Saturday, 30 July 2016

Life and Lies of Arvind Kejriwal

        Who said three days ago, "They may kill us!"? 

      Not Indian jawans keeping vigil at LoC, thinking of Pak military and worried about their families back home.  It was Delhi chief minister Arvind Kejriwal of AAP in a You Tube video, saying he and other leaders of his party could be killed on the orders of prime minister Narendra Modi and BJP president Amit Shah.  The charge really looms over Modi whose image and nationwide appeal, not Shah's, brought BJP to power at the Centre and dashed Kejriwal's dreams of becoming prime minister through the 2014 national elections. 

       Kejriwal  further said  Modi might get  it  done because  of ‘frustration’ with Kejriwal, stemming from – as Kejriwal believed these reasons existed - AAP’s victory over BJP in the 2015 Delhi assembly elections, AAP’s present good work in Delhi and its growth in a few other states.  The charge and its explanation are outright funny and downright silly.  A newspaper which generally applauds Modi front-paged the news saying the Delhi chief minister was 'ranting', while another one which is generally critical of Modi shunted the news to its inside pages saying Kejriwal 'claimed' to feel threatened. This is a sample of both supporters and opponents of Modi not taking Kejriwal's declared apprehension seriously.  That is healthy in the watching of public affairs.  What, then, is the need for anyone to talk about this further?

       Kejriwal is a chief minister functioning from the national capital which houses the prime minister's office too.  He wants Delhi to be made a full-fledged state with greater powers of administration.  And he wants to become prime minister soonest – so he expressed doubts in his video speech if the country was safe in Modi's hands. When that man says publicly that the country's prime minister might get him killed out of sheer political rivalry, it needs to be discussed. Modi may just ignore Kejriwal over this issue, in a politically wise stance.  But in the public domain Kejriwal must hear others.

       Assume that Kejriwal really feels his life could be shortened through Modi's directives. Then it means a feeling that Modi would want it enacted before his current tenure as prime minister ends, which is about 3 years from now. Reason: if Kejriwal lives long enough to face the next Lok Sabha elections in 2019 Modi will fear losing out to Kejriwal in those elections and hence he would prefer Kejriwal to be out of the scene by then – so would Kejriwal want us to believe.  Kejriwal, who thinks his popularity is swelling, should also imagine that Modi's frustration with Kejriwal would rise day by day, and that Modi would want his wishes fulfilled at the earliest.  All these naturally flow from Kejriwal's direct allegations. Let us go further.

       Lives of elected political leaders all over the world are rather unsafe, whatever their political beliefs.  If they are left unprotected any madman could fire a shot at them or throw a knife or a bomb at them.  The attacker may not always act on the orders of a political rival and could himself be insane.  He could also be a disgruntled member of the same political group or party as the targeted leader.  So the state machinery should monitor threats to the lives of all political leaders and give them protection when needed, without talking much about it.  Sometimes the best of protection by the state may not also be good enough, when it would be a sad day for the whole country whoever the victim.  Leaving all this aside, as a mortal any leader could breathe his last owing to an organ failure or other ailment.  Kejriwal wants us to believe that if he or any of his party leaders leave this world for any reason, in the next three years or later, Modi should automatically become the prime suspect of a plot behind it.  This is a vicious hope.

      The world knows about a country where a similar charge by a chief minister of a region against a person holding a higher rank and wielding a huge authority could be quite credible.  But the man under such a death threat will know that if he speaks about it publicly the threat could be more surely carried into effect.  That is Pakistan.  Kejriwal knows he lives in a far safer and better governed India, where the judiciary functions independently, the rulers are not oppressive and the military is not all-powerful.

       Kejriwal  has  touched  a  new  low  from  a  high position.  If a municipality chairman in India makes a charge like Kejriwal has done, it is level one low.  When a chief minister in the country does it, he reaches level two low.  If, God forbid, any prime minister of the nation will ever do it, it is the ultimate low.  The higher the position a person occupies, a notch higher is the dignity he should assume and the responsibility he should show in words and action.  The reason is this.  A person among the last ranks of an administration and doing misdeeds at the workplace does not easily infect all others in the set-up, unless many others do it by themselves and there is no action to check any of them.  But if the one person who is at the top does things wrongly, irresponsibly or corruptly, though deviously, others down the line will follow him and his clever ways.  So Kejriwal has sent a wrong signal to political leaders, established or upcoming, that the way to keep one’s place in politics and engage with political opponents is through wickedly dramatized falsehood.  What he said may be legally a non-event, but is morally poisonous in public life.  We should hope that the public spot it.

      True, Kejriwal led his AAP to win 67 out of 70 seats in the last Delhi assembly elections.  He fought against the campaign of Modi, a serving prime minister, and won to become Delhi’s chief minister.  He deserves a lot of credit for his victory.   No doubt Modi should look at his defeat with humility, and defeat also naturally helps in that. Kejriwal too should take his electoral success with humility, even more of it for the victor, but so far he has given no proof of it. 

      The Delhi chief minister has quickly given proof on one thing - that his dubious motives have begun inspiring others, at least within his party.  A day after Kejriwal released his video speech charging Modi, Asim Ahmed Khan who is a sitting AAP lawmaker of Delhi – who was a former minister in Kejriwal’s cabinet but dropped later on charges of corruption – told newsmen that Kejriwal and his aides had threatened to kill Khan because, as Khan claimed, the lawmaker had materials to ‘expose’ Kejriwal.  No prizes to anyone for guessing that Khan learnt a new trick from Kejriwal, just wished to blacken the name of his estranged leader and so alleged that Kejriwal gave out a death threat.  Of all persons, Kejriwal knows that his troubled party man is on a calculated foul play, posing as a victim. Because Kejriwal knows himself.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2016

Wednesday, 6 July 2016

சுவாதி படுகொலை, ராம்குமார் கைது, மற்றவை யாதெனில்


   நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அரிவாள் வீசி சுவாதியைக் கொலை செய்தது நான்தான் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறானாம் கைதான ராம்குமார். அவன்மீதான வழக்கை கோர்ட் சரியாக விசாரித்துத் தீர்ப்பு சொல்லட்டும். ஆனால் இதே ரீதியில் பிற அப்பாவிப் பெண்களின் உயிரிழப்புக் கதைகள் பலவும் டெலிவிஷன் மற்றும் பத்திரிகைகளில் வருகின்றன. தமிழ்நாட்டில் பிரபலமான இரண்டு பழைய வரிகளை – அதன் அர்த்தம் என்னவானாலும் – தற்காலத்தில் இப்படி மாற்றிச் சொல்லலாம்: “காதல்! காதல்! காதல்! காதல் போயின், கொலை செய்தல்! செய்தல்! செய்தல்!” ஏன் இந்த அவலம்?

   ஒரு ஆணும் பெண்ணும் ஒரு தடவையாவது பார்த்துக் கொண்ட பிறகு அவன் அவளைக் கொலை செய்தால் –  அதுவும் இருவரும் இள வயதினராக இருந்தால் – அது காதல் விவகாரமாக இருக்கவேண்டும் என்பது பலரின் ஊகமாக இருக்கிறது. அதுவும் கொலையாளியே “நான் அவளைக் காதலித்தேன். ஆனால் அவள் என் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் ஆத்திரம் அடைந்தேன்” என்று பிடிபட்டவுடன் சொல்லிவிட்டால் “ஐயோ பாவம்!” என்று தங்கள் அனுதாபத்தைக் கொலையாளியின் பக்கம் சற்றுத் திருப்பிவிடும் சினிமாக்கதை மோகிகளும் உண்டு.  காதல் இப்படியெல்லாம் செய்யத்தூண்டுமா என்ன?  இல்லை, அதுவல்ல காதல்.

    காதலின் அடையாளம் மதிப்பும் மரியாதையும். மற்றொருவரை மதிக்காமல், அவர் மீது மரியாதை கொள்ளாமல், அவர் மீது காதல் கொள்ள முடியாது. இரண்டு பேர் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்றால் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்றும் அர்த்தம். ஆண்-பெண் இடையே ஒருவருக்கு மற்றவர் மீது காதல் ஏற்பட்டு, மற்றவருக்கு அதில் நாட்டமில்லை என்று தெரிந்துவிட்டால் முதலாமவர் தன் காதல் எண்ணத்தைக் கைவிடவேண்டும்.  “மாட்டேன். அந்த நபரைத் தொடர்ந்து என் காதலை வெளிப்படுத்துவேன். அவர் என் காதலை ஏற்று என்னைத் திருமணம் செய்துகொள்ளும் வரை அவரை வற்புறுத்துவேன்.  அவர் மறுத்துக் கொண்டே இருந்தால் அவர் மீது கத்தி, அரிவாள், ஆசிட் போன்றவற்றைப் பிரயோகிக்கவும் தயங்க மாட்டேன்” என்ற எண்ணம் கொண்ட எவருக்கும் அந்த மற்றவர் மீது மதிப்பில்லை, ஆதலால் காதலுமில்லை என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

 நம்முடன் பழகும் சகமனிதர்கள் மீது நாம் எப்போது மதிப்பு வைப்போம்? அவர்களும் நம்மை மதிக்கும்போது, அல்லது அவர்களின் மதிப்பை எதிர்பார்த்து, நாம் அவர்கள் மீது மதிப்பு வைப்போம். தன்னைச் சுற்றி இருந்த பலதரப்பட்ட மனிதர்களின் பெருமதிப்பைப் பெற்றவர் மஹாத்மா காந்தி. அவரும் அந்த மற்றவர்களிடம் மதிப்பு கொண்டிருந்தார். சகமனிதர்கள் நம்மை மதிக்காமல் அலட்சியம் செய்தாலும் நாம் அவர்களை மதிக்கிறோம் என்றால் நம்மிடம் இருப்பது பயம் என்று அர்த்தம். (காந்திக்கு நேர் மாறாக, பயத்தையே விரும்பிப் பெற்று மகிழ்வுறும் தலைவர்களும் உண்டு.)   

     பரஸ்பர மதிப்பின் அவசியம் காதலுக்கும் பொருந்தும். பல ‘காதல் கொலை’ செய்திகளை ஆராய்ந்தால், தான் கொலை செய்த பெண் தன்மீது மதிப்பு வைத்திருந்தாளா என கொலைகார ஆண் எண்ணிப் பார்த்திருக்க மாட்டான். அவனுக்கும் அவள்மீது மதிப்பு என்கிற உணர்வு இருந்திருக்க முடியாது. தான் விரும்பியபடி அவள் தன்னை ஏற்கவில்லையே என்கிற எதேச்சாதிகாரக் கோபம்தான் அவனிடம் இருந்திருக்கும்.  ஆகையால், இந்த ரகக் கொலைகள் ‘காதல்’ சம்பத்தப் பட்டவை அல்ல.  இவை எப்படிப் பட்டவை என்பதை இன்னும் தெளிவாக உணர இரண்டு சம்பவங்களை உதாரணமாகப் பாருங்கள்.  கத்தியைக் காட்டி “கழட்டித்தா நகையை’’ என்று ஒரு பெண்ணை மிரட்டும் திருடன், அவள் எதிர்த்தால் அவளைக் கொல்லலாம்.  ‘காதலை’க் காட்டி ‘‘மணம் செய் என்னை” என்று ஒரு பெண்ணைத் துரத்தும் இளைஞனும், அவள் மறுத்தால் அவளைக் கொல்லலாம். இரண்டு காட்சிகளிலும், கேட்பவனுக்கு சுயலாபமும் சுயதேவையும்தான் குறிக்கோளே தவிற பெண்ணைப் பற்றி ஒரு அக்கறையுமில்லை.  

  இளவயதின் ஈர்ப்பால் மட்டும் இருவர் வாழ்க்கையில் இணைந்து, அவர்களுக்குள் பரஸ்பர மதிப்பு இல்லை என்றால் வாழ்க்கை அவர்களுக்கு இனிக்காமல் போகிறது என்பதை நாம் பார்க்கிறோம்.  இப்போது நம் சமுகம் பல தளங்களில் வெளிப்படையானதாக இருக்கிறது. குழந்தைகள் வளர்ந்துவிட்ட பின், எந்த நீண்டநாள் உறவுக்கும் – அதுவும் ஆண்-பெண் சம்பத்தப்பட்ட விசேஷ உறவுக்கு – பரஸ்பர மதிப்பு எற்பட வாய்ப்பிருக்கிறதா என்பதைக் கவனிக்கவேண்டும் என்று வீட்டுப் பெரியவர்கள் மெள்ள மெள்ள சொல்லிக் கொடுப்பது நல்லது. பல பெரியவர்களுக்கே இந்த உண்மை தெரியாது. அதனால் அவர்கள் வீட்டு இளைஞர்களுக்கும் இது எளிதில் புரிபடாமலே இருக்கும். எதுவானாலும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் நம்மைக் காக்க வேண்டும்.

  பொதுவாக இன்னொரு விஷயம். தனது காதல் ஆசையை ஏற்காத பெண்ணைக் கொலை செய்யும் ஆணின் அறியாமையைக் கவனியுங்கள். ‘காதல் நிராகரிப்பு’ என்ற காரணத்தால் ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டுக் கடைசிவரை அவன் போலீசில் மாட்டிக் கொள்ளவில்லை என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள் (இந்தியாவில் இது அதீத கற்பனை அல்ல).  அப்போதுகூட, அப் பெண்ணின் மறைவால் அவன் ஒன்றும் நிம்மதியாகவோ மகிழ்ச்சியாகவோ இருக்க முடியாது. அவனது வேண்டாத ஆத்திரம் ஒரு கொலையால் சற்றுத் தணிந்தது என்பதைத் தவிர அவனுக்கு ஒரு பயனும் கிடையாது. பின்னர் வரும் தலைமறைவு வாழ்க்கையும் எப்போது வேண்டுமானாலும் பிடிபட்டு தண்டனை கிடைக்கலாம் என்கிற அச்சமும் அவனை இன்னும் வதைக்கப் போகிறது. “என்னை மதிக்காத, என்னை விரும்பாத அந்தப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேனே! வேண்டாம் அவள்” என்று அவனே விலகிப் போயிருந்தால் விடுதலையும் நிம்மதியும் அவனுக்குக் கிட்டியிருக்கும். ஆக முதலில் அவன் தன் நலம் அறியாத மூடன், பின்னர் தண்டனை பெறவேண்டிய மூர்க்கன்.

   சுவாதி கொலை வழக்கிலும் கோர்ட் உண்மைக் குற்றவாளியை ஊர்ஜிதம் செய்து கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்ற அளவில் மட்டும் நாம் அந்த வழக்கைப் பற்றிச் சொல்லலாம்.

* * * * * 

Copyright © R. Veera Raghavan 2016