology will be balanced.
ReplyDeletemaybe we can say cruelty can be minimised.
Most impotantly note that any opposition for our reasonable Traditional practices, projects like Narmada dam, Koodankulam, cow protection.bad intention of sloping the growth , convertion is involved indirectly in the name good intention, by which we arefooled. For details call me or Mailme
Well written.. Lot of valid points are there
ReplyDelete