Saturday 7 March 2015

ராகுல்ஜி! கொஞ்சம் யோசிங்க பாஸ்!


உங்கள் தொழில் சம்பந்தமாக ஒரு பெரிய சிக்கலில் நீங்கள் மாட்டிக்கொண்டுவிட்டீர்கள். உங்களைத் தள்ளிவிட்டு உங்கள் போட்டியாளர்கள் முன்னுக்கு வந்துவிட்டார்கள்.  உங்கள் தோல்விக்கான காரணங்களைப் புரிந்துகொண்டு தொழில் எதிரிகளை நீங்கள் வெல்ல வேண்டும். அந்தப் போட்டிக்கான வியூகங்களையும் வழிமுறைகளையும் பற்றிச் சிந்திக்கும் நேரத்தில் உங்கள் வழக்கமான வியாபாரத்தையும் நடத்திக் கொண்டிருக்க வேண்டும்.  உங்கள் வியாபார நிறுவனத்திற்குத் தற்போது உங்கள் அம்மா தலைவராக இருந்து நடத்தினாலும் விரைவில் அவர் விலகி நீங்கள்தான் தலைவராகப் போகிறீர்களோ என்ற நிலைமையும் இருக்கிறது.

உங்களுக்கு இன்னொரு பின்னணி உண்டு. அதாவது, கடையிலிருந்து ரிடையர் ஆகப்போகிற விசுவாச மேனேஜர் மூலமாக உங்கள் அம்மாவின் சம்மதத்துடன் ஒரு முறை முக்கிய முடிவு ஒன்று படாடோபமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு உங்கள் சம்மதமும் உண்டு என்று சந்தை வியாபாரிகள் அனைவருக்கும் தெரிந்ததுதான். அது அமலாக இருப்பதற்கு முன்பு நீங்கள் வெளிப்பட்டு அந்த முடிவு தொடர்பான காகிதங்களைப் பலர் முன்னிலையில் கிழித்துச் சூரை விட்டு ’நான்சென்ஸ்! இது நிறைவேறக் கூடாது!’ என்று பிரகடனம் செய்தீர்கள், அந்தச் செய்கையை உங்கள் நிறுவனத்தில் அனைவரும் சிரித்தபடி எற்றுக்கொள்ளும் அளவிற்கு உங்கள்மீது அவர்களுக்கு மரியாதையும் பயமும் உண்டு.

இவ்வளவு செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட உங்களுக்கு, நிறுவனத்தின் சமீபகாலத் தோல்விகள் பற்றியும் அது மீண்டு எழுவதற்கான காரண காரியங்கள் பற்றியுமான யோசனைகள் தானாக சுவாசத்துடன் சேர்ந்து வரவேண்டும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள்.  நீங்கள் மட்டும் அப்படி நினைக்க வேண்டாம்.  “நான் மூன்று வாரம் லீவு போட்டுத்தான் யோசிப்பேனாக்கும்!” என்று நீங்கள் அழிச்சாட்டியம் செய்தால் அப்போது கூட உங்கள் நிறுவனத்தில் அனைவரும் உங்களுக்கு ஏன் லீவு வேண்டும் என்று விளக்கி சப்பைக்கட்டு நியாயங்கள் சொல்வார்கள்.  ஏனென்றால் நீங்கள்தான் ராகுல் காந்தி!

கட்சி வேலைகளிலிருந்து இப்போது மூன்று வார லீவில் சென்றிருக்கும் ராகுல் காந்தி சொல்லவருவதைப் புரிந்துகொள்ள நாம் முயற்சிப்போம்.  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இது பற்றி அறிவிக்கையில் “சமீப காலங்களிலும் முன்பாகவும் காங்கிரஸுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி ராகுல் காந்தி ஆழ்ந்து சிந்திக்க விரும்புகிறார்” என்று சொன்னார். இதுதான் காரணமென்றால் கட்சியில் இந்நாள் வரை அதுபற்றி யாருமே சிந்தித்துச் சரியான பதில்களைப் பெறவில்லை என்று ராகுல் காந்தி தெரிவிக்கிறாரா?   அப்படியானால் நீண்ட காலமாக அடிப்படை நிகழ்வுகளைப் பற்றியே கட்சியில் இதுவரை எவரும் யோசித்துச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றாகி, கட்சித் தலைமைப் பொறுப்பிற்கே அவர்களில் யாரும் லாயக்கில்லை என்றும் ஆகிறதே?  ‘இல்லை, இல்லை! கட்சியில் மற்றவர்களுக்கு இதெல்லாம் சரியாகப் புரிந்தாலும் எனக்கென்னவோ ஆற அமரத் தனியாக வாரக்கணக்கில் யோசித்துப் பார்த்தால்தான் புரிபடும்’ என்கிறரா ராகுல் காந்தி? அப்படியானால் தனது பரிதாபமான புரிந்துகொள்ளும் சக்தி பற்றி அவரே ஒப்புக்கொண்டதாக ஆகுமே?

ஜனநாயகத்தில் மக்கள் ஒரு கட்சியை ஒதுக்கினாலோ ஒரு தலைவரை எற்க மறுத்தாலோ அதற்கு நிவாரணமும் மக்களிடம்தான் கிடைக்கும்.  மக்களோடு கலந்து, அவர்கள் கூறுவதைக் கேட்டு, அவர்களை சரியாகப் படித்து, சிலதைக் கற்று, தன்னை அளித்து மேலே வருவதுதான் வழி.  ஒருவரை தலைமைக் குணமுள்ளவராக மக்கள் கணிக்கவில்லை என்றால் அவர் என்ன பேசினாலும் என்ன அறிக்கை விட்டாலும் அவற்றை மக்கள் சட்டை செய்யமாட்டார்கள்.  தாய்ப் பாசத்தின் கட்டாயங்களும் மக்களுக்கு இருக்காது. அரசியலில் ரொம்ப யோசிக்காமலே புரியவேண்டிய விஷயங்கள் இவை.

இனிமேல் ‘ரூம் போட்டு’ யோசிக்கிற ஜோக்குக்கு அடுத்ததாக ‘லீவு போட்டு’ யோசிக்கிற ஜோக்கை உருவாக்கிவிட்டார் ராகுல் காந்தி. ரூமும் போடாமல் லீவும் போடாமல் யோசித்தால் ஒன்று நமக்குப் புரியலாம்.  அதாவது இவை இரண்டும் வேறு வேறு ஜோக்குகள் இல்லை.  அதாங்க இது!


* * * * *

Copyright © R. Veera Raghavan 2015

6 comments:

  1. it is people's fate that we have leader like this who require leave to think . it is sad that there are persons in congress to justify such action.

    ReplyDelete
    Replies
    1. " Yes, there is nothing wrong in escaping to a calm place for an introspection and to find a way to give life to his century old party.

      As we all know, Sidhaartha disappeared to a quiet place, went into a deep prolonged introspection, got himself enlightened and found the real causes for the sufferings of humanity.

      So there is a chance and ray of hope that Rahul too might re-appear with his enlightened mind (not likely because of his very short duration of leave); take charge of the party from ICU; treat the party for the diseases of immaturity, negative thoughts, inefficiency and corruption; infuse the young blood of positive thoughts and selfless attitudes; make the party a responsible opposition; extend full support to all the developmental activities of the government ( to the pleasant surprises of the general public, ) and thereby forcing the government to achieve their promised goals without giving room for blaming the opposition.

      If this miracle happens, Rahul will certainly strengthen the party and will be able to win two thirds in the next parliamentary elections

      Delete
    2. If Rahul emerges like Gautama Buddha it is good for the Congress Party, and for the country. The difference between the two, it looks, is that Rahul has scored low on counts of balance, maturity and leadership skills, while Sidhaartha did not. Rahul will be 45 coming June while Sidhaartha attained enlightenment at 35. So if it happens to Rahul, though late - like what happened to Sidhaartha - it will be more than a miracle. It should be interesting to watch how history unfolds before our eyes.

      Delete
    3. To be enlightened someone has to have something first - in (t)his case, there is no sign of anything - he wanted to avoid parliament and the justifications are simply an afterthought

      Delete
    4. There is no option left for Rahul and his team but to grab a golden era of post-enlightenment period !

      Even a seriously injured person or a patient without a hope of survival, is taken to a Dr hoping a miracle to happen ! It has happened to one in a million ! If survived from a death bed, it becomes a great news !

      So let us not lose grip over our positive attitudes !

      Delete
  2. The amount Congress Party spent on covering up his leave of absence would run into crores of rupees!!! Media time wasted, Congress Spokespersons deputed to speak on his behalf, Parliament time wasted on discussing this topic....more over we are talking about this....

    ReplyDelete