Monday, 28 May 2018

மோடியே காரணம்! ஓடியே போகணும்!


வானம் விழுந்தாலும் மோடி - பசுஞ்
சாணம் விழாதாலும் மோடி!

பூமி வெடித்தாலும் மோடி - நாய்
டாமி குரைத்தாலும் மோடி!

கானகம் எரிந்தாலும் மோடி - வெல்லப்
பானகம் புளித்தாலும் மோடி!

வெயில் சுட்டாலும் மோடி - தீ
கையில் பட்டாலும் மோடி!

மழை பெருகி வந்தாலும் மோடி - சாதம்
குழைந்து வெந்தாலும் மோடி!

பத்தும் செய்வான் மோடி - பகையைப்
பித்தும் செய்வான் மோடி!

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018