-- ஆர். வி. ஆர்
| 
 சிங்கத்தின் கண்களில் ஆதிக்கம் அமைத்து சேவலின் கண்களில் செருக்கைச் சேர்த்து 
 | 
| 
 யானையின் கண்களில் பொறுமையைப் பூட்டி பூனையின் கண்களில் ஆர்வத்தை அமர்த்தி 
 | 
| 
 எலியின் கண்களில் பீதியைப் பரப்பி புலியின் கண்களில் ஆக்ரோஷம் அடைத்து 
 | 
| 
 நாயின் கண்களில் நன்றியை நிறுத்தி பசுவின் கண்களில் சாந்தம் செதுக்கி 
 | 
| 
 மானின் கண்களில் மிரட்சி மிதக்க மனிதன் கண்களில் பாசாங்கைப் புதைத்து 
 | 
| 
 அவரவர் தன்மையைக் காட்டியும் மறைத்தும் அற்புதம் செய்வது விழிகள்தானோ! 
 | 
   முதல் பிரசுரம்:  ‘பூபாளம்’, பிப்.
2022
* *
* * *
Copyright © R. Veera
Raghavan 2022
அவரவர் பார்வையைப்பொறுத்தது
ReplyDeleteAwesome 👍 congratulations 🎉
ReplyDeleteஅருமையான எண்ண ஓட்டம். கண்களும கவி பாடும்.
ReplyDeleteExcellent
ReplyDeleteGood read. I agree mostly. 😊
ReplyDeleteBeauty lies in the eyes of the beholder.... Ur eyes went a step further.. Wow!
ReplyDeleteஅற்புதம்
ReplyDelete