Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (21.10.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் இப்படிப்  பேசுகிறார்: "தீபாவளி சமயத்தில் என்னைப் பார்க்க வருகிறவர்களுக்கு என்னிடம் தீபாவளி வாழ்த்து சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.  எனக்கு தீபாவளி வாழ்த்து சொன்னால் நான் கோபித்துக் கொள்வேனோ என்றும் நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நம்பிக்கை உள்ளவர்களுக்கு நான் தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் சொல்கிறேன்." உதயநிதியின் வெளிப்படையான பேச்சு பற்றி உங்கள் கருத்தென்ன?


பதில்:
உதயநிதி இப்படிப் பேசி இருந்தால் வெளிப்படைத் தன்மை அதிகம் இருக்கும். "ஹிந்துக்கள் திமுக-வுக்கு அளிக்கும் ஓட்டுக்களில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. ஆனால் அவர்கள் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகைக்காக அவர்களுக்கு ஒரு வாழ்த்து சொல்வதில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் நான் அந்த சமயத்தில் ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்லாமல் போனால், அதை பாஜக மக்களிடம் பெரிதாகப் பேச முற்பட்டு அதனால் 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக எத்தனை ஓட்டுகளை இழக்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை. அதுபற்றி உள்ளூரக் கொஞ்சம் பயம் இருக்கிறது. அதே சமயம், இது திராவிட மாடல் அரசு. ஆகையால் நான் ஹிந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்னதாகத் தெரிய வேண்டும், சொல்லாததாகவும் இருக்க வேண்டும். இந்த நினைப்புடன்உணர்வே இல்லாமல் மரக்கட்டைத் தனமாக ஒரு அரைகுறை தீபாவளி வாழ்த்தை அவர்களுக்குச் சொல்லித் தொலைக்கிறேன்!" இதுதானே உதயநிதி உள்மனதில் எண்ணியதாக இருக்கும்?

 

 

 

பகுதி 4  // 21.10.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment