Monday 16 December 2019

Citizenship Law, Amended. Why Is It Just and Fair?


-- RVR

       India has amended its citizenship law. Now it helps some non-Muslims, viz., Hindus, Sikhs, Buddhists, Jains, Parsis and Christians of three nations to become citizens of India. The three countries are India's Muslim-majority neighbours: Pakistan, Bangladesh and Afghanistan. Beneficiaries under the changed law should have come into India by 31st December 2014 and been here for five years to apply for citizenship.

Renowned lawyers say the amendment is Constitutionally sound. But leaving legal issues to the Supreme Court, why is the new law just and fair, and why do the Congress and some other parties oppose it?

First, some basics. All nations have to make some key laws and regulations in tune with the psyche and aspirations of its people - in a democracy, according to the wishes of a majority of its voters, as reasonably gauged by a government or as found in a referendum where it works.  Like, the UK may make a law or regulation for exiting from EEC, though a minority of voters may prefer their country remaining within EEC. 

Hindus make nearly 80% of India's population, Muslims about 14%, and others 6% as per the 2011 census.  India is the land of origin of Hinduism, and this emotionally and eternally means a lot for Indian Hindus – and for Hindus elsewhere too – though the Indian Constitution may be silent about it. Indian laws do not just treat non-Hindus equally with the Hindu majority. They give minorities some privileges which the 80% Hindus don't get. Legally, Hindus are treated somewhat unequally in the land of their origin and culture. When that inequality is worked on the ground, abused and also maladministered, it hurts the Hindus more, though that was unforeseen by the law. 

Now, look at citizens of minority religions in Pakistan, Bangladesh and Afghanistan, mainly Hindus who have ethnic links with Indian Hindus. They have been persecuted over there for years and have vastly shrunk in their numbers in those countries. Many among them have taken refuge in India. Where else will the Hindus among them go or gain sympathy and acceptance? 

Hindus of India will naturally feel for the tormented members of their religion in other nations - especially Pakistan, Bangladesh and Afghanistan - and would welcome India giving relief to those distressed men and women. That is natural. But something more is needed for action to help. It needs an extraordinary daring to espouse and do the right thing while governing a nation, more so when faced with opposition and protests stoked by rival political parties. This is what the BJP-led government has done through changes in the citizenship law.  While doing this right thing, the BJP will also be appreciated by large sections of Indian voters, which the Congress party and many other Opposition parties are worried about. So, the Congress and other parties oppose this measure as discriminatory – in an attempt to embrace imagined Muslim victims of the new law, and unaware that their stance distances them from a large number of voters even further.

Look at this. Pakistan prime minister Imran Khan tweets his condemnation of our changed citizenship law. The Congress party and its leader Rahul Gandhi too issue statements opposing the new law. Would you believe that Pakistan never wishes India well and so opposes India's citizenship amendment – and that the Congress party too reflects Pakistan's views against India? Or would you imagine that the Congress party always does things right for India and so opposes the new law – and that Pakistan too allies with Congress sentiments for the good of India? Pakistan and the Congress party together faulting the present Indian government on our domestic issue shows their desperation against the Modi government.  After all, Modi is a hurdle to both of them on their plans for India and for themselves.

      Critiques in the media question why Muslims who came to India from Pakistan, Bangladesh and Afghanistan as refugees are not offered Indian citizenship on par with other refugees.  This is also the voice of some Opposition political parties.  First, Muslim nations have to take care of their Muslim citizens, and there can be no religious persecution of Muslims by Muslims.  Second, this criticism is adding insult to injury for the Indian Hindus who are already being outgrown in their land by privileged minorities, especially Muslims.  Accelerating the fall in the strength of the native Hindu population in any way is against the interests and well-being of Indian Hindus. You don’t need big brains to sense this. If you have doubts, ask people forming the majority religion in any other country if they would be at peace when minorities on their land steadily grow fast to outnumber the majority. India’s Hindus are beginning to realise that their tolerance, goodness and hospitality have been abused by some rulers and political parties who overly appease India’s vociferous minorities and neglect genuine Hindu concerns and anxieties.  

The average Indian Muslim, whose ancestors were Hindus, is harmless and could peacefully co-exist with Indian Hindus. But he is in the grip of his religious and political exploiters and is misled by them in harbouring a needless antipathy to Hindus or imagined insecurity in India, though enjoying privileges he cannot get in any other country, even in a Muslim-majority nation.  

       The political and religious exploitation of Indian Muslims for the selfish gains of a few leaders plays a part in the protests stirred up against the amended citizenship law in parts of India. Concerns expressed by citizens in India’s north-eastern states are on a different footing, and the government must listen to them and resolve those issues separately. Otherwise, it is a test of strength for India’s political leadership to do the right thing, and stand by it with tact, diplomacy and resolve. Who else is our best bet on this except Narendra Modi, with Amit Shah by his side?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019



Friday 15 November 2019

ராம ஜென்ம பூமி: ஹிந்துக்களுக்கு வாழ்த்துக்கள். முஸ்லிம்களுக்கு நன்றி. சுப்ரீம் கோர்ட்டுக்கு சல்யூட்.


          -- ஆர். வி. ஆர்

ராம ஜென்ம பூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, நியாய எதிர்பார்ப்புகள்  வைத்திருக்கும் ஹிந்துக்களை திருப்தி செய்கிறது. முஸ்லிம்களும் நியாய  உணர்வு கொண்டிருப்பதால் அவர்களையும் சாந்தமாக வைத்திருக்கிறது. ஏன் எப்படி?

      முகலாய மன்னர் பாபர் இந்தியாவில் நாலே முக்கால் வருடங்கள் ஆட்சி செய்து மறைந்தார். அதற்குள், 1528-29 வருடங்களில் அவர் உத்தரவால் அயோத்தியில் ஒரு மசூதி கட்டப்பட்டது. அதுதான் பாபர் மசூதி.

‘அயோத்தி நகரில் ராமர் அவதாரமாகப் பிறந்த இடம் இது' என்று ஹிந்துக்கள் காலம் காலமாக நம்பி அந்த ஸ்தலத்திற்கு ‘ராம ஜென்ம பூமி‘ என்று பெயரிட்டு வணங்கி வரும் ஒரு நிலப்பகுதி உள்ளது. அது உத்திரப் பிரதேசத்தில் இருக்கிறது.  ‘அதே நிலத்தில், அதே இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப் பட்டது, அதை அப்புறப்படுத்தி அங்கு ஒரு ராமர் கோவில் கட்டவேண்டும்’ என்பது ஹிந்துக்களின் கோரிக்கையாக இருந்தது. பின்னர் 1980-களில் அதுவே ஒரு இயக்கமாக உருவெடுத்தது. இதில் தீவிரமாக இருந்தவர்கள் ஒன்று திரண்டு 1992-ம் வருடம் அந்த மசூதியை இடித்தார்கள். அதன் பிறகு, ராம ஜென்ம பூமி நில உரிமை, வழிபாட்டு உரிமைகளுக்காக ஏற்கனவே நடைபெற்று வரும் வழக்குகளில் அலகாபாத் ஹை கோர்ட் ஒரு தீர்ப்பு அளித்தது. அதை  எதிர்த்து அப்பீல்கள் சுப்ரீம்  கோர்ட்டுக்கு சென்றன.

சென்ற 9-ம் தேதி சுப்ரீம் கோர்ட் எல்லா அப்பீல் வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கி விட்டது. அதன்படி, பாபர் மசூதி இருந்த இடத்தில் புதிதாக ராமர் கோவில் கட்டலாம், அதற்குத் தடை இல்லை என்று தெளிவாகி விட்டது. அதாவது, சுமார்  ஐந்து நூற்றாண்டுகளாக மசூதியாக இருந்த கட்டிடம் இப்போது முற்றிலும் நீக்கப்படும், அதே நூற்றாண்டுகளாக ஹிந்துக்கள்  கனவு கண்ட  ராமர் கோவில் அதே நிலப்பரப்பில் எழப் போகிறது. அயோத்தியில் மொத்த ஹிந்துக்களுக்கும் நேர்ந்த ஒரு மாபெரும் சரித்திரத் தீங்கும் அவமானமும் நிவர்த்தியாகும். 

அயோத்தி நகரில், அதுவும் ராம ஜென்ம பூமி என்று ஹிந்துக்கள் பூஜை  செய்து கொண்டாடும் இடத்திலேயே, பாபர்  ஒரு மசூதி கட்ட ஆரம்பித்தபோது ஹிந்துக்கள்  என்ன மன வேதனையை அனுபவித்திருப்பார்கள்? - அதுவும் மத நம்பிக்கைகள் ஓங்கி இருந்த 16-ம் நூற்றாண்டு ஹிந்துக்கள்? இதில் இன்னொரு விஷயமும் உண்டு.

அலகாபாத்  ஹை கோர்ட் உத்தரவுப்படி, நிலுவைையில் இருந்த வழக்குகளுக்காக இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India) பாபர் மசூதி நிலத்தில் 2003-ம் வருடம் அகழ்வாராய்ச்சி செய்தது. வழக்குகளின் பார்ட்டிகள், அவர்களின் வக்கீல்கள் முன்னிலையில் போட்டோக்கள் வீடியோக்கள் சகிதம் ஒளிவு மறைவு இல்லாமல் அது நடந்தது. அந்த ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங்களும் ஹிந்துக்களின் கோரிக்கைக்கு வலு சேர்த்தன. என்னவென்றால், பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பரந்த வலுவான பொதுக் கட்டிடம்தான் பாபர் மசூதிக்கு உடனடி அடியில் கிடக்கிறது, அந்தப் பழைய கட்டுமானத்தின் மேல்தான் மசூதி எழுப்பப் பட்டது என்று தெரிய வந்தது. அந்த கீழ்க் கட்டுமானத்தில் காணப்பட்ட அடையாளங்களில் சில: 17 வரிசையில் தூண்கள், வரிசைக்கு ஐந்தாக 85 தூண்கள், அந்தத் தூண்களின் மேல் அனுமார்,  நரசிம்மர், பிள்ளையார், துர்க்கை போன்ற பல விக்கிரகங்கள், இன்னொரு இடத்தில் வட்டவடிவமாக ஒரு கருவறை,  அதிலிருந்து அபிஷேக தீர்த்தம் வெளியேற நீர் வழி, இன்னும்  மயில், கருடன், தாமரை போன்ற உருவங்கள்.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அனைத்தையும் கோர்ட்டுக்கு அறிக்கையாக சமர்ப்பித்த தொல்லியல் துறை, அது கண்டெடுத்த பல அடையாளங்கள் துல்லியமாக வடநாட்டுக் கோவில்களில் காணப்படும் அம்சங்கள் என்று முடிவாகச் சொன்னது.  இது எல்லாவற்றையும் குறிப்பிட்டு, இந்திய தொல்லியல் துறை எட்டிய கீழ்க்கண்ட முடிவுகள் தமக்கும் ஏற்புடையவை என்று சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் சொல்கிறது. 


(1) பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. அதன்  அடியில், முன்பே எழுப்பி இருந்த கீழ்க் கட்டுமானம் இருக்கிறது என்று அகழ்வாராய்ச்சி காட்டுகிறது. அந்த கீழ்க் கட்டுமானம், மசூதியின்  பரப்பளவிற்கு நிகரான அல்லது அதிகமான விஸ்தீரணம் கொண்டது.  மசூதியின் அடித்தளமானது அந்த கீழ்க் கட்டுமானத்தின் மேலாக அமர்ந்திருக்கிறது.

(2)  அந்த கீழ்க் கட்டுமானம் இஸ்லாமியக் கட்டுமானம் அல்ல. 

(3)அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கைவினைப் பொருட்கள், சிதிலாமான தொல்பொருட்கள் அனைத்தும் கூட  இஸ்லாம்-அல்லாத வகையானவை என்று தெளிவாகத் தெரிகிறது.

         இறுதியாக  சுப்ரீம் கோர்ட் இப்படிச் சொல்கிறது:, “கீழ்க் கட்டுமானம் பன்னிரண்டாம் நூற்றாண்டு  காலத்திய கோவில் கட்டமைப்பு என்று இந்திய தொல்லியல் துறை எட்டிய  முடிவு ஆதாரங்கள் கொண்டது”. சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்ட இந்த சங்கதிகளுக்கெல்லாம்  என்ன அர்த்தம் என்று எவரும் நடைமுறையில் ஊகிக்கலாம்.

மசூதியின் கீழ்க்கட்டுமானம்  பற்றி அகழாய்வு கொண்டுவந்த தடயங்களும் ஆதாரங்களும், ஹிந்துக்களுக்கு ஐந்து நூற்றாண்டுகளாக தொடரும் காயத்தின் நிரூபணம். இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் களிம்பு, ஹிந்துக்களுக்கு அவசியமானது என்றும் இந்த ஆதாரங்களே அறைகூவிச் சொல்கின்றன. இப்போது ரணம் குறைந்திருக்கிறது என்பதால் ஹிந்துக்கள் மகிழ்ச்சி அடைகிறார்களே தவிர, மசூதி முற்றிலுமாக நீக்கப்படும் என்பதால் அல்ல. எல்லா ஹிந்துக்களும் இதை சத்தமாகச் சொல்லாவிட்டாலும் இதுதான் உண்மை. இந்தியாவில் வசிக்கும் பெருவாரியான இஸ்லாமியர்கள் இந்த உண்மையை, ஹிந்துக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவர்த்தியைசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் உள் நியாயத்தை உணர்கிறார்கள். இஸ்லாமியர்கள் இதை உரக்கப் பேசாவிட்டாலும் இதுதான் உண்மை. அதனால்தான் அவர்கள் இந்தியா முழுவதும் தீர்ப்பைத் தொடர்ந்து அமைதி காக்கிறார்கள்.

தீர்ப்பின் நியாயத்தை ஏற்றதற்காக, இஸ்லாமியர்களின் சகோதர உணர்விற்காக    ஹிந்துக்கள் அவர்களைப் பாராட்ட வேண்டும். இரு தரப்பு மக்களின் இந்த அற்புதமான மனநிலையைக் கருத்தில் கொண்டுதான், பிரதமர் மோடியும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு "யாருக்கும் வெற்றியோ தோல்வியோ அல்ல" என்று பொறுப்புடன் பேசினார்.

பொதுவாகவே நீதி மன்றத் தீர்ப்புகளை மதிக்க வேண்டும் என்று எல்லா இந்திய மக்களும்  நினைக்கிறார்கள். அதற்கு ஏற்ப, பெருவாரியான  தீர்ப்புகளும் - விசேஷமாகசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் - சரியாகத்தான் நீதி வழங்குகின்றன. ராம ஜென்ம பூமி விவகாரத்திலும் நமது சுப்ரீம் கோர்ட்டு உயர்ந்த  நியாயத்தை நிலை நிறுத்தி இருக்கிறது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இந்தத் தீர்ப்பை  அமைதியாக, மௌனமாக ஏற்றதும் இதற்கு சாட்சி. இந்தத் தீர்ப்பின் நியாயத்தை வேறுவிதமாகவும் புரிந்து கொள்ளலாம்.

நடக்க முடியாத ஒரு விஷயத்தை இப்படி யோசித்துப் பாருங்கள். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு மசூதியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஒரு ஹிந்துக் கோவில் வரவேண்டும் என்று ஹிந்துக்கள் நினைத்தால் - அப்படி நினைக்க மாட்டார்கள் - அதை இஸ்லாமியர்கள் ஏற்பாற்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஆனால் அயோத்தியில் இருக்கும் ஐநூறு ஆண்டுகள் பழமையான ஒரு மசூதிக் கட்டிடம் நீக்கப்பட்டு அங்கு ராமர் கோவில் வரப் போகிறது, அதற்கு நீதி மன்றமும் வழி செய்கிறது என்றால், அதை நாடு முழுதும் உள்ள இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். காரணம்சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படை நியாயம் இந்திய முஸ்லிம்கள் மனதில் படிகிறது. 

ஐந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்தத் தீர்ப்பை அளித்தது, அதுவும் தங்களின் ஒருமித்த தீர்ப்பாக எழுதியது, அதுவும் ஒரு முஸ்லிம் நீதிபதியும் அவர்களில் ஒருவராக இருந்தது, அவர்களது தீர்ப்பின் நியாயத்திற்கு ஒளி கூட்டுகிறது.

இந்த மகோன்னதமான தீர்ப்பு கிடைக்க எத்தனை சந்தர்ப்பங்கள் அதிர்ஷ்டவசமாக ஒன்று கூட வேண்டும் பாருங்கள். முதலில் முக்கியமாக, இந்தத் தீர்ப்பைத் தூக்கி நிறுத்தும் இதிகாச வரலாற்று நியாயம் இருக்கவேண்டும். அது உண்டு. இரண்டாவது, சுப்ரீம் கோர்ட்டில் அந்த நியாயத்தை சட்டம் ஏற்கும் வகையில் சரியாக முன்வைக்கிற அனுபவம் வாய்ந்த வக்கீல்கள் வேண்டும். மூத்த வழக்கறிஞர் திரு. கே. பராசரன் முன்னணி வகிக்க அதற்கான நல்ல வக்கீல்கள் அமைந்தார்கள். மூன்றாவது, வக்கீல்களின் வாதங்கள் சிறப்பாக இருந்தாலும் நுண்ணிய பார்வை, துல்லிய நியாய உணர்வு கொண்ட நீதிபதிகள் ஐந்து பேர்களாக இந்த வழக்கை விசாரிக்க அமர வேண்டும். அதுவும் இங்கே அமைந்தது.

கடைசியாக ஒன்று. இந்தியாவை வணங்கி, ஹிந்து மதத்தை உதாசீனம் செய்யாமல்அனைத்துப் பிரிவு மக்களையும் சமமாகப் பாதுகாக்கும் நரேந்திர மோடி என்னும் ஒரு பெரிய அரசியல் தலைவரின் ஆட்சி மத்தியில் இப்போது நடை பெறுகிறதே, அதுவும் இங்கே சூட்சுமமாக இயங்குகிறது. அவரது தலைமை உள்ள ஆட்சியின் போதுதான் இந்தத் தீர்ப்பும் அழகாக அமைதியாக அமலாகும்.  இப்படி எல்லாம் கூடி வந்து கிடைத்த நல்ல தீர்ப்பு இது. ஹிந்துக்களுக்கு வாழ்த்துக்கள். முஸ்லிம்களுக்கு நன்றி. சுப்ரீம் கோர்ட்டுக்கு சல்யூட்.


* * * * *

Copyright © R. Veera Raghavan 2019

Saturday 2 November 2019

சுஜித் மரணம் - கட்சிகள் ஏன் லட்சங்கள் தருகின்றன?

     
        -- ஆர். வி. ஆர்

இரண்டு வயது சுஜித் வில்சனின் சோக மரணம் தமிழகத் தலைவர்களின் பாசாங்கு அரசியலை பளிச்சென்று காட்டுகிறது.

திருச்சி, மனப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் சுஜித்தின் தந்தை   பிரிட்டோ ஆரோக்கியராஜ் ஒரு தோட்டத்தில் பயிர் செய்தார். அந்த நிலத்தில் ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்டி பின்னர் அதைக் கைவிட்டார். ஆனால் அவர் அதை சரியாக  மூடாமல் வைத்திருக்க, அந்த கிணற்றுக் குழியில் சுஜித் தவறி விழுந்து ஆழத்தில் சென்று விட்டான். வல்லுநர்கள் உதவியுடன் தமிழக அரசு எண்பது மணி நேரம் மீட்பு முயற்சிகள் செய்தும் பலன் இல்லாமல் குழந்தை உயிர் இழந்தது. 

திறந்த கிணறு வெட்டினால் கிணற்றைச் சுற்றி பாதுகாப்பாக மூன்று அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் கட்டுகிறோம். ஆழ்துளைக் கிணறு தோண்டிய பின் அதைக் கை விட்டால், அந்தக் குழியில் சிறு குழந்தைகள் விழுந்துவிடக் கூடாது என்று அதைத் திடமாக மூடி வைக்கவேண்டும். இது அவசியமான பாதுகாப்பு நடவடிக்கை. இதை சுஜித்தின் தந்தை செய்யவில்லை.

குழந்தையைப் பறிகொடுத்தது பெற்றோர்களுக்கே இழப்பு என்றாலும், ஒரு மனித உயிர் விபத்தில் மடிந்ததற்கு சுஜித் தந்தையின் அலட்சியமும் ஒரு முக்கிய காரணம் - சட்டப் படியும் சாதாரண பொது அறிவின் படியும். பொறுப்பான ஒரு அரசாங்கம் இதற்காக பிரிட்டோ ஆரோக்கியராஜ்  மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் தமிழகத்தின் பாசாங்கு அரசியல் அதற்கு இடம் தரவில்லை. சுஜித்தின் தந்தை ஏதோ ஒரு உயிரற்ற தங்க பொம்மையைத்தான் தொலைத்தவர் மாதிரி, அவருக்கு லட்ச லட்சமாக  இழப்பீட்டுப் பணம் தருகிறார்கள் அரசும் அரசியல் கட்சிகளும். தி.மு.க, அ.தி.மு.க, தமிழ்நாடு காங்கிரஸ், தமிழக அரசு ஆகியவை தலா ரூபாய் பத்து லட்சம், தே.மு.தி.க ரூபாய் ஒரு லட்சம் என்று சுஜித்தின் பெற்றோர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். 

ஒரு மனிதத்தன்மையான ஆறுதல் இழப்பீடு என்பதையும்  தாண்டி, கொடுக்கிறவர்கள் ஏதோ லாட்டரி மாதிரி வாரிக் கொடுத்திருக்கிறார்கள். லாட்டரியில் பரிசு கிடைத்தவனை மற்றவர்களுக்கு காட்டிஅவனுக்கு தண்டோரா போட்டு, லாட்டரி நடத்தும் ஆசாமி கமுக்கமாக தனது பெரிய லாபத்தில் கவனமாக இருப்பான் அல்லவா? அப்படித்தான் சுஜித்தின் பெற்றோர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் கணக்குப் போட்டு பரிசு விநியோகம் செய்திருக்கின்றன. “தமிழக அரசு சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஒரு கோடி ரூபாயும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரவேண்டும்” என்றுகூட ஒரு பொடிக் கட்சித்  தலைவர் தனது  பம்பர் லாட்டரி  பிஸினசுக்கு அரசு செலவில் அஸ்திவாரம் போட முயல்கிறார். சுஜித்தின் பெற்றோர்களுக்கு குழந்தையின் நினைவும் இழப்பும் மங்கிப் போய் புதுக்கனவுகள் தோன்றலாம். இந்த விஷயத்தில் அரசியல் தலைவர்களிடம் பாசங்குத்தனம் மேலோங்கி நிற்பதற்கு காரணங்கள் உண்டு.

பொது மக்களின் துயர் துடைப்பவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் அப்பாவி வாக்காளர்களிடம் ஓட்டு வேட்டை ஆடுவது தமிழக அரசியல் கட்சிகளின் போக்கு. இதற்கு ரூட் போட்ட  பெருமை தி.மு.க-விற்கு உண்டு.

உண்மையாகவே மக்களின் சிரமங்களைப் போக்கவேண்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால் அதற்கு சரியாக சிந்திக்க வேண்டும், உழைக்க வேண்டும், பொருளாதார திட்டங்கள் வகுக்க வேண்டும், அவற்றை வேகமாக செயல்படுத்த வேண்டும் – முதலில், சொந்த வசதி வருமானத்தைப் பற்றி குறியாக இருக்கக் கூடாது. இதெல்லாம் தமிழகத்தின் பிரதான கட்சிகளின் ரத்தத்தில் இல்லாத விஷயங்கள். 'மக்கள் நலன் நடவடிக்கைகள்என்று ஏதோ சுலபத்தில் பாசாங்கு செய்துவிட்டு, பொது மக்களை அவற்றில் மயக்கி வைத்து அரசியல் செய்வதுதான் தமிழகத்தின் முக்கிய கட்சிகளுக்கும் அவர்களை அண்டி பிழைப்பு நடத்தும் சிறு கட்சிகளுக்கும் அமோக பயன் தரும் வழிகள். 

குழந்தை சுஜித்தின் மரணம் திடீரென ஏற்பட்டதில்லை. நான்கு நாட்கள் அவன் அவஸ்தைப்பட்டு பின்னர் உயிர் விட்டிருக்கிறான். பத்திரிகைகளிலும் டெலிவிஷனிலும் அவனது மீட்பு முயற்சிகள் பற்றி தொடர்ந்து செய்திகளும் காட்சிகளும் விவாதங்களும் வந்தன. பொதுமக்களுக்கு சுஜித் மீது நாளுக்கு நாள், மணிக்கு மணி அநுதாபம் அதிகமாகிக் கொண்டே வந்தது. கடைசியில் அவனது உயிர் இழப்பு அந்த அனுதாபத்தை பெரும் சோகமாக மாற்றியது. அதை அப்படியே தமக்கு மக்கள் ஆதரவாகவும் பின்னர்  ஓட்டுக்களாகவும் மாற்ற ஒரு குறுக்கு வழி, சுஜித் பெயரை சொல்லி அவன் பெற்றோர்களுக்கு பெரிய பண உதவி செய்வது என்று தமிழகத்தின் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இயல்பாக நினைத்தார்கள்.  ‘குழந்தை பிழைத்து மக்கள் நிம்மதி அடைந்தால் கூட இந்த வாய்ப்பு நமக்குக்  கிடைக்காது’ என்றும் நினைத்திருப்பார்களோ என்னவோ! இந்த ரீதியில் சுஜித்தின் அப்பாவிற்கு பணம் கொட்டியது. 

இன்னொரு பக்கம் பாருங்கள். நோயில் விழுந்து பிழைக்காத குழந்தைகள் உண்டு. டெங்கு காய்ச்சலும் குழந்தைகளை பலி வாங்குகிறது அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும்  பலன் இல்லாமல் குழந்தைகள் இறப்பதுண்டு. சாலை விபத்திலோ தண்ணீரில் மூழ்கியோ சில குழந்தைகள் உயிர் விடுகிறார்கள். அவைகளின் பெற்றோர்களுக்கும், சுஜித்தின் பெற்றோர்களைப் போல குழந்தைகளின் அகால மரணம் பேரிழப்பு, பெரும் துக்கம். ஆனால் இது போன்ற அம்மா அப்பாக்களிடம் அரசும் அரசியல் கட்சிகளும் சுஜித் பெற்றோர்களிடம் வெளிப்படுத்திய கருணையில் அரைக்கால் பங்கு கூட காட்டுவதில்லையே, பெரும்பாலும் அவர்களுக்கு ஒன்றுமே தருவதில்லையேஅது ஏன்? ஏனென்றால், சுஜித் விஷயத்தில் பொதுமக்களின் அனுதாபம் மற்றும் சோகம் பெரிதாக எழுந்தது, மற்ற குழந்தைகளின் வேறு விதமான மரணங்களில் அது ஏற்படாது. அதற்கு ஏற்றபடிநமது அரசியல்வாதிகளும் எந்த சந்தர்ப்பத்தில் எந்த மாட்டிடம் கறக்க முடியுமோ அங்கேதான் கறக்கப் போவார்கள். அங்குதான், வேண்டிய புல்லையும் எடுத்துப் போடுவார்கள்.  மனிதாபிமானமும் இல்லைஒரு மண்ணும் இல்லை என்றால் சரிதானே?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019


Wednesday 9 October 2019

"ஏய் காற்றே! உன் மேலதான் கேஸ் போடணும்! நீதான் அக்யூஸ்டு!" - பொன்னையனின்  சட்ட  பாயிண்ட்!  

        -- ஆர். வி. ஆர்


அதிமுக-வின் சி. பொன்னையன் சட்டம் படித்தவர். தமிழ்நாட்டின் சட்ட அமைச்சராகவும் இருந்தவர். இது பலருக்கும் தெரியும். ஆனால் அன்னாரின் அபார சட்ட ஞானத்தைப் பற்றி நிறையப் பேருக்கு தெரியாது. அந்தக் குறை இனி வேண்டாம் என்று அவரே  தனது சட்டப் புலமையின் மகத்துவத்தை சொல்லிக் காட்டிவிட்டார். அதைக் காதால் கேட்டவர்களுக்கு, நிச்சயம் புல் பூண்டு வெங்காயம் எல்லாம் அரித்திருக்கும்!

சென்னையில் ஒரு முன்னாள் அதிமுக கவுன்சிலர் இருக்கிறார். சமீபத்தில் அவர் தனது மகன் திருமணத்திற்காக, விழா மண்டபத்தை ஒட்டிய சாலை நடுவே முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் புன்னகைக்கும் படங்கள் கொண்ட வரவேற்பு பேனர்களை வரிசையாக வைத்திருந்தார். அதில் ஒன்று சாதாரண காற்று வேகத்தைக் கூட தாங்க முடியாமல் சற்றுப் பறந்து, சாலையில் ஸ்கூட்டர் ஒட்டிச் சென்ற ஒரு இளம் பெண்ணின் முன் விழுந்து அவரை மறித்து கீழே சாய்த்தது. அப்போது பின்னால் வந்த ஒரு தண்ணீர் லாரி அந்தப் பெண்ணின் மீது மோதி அவர் பரிதாபமாக இறந்தார். அந்த லாரி டிரைவரும் முன்னாள் கவுன்சிலரும் கைதாகி வழக்கு நடக்கப்போகிறது.  இந்த சம்பவம் பற்றி பொன்னையன் ஒரு பேட்டியில் அபாரமாகக்   கருத்து சொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

"பேனர் விழுந்ததுக்கு என்ன காரணம்? காத்துதான்! பேனர் வச்சவரா அதைத் தள்ளி விட்டாரு? காத்துதான பேனரை தள்ளிச்சுகேஸ் போடறதா இருந்தா காத்து மேலதான் போடணும்!" என்று வடிவேலுவே அதிரும் நியாயத்தை முன்வைத்தார் பொன்னையன். 

பொன்னையன் அருளிய விளக்கத்தின் பூரண ஜோதி, நம்மைப் போன்ற சில மக்குகளுக்கு எளிதில் புலப்படாமல்தான் இருக்கும். அதிமுக-வின் பெயரைக் கெடுக்க வந்த பொல்லாத காற்றை அவர் எப்படித் தோலுரித்துக் காட்டுகிறார் என்பதை சிறிது மெனக்கெட்டுத்தான் அறிய வேண்டும். இப்படி யோசித்துப் பாருங்கள், புரியும்.

பொன்னையன் பேச்சின் உள்ளர்த்தம் என்ன? "விபத்து நடந்த சாலையின் நடுவில் மின் விளக்குக் கம்பங்கள் ஒன்றை அடுத்து ஒன்றாக நிற்கின்றன. காற்று அவை எதையும் சாய்க்கவில்லை. சாலையின் இரு புறத்திலும் பஸ் நிறுத்தங்களில் பயணியர் நிழற்குடைகள் உள்ளன.  காற்று அவற்றில் ஒன்றையும் தள்ளவில்லை. அவைகளை எல்லாம் காற்று தவிர்த்துவிட்டு அதிமுக-விற்கு சங்கடம் தரவேண்டும் என்ற வன்மத்தில் அந்தக் கட்சியின் தலைவர்கள் படங்களைக் கொண்ட பேனர்களில் ஒன்றைத் தேர்வு செய்தது. அடுத்ததாக, ஒரு இளம் பெண் ஸ்கூட்டர் ஓட்டியவாறு அந்த பேனரின் அருகில் பயணிப்பதையும், அவர் பின்னால் சிறிய இடைவெளியில் ஒரு தண்ணீர் லாரி வருவதையும் கவனித்தது காற்று. உடனே தனது குரூர முகத்தைக் காட்டியது பாழும் காற்று. ஐயகோ!  அரச மரத்து வேர் போல் பூமியில் பல அடி ஆழம் கால் பதித்திருந்த அந்த பேனரைப் பிடுங்கி பறக்கச் செய்து, சாலையில் நகரும் அந்த அப்பாவிப் பெண் முன் விழ வைத்து அவர் பார்வையை மறைத்து அவரைக் கீழே தள்ளியது காற்று. உடனே பின்னால் வந்த லாரியும் அவர் மீது ஏறும்படி வில்லத்தனம் செய்தது காற்று.  இப்படி எனது கட்சிக்கு எதிராக காற்று சதி செய்ததால்நான் அதன் தீய செயலை பூடகமாகத் தெரிவித்து, பேனரில் படமாகத் தோன்றிய கட்சியின் தலைவர்கள், பேனரை நிறுவிய முன்னாள் கவுன்சிலர் ஆகியோரைப் பழி பாவத்தில் இருந்து காப்பாற்றுகிறேன். அதோடு, கொடிய காற்றின் முகத்தை சட்ட ரீதியாகக் கிழிக்கிறேன்" என்று சொல்லாமல் சொல்கிறார் பொன்னையன். 

என்ன ஒரு சட்டத் தெளிவான சிந்தனை பொன்னையனுக்கு! இவர் மட்டும் சில வருடங்கள் முன்னதாகப் பிறந்து அம்பேத்கருக்கு இணையாக தனது சட்டப் படிப்பை முடித்திருந்தால், அவருக்குப் பதிலாக இவரைத்தான் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பிரதமர் நேரு நியமித்திருப்பார். அது நடந்திருந்தால்வெயிலோ மழையோ காற்றோ தப்பு செய்தால் அதற்கும் சம்மன் அனுப்பி கோட்டுக்கு இழுத்து வந்து அந்த இயற்கை சக்தியும் தண்டனை பெற பொன்னையன் திடமான வழி வகை செய்திருப்பார்!

சரி, இப்போது பொன்னையனை சரியாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். சுபஸ்ரீ என்ற ஒரு இளம் பெண்ணின் பரிதாபமான மரணத்திற்கு, அவரது பெற்றோரின் ஆழ்ந்த சோகத்திற்குமூல காரணம் நடுத்தெருவில் அஜாக்கிரதையாக வைக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் பேனர். இது புரிவதற்கான நேரத் தேவை ஒரு வினாடிக்கும் குறைவு, கல்வித் தகுதி ஒண்ணாம் கிளாசுக்கும் கீழ். இருந்தாலும்  தனது  சட்ட அறிவு, பொது அறிவு இரண்டையும் மக்கள் சந்தேகித்து கேலி செய்வார்களே என்று கவலைப்படாமல் பொன்னையனால் எப்படிப் பேச முடிந்ததுஇல்லாத எதைப் பற்றியும் கவலைப்படாத ஆத்மாவாக இருப்பார் அவர் – அதுதான் காரணமாக இருக்கும். பொன்னையனைப் பற்றி வேறு எந்த கணிப்பும் சரியாகுமா என்ன?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019



Thursday 26 September 2019

Howdy Modi at Houston – Why It Worked Magic


             -- RVR


A riveting political spectacle of 2019 was witnessed on 22nd September, themed ‘Howdy Modi’. The venue was NRG Stadium, Houston, Texas, thronged by over 50,000 Indian Americans to welcome and hear India's prime minister Narendra Modi. He gave a rousing speech and proved he was the super hero of the event.

At the stadium, US President Donald Trump also took the stage along with Modi for some time, and later Trump came down to occupy the front row and watched the huge crowd react to the Indian leader repeatedly in rapturous applause. Trump has also recalled that the stadium scene was like rock star Elvis Presley coming back. How could Modi work his magic?

If Indian voters are delighted to see Modi and wish to give him a huge mandate in elections, that is understandable. They would want to see development around them and a better life for themselves and so they keep high hopes on a leader they perceive as strong, able and incorruptible. But Modi doesn't hold any elective office in the US. As India's prime minister, he didn't do anything, and has no role to play, for the welfare of Indian Americans living in another continent. Why should those people go in ecstasy to welcome and be with Modi?

A good number of Indian Americans who assembled at the Houston stadium should be US citizens, and many more among them would be wanting to join their ranks. But citizenship is only a matter of legal allegiance, and all of them have a soul-level attachment to India, more so when they are Hindus. If you are a Hindu born in India or if your Hindu parents were born in India and you are proud about your Hindu lineage you cannot turn your heart away from India, and a part of you will be longing for India even as you work and live abroad. Hindus look upon India as a land of holy places they revere and hence their special bond with this country. This applied to nearly everyone who was present in the NRG Stadium - and to many several times the stadium capacity who watched Modi live on television across America that day. 

Look at how Sikhs deeply revere Gurudwara Darbar Sahib at Kartapur, the final resting place of Guru Nanak, that became part of Pakistan after partition. That location is now enemy territory, but Sikhs in India - and from around the world - have unfading sentimental attachment to Kartapur and look for a pilgrimage to that gurudwara. This tells us, in a parallel, about the special attachment Indian American Hindus will have for India that is full of holy sites in its rivers, mountains, puranic locales and innumerable temples. And yes, this phenomenon has a connection with the Howdy Modi event.

An average Indian American has a higher level of education than an average native American citizen. Indian Americans know very well why their education, knowledge and competence are valued and used for the development of America, but not in India which needs those human resources more dearly. They know who the villains in India are in this story - all typical Indian politicians who entrenched themselves in power throughout India for the past several years to reap personal gains, stifling merit and talent and pampering mediocrity and letting corruption grow all round. 

     Most  Indians  with  a  good  academic  record  and  high merit find themselves suffocated by the country's corrupt and degraded political atmosphere and the shackles it lays on ability, personal progress and national development. Those who can get out of the country to grow and prosper do so, and many of them reach American shores. Once there, they would be happy working their talent and reaping its benefits. They would surely be contented in a life which offers clean water, good civic services, efficient transport and assured quality education for their children, which remain a dream for the people of India. But still they won't forget their contempt and hatred for the Indian political leaders who stunted the development of a country which the emigrated Indians emotionally love.

If those Indian Americans, and possibly their children too, spot an Indian political leader whose heart beats for India and who is honest, hard-working, humble and astute, and he looks a gift of the gods for India's redemption and development, they are overjoyed. To them, applauding and rooting for such a new-found Indian leader is like hitting back at the other grade of Indian politicians they despise for what those politicians do or did to India.  And so Modi came and conquered the hearts and minds of Indian Americans and dazzled at the NRG Stadium.  As he also spoke credibly and evocatively to Indian Americans, they naturally warmed up to Modi with euphoria – which also meant they were gleefully kicking many rascal politicians of India who all along betrayed the land those Indian Americans deem sacrosanct.  This is why Howdy Modi glowed and galvanised Indian Americans.

Can you still not grasp why the Modi magic worked with Indian Americans in Houston? Then you don't know how Indian politicians in government, with their little minds, let down India for long. Those politicians ruled amidst the Congress party's shoddy track record at the Centre and in many states – specifically, when the Congress has been led by Indira Gandhi and by worse leaders later. They constantly drove bright disgruntled and choiceless Indians, still loving India, out of the country. These Indians - who are now largely spread over USA, Britain and Australia - will always cheer and celebrate Modi, the different leader. But don’t worry – in India you will still benefit from Modi.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019

Thursday 19 September 2019

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: பேனருக்கு பலியான சுபஸ்ரீ


           -- ஆர். வி. ஆர் 


     ஆபீஸ் முடிஞ்சு ஸ்கூட்டர்ல போயிண்டிருந்த 23 வயசு பொண்ணு சுபஸ்ரீ. அப்பாம்மாக்கு அவ ஒரே குழந்தை. ஸ்கூட்டர்ல வீடு திரும்பிண்டிருந்தா. எவனோ அரசியல்வாதி, தன் வீட்டு கல்யாணத்தை ஊருக்கு அறிவிச்சு, யாரோ தலைவருக்கு 'வருக வருக' சொல்லி, தெரு நடுவுல  வரிசையா 'பேனர்' வச்சிருக்கான். அதுக்கு  அரசாங்க அனுமதி வாங்காத அளவுக்கு அநத பேனர் தலைவர் பெரிய மனுஷனாம். அந்த பேனர்ல ஒண்ணு காத்துல பிச்சுண்டு சுபஸ்ரீ மேல விழுந்து அவளை ஸ்கூட்டரோட சாய்க்க, பின்னால வந்த லாரி அவ மேல மோதி குழந்தைய எமலோகத்துக்கே அனுப்பிடுத்து. ஜம்பத்துக்கு பேனர் வச்சானே, வைக்க எதிர்பாத்தானே, அவனை கொலைகாரப் பாவின்னா தப்பா?

கல்யாணத்துக்கு பந்தாவா பேனர் எழுப்பறது  ஏன் எதுக்குன்னு பாருங்கோ. கல்யாணம்கறது யாருக்கு பிரதானம்? வாழ்க்கைல இணையப்போற மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும்தான? அவா ரண்டு பேரை மையப்படுத்தி, அவாளை கொண்டாடி அவா கல்யாணத்தை நடத்தணும். அதுதான் பண்பு, நாகரிகம். ஆனா, தன் பொண்ணு பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்கற தமிழ்நாட்டு  அரசியல் அப்பாக்கள் என்ன பண்றா? கல்யாண மண்டபத்தை ஒட்டியோ பக்கத்துலயோ இருக்கற தெரு நடுவுலயும் பிளாட்பாரத்துலயும் அடுத்தடுத்து மைல் கணக்குல பேனர் கட்டி வைக்கறா. அதுல தன் பேருகல்யாணத்துக்கு வரப் போற கட்சித் தலைவர் பேரு படம்லாம்  கலர் கலரா போட்டுண்டு, கல்யாணப் பொண்ணு பிள்ளை  பேரை ஓரம் கட்டறா, இல்லை   உதாசீனம் பண்றா. இதெல்லாம் எதுக்கு? தலைவர் அந்தக் கல்யாணத்துக்கு வரும்போது, தன்னோட பெரிய சைஸ் படத்தை பேனர் கூட்டத்துல பார்த்து  ரசிக்கணும், பேனர் வைச்சவன் காக்கா குரல்ல "கா... கா..."ன்னு கத்தறா மாதிரி தலைவர் உணரணும்.

தமிழ் நாட்டு தெருக்கள்ள அனுமதி இல்லாம பேனர் வச்சா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும்னு ஹை கோர்ட் உத்தரவு போடறது. ஆனா அதை ஆளும் கட்சியே மஜாவா அலட்சியம் பண்றது. எதிர்க் கட்சிகளும் கண்டுக்கறதில்லை. குறிப்பை நன்னா புரிஞ்சுண்ட அதிகாரிகளும் தேமேன்னு இருக்கா. இது ஏன்னா, பேனர் நாயகர்கள் எல்லாரும் பல கட்சிகளோட பெரும் தலைவர்கள்தான். அவா சிரிக்கற மாதிரி,  நடக்கற மாதிரி, கும்பிடற மாதிரி, பேனர்லேர்ந்து ஸ்டைலா போஸ் குடுக்கறா.  தன்னோட படங்களை அந்தத் தலைவர்கள் பேனர்ல பாக்கும்போது அவாளுக்கே ஜிலு ஜிலுன்னு இருக்கும். கோர்ட்டோட காகித உத்தரவுக்காக அந்தப் புளகாங்கித அனுபவத்தை அவா இழக்கத் தயாரா இல்லை. அவாளை ப்ரீதி பண்றதுக்காக, பலமான தொண்டர்கள் விழா தினங்கள்ள தலைவர் கண் பார்வை படற இடத்துல எக்கச்சக்கமா பேனர் வச்சு தன்னோட ஆதாயத்தையும் பாத்துக்கறா. 

பாத்தேளா, இப்ப நிலைமை மாறி வரது. சுபஸ்ரீயோட உயிரிழப்பு,  அரசியல்  கட்சித்  தலைவர்களை  நிஜமாவே பாதிச்சு பேனர் கலாசாரத்தை கைவிடப் பண்ணலாம். பெரிய கட்சிகளே ஒவ்வொண்ணா "எங்க கட்சில இனிமே யாரும் சட்ட விரோதமா பேனர், பிளக்ஸ் போர்டு, கட்-அவுட்   வைக்கக் கூடாது"ன்னு அறிக்கை விடறா. இதுல சட்டத்தை மதிக்கற மண்ணாங்கட்டி எண்ணம்லாம் யாருக்கும் இல்லை.  தற்காப்பு சிந்தனைதான் இருக்கும். எப்படின்னு சொல்லட்டா?

இப்ப, ரோடுலேர்ந்து ஆரம்பிக்கலாம். பல ஊர்ல காண்ட்ராக்டர் போடற ரோடுகள் எப்படி இருக்கு? அநேகமா கண்ராவியாத்தான இருக்கு? ஒரு மழை பேஞ்சா பல்லைக் காட்டும்.  ஏன்னா, போனதெல்லாாம் போக காண்ட்ராக்டர் கைக்கு வந்து சேர்ற காசுக்கு என்ன முடியுமோ அந்த லட்சணத்துக்கு அவன் ரோடு போடுவான். அந்த மோசமான ரோடுல வாகனம் மாட்டிண்டு வாகன ஓட்டிகள், பிரயாணிகள்,  காயம் படறதும் உயிர் விடறதும் அப்பப்ப நடக்கும். அதுக்கெல்லாம் பரிதாபம் காட்டி, ரோடுல சம்பாதிக்கற பெரிய மனுஷா தன் வருமானத்தை குறைச்சு ரோடுகள் தரத்தை உயர்த்த மாட்டா.  

பொது மக்கள் உடம்பையும் உயிரையும் உண்மையாவே மதிக்கற தலைவர்களா இருந்தா ஏன் ரோடுகளை நன்னா  கெட்டியா போட மாட்டேங்கறா? சுபஸ்ரீக்காக நிஜமாவே  அனுதாபம் காட்டறவான்னா, பாடாவதி ரோட்டுல அடி படறவா, உயிர் விடறவா மேலயும் கட்சித் தலைவர்களுக்கு பச்சாதாபம்  வரணுமே? ஏன் வரலை? இங்கதான் இருக்கு தலைவர்களோட சொரூபம்.

 ரோடு விஷயத்துல, இந்தத் தலைவர்தான் சம்பத்தப் பட்டிருக்கார், பலன் இவருக்குத் தான் போறதுங்கற  விஷயம் வெளில தெரியாது, ஆதாரம் கிடைக்காது. பேனர் விஷயம் வேற. இந்த இந்த பேனர்கள்ள இந்த இந்தத் தலைவர்கள் சம்பத்தப்படறா அப்படிங்கறது மறைக்க முடியாத விஷயம். அவா திருப்திப்படணும், அவா எதிர்பார்ப்பு நிறைவேறணும்னு  அவா படத்தை  பெரிசா  போட்டு  பேனர் தயாராகறது. அப்படின்னா, பேனர் உண்டாக்கற  விபத்துக்கு அந்த பேனர் படத் தலைவரும் ஒரு முக்கிய காரணம்னு பொதுமக்கள் கணிப்பா. டி.வி, பேப்பர்லயும் எதிர்ப்பு தொடர்ச்சியா வரும். தலைவர் இதை டபாய்க்க முடியாது, என்ன உளறினாலும் எடுபடாது. கடைசில அவருக்கும் கட்சிக்கும் வரக்கூடிய  ஓட்டை பாதிக்கும். தன்னோட காரியத்துனால பத்து ஓட்டுக்கு பாதகம்னு உணர்ந்தா எந்த அரசியல் தலைவரும் தன்னை மாத்திப்பார்.

ரண்டாவது, பேனர் விபத்துக்காக  கோர்ட்டும்  சட்டத்தை காட்டி, குறிப்பிட்ட கட்சிகள், தலைவர்களைப் பாத்து  சாட்டையை சொடுக்க எத்தனிக்கறது.  அது நடந்தா கட்சிக்கும் தலைவருக்கும் ஆபத்து. இது வரைக்கும் ஜெயிலுக்கு அனுப்ப முடியாதவான்னு நினைச்ச 74 வயசு தலைவர்கள் கூட இப்ப விசாரணைக் கைதியா கம்பி எண்ண ஆரம்பிச்சுட்டா. ‘பேனர்ல  நம்ம படத்தை பாக்கறதைவிட, ஓட்டிழப்பு இல்லாம சுதந்திரமா நடமாடினா அதுவே போறும்’னு  தலைவர்கள் இப்ப கணக்குப் போடறா.  இந்த தற்காப்பு எண்ணத்துலதான் தலைவர்கள் பேனர் போனா போகட்டும்னு புத்திசாலியா நினைக்கறா. ஓட்டு பாதிப்பு இருக்கற வரை, அவா பேனர், பிளக்ஸ் போர்டு, கட்-அவுட்டை தள்ளி வைப்பா. மத்தபடி செந்தமிழ் நாட்டுத் தலைவர்கள் சிந்தனைல, உங்களுக்கோ எனக்கோ சுபஸ்ரீக்கோ கைகால்  இருந்தா என்ன, மூச்சு இருந்தா என்ன? வாங்கோ, ஏதோ மக்கள் நலனுக்காக தலைவர்கள் ஒரு முடிவை அறிவிச்சுட்டான்னு அசடா நினைக்காம, நம்ம உடம்பை பாத்துப்போம், நம்ம வேலையைப் பாப்போம்.

* * * * *
Copyright © R. Veera Raghavan 2019


Sunday 1 September 2019

ஜனநாயக பாப்பா பாட்டு

மஹாகவி பாரதியின் 'பாப்பா பாட்டு' எந்தக் காலத்துக்கும் ஏற்ற அற்புதம்.

'ஜனநாயக பாப்பா பாட்டு', இந்தக் காலம் எழுத வைத்தது - படித்தவுடன் நம்புவீர்கள்.


பாரதியின் 'பாப்பா பாட்டு' 
சில பகுதிகள் (பலரும் அறிந்தது)
ஜனநாயக பாப்பா பாட்டு
(பலரும் அறியவேண்டியது)



ஓடி விளையாடு பாப்பா – நீ 
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா;
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.




ஓடி விளையாடு பாப்பா - நீ
ஒன்றாதே மொபைலில் பாப்பா;
மோடி போல உழைக்கணும் பாப்பா - யார்
தூற்றினாலும் முன்னேறணும் பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு;
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.




காலை எழுந்தவுடன் வாட்ஸப் - பின்பு
கண்டகண்ட வெட்டிப் பேச்சு;
மாலை முழுதும் டி.வி - என்ற
வழக்கத்தில் விழாதே பாப்பா.


சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா;
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.




சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
காணாமல் போகிடாதே பாப்பா;
உன் வாழ்வு வளத்தை நசுக்கி - கொழிக்கும்
தலைவரிடம் எச்சரிக்கை பாப்பா.


வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில் 
வாழும் குமரிமுனை பாப்பா; 
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.




வடக்கில் கங்கை நதி பாப்பா - தெற்கில்
பாயும் காவிரி பாப்பா;
கிடக்கும் ஆற்று மணல் கண்டாய் - அதைக்
கொள்ளையிட லாகாது பாப்பா.


சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே –அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.




சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – இருந்தும்
ஹிந்தி படித்திடடி பாப்பா;
தேசமெங்கும் காரியங்கள் கிட்டிட - அது
துணையாக நிற்குமடி பாப்பா.


சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் 
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.




சாதிகள் இல்லையடி பாப்பா - என்றால் 
ரிசர்வேஷன் இருக்குதடி பாப்பா;
உள்ளங்களும் சட்டங்களும் மேம்பட - உயர்
தெய்வத்தருள் வேண்டுமடி பாப்பா.


பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா;
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.




பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
கும்பிட லாகாது பாப்பா;
ஓட்டுக்குப் பணம்தரும் கைகளை - பற்றி
முறுக்கி உடைத்துவிடு பாப்பா.


தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா;
அமிழ்தில் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.




தமிழ்த்திரு நாடுதன்னைக் காக்க – நல்
ஆட்சியாளர் வேண்டுமடி பாப்பா;
ராஜாஜி காமராஜர் கக்கனென்று – பல
தூயவர்கள் தேசமடி பாப்பா.


* * * * *

Copyright © R. Veera Raghavan 2019