நாங்கள் கேட்டது ”இந்தியாவிலிருந்து அல்ல, இந்தியாவிற்குள்
சுதந்திரம்” என்று புதிய விளக்கம் சொல்லி கோஷம் எழுப்பி இருக்கிறார் ஜவஹர்லால் நேரு
பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யூ-வின்) மாணவர் தலைவர் கன்னையா குமார். தேசதுரோக வழக்கில் கைதாகி பிறகு டெல்லி உயர்நீதி
மன்றத்தில் பெயில் வாங்கி வெளியில் வந்து அவர் பேசியது இது. உள்நாட்டு சுதந்திரம் மறுக்கப்படும் நாடானால் அங்கிருந்து
இது போன்ற கூக்குரலை ஒருவர் வெளியிட்டிருக்க முடியாது. அது டெலிவிஷன், செய்தித்தாள்கள் மூலமாக பின்னர்
மேலும் பரவியும் இருக்காது.
அடிப்படை ஜனநாயக சுதந்திரம் ஒரு நாட்டில் இல்லை என்றால் அதற்கான
அடையாளங்கள் நன்றாகத் தெரியும். அங்கு தேர்தல்கள்
பாரபட்சமின்றி நடக்காது. மேலும் அது போன்ற நாட்டில் ஆளும் கட்சியைத் தலைநகரிலேயே தீர்க்கமாக
தேர்தலில் வென்று அரவிந்த் கேஜ்ரிவால் போல் முதல் அமைச்சராக முடியாது. அல்லது நாட்டிலேயே
அதிகமான அரசியல் அதிகாரங்கள் கொண்ட பிரதம மந்திரியை கன்னையா மாதிரி சவால் விட்டு எக்காளமாக
விமரிசிக்க முடியாது. மற்றொரு அடையாளம், ஆட்சியைப் பற்றி குடிமக்கள்
துணிவாக விமரிசித்தால் அவர்கள் தொடர்ந்து சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க மாட்டார்கள்.
சீனா, பாகிஸ்தான், ஈராக், கியூபா, சிங்கப்பூர் ஆகிய சில நாடுகளில் இந்த அடையாளங்கள் சிரிதும் பெரிதுமாக
உண்டு. இது போன்ற வேறு பல நாடுகளும் உள்ளன.
இந்த நாடுகளில் தேசதுரோக வழக்கில் ஒருவர் கைதானால் கோர்ட்டு மூலம் பெயில் கிடைப்பது
மிக அரிது. பெயில் கிடைத்து விட்டாலும் வெளியே
வந்துவிட்டு “இந்த நாட்டுக்குள் சுதந்திரம் வேண்டும்” என்று கூட்டமாக நின்று கோஷம்
போட்டால் பிறகு அவரைத் தேட வேண்டும். இந்தியாவில் தனி மனித உரிமைகளுக்கு – அதுவும்
அரசை எதிர்க்கும் சுதந்திரத்திற்கு – இப்படிக் குறைகள் இல்லை.
நமது நாட்டில் சுதந்திரத்தைப் பற்றிக் குறை உண்டென்றால் அது
கட்டுப்பாடில்லாமல் கிடைக்கிறது என்பதுதான் – அதாவது முறையான அரசுக் கட்டுப்பாடோ அல்லது
பொறுப்பான சுய கட்டுப்பாடோ இங்கு இல்லை. இவற்றிற்கு
வலுவான ஒரு சாட்சி - இந்தியாவில் பல நாசவேலைகள் செய்த தீவிரவாதிகளும் அவர்களுக்குக்
கிடைத்து வரும் அரசியல் தலைவர்களின் ஆதரவும்.
கன்னையா குமார் என்ன சொல்ல வருகிறார்? எதிர்க் கட்சித் தலைவர்களான
சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவால், லாலு பிரசாத், நிதிஷ் குமார்,
முலயாம் சிங் யாதவ், மாயாவதி போன்றவர்களுக்கெல்லாம் சுதந்திரத்தை அனுமதித்து விட்டு,
ஒரு சில மாணவர்களை மட்டும் மத்திய அரசு கட்டுப் படுத்துகிறது என்கிறாரா? அப்படி என்றால் அந்தத் தலைவர்களுக்கு நிகரான, அல்லது
அவர்களுக்கும் இல்லாத, அரசியல் சக்தி இந்த சாதாரண மாணவர்களிடம் உள்ளதாமா? ஆம் என்றால் அவர்கள் பல்கலையை விட்டு வெளியே வந்து
தீவிர அரசியலில் ஈடுபட்டு இன்னும் பெரிதாக வளர முயற்சிக்கலாம். ஆம் என்றாலும் இல்லை என்றாலும் பல்கலைக் கழகத்தை
விட்டு இந்த மாணவர்கள் வெளியேற வேண்டும். ஏனெனில்
படிப்பில் ஈடுபட்டு அதற்குண்டான அறிவை வளர்த்துக் கொள்பவர்களுக்கான இடம் அது மட்டுமே. அந்த ஆர்வம் கொண்டவர்கள் வேறு இடத்தில் அதைப் பூர்த்தி
செய்ய முடியாது. படிப்பில் முழுக் கவனம் செலுத்த
வேண்டிய வருடங்களில் மாணவர்கள் தீவிரமாக வேறு வேலைகளிலும் – முக்கியமாக அரசியலில்
– இறங்கி நேரத்தை விரயம் செய்யக் கூடாது. இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின்
வளர்சிக்கும் அமைதியாக படிப்பு விஷயங்களில் மட்டும் இயங்கும் பல்கலைக் கழகங்கள் தேவை.
ஆளும் கட்சியையும் பிரதம மந்திரியையும் – அது எந்தக் கட்சியோ அவர் எந்த நபரோ - எதிர்த்தோ
அல்லது வேறு வகையில் அரசியல் செய்ய விரும்பினால் அதற்கான இடம் வெளி இடம். அந்தப் பெரிய
வெளி இடம் கன்னையா குமாருக்கும் அவர் போன்ற ஆர்வம் கொண்ட சக மாணவர்களுக்கும் டெல்லியிலும்
இந்தியாவெங்கும் உண்டு.
சிறப்பான ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி போன்ற கல்விக் கூட வளாகங்களில்
ஜே.என்.யு-வில் காண்பது போல் மாணவர்களிடையே அரசியல் நாட்டமும் உத்வேகமும் இல்லை. அந்த
மாணவர்கள் படிப்பில் மட்டும் குறியாக இருந்து தானும் வளர்ந்து தங்கள் கல்வி நிலையங்களுக்கும்
பெருமை சேர்க்கிறார்கள். படிப்பில் முழுக் கவனம் வைத்திருப்பதை விட மாணவர்களுக்கு வேறு முக்கிய வேலை கிடையது. ஆனால் ஜே.என்.யு மாணவர்கள் பத்திரிகைகளாலும் டி.வி-க்களாலும் பேசப்படுவது
அம் மாணவர்களின் கல்விச் சிறப்பால் அல்ல. இது ஜே.என்.யு-விற்கு எற்பட்டிருக்கும் நிர்கதி.
இன்னொரு விஷயம். தாங்கள் கோரிய விடுதலையானது பசி, ஏழ்மை,
ஊழல், ஜாதிப் பிரச்சினை ஆகியவற்றிலிருந்து மீள்வதற்கான விடுதலைதான் என்று இப்போது மேலும்
விளக்குகிறார் கன்னையா. ஆனால் நடந்து முடிந்த நிகழ்சிகள் என்ன காட்டுகின்றன? சென்ற
பிப்ரவரி 9-ம் தேதி ஜே.என்.யு வளாகத்தில் நடந்த அஃப்சல் குரு ஆதரவுக் கூட்டத்தின் பின்னணியில்தான்
கன்னையா கைது செய்யப்பட்டார். கன்னையாவும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். அந்த தேதிதான்
அஃப்சல் குரு தூக்கிலடப்பட்டு இறந்ததின் நினைவு நாள். அவரைப் போற்றும் விதமாக நடந்த கூட்டத்தில் அஃப்சல்
குருவின் படங்களும் பிரதானமாகத் தென்பட்டன.
அஃப்சல் குரு பிரிவினைவாதியாக இருந்தவர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர் பகுதிக்குச் சென்று அந்த நாட்டு ராணுவத்திடம்
பயிற்சி பெற்றவர். பாராளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் அடைக்கலம்
தந்து அந்தத் தாக்குதலுக்கு துணை போனவர். அந்த
வழக்கில் தான் அவருக்கு மரண தண்டனை கிடைத்து நிறைவேற்றப் பட்டது. இப்படித்தான் அஃப்சல்
குரு அறியப்பட்டாரே தவிர இந்தியாவில் பசி, ஏழ்மை, ஊழல், ஜாதிப் பிரச்சினை ஆகியவற்றைப்
போக்கப் போராடினார், பாடுபட்டார் என்பது கிடையாது. அவரின் நினைவைப் போற்றும் கூட்டத்தில்
எழுந்த விடுதலை முழக்கம் எதற்காக என்பதை பின்னர் வேறு எப்படி விளக்கினாலும் எடுபடுமா என்ன?
கன்னையா குமார் வலது கம்யுனிஸ்ட் கட்சியை சார்ந்தவர். அது
அவர் விருப்பம். பெயிலில் வந்த அவர் ஜே.என்.யு மாணவர்களிடையே பேசியபோது பிரதமருக்கு
எதிராக அரசியல் ரீதியில் வார்த்தைகள் விட்டுமிருக்கிறார். அவற்றில் ஒன்று: “இந்தியாவில்
31 சதவிகிதம் பேரின் ஆதரவுதான் உங்களுக்கு உண்டு. 69 சதவிகிதம் உங்களை எதிர்த்து வாக்களித்துள்ளார்கள்”
என்று பிரதமரை நோக்கி அவர் சொன்னது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் 281 சீட்கள் கைப்பற்றி
ஆட்சி அமைத்த ஒரு கட்சியின் தலைவரைப் பற்றி ஒரே ஒரு சீட் வெல்ல முடிந்த ஒரு கட்சியின்
ஆதரவாளர் பேசுகிற பேச்சு இது! அவர் ஜே..என்.யூ-வில் பயிலும் ஒரு ஆராய்ச்சி மாணவரும்
கூட! பிரதமரை எதிர்க்கும் டெல்லி முதல் மந்திரிக்கும் அந்தப் பேச்சு அல்வாவாக இனித்திருக்கும்.
ஆனந்தப்பட்ட கேஜ்ரிவால் “என்ன பிரமாதமான பேச்சு!” என்று ட்வீட் செய்கிறார். ஜே.என்.யு
மாணவர்கள் படிப்பிலிருந்து எவ்வளவு விலகி வந்திருக்கிறார்கள், அரசியல் ஆதாயத்துக்காக
சில தலைவர்கள் அந்த இளைஞர்களை எப்படிப் பகடையாக உருட்டிப் பார்க்கிறார்கள் என்பதுதான்
இதில் தூக்கி நிற்கும் மிக வருத்தமான விஷயம்.
கன்னையா குமார் மற்றும் சில மாணவர்கள் மீதான தேச விரோத வழக்கை
கோர்ட் எப்படிப் பார்த்து முடிவு செய்யப் போகிறது என்பது இப்போது முக்கியமான விஷயமல்ல. கோர்ட்டின் முடிவு எப்படி இருந்தாலும் இது விஷயமாக
சட்டத்தில் இன்னும் தெளிவு ஏற்பட வகை உண்டு.
மத்திய அரசை எதிர்க்கும் ஒரு மாணவர் தலைவர் மீது வேறு எதேனும் அரசியல் சார்ந்த
கிரிமினல் வழக்கு எற்பட்டு அவர் பெயிலில் வந்து இருந்தால் – அதுவும் ஜே.என்.யு-வை சேர்ந்தவரானால்
– அப்போதும் எதிர்க் கட்சிகள் இதே ஆர்வத்தையும் பாசத்தையும் அந்த மாணவர் தலைவர் பால்
காண்பிக்கும். அந்த பல்கலைக் கழகத்தில் படிப்பின்
முக்கியத்துவம் கண்டிப்பாக பாழ்படும்.
எதோ “சுதந்திரம் சுதந்திரம்” என்று கேட்டு விட்டு இப்போது ”இந்தியாவிலிருந்து அல்ல, இந்தியாவிற்குள் சுதந்திரம் என்றுதான் கேட்டோம்” என்கிறார்கள். இது கேசுக்கு உதவுமோ என்னவோ, போகட்டும். நல்ல வேளை! “புதிதாக 251 ரூபாய்க்கு வந்திருக்கும்
ஃப்ரீடம்-251 எனப்படும் செல்போன்தான் நாங்கள் கேட்ட ஃப்ரீடம்!’ என்று விளக்காமல் விட்டார்களே!
இந்தியாவின் அளவிற்கு சுதந்திரம் கொண்டாடும் அமெரிக்காவிலோ,
இங்கிலாந்திலோ கன்னையா குமார் மாதிரி ஒரு மாணவர் தலைவர் “தேவை நாட்டுக்குள் சுதந்திரம்!”
என்று கோஷம் எழுப்பினால் மக்கள் சிரிப்பார்கள்.
அதே கோஷத்தை சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஒருவர் வெளிச் சொன்னால் பின்னர்
அவர் அழுவார் – அவர் இருக்கும் வரை. இந்தியாவில்
ஒருவர் அப்படி கோஷம் போட்டால் – அதுவும் ஜெ.என்.யு-வில் போட்டால் – அவர் சிரித்துக்
கொண்டு அரசாங்கத்தை அழ வைக்கலாம்; இந்திய பொது மக்கள் சிரித்துக்கொண்டே அழவேண்டும்.
* * * *
*
படித்தேன்; இரசிக்க முடியவில்லை. இந்திய சுதந்திரத்தைப் பற்றி நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொண்டாலும், இன்றைய நிலையில் அக்கிரமக்கார தேசத்துரோகி அரசில், அந்த சுதந்திரம் பறிபோவதை யாரால் ஏற்றுக்கொள்ள முடியும்?
ReplyDeleteஅருமையாக சொல்லியுள்ளீர்கள். ஒரு பலகலைக்கழகத்தை இடதுசாரி அரசியலுக்கும் ஆண்-பெண் ஆபாசங்களுக்கும் தீணி போடும் தளமாக வளர்த்துவிட்டு அதை யாராவது கேள்வி கேட்டால் அதை சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பது நாட்டு நாசவேலை. உண்மையான சுதந்திரம் சுயகட்டுப்பாட்டிலதான் இருக்கிறது.
ReplyDeleteDear Raghavan, excellent points! Very well written! Loved the ending! I must disagree with Mr Subbaraman that a "desa drogi arasu" is in operation. And i agree with "dogra"'s line "uNmaiyaAna suthanthiram.....".
ReplyDeleteRaghavan This unknown person is kannan/Balkee
DeleteI fully agree with your views. There are many negative points with the Government. But use anything and everything as a cudgel is sheer opportunistic political stand. Peple are trying to thwart any good work attempted by the Government. I agree anti-government is not anti-national. But eulogising those antinational criminals is not nationalistic.
ReplyDeletevery skewed views.1.அடிப்படை ஜனநாயக சுதந்திரம் ஒரு நாட்டில் இல்லை என்றால் அதற்கான அடையாளங்கள் நன்றாகத் தெரியும். அங்கு தேர்தல்கள் பாரபட்சமின்றி நடக்காது.- DO U MEAN TO SAY IN INDIA WE HAV A UN-BIASED ELECTION?. What abt bribing voters? How MODI &CO can relentlessly fly across d country in private jets [of corporate houses]. Bias takes umpteen number of forms. What is d source of income of political parties?.HOW MANY POLITICAL PARTIES PAY POWER BILLS= for the use electrisity fot their rallies.???.2. படிப்பில் முழுக் கவனம் வைத்திருப்பதை விட மாணவர்களுக்கு வேறு வேலை கிடையது. SORRY, I KNOW YOU & ME WENT TO LITT FESTIVALS, WENT TO MOVIES CUTTING CLASSES, SPENT DAYS IN LIBRARY READING CLASSICS- i m B.Com., BL- HAD LOT OF EXTRA CURRICULAR activities- if students remain purely academic, I FEEL SORRY FOR A DUMB & DEAF NATION [of course like present India]. IF DURING FREEDOM MOVEMENT, if students remain purely academic, YOU AND I MAY NOT HAV THIS BLOG DISCUSSION friend.By the way I hav first hand knowledge about AT LEAST IIM-Lucknow - which is highly vibrant.3. பிரதமருக்கு எதிராக அரசியல் ரீதியில் வார்த்தைகள் விட்டுமிருக்கிறார். அவற்றில் ஒன்று: “இந்தியாவில் 31 சதவிகிதம் பேரின் ஆதரவுதான் உங்களுக்கு உண்டு. 69 சதவிகிதம் உங்களை எதிர்த்து வாக்களித்துள்ளார்கள்” என்று பிரதமரை நோக்கி அவர் சொன்னது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் 281 சீட்கள் கைப்பற்றி ஆட்சி அமைத்த ஒரு கட்சியின் தலைவரைப் பற்றி ஒரே ஒரு சீட் வெல்ல முடிந்த ஒரு கட்சியின் ஆதரவாளர் பேசுகிற பேச்சு இது! - BY THE SAME LOGIC CAN I SAY A THIRD STD drop-out cannot arest a Ph.d " scholor". WELL Jaitley openly accepted that it is an ideological war. HITLERS NEVER WON IT PERMANENTLY. Modi is a small fry in d world history.
ReplyDelete