Monday 23 May 2016

தேர்தல் தோசை!



பழைய பாப்பா பாட்டு


புதிய பாப்பா பாட்டு

தோசையம்மா தோசை

தேர்தலம்மா தேர்தல்

அம்மா சுட்ட தோசை

அம்மா நிக்கும் தேர்தல்

அரிசி மாவும் உளுந்த மாவும்

ஆர்கே நகரும் உளுந்தூர்பேட்டையும்

கலந்து சுட்ட தோசை

பொளந்து கட்டும் தேர்தல்

அப்பாவுக்கு நாலு

பல்லைக் காட்டினா இருநூறு
அம்மாவுக்கு மூணு

கையைக் காட்டினா முன்னூறு 

அண்ணனுக்கு ரெண்டு

தயங்கி நின்னா நானூறு
பாப்பாவுக்கு ஒண்ணு

தள்ளிட்டு போனா ஐநூறு

தின்னத் தின்ன ஆசை

தெருக்கு தெரு கொண்டாட்டம்

திரும்பக் கேட்டா பூசை!
திருநாள் முடிஞ்சா திண்டாட்டம்!



2 comments:

  1. திருநாள் முடிந்தது
    கொண்டாட்டம் வந்தது
    பணம் கொடுத்த நாள் போச்சு
    பணம் வாங்கும் நாள் வந்தாச்சு!
    வேலை வாங்கக் காசு
    சான்றிதழ் வாங்கக் காசு
    பிறக்கும் போது காசு
    சாகும் போதும் காசு!
    வேறு என்ன வேணும்
    ஊரு நல்லாப் போகணும்!

    ReplyDelete
  2. இந்த நகைச்சுவை உணர்ச்சி மட்டும் இல்லைனா ரொம்ப கஷ்டம்தான்...

    ReplyDelete