-- ஆர். வி. ஆர்
நான் யார்?
(பாடல்)
|
நான் நான் நான் நான் நான்
யார் யார் யார் நான் யார்
மொழி மதம் தேசம் தான் – நான்
யாரென்று உணர்த்திடுமா – நான்
யாரென்று உணர்த்திடுமா
|
மரம் செடி கொடிகளைப் போல்
பிற உயிரினங்களைப் போல்
பூமியும் விண்மீன் போல் – நானும்
இயற்கையின் புதிரல்லவா? – நானும்
இயற்கையின் புதிரல்லவா?
|
அண்டம் தோன்றிய நாள் – அதில்
உள்ளவை எத்தனை கோள்
வானத்தின் வெளி எல்லை – நாம்
இவை பல அறிந்ததில்லை – நாம்
இவை பல அறிந்ததில்லை
|
இயற்கையின் புதிராய் நான் –
வெறும்
சிற்றறிவுடையோன்
நான் – எந்தன்
புதிரை அறிவு வணங்க – நீ
அமைதி காக்க மனமே – நீ
அமைதி காக்க மனமே
|
25/07/2025 Author: R. Veera Raghavan, Advocate, Chennai